மிகச் சரியாகச் சொன்னால், சோவியத் வீழ்ச்சியையொட்டியே உலகமயமாக்கல் ஒரு பாய்ச்சல் வேகத்தோடு உலகைச் சுழற்ற ஆரம்பித்தது.
1970 மற்றும் 80களில் முதலாளித்துவ நாடுகளில் தொழில் உற்பத்தி குறைந்து, முதலீடுகளுக்கு லாபகரமான வாய்ப்புகளும் குறைந்து வந்தது. எனவே சர்வதேச அளவில் முதலீடு செய்து மேலும் மேலும் லாபக் குவியலை நோக்கிச் செல்ல முதலாளித்துவம் முன்னைவிட அதிக நிர்ப்பந்தத்தில் இருந்தது. இந்த நேரத்தில், சோஷலிச உலகின் பின்னடைவானது மொத்த உலகின் பொருளாதார மேலாதிக்கத்தை இவர்களின் கைகளுக்குள் எளிதில் கொண்டு வந்து சேர்த்தது. நவீன விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சி மூலதனத்தின் பிடியில் உலகை முழுமையாக கொண்டு வருவதற்கு துணையானது. ஏகாதிபத்தியத்தின் உச்சக்கட்டமான உலகமயமாக்கலின் நெடுங்கதவுகள் மூன்றாம் உலகநாடுகளின் இரத்த நாளங்களை கிழித்துக் கொண்டு முற்றிலுமாக திறந்துவிடப்பட்டது.
ஒரு காலத்தில் படையெடுத்து நாடு பிடித்தவர்கள் இன்று மாயாவிகளைப் போல் இருந்த இடத்தில் இருந்து கொண்டே வேற்று நாட்டின் பொருளாதாரத்தை ஆட்சி செய்யும் வாய்ப்பை உலகமயம் ஏற்படுத்தியுள்ளது. இந்த வீபரீதத்தை நிகழ்த்தி காட்டும் சக்தியே நிதி மூலதனம்.
மூலதனம் அதன் தோலை உரித்துக் கொண்டு 'நிதி மூலதனமாக' உருவெடுத்திருக்கிறது. இந்த நிதி மூலதனம் சர்வ வல்லமை கொண்டவையாக அதன் இயல்பிலேயே இருக்கின்றன. தன்னை உலகின் ஒவ்வொரு துகளிலிருந்து சேகரிப்பதும், மேலும், மேலும் வளர்ப்பதுமே அதன் பிறவி நோக்கமாக இருக்கிறது. தேசங்களையும், எல்லைகளையும் மிகச் சுதந்திரமாக தாண்டுகிறது. இதற்காக வடிவமாக்கப்பட்டதுதான், சுதந்திரச்சந்தை, உலகமயமாக்கல் எல்லாம்.
இந்தியாவில் தயாரித்தால் 50 ருபாய் ஆகும் ஒரு பொருள் அமெரிக்காவில் தயாரித்தால் 150 ருபாய் வரை ஆகலாம். அமெரிக்காவில் கொடுக்கப்படும் ஊதியம் முதற்கொண்டு அனைத்தும் இந்தியாவை விட பல மடங்கு அதிகம். அந்த பொருள் இங்கு தயாரிக்கப்படுவதே அமெரிக்காவுக்கு லாபம். எனவே அமெரிக்க கம்பெனிகள் தங்கள் நிதிமூல தனத்தைக் கொண்டு இந்தியாவில் தொழில் புரிய வருகின்றன. இதன்மூலம் அந்நியச் செலாவணியாய் கிடைக்கும் அமெரிக்க டாலர்கள் மக்களுக்கு அடிப்படை வசதி செய்து தரவும், கல்வி கொடுக்கவும் பயன்பட்டுவிடாது. மாறாக கடனை அடைக்கவும், ஆயுதங்கள் வாங்கவும், தொழில் நுட்பம் வாங்குகிறோம் எனவும் மீண்டும் அமெரிக்காவுக்கே போய்ச் சேரும். ஆனால் நம் ஆட்சியாளர்கள் "நாங்கள் இந்தியாவை வல்லரசாக்கப் போகிறோம்." என்று அறிக்கைகள் விட்டுக் கொண்டிருப்பார்கள்.
சரி. அமெரிக்க கம்பெனி இங்கு நிறுவப்படுவதால் சிலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவும், எதோ ஒரு ஊதியம் கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறதே என்று ஒரு வாதம் முன் வைக்கப்படலாம். ஒரு அமெரிக்க கம்பெனி இங்கு நிறுவப்படும் போது இந்தியாவில் ஏற்கனவே இருக்கும் அதே துறையைச் சார்ந்த தொழில்கள் மிக வேகமாக பாதிக்கப்படும். விளம்பரம், அரசின் சலுகைகள், அசூரத்தனமான தொழில்நுட்பத்தின் முன்னால் நிற்க முடியாமல் சடசடவென்று உதிர்ந்து போகும். மிகக் குறுகிய காலத்தில் இந்தியாவில் அந்தத் தொழிலில் அந்த பன்னாட்டுக் கம்பெனியே சர்வ ஆதிக்கமும் பெற்றிருக்கும்.
ஏராளமான ஆலைகள் மூடப்பட்டு தொழிலாளர்கள் வீதிகளில் குப்பையெனத் தூக்கி எறியப்பட்டு இருப்பார்கள். பன்னாட்டுக் கம்பெனியின் ஒவ்வொரு தயாரிப்புக்கும் பின்னால் கோடிக்கணக்கான சாதாரண மக்களின் வாழ்வின் தவிப்புகள் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றன.
உலகமயமாக்கல் மூலதனத்திற்கு சகல வசதிகளையும் செய்து கொடுக்கிறது. ஒரு பன்னாட்டுக் கம்பெனி லண்டனில் ஒரு தொழிற்சாலையை தொடங்குகிறது என்று வைத்துக் கொள்வோம். அங்கு தொழிலாளர்களுக்கு அதிக ஊதியம் கொடுக்க வேண்டியிருப்பதால் அதிக லாபம் சம்பாதிக்க முடியாமல் போகலாம். எனவே அந்த தொழிற்சாலையை மூடிவிட்டு வேறோரு நாட்டில் குறைவான ஊதியம் கொடுத்து திறக்கலாம். சுதந்திர வாணிபம் அதற்குஅதற்கு முழு உரிமை கொடுத்திருக்கிறது. ஆனால் குறைவான ஊதியம் கொடுக்கப்படும் ஒரு நாட்டிலிருந்து அதிகமான ஊதியம் கொடுக்கப்படும் ஒரு நாட்டிற்கு ஒரு தொழிலாளி தனது உழைப்பை அவ்வளவு எளிதில் கொண்டு சென்றிட முடியாது. பல விதிகளும், நிபந்தனைகளும் உண்டு. சுதந்திர வாணிபத்தின் சூட்சுமம் இதுதான்.
நிதிமூலதனத்தின் வேகத்தோடுதான் உலகமயமாக்கல் பின்னி பிணைந்து கிடக்கிறது. இந்த உலகமயம் என்பது ஆக்கபூர்வமானது அல்ல என்பதற்கு முக்கிய காரணமே, நிதிமூலதனம் ஒட்டுகிற வாகனமாக அது இருப்பதால்தான். தனக்கு தடங்கலாக நிற்கும் எதையும் அது தகர்த்து முன்னேறுகிற மூர்க்கத்தனம் கொண்டது. மூன்றாம் உலக நாடுகளில் இருக்கக் கூடிய பலவீனமான சட்ட திட்டங்களும் இந்த பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு வசதியாக இருக்கிறது. அல்லது தனது அதிகாரத்தால் அந்த நாட்டின் சட்டங்களைக் கூட அரசியல் ரீதியான தலையீடுகளால் பலவீனப்படுத்தும். அதற்குத்தான் இருக்கவே இருக்கின்றன உலகவங்கி, ஐ.எம்.எஃப், உட்டோ (WTO)என்னும் மும்மூர்த்திகள்.
இந்த மும்மூர்த்திகளின் மும்முனை அதிகாரங்களால் உலகமயமாக்கலின் கொள்கைகள் நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றன. கடந்த ஐமப்து ஆண்டுகளாக மூன்றாம் உலக நாடுகளின் கடன் பிரச்சினையில் தலையிடும் உரிமைகளை தன்னகத்தே கொண்ட அமைப்பாக உலக வங்கியும், சர்வதேச நிதி நிறுவனமும் உள்ளது. ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் கடன் வலைக்குள் சிக்கிக்கொள்ளும் நாடுகள், பொருளாதாரத்துறையில் மூச்சுமுட்டும் மரண அபாயத்தை சந்திப்பது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
எந்தவொரு நாடும் சர்வதேச நிதி நிறுவனத்தில் உறுப்பினரான பின்புதான் உலக வங்கியில் உறுப்பினராக முடியும். இந்த இரு அமைப்புகளிலும் உறுப்பினராக உள்ள நாடுகளுக்கு சமமான வாக்குகள் என்பது இல்லாமல் பணக்கார நாடுகளே அதிக வாக்குகளை கொண்டுள்ளன. அமெரிக்கா மட்டும் 19.3 சதவீதமான வாக்குகளை தன்னகத்தே கொண்டுள்ளது. எந்தவொரு முக்கிய முடிவு களுக்கும் 85 சதவீத வாக்குகள் தேவை. அதாவது அமெரிக்காவின் ஆதரவு இல்லாமல் எந்த முக்கிய முடிவுகளும் எடுக்க முடியாது.
காட் அமைப்பின் புதிய அவதாரமான உலக வர்த்தக அமைப்பானது நிர்வகிக்கவும், தீர்மானிக்கவும், தண்டனை வழங்கவும் அதிகாரம் படைத்த பலமான அமைப்பாக 1995ல் உருவாக்கப்பட்டது. மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதார மைய அச்சை முறிப்பதையே இலக்காகக் கொண்டு இது தனது கொள்கைகளை முன்வைக்கிறது.
அமெரிக்காவின் பின்னால் நின்று பன்னாட்டுக் கம்பெனிகள் -உலகவங்கி, ஐ.எம்.எஃப், உட்டோ - என்னும் பரிவாரங்களோடு உலகை கபளீகரம் செய்து கொண்டிருக்கின்றன. இந்த பன்னாட்டுக் கம்பெனிகள் தங்கள் ஆலைகளை மூன்றாம் உலக நாடுகளிலும், ஏழைநாடுகளிலும் நிறுவுவதால் அங்கு சுற்றுப்புறச் சூழலுக்கு பெரிய அளவில் ஆபத்து நேரிடுகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளில் மிகுந்த அலட்சியமாக இருக்க முடிகிறது. அதற்கு தேவையான நிதி ஒதுக்கி தங்கள் லாபத்தை எள்ளளவும் குறைத்துக்கொள்ள அவை ஒருபோதும் விரும்புவதில்லை. அந்த நாட்டு மக்களும், அவர்களின் விலைமதிப்பற்ற உயிர்களும் அவர்களுக்கு அற்பமானவையே! போபாலை நாம் மறந்துவிட்டோம். அந்த நள்ளிரவில் யூனியன் கார்பைடு என்னும் அமெரிக்க கம்பெனியிலிருந்து கசிந்த விஷவாயு விடிவதற்குள் போபால் நகரத்து மக்களை பிணங்களாக உதிர்த்துப் போட்ட கொடூரம் நம் நினைவுகளின் அடியாழாத்தில் மூழ்கிக் கிடக்கிறது. வருத்தமும், சிறு தண்டனையும் இல்லாமல் ஆண்டர்சன் தன் தொழிலை வழக்கம் போல் நடத்திக் கொண்டிருக்கிறான்.
மூன்றாம் உலக நாடுகளும், வளரும் நாடுகளும் இந்த சுதந்திரச் சந்தையில் போய் விழுந்து, நிதி நெருக்கடிகளுக்கு ஆளாகி, உலக வங்கியிடம் மேலும், மேலும் கடன்கள் வாங்கிக்கொண்டே இருக்கின்றன. கடனைத் திருப்பிக் கொடுக்க அவைகள் இடும் கட்டளைகளுக்கு சிரம் தாழ்த்தி பணிந்து கூன்விழுந்து கிடக்கின்றன.
ஆட்சியாளர்களுக்கு இவை தெரியாமல் இல்லை. அமெரிக்காவோடு தங்கள் பணிவான உறவுகளை வளர்த்துக் கொண்டு கக்கூஸ் முதல், கம்ப்யூட்டர் வரை உலகவங்கிக் கடன்களில் வாங்கிக் கொண்டு வெட்கமில்லாமல் மக்களுக்காகவே தாங்கள் வாழ்வதாகவும், சிந்திப்பதாகவும், செயல்படுவதாகவும் வித்தைகள் காட்டுவார்கள்.
"சுதந்திரச்சந்தை" 'ஆரோக்கியமான போட்டி" என்றெல்லாம் நமது ஆட்சியாளர்கள் மக்களிடம் போக்கு காட்டுவார்கள். ஆனால் நிஜத்தில் இது ஒருவழிப் பாதையாகவே இருக்கிறது. திருப்பூர் பனியன்களுக்கு அமெரிக்க மக்களிடையே பெரிய அளவில் வரவேற்பு இருந்தது. இந்தியாவின் பொருளாதாரத்தில் ஒரு சிறு முன்னேற்றத்திற்கான அசைவுதான் அது. அதைக்கூட சகித்துக் கொள்ளமுடியவில்லை பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு. உடனே அமெரிக்கா பனியன் இறக்குமதியை நிறுத்தியது. சொன்ன காரணம் சாத்தானின் வேதமாக ஒலிக்கிறது. "இந்தியாவின் சுற்றுப்புறச் சூழலை கெடுத்துக்கொண்டு அந்த பனியன் தயாரிக்கப்படுகிறது. அந்த துயரத்தை நாங்கள் எப்படி இறக்குமதி செய்வது" என்பதுதான். அதுபோலத்தான் நம்மூரில் தயாரிக்கப்படும் பீடிகளுக்கு அமெரிக்கர்களிடம் கிராக்கி வந்தபோது "குழந்தைகளின் உழைப்பில் தயாரிக்கப்படும் இந்த பீடியை மனிதாபிமானமிக்க நாங்கள் சகித்துக் கொள்ள முடியாது" என்றது.
இந்த போட்டி ஒரு விசித்திரமான பரமபதம் போல. நம்மைப் போன்ற மூன்றாம் உலக நாடுகள் காய்கள் உருட்டும்போது பாம்புகள் கடித்து அதல பாதாளத்தில் மீண்டும் மீண்டும் விழும். அவர்கள் காய்களை உருட்டும்போது மட்டும் ஏணிகள் வந்து தயாராய் இருக்கும். நிதிமூலதனம் செய்யும் கண்கட்டு வித்தை இது. விபரீதமான மாயா பஜார்.
இந்த நிதிமூலதனத்தின் பெரும்பங்கு தனியார் கைகளில்தான் இருக்கிறது. எனவே, நாடுகள், அதன் மக்கள், அவர்களின் நடவடிக்கைகள், தேவைகள் அனைத்தையும் தீர்மானிக்கிற சக்தியாய் பன்னாட்டுக்கம்பெனிகளை வைத்திருக்கும் சில தனியார்கள் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அவர்கள் அமெரிக்க அரசியல் முதற்கொண்டு உலகின் அனைத்து விவகாரங்களிலும் தங்கள் நலன் காக்க தலையிடுவார்கள்.
*
மிக அழகான நடையுடன் மிகச்சிறந்த Metaphors இவைகளுடன் சொல்லப்படும் செய்தியின் தாக்கமும் நம்மை வந்தடையும்போது எழுதுபவரின் ஆளுமையை உணர்ந்துகொள்ள முடிகிறது. சமீபத்தில் தமிழில் நான் படித்த மிகச்சிறந்த படைப்பு. அறியத்தந்தமைக்கு நன்றி மாதவராஜ்
பதிலளிநீக்கு1ம் பாகத்திற்கும் இதில் சுட்டி கொடுத்திருக்கலாம்.
பதிலளிநீக்குbut common man (aam aadhmi) like me like this capitalism, and we voted for a govt which supports capitalistic policies.
பதிலளிநீக்குSocialism can not bring votes, thats the reality.
We voters 1st bother about religion, lanugage and then only we bother about economics here.
so what to do?
socialism did not bring votes in last election (not can not, read as did not).
பதிலளிநீக்குsorry, i was in hurry.
சீனா கொழிக்க உலகமயம் உதவுகிறதே. அங்குள்ளவர்களின்
பதிலளிநீக்குஉழைப்பினை ஏகாதிப்பத்தியம் அரசின்
உதவியுடன் உறிஞ்சினால் அது சோசலிசமா?. இந்தியா தாராளமயம் என்றால் அது தவறா?.
மிகவும் ளிமைப்படுத்தப்பட்ட,தவறான புரிதல். மூளைச்சலவை நன்றாக
செய்திருக்கிறார்கள்.
'காட் அமைப்பின் புதிய அவதாரமான உலக வர்த்தக அமைப்பானது நிர்வகிக்கவும், தீர்மானிக்கவும், தண்டனை வழங்கவும் அதிகாரம் படைத்த பலமான அமைப்பாக 1995ல் உருவாக்கப்பட்டது. மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதார மைய அச்சை முறிப்பதையே இலக்காகக் கொண்டு இது தனது கொள்கைகளை முன்வைக்கிறது.'
பதிலளிநீக்குதொழிற்சங்கத் தலைவருக்கே இதுதான்
புரிதல் என்றால் என்ன சொல்ல.வெட்கக்கேடு.
முதலில் WTO என்றால் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
அதற்கும் உலக வங்கி,ஐஎம் எப்
ஆகிய இரண்டிற்கும் தொடர்பில்லை.
WTO விதிகள் அனைத்து நாடுகளுக்கும்
பொது. அவ்வமைப்பின் வணிக தகராறு மேல் முறையீட்டில் அமெரிக்காவிற்கு எதிராக பல தீர்ப்புகள்
தரப்பட்டுள்ளது. சீனாவும் WTOல் உறுப்பினர்.வியத்னாமும் உறுப்பினர்.
அவை ஏன் அதில் சேர்ந்தன.
உங்கள் கட்சி ‘அறிவுசீவி'களைக் கேளுங்கள்.திருப்பூர் கொழிக்க,
வியத் நாம் பின்னாலடைத்
தொழிலில் கொழிக்க WTO விதிகள்
காரணம்.அதாவது தெரியுமா உங்களுக்கு ?
//அவர்களின் நடவடிக்கைகள், தேவைகள் அனைத்தையும் தீர்மானிக்கிற சக்தியாய் பன்னாட்டுக்கம்பெனிகளை வைத்திருக்கும் சில தனியார்கள் இருக்கிறார்கள் என்பதுதான் //
பதிலளிநீக்குமேல் நாட்டு அரசுகள் என்ற அதிகார வர்த்தகத்தை பன்னாட்டு நிறுவனங்கள் என்ற அதிகார அமைப்பு உலகமயமாதலால் பின்னுக்கு தள்ளியது. தற்போது பன்னாட்டு நிதி நிறுவனக்கள் என்ற அதை விட குறுகிய அதிகார வர்க்கம், பன்னாட்டு நிறுவனக்களை பின்னுக்கு தள்ளியுள்ளது
உலகமயமாக்கல் பற்றி நல்லதொரு படைப்பு.
பதிலளிநீக்குபெருவாரியான மக்கள் உலகமயத்தைப் பற்றி தெளிவு பெறவில்லை,அதைப் பற்றி விளக்குவதற்கு எந்த ஊடகங்களும் தயாராக இல்லை மாறாக இவைகளை பற்றி சிந்திக்கவிடாமல் செய்வதற்கு எவ்வளவோ முயற்சிசெய்கின்றனர்.
ஜான் பெர்க்கின்ஸ் எழுதிய “ஒரு பொருளாதார அடிமையின் ஒப்புதல் வாக்குமூலம்” மும்மூர்த்திகளைப் பற்றியும் மூன்றாம் உலக நாடுகளை தங்கள் வலையில் வீழ்த்துவதற்குசெய்யும் உபாயங்களையும் அப்புத்தகத்தில் விளக்குகிறார்.
முதலில் நிறுவனங்கள் செய்யும் விளம்பரங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கவேண்டும், விளம்பரங்களால் லாபமடையும் பத்திரிக்கையோ, தனியார் தொலைக்காட்சி சேனலோ மக்களுக்கு தேவையானசெய்திகள் தரும் என்று நம்புவது மூடத்தனம்.
விளம்பர வருமானங்களால் நாம் காணும் அன்றாட நிகழ்ச்சிகளுக்கு இந்த நாட்டில் உள்ள கடைக்கோடி சராசரி மனிதனும் மறைமுக வரியாக செலுத்துகிறான். ஒரு ரூபாய்க்கு தயாராகும் குளிர்பானத்திற்கு 3 ரூபாய் விளம்பரம் மறைமுகமாக இப்பணம் முதலாளித்துவத்தை வளர்க்கிறது.
அரசுக்கு இப்படி கட்டுப்பாடு விதிக்க திராணியிருந்தால் அது மக்கள் நல அரசு எனலாம்.
இதைவிட அழகாக டபாய்க்க முடியாது.
பதிலளிநீக்குஉலகமயமாக்கலின் ஒரு பக்கத்தை மட்டும் பார்க்கும் நீங்கள்... கம்யூனிஸம் கை ஓங்கி இருந்த அறுபதுகளிலும், எழுபதுகளிலும், எண்பதுகளின் தொடக்கத்திலும் எந்த லட்சணத்தில் இந்தியப்பொருளாதாரம் இருந்தது என்பது பற்றி ஏன் சொல்ல மறுக்கிறீர்கள் அல்லது மறைக்கிறீர்கள்?
பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் இந்தியர்களின் அந்நியச்செலவாணி, வேலையின்றி இருந்த ஒரு தலைமுறை இன்று தகுந்த வேலை மட்டும் இன்றி (Unemployed to under-employed) நிலைமை முன்னுக்கு வர காரணம் உலகமயமாக்கல் தான். இல்லாவிட்டால் உஸ்பெகிஸ்தானில் நடந்தது போல் பஞ்சத்தில் மனிதனை மனிதன் கொன்று தின்ன வேண்டிவந்திருக்கும். இப்போதும் சொல்கிறேன், உலகமயமாக்கல் ஒரு கட்டாய்த்தின் விளைவே. வேறு போக்கிடமின்றி தான் இதில் சரண் புகுந்தனர். கம்யூனிசம் தீர்வாக இல்லாமல் தொந்தரவானதால் வேறு வழியின்றி கேப்பிடலிசம் தழைத்தது. இதில் திரிபுகளையும், கற்பனைகளையும் சேர்த்து எழுதி செய்தியாக்கிக் குழப்பவேண்டாம். டிஸ்கி போடுவது சாலச்சிறந்தது.
Dear Mr.Madhavaraj,
பதிலளிநீக்குThis post is completely biased. I have lots of respect for your writings. Please stop this Communist crap which was routed out this world. Before blaming United States and capitalism why don’t just think of atrocities done in the name of communism in USSR by Stalin and same atrocities continuing in China till today. The person who supports present China and Stalin’s USSR has no damn rights to talk about Capitalism and Globalization.
regards,
Tharani
//
பதிலளிநீக்கு1970 மற்றும் 80களில் முதலாளித்துவ நாடுகளில் தொழில் உற்பத்தி குறைந்து, முதலீடுகளுக்கு லாபகரமான வாய்ப்புகளும் குறைந்து வந்தது. எனவே சர்வதேச அளவில் முதலீடு செய்து மேலும் மேலும் லாபக் குவியலை நோக்கிச் செல்ல முதலாளித்துவம் முன்னைவிட அதிக நிர்ப்பந்தத்தில் இருந்தது.
//
1970 மட்டுமல்ல, இது என்றைக்கும் இருக்கும் பிரச்சினை...ஏனெனில் கேப்பிடலிசத்தின் முக்கிய கொள்கையே அடுத்த இலக்கு நோக்கி நகர்வது தான்...
//
இந்த நேரத்தில், சோஷலிச உலகின் பின்னடைவானது மொத்த உலகின் பொருளாதார மேலாதிக்கத்தை இவர்களின் கைகளுக்குள் எளிதில் கொண்டு வந்து சேர்த்தது. நவீன விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சி மூலதனத்தின் பிடியில் உலகை முழுமையாக கொண்டு வருவதற்கு துணையானது.
//
சோஷியலிசம் என்று நீங்கள் சொன்னாலும், கம்யூனிசத்தையே குறிப்பதாக தெரிகிறது...இங்கு எழும் முக்கியமான கேள்வி, கேப்பிடலிசம் நவீனமடைந்த காலத்தில் கம்யூனிஸம் என்ன செய்து கொண்டிருந்தது??? உலகத்திற்கே வேண்டாம், தங்கள் நாடுகளிலாவது விஞ்ஞான முன்னேற்றம் அடைந்தார்களா??
கம்யூனிசம் தாங்கள் ஏற்படுத்திய மயக்க சூழலில் தாங்களே சிக்கி தேங்கிப் போனது...தேங்கி போன எதுவும் தானே அழியும்...
//
ஏகாதிபத்தியத்தின் உச்சக்கட்டமான உலகமயமாக்கலின் நெடுங்கதவுகள் மூன்றாம் உலகநாடுகளின் இரத்த நாளங்களை கிழித்துக் கொண்டு முற்றிலுமாக திறந்துவிடப்பட்டது.
//
திறந்தது யார்??? வெளியில் இருந்து வந்து திறந்தார்களா இல்லை மூன்றாம் உலக நாடுகள் அப்படி ஒரு சூழ்நிலையை தாங்களே ஏற்படுத்திக் கொண்டார்களா??
மூன்றாம் உலக நாடுகளின் அரசியல், சமூக நிலவரம் என்ன? ஒரு சாம்பிளுக்கு எடுத்துக் கொண்டால், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், சைனாவின் 70/80 அரசியல், சமூக நிலவரம் என்ன??
மூன்றாம் உலக நாடுகளின் இரத்த நாளங்கள் ஏற்கனவே உள்ளிருக்கும் கேன்சரால் அரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன...
