இரக்கமற்ற வெறியும், இராணுவ நடவடிக்கைகளும்! (உலகமயமாக்கல் - 3ம் பகுதி)

தலையீடு என்றால் சாதாரணமாக நாம் அதை எடுத்துக் கொள்ள முடியாது. இரக்கமற்ற வெறி. மனித இரத்தத்தில் குளித்து மெல்ல காட்டும் புன்னகை. நிதி மூலதனத்தின் கேடயமாக இருந்து தொடுக்கும் தாக்குதல் என்பதுதான் அதன் பொருள். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகமயமாக்கல் நிலப்பரப்பின் மீது படர்ந்த இந்த நாட்களில் அமெரிக்கா தொடுத்திருக்கும் யுத்தங்கள் கணக்கிலடங்காது.

வியட்நாமில் நடந்த பத்து வருடப் போரில் மட்டும்  எத்தனையோ லட்சம் மக்கள் இறந்து போனார்கள். 1953ல் ஈரானில், 1954ல் கெளதமாலாவில், 1960ல் காங்கோவில், பல தடவை கியூபாவில், 1964ல் பிரேசிலில், 1965ல் இந்தோனேஷியாவில், 1973ல் சிலியில் சி.ஐ.ஏ மூலம் அந்த நாட்டு அரசியலில் தலையிட்டது. 1965ல் டொமினிக் குடியரசில் நடந்த ஒரு தேர்தல் பிரச்சாரத்திற்காக தனது கப்பற்படைகளை அனுப்பி வைத்தது. 1980ல் நிரராகுவாவில் சாண்டிஸ்டா தலைமையில் அமைந்த இடதுசாரி அரசாங்கத்தை எதிர்த்து அங்குள்ள வலதுசாரிகளோடு அமெரிக்க படைகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்தது. மருத்துவ மனைகள், பள்ளிக் கூடங்கள் மீது தாக்குதல் நடத்தியது பயங்கரமான கொடூரம்.1982ல் இஸ்ரேல் லெபனானை ஆக்கிரமித்த போது, அமைதி ஏற்படுத்துவதற்காக அமெரிக்க படைகள் சென்று இஸ்ரேலுக்கு சாதகமான ஒரு ஆட்சியை நிறுவ முயற்சித்தது. 1986ல் லிபியா மீது குண்டு போட்டது. 1989ல்  பனாமாவில் அதன் அதிபர் மானுவெல் நொரிகோவை கைதுசெய்து அவரை ஆட்சியில் இருந்து அகற்ற  20.000 அமெரிக்கப் படை வீரர்களை அனுப்பினார் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ். 2500 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பனாமா அதிபருக்கு நெருங்கிய உறவினர்களை எரித்தும், அவர்களை காரில் வைத்து டாங்கிகளால் நசுக்கியும் கொன்றனர். இவையெல்லாம் நான்கே நாட்களில்  நடந்தது. இந்த படையெடுப்புக்கு operation just cause என்று பேர்.

ஈரானில், ஆப்கானிஸ்தானத்தில், இன்னும் உலகின் பல பிரதேசங்களில் அமெரிக்க இராணுவத் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டிருக்கின்றன. இவற்றில் இறந்துபோன  ஒரு பாவமும் அறியாத சாதாரண மக்கள் கோடிக்கணக்கில் இருப்பார்கள். எல்லாம் அந்த மக்களின் 'விடுதலை'க்காகவும், அமெரிக்காவின் மிதமிஞ்சிய 'கருணை'யாலும்தான் நடந்து முடிந்திருக்கின்றன.

இந்த யுத்தங்கள் ஒவ்வொன்றிற்கும் அமெரிக்கா ஒவ்வொரு கதை சொல்லும். சளைக்காமல் காரணமும் சொல்லும். அந்த நாடுகளை அயோக்கியத்தனமான நாடுகள் என்று முத்திரை குத்தும்.  எந்தெந்த நாடுகள் தங்கள் சுதந்திரத்தையும், தேசத்தின் நலன்களையும் முன் நிறுத்துகிறதோ அவையெல்லாம் அயோக்கியத்தனமான நாடுகள். அங்கு சர்வாதிகார ஆட்சியமைப்பு இருந்தால் ஜனநாயகம் இல்லையென்று சொல்லும். ஜனநாயக நாடுகள் என்றால் உள்நாட்டுக் கலகங்களை ஏற்படுத்தி அதையடக்க தன் இராணுவத்தை அனுப்பும். இப்படி அதற்கென்று நியாயங்கள். சட்டங்கள்.

இவையெல்லாவற்றுக்கும் பின்னணியில்  பன்னாட்டுக் கம்பெனிகளின் நலன்களே பொதிந்து இருக்கின்றன. சதாம் உசேன் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் கம்பெனிகளுக்கு எண்ணெய் எடுக்கும் ஒப்பந்தத்தை அளிக்காத தாலேயே சமீபத்தில் நடந்த ஈராக் யுத்தம்.

உண்மைகளும், மனிதர்களும் குண்டுகளுக்கு பலியாகி ஈராக் மண்ணில் எந்தக் காமிராவின் கண்களும் படாமல் தூசி படியக் கிடக்கின்றனர். 'சதாம் உலகத்துக்கே பேரழிவு உண்டாக்கும் இரசாயண ஆயுதங்கள் வைத்திருக்கிறார்'... 'செப்டம்பர் 11க்கு காரணமான அல்-கொய்தாவுடன் சதாமுக்கு தொடர்பு இருக்கிறது', 'ஈராக்கில் ஜனநாயகம் இல்லை'..என்ற பிரச்சாரங்களால் அவை மூடப்பட்டிருக்கின்றன.

இந்தப் போர் சதாம் உசேனுக்காக இல்லை என்பது  புஷ்ஷுக்கும், பிளