பச்சை நரம்புகள்

மண்ணில் உதிர்த்த
குழந்தைகளின் சிரிப்புக்களை
தாவரங்கள் உறிஞ்சி
பூப்பூத்துக் கொள்கின்றன

மிச்சத்தை
எடுத்துக் கொள்பவள்
பாட்டிதான்

நெறிந்து தொங்கும்
சுருக்கைப் பையின்
இழுவைக் கயிற்றில்
கோர்த்து வைத்திருக்கிறாள் அதை

எல்லோருக்குள்ளும் இருக்கிறது
பாட்டியின் கோர்வை நூல்

பச்சை நரம்புகள் இல்லாத
மனிதர்கள் யார்?

- கவிஞர் சு. வெங்கடேசன்

பி.கு: காவல் கோட்டம் நாவல் எழுதிய  கவிஞர்.சு.வேங்கடேசனின் ஆதிப்புதிர் கவிதைத் தொகுப்பிலிருந்து எடுத்தாளப்பட்டது.

கருத்துகள்

9 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. அருமையான கவிதை...!! அழகு.....!!!!!

    பதிலளிநீக்கு
  2. அழகா இருக்கு கவிதை! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  3. கவிதை அருமை.முதல் நான்கு வரிகள் வெகுவாக ரசிக்க வைத்தன.

    பகிர்வுக்கு நன்றி மாதவராஜ் !!!

    பதிலளிநீக்கு
  4. லவ்டேல் மேடி!
    தீப்பெட்டி!
    குப்பன் யாஹூ!
    சந்தனமுல்லை!
    அ.மு.செய்யது!
    மங்களூர் சிவா!
    அனைவரின் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!