//
பதிலளிநீக்குஒரு காலத்தில் படையெடுத்து நாடு பிடித்தவர்கள் இன்று மாயாவிகளைப் போல் இருந்த இடத்தில் இருந்து கொண்டே வேற்று நாட்டின் பொருளாதாரத்தை ஆட்சி செய்யும் வாய்ப்பை உலகமயம் ஏற்படுத்தியுள்ளது. இந்த வீபரீதத்தை நிகழ்த்தி காட்டும் சக்தியே நிதி மூலதனம்
//
உலகப் பொருளாதாரம், உலக மயமாக்கம் என்று ஒரு விஷயத்தை மட்டும் பார்க்கிறீர்கள்...இதை தொடர்பு படுத்தி பார்க்க வேண்டும்...
இன்றைக்கு எந்த நாடும் தனித் தீவு அல்ல....சாத்தூரிலிருந்து விருதுநகருக்கு சேதி சொல்ல ஆள் அனுப்பியது ஒரு காலம்...மதுரைக்கு சேதி சொல்ல, குதிரையில் போ என்று சொல்வார்கள்...ஆனால், இன்றைக்கு ஆண்டிப்பட்டியிலிருந்து அமெரிக்காவுக்கு ஒரே நொடியில் செய்தி சொல்ல முடியும்....
இப்படியே பொருளாதாரமும்....ஒரு நாட்டின் அரசியலை ஆதி காலம் கொண்டே பொருளாதாரத்தில் வலுத்தவர்கள் தான் தீர்மானிக்கிறார்கள்...இன்றைக்கு உலகம் சுருங்கி விட்டதால், இந்தியாவில் இருந்து கொண்டு எங்கோ சூடானிலும், ஆஃப்கனிலும் அரசியலை தீர்மானிக்க முடிகிறது...
நிதிக்கு எப்படி இப்படி ஒரு சக்தி வந்தது?? வெரி சிம்பிள்....கொள்கைகளும், வாதங்களும் பசியை, அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாது...
//
பதிலளிநீக்குமூலதனம் அதன் தோலை உரித்துக் கொண்டு 'நிதி மூலதனமாக' உருவெடுத்திருக்கிறது. இந்த நிதி மூலதனம் சர்வ வல்லமை கொண்டவையாக அதன் இயல்பிலேயே இருக்கின்றன. தன்னை உலகின் ஒவ்வொரு துகளிலிருந்து சேகரிப்பதும், மேலும், மேலும் வளர்ப்பதுமே அதன் பிறவி நோக்கமாக இருக்கிறது. தேசங்களையும், எல்லைகளையும் மிகச் சுதந்திரமாக தாண்டுகிறது. இதற்காக வடிவமாக்கப்பட்டதுதான், சுதந்திரச்சந்தை, உலகமயமாக்கல் எல்லாம்
//
தோலை எல்லாம் உரிக்கவில்லை...கேப்பிடலிசத்தின் அடிப்படையே அது தான்...தன் வளர்ச்சி என்பது தான் அடிப்படை...தேசம் என்பது மண் அல்ல, மரங்கள் அல்ல....மக்கள் தான்...மக்களின் வளர்ச்சி தான் தேசத்தின் வளர்ச்சி...ஓவ்வொருவரும் மேலும் மேலும் வளர வேண்டும், வளர முயற்சிக்க வேண்டும் என்பது தான் அடிப்படை...ஆனால், தன் வளர்ச்சிக்காக அடுத்தவரை அழிப்பதில் தான் பிரச்சினை ஆரம்பிக்கிறது....எல்லா இஸங்களிலும் இருக்கும் பிரச்சினை இது...கேப்பிடலிசம் விதிவிலக்கல்ல...
தேச எல்லைகளற்ற சமுதாயம் என்பது தானே கம்யூனிசத்தின் அடிப்படை கொள்கையும்?? (இதை காரணம் காட்டி தான் மார்க்ஸிஸ்ட் கட்சி இந்தியா மீதான சைன படையெடுப்பை ஆதரித்ததாக சொல்வார்கள்...உண்மை எனக்கு தெரியாது)
தேச எல்லைகளற்றா சமுதாயம் என்பதை கேப்பிடலிசம் ஓரளவு நடைமுறைப் படுத்தி இருக்கிறது...சொந்த லாபத்திற்காக தான் என்றாலும், யூரோப்பியன் யூனியன்...
//
பதிலளிநீக்குஇந்தியாவில் தயாரித்தால் 50 ருபாய் ஆகும் ஒரு பொருள் அமெரிக்காவில் தயாரித்தால் 150 ருபாய் வரை ஆகலாம். அமெரிக்காவில் கொடுக்கப்படும் ஊதியம் முதற்கொண்டு அனைத்தும் இந்தியாவை விட பல மடங்கு அதிகம். அந்த பொருள் இங்கு தயாரிக்கப்படுவதே அமெரிக்காவுக்கு லாபம். எனவே அமெரிக்க கம்பெனிகள் தங்கள் நிதிமூல தனத்தைக் கொண்டு இந்தியாவில் தொழில் புரிய வருகின்றன. இதன்மூலம் அந்நியச் செலாவணியாய் கிடைக்கும் அமெரிக்க டாலர்கள் மக்களுக்கு அடிப்படை வசதி செய்து தரவும், கல்வி கொடுக்கவும் பயன்பட்டுவிடாது. மாறாக கடனை அடைக்கவும், ஆயுதங்கள் வாங்கவும், தொழில் நுட்பம் வாங்குகிறோம் எனவும் மீண்டும் அமெரிக்காவுக்கே போய்ச் சேரும். ஆனால் நம் ஆட்சியாளர்கள் "நாங்கள் இந்தியாவை வல்லரசாக்கப் போகிறோம்." என்று அறிக்கைகள் விட்டுக் கொண்டிருப்பார்கள்
//
இங்கு தவறு யார் மீது?? மூன்றாம் உலக நாடுகளில் தொழில் தொடங்கும் அமெரிக்கர்கள் மீதா இல்லை அப்படி வந்த பணத்தையும் ஆயுதம் வாங்க செலவழிக்கும் நாடுகள் மீதா??
//
பதிலளிநீக்குசரி. அமெரிக்க கம்பெனி இங்கு நிறுவப்படுவதால் சிலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவும், எதோ ஒரு ஊதியம் கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறதே என்று ஒரு வாதம் முன் வைக்கப்படலாம். ஒரு அமெரிக்க கம்பெனி இங்கு நிறுவப்படும் போது இந்தியாவில் ஏற்கனவே இருக்கும் அதே துறையைச் சார்ந்த தொழில்கள் மிக வேகமாக பாதிக்கப்படும். விளம்பரம், அரசின் சலுகைகள், அசூரத்தனமான தொழில்நுட்பத்தின் முன்னால் நிற்க முடியாமல் சடசடவென்று உதிர்ந்து போகும். மிகக் குறுகிய காலத்தில் இந்தியாவில் அந்தத் தொழிலில் அந்த பன்னாட்டுக் கம்பெனியே சர்வ ஆதிக்கமும் பெற்றிருக்கும்.
//
நீங்கள் கொஞ்சம் வரலாற்று புத்தகங்களை புரட்டி பார்க்க வேண்டும்....நாங்க ரொம்ப வீக்கா இருக்கோம், அதனால இப்ப படையெடுக்க வேண்டாம், அடுத்த மாசம் வாங்களேன் என்று எதிரி நாட்டிடம் தூது அனுப்ப முடியாது..This is a war Sir!
நாட்டின் கதவுகளை சோவியத் யூனியன் போல் முற்றிலும் மூடிவிட முடியாது...தன்னை பலப்படுத்தி கொள்வதே ஒரே வழி....இந்தியாவில் இருக்கும் தொழில்களை பொறுத்த வரையில், எந்த ஒரு தனிப்பட்ட நிறுவனமும் ஆதிக்கம் செலுத்த முடியாதபடி கண்காணிக்க வேண்டியது அரசின் கடமை...உண்மையில், ஒரு அரசு என்று இருப்பதே அதற்கு தான்....
ஆனால், செய்கிறார்களா இல்லையா என்பது தான் கேள்வி...
நீங்கள் ஒரு விஷயம் சரியா தவறா என்று மட்டும் பார்க்கிறீர்கள்...ஆனால், அதை எப்படி எதிர்கொளவது என்றும் யோசிக்கலாமே??
//
பதிலளிநீக்குஉலகமயமாக்கல் மூலதனத்திற்கு சகல வசதிகளையும் செய்து கொடுக்கிறது. ஒரு பன்னாட்டுக் கம்பெனி லண்டனில் ஒரு தொழிற்சாலையை தொடங்குகிறது என்று வைத்துக் கொள்வோம். அங்கு தொழிலாளர்களுக்கு அதிக ஊதியம் கொடுக்க வேண்டியிருப்பதால் அதிக லாபம் சம்பாதிக்க முடியாமல் போகலாம். எனவே அந்த தொழிற்சாலையை மூடிவிட்டு வேறோரு நாட்டில் குறைவான ஊதியம் கொடுத்து திறக்கலாம். சுதந்திர வாணிபம் அதற்குஅதற்கு முழு உரிமை கொடுத்திருக்கிறது.
//
இது உண்மை...அதிக லாபம் வேண்டும் என்பதற்காக, லாபத்தில் நடக்கும் ஒரு தொழிற்சாலையை மூடுவது நடக்கிறது...ஆனால், இதற்கு உலகமயமாக்கல் மட்டும் காரணமல்ல....சென்னையில் நடக்கும் ஒரு தொழிற்சாலை மூடப்பட்டு உத்தர்பிரதேஷில் ஆரம்பிக்கப்படலாம்....இதற்கும் காரணம் உலகமயமாக்கல் அல்ல...
//
ஆனால் குறைவான ஊதியம் கொடுக்கப்படும் ஒரு நாட்டிலிருந்து அதிகமான ஊதியம் கொடுக்கப்படும் ஒரு நாட்டிற்கு ஒரு தொழிலாளி தனது உழைப்பை அவ்வளவு எளிதில் கொண்டு சென்றிட முடியாது. பல விதிகளும், நிபந்தனைகளும் உண்டு. சுதந்திர வாணிபத்தின் சூட்சுமம் இதுதான்.
//
ஒரு பொருளை வாங்குவது வேறு...அந்த பொருள் தயாரிப்பவரையே எனது வீட்டுக்குள் அனுமதிப்பது வேறு...இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறதா இல்லையா??
கோல்கேட் பேஸ்ட் தான வாங்குற....அப்புறம் கோல்கேட் கம்பெனில வேலை பார்க்குற என்னை ஏன் வீட்டுள்ள விடலைன்னு கேட்டா என்ன செய்றது??
ஆனால், அப்படி வருபவரால் என் வீட்டுக்கு ஏதேனும் உபயோகம் உண்டானால், அவர் அனுமதிக்கப் படுவார்....
அப்பட்டமான சுயநலமே..மக்கள் தான் நாடு...மக்களால் தான் நாடு...மக்களுக்கு இருக்கும் சுயநலம் தான் நாட்டிற்கும்...இதில் கேப்பிடலிசம் என்ன செய்தது??
//
பதிலளிநீக்குஇந்த மும்மூர்த்திகளின் மும்முனை அதிகாரங்களால் உலகமயமாக்கலின் கொள்கைகள் நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றன. கடந்த ஐமப்து ஆண்டுகளாக மூன்றாம் உலக நாடுகளின் கடன் பிரச்சினையில் தலையிடும் உரிமைகளை தன்னகத்தே கொண்ட அமைப்பாக உலக வங்கியும், சர்வதேச நிதி நிறுவனமும் உள்ளது. ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் கடன் வலைக்குள் சிக்கிக்கொள்ளும் நாடுகள், பொருளாதாரத்துறையில் மூச்சுமுட்டும் மரண அபாயத்தை சந்திப்பது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
//
கொஞ்சம்...கொஞ்சமே கொஞ்சம் அடுத்த பக்கத்தையும் பாருங்கள்....
உலக வங்கியோ, சர்வதேச நிதி நிறுவனமோ சேவை அமைப்புகள் அல்ல...அவற்றுக்கு என்று எந்த சொந்த நிதியும் கிடையாது....பல்வேறு உறுப்பு நாடுகள் அளிக்கும் பணம், மற்றும் பல கடன் வாங்கி தான் இந்த நிறுவனங்கள் கடன் அளிக்கின்றன...
நீங்கள் சொல்வது போல, ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்காக இவை உருவாக்கப்படவில்லை...உலக நாடுகளில் எந்த நாட்டுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டாலும், எந்த நாட்டால் தன் சொந்த கடன்களை அடைக்க தன் சொந்த திறமையால் நிதி திரட்ட தகுதியும், திறமையும் இல்லையோ, அந்த நாடுகளுக்கு கடைசி புகலிடமாக இருப்பது இந்த நிறுவனங்களே...
இவை வட்டி வசூலிப்பது உண்மை தான்....ஆனால், அப்படி வரும் வட்டியில் தான் அடுத்து வரும் நாடுகளுக்கு கடன் கொடுக்க முடியும்...
மிக முக்கியமாக, எந்த நாட்டிடமும் போய் கடன் வாங்கிக் கொள்ளுங்கள் என்று இந்த நிறுவனங்கள் கெஞ்சுவது இல்லை...தேவையான நாடுகள் தான் இவர்களிடம் வருகின்றன...பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகள் நாசமாய் போனதன் காரணம் என்ன?? ஜெனரல் எர்ஷாத், ஜியா உல்ஹக் போன்ற திருட்டு நாய்களா இல்லை உலக வங்கியா?? நான் செத்தாலும் பரவாயில்லை, இந்தியாவுல நூறு பேரு சாகணும் என்று அலையும் அடிப்படைவாத பயங்கரவாதிகளா இல்லை சர்வதேச நிதி நிறுவனமா??
கடன் கொடுத்தவன், சில கண்டிஷன்கள் போடத்தான் செய்வான்...குறிப்பாக, ஊழல் நிறைந்திருக்கும் சில நாடுகளில் இது மிக அவசியமாகிறது...
ஆனால், அப்படி வாங்கும் கடன்கள் இந்த நாடுகளின் மக்களை சேர்கிறதா இல்லை அரசியல்வாதிகள்/அதிகாரிகளின் ஸ்விஸ் பேங்க் அக்கவுண்ட்டில் சேர்கிறதா?? மீண்டும் இது யார் தவறு??
//
பதிலளிநீக்குஅமெரிக்காவின் பின்னால் நின்று பன்னாட்டுக் கம்பெனிகள் -உலகவங்கி, ஐ.எம்.எஃப், உட்டோ - என்னும் பரிவாரங்களோடு உலகை கபளீகரம் செய்து கொண்டிருக்கின்றன. இந்த பன்னாட்டுக் கம்பெனிகள் தங்கள் ஆலைகளை மூன்றாம் உலக நாடுகளிலும், ஏழைநாடுகளிலும் நிறுவுவதால் அங்கு சுற்றுப்புறச் சூழலுக்கு பெரிய அளவில் ஆபத்து நேரிடுகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளில் மிகுந்த அலட்சியமாக இருக்க முடிகிறது. அதற்கு தேவையான நிதி ஒதுக்கி தங்கள் லாபத்தை எள்ளளவும் குறைத்துக்கொள்ள அவை ஒருபோதும் விரும்புவதில்லை. அந்த நாட்டு மக்களும், அவர்களின் விலைமதிப்பற்ற உயிர்களும் அவர்களுக்கு அற்பமானவையே!
//
இதை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு அந்தந்த நாடுகளின் அரசாங்கத்தை சார்ந்தது...இதைக் கூட செய்ய வக்கில்லாத அந்த அரசாங்கங்கள் இருந்தென்ன போயென்ன??
பன்னாட்டு கம்பெனிகள் செய்வது எல்லாம் சரி என்று நான் வாதாடவில்லை...ஆனால், எதிர் கட்சியை குறை சொல்வதை விட, நம் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று சொல்கிறேன்...
//
பதிலளிநீக்குஆட்சியாளர்களுக்கு இவை தெரியாமல் இல்லை. அமெரிக்காவோடு தங்கள் பணிவான உறவுகளை வளர்த்துக் கொண்டு கக்கூஸ் முதல், கம்ப்யூட்டர் வரை உலகவங்கிக் கடன்களில் வாங்கிக் கொண்டு வெட்கமில்லாமல் மக்களுக்காகவே தாங்கள் வாழ்வதாகவும், சிந்திப்பதாகவும், செயல்படுவதாகவும் வித்தைகள் காட்டுவார்கள்.
//
ஆனால், வளர்ந்த நாடுகளில் இதே போன்ற வித்தைகளை காட்ட முடியாது...ஏன்??
எல்லா நாடுகளிலும் மக்களுக்கு அறிவு ஒன்று தான்...யாரும் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல...ஆனால், மூன்றாம் உலக நாடுகளில் மட்டும் நான்காம் தர ரவுடிகள் மந்திரிகளாகவும், அதிகாரிகளாகவும் வித்தை காட்ட முடிகிறதே ஏன்??
தட்டிக் கேட்க முடியாத அளவுக்கு மக்கள் மனம் சுருங்கி கிடக்கிறார்களே ஏன்??
யோசியுங்கள் மாதவராஜ்...
எல்லாருக்கும் சுயநலம் உள்ளது...தன் அடிப்படை தேவைகளுக்கே போராடிக் கொண்டிருக்கும் போது, அடுத்தவர் பிரச்சினைக்காக போராட்ட குரல் கொடுக்க எல்லாராலும் இயலாது...இது இயற்கை....
வெகு ஜனங்கள் உங்கள் குரலுக்கு செவி கொடுக்க வேண்டுமானால், முதலில் அவன் தனது சங்கிலியிலிருந்து வெளி வரவேண்டும்...
வயிற்றுப்பசியில் இருப்பவன் போராட வரமாட்டான் என்று மார்க்ஸோ இல்லை லெனினோ சொன்னதாக ஞாபகம்....
//
பதிலளிநீக்குதிருப்பூர் பனியன்களுக்கு அமெரிக்க மக்களிடையே பெரிய அளவில் வரவேற்பு இருந்தது. இந்தியாவின் பொருளாதாரத்தில் ஒரு சிறு முன்னேற்றத்திற்கான அசைவுதான் அது. அதைக்கூட சகித்துக் கொள்ளமுடியவில்லை பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு. உடனே அமெரிக்கா பனியன் இறக்குமதியை நிறுத்தியது. சொன்ன காரணம் சாத்தானின் வேதமாக ஒலிக்கிறது. "இந்தியாவின் சுற்றுப்புறச் சூழலை கெடுத்துக்கொண்டு அந்த பனியன் தயாரிக்கப்படுகிறது. அந்த துயரத்தை நாங்கள் எப்படி இறக்குமதி செய்வது" என்பதுதான்.
//
இதை அமெரிக்கா மட்டும் சொல்லவில்லை...ஈரோடு விவசாயிகளும் சொல்கிறார்கள்....நொய்யல் ஆற்றையும், பவானி சாகரையும் சாக்கடையாக்கியவர்களை நடுரோட்டில் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று சுப்புலஷ்மி ஜெகதீசன் சொன்னதாக சமீபத்தில் படித்தேன்...அவர் அமெரிக்கர் அல்ல...
நொய்யல் ஆற்றின் பிரச்சினைக்கும் உலகமயமாக்கல் காரணம் அல்ல...லஞ்சம் வாங்கிக் கொண்டு எதையும் கண்காணிக்காத அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் தான் காரணம்...
மற்றபடி, இந்த பனியன் பிரச்சினையும், ஸ்டீல் இறக்குமதிக்கு அமெரிக்கா விதித்த ஆன்டி டம்பிங் ட்யூட்டியும், அங்குள்ள தொழில்களை காக்கும் முயற்சியே....அதாவது, அவர்கள் தங்கள் பக்கத்தை பலமாக்குகிறார்கள்...இதையே பெப்சி, கோக் விஷயத்தில் இந்தியா ஏன் செய்யவில்லை??
//
பதிலளிநீக்குநிதிமூலதனம் செய்யும் கண்கட்டு வித்தை இது. விபரீதமான மாயா பஜார்
//
மாயா பஜார்..:0)))
நாமும் கண்கட்டி வித்தையை கற்பது தான் வழி ஸ்வாமி...
To summarise, if there is a chance for something to happen, then it will! (A modification of Murphy's law??)
பதிலளிநீக்குThe only way to beat your opposite side is to strengthen yourself, not to complain about them...Communism failed, because it was ignoring the natural human tendencies...People are natural, not ideal...Ideologies wont survive against natural needs...
After all, time and time again, nature tells us one thing...
THE FITTEST WILL SURVIVE!
//*அது சரி*// அவர்களுக்கு நான் பரிந்துரைப்பது - The Confessions of an Economic Hit Man by by John Perkins.
பதிலளிநீக்குTamil version of this book is banned, what is the reason behind this?
//
பதிலளிநீக்குவசந்த் said...
//*அது சரி*// அவர்களுக்கு நான் பரிந்துரைப்பது - The Confessions of an Economic Hit Man by by John Perkins.
Tamil version of this book is banned, what is the reason behind this?
July 26, 2009 9:06 AM
//
நண்பர் வசந்துக்கு,
புத்தக பரிந்துரைக்கு நன்றி...நேரம் கிடைக்கும் போது மிக நிச்சயமாக வாங்கி படிக்கிறேன்...
தமிழில் தடை செய்துவிட்டார்களா?? ஏன்? யாரால்?
வந்து கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
பதிலளிநீக்குஇந்தப் பகுதி, ஒரு பக்கச் சார்புடையதாக இருக்கிறது என்று ஒரு கருத்து வந்திருக்கிறது. இதில் நிச்சயம் நான் முரண்படுகிறேன். இந்த நிமிடம் வரை, உலகின் அரசியலை, சமூகத்தை, கலாச்சாரத்தை நிர்ணயித்துக் கொண்டு இருப்பது மூலதனமும், அதன் வேர்கள் பரவிய அமைப்புமே. உலகின் தீர்மான சக்தியாக இருப்பது மூலதனமே. அதைப்பற்றித்தானே சொல்ல முடியும்?
சீனா, ரஷ்யா போன்ற நாடுகளை உதாரணம் காட்டி, கம்யூனிசத்திற்கு எதிராக கருத்துக்கள் வந்திருக்கின்றன. நண்பர்கள் ஒரு உணமையைப் புரிந்துகொள்ள வேண்டும். இன்றுவரை உலகில் எந்த நிலப்பரப்பிலும் கம்யூனிச நாடு என்று ஒன்று உருவாகவில்லை. சோஷலிசம் நோக்கி சென்று கொண்டு இருக்கின்றன என வேண்டுமானால் சொல்லலாம். சோஷலிசம் வந்து, கம்யூனிசமாய் பரிணாமம் கொள்வதற்கு இன்னும் எவ்வளவோ காலங்கள் பிடிக்கும். சோஷலிச சித்தாந்தம் மலர்ந்து ஒரு நூற்றாண்டு சொச்சமே ஆகியிருக்கிறது. உழைப்பே தீர்மான சக்தியாய் மாறுவதற்கு இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆகுமோ!
இடைப்பட்ட காலத்தில், சோஷலிச முகாம் என்று உருவாகி, மூலதனத்தின் பாய்ச்சலுக்கு முன்னால் நிற்க முடியாமல் பின்னடைவை சந்தித்திருக்கிறது. அது சில தாக்கத்தை இந்த அமைப்புக்குள் ஏற்படுத்தி இருக்கிறது. பொதுத்துறை, சேவைத்துறை உருவாகி, என சாமானியரின் நலன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய சூழல் உருவானது.
அந்த சோஷலிச முகாமின் பின்னடைவுக்குப் பிறகு, மூலதனம், படுவேகமாக தனது ஆதிக்கத்தை உலகம் பூராவும் செலுத்துவதற்கு, இந்த உலகமயமாக்கல் வசதி செய்து கொடுத்திருக்கிறது என்பதே இந்தப் பகுதியில் நாங்கள் சொல்ல முயற்சித்திருப்பது.
இந்த உலகமயமாக்கலில் நன்மைகளும் உண்டு. தீமைகளும் உண்டு. தொழில்நுட்பத்தின் உச்சிக்குக் கொண்டு நிறுத்தியிருக்கிறது. ஆனால், கோடிசுவரர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிறது. வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிறது. அதாவது கிழே இருந்து உறிஞ்சி, உற்ஞ்சி மேலேக் கொண்டு செல்கிறது!
இதில் நடுத்தர மக்கள் அனைவரும் கன்ஸ்யூமர்களாகி, பெரும் பலன் அடைவதாய் ஒரு தோற்ற மயக்கம் சில காலம் நிலவும். பிறகு அவர்களும் உறிஞ்சப்படுவார்கள். பெரும் பொருளாதாரத் தேக்கம் உருவாகும். அதன் ஆரம்பமாக இந்தக் காலக் கட்டம் இருப்பதை உணர முடியும்.
மூலதனம் குறித்து கீட்ஸ் சொன்னதை ஏற்றுக் கொண்டு இருந்த முதலாளித்துவ உலகம், இன்று பொருளாதாரச் சரிவு வந்த பிறகு மார்க்ஸை மறுவாசிப்பு செய்கிறதே ஏன்?
அதுசரி அவர்கள் பல கருத்துக்கள் சொல்லியிருக்கிறார்கள். சிலவற்றில் எனக்கு உடன்பாடு உண்டு. ஆனாலும் அவர் மூலதனம், அதன் குணாம்சம், அதன் செயல்பாடுகள் குறித்து இன்னும் தெளிவாக புரிந்து கொண்டு விவாதிக்கலாம் என்று தோன்றுகிறது.
அப்புறம், ஜான் பெர்கின்ஸின் “ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்” தமிழில் கிடைக்கிறதே!
Why you have to defend China. China is part and parcel of the
பதிலளிநீக்குglobal capitalist system.China needs USA more than India needs
USA.China is supporting genocide
and plunder.The latest example is
Sri Lanka.Earlier it supported
Sudan and Mianmar.CPI(M) should
state that what is practised in
China is not socialism and has
nothing to do with communism.
You cant call exploitation of
citizens as providers of cheap
labor to serve interests of
capitalists and call that as
socialism.
Keynes was for reformation of
capitalism and not for its
replacement by communism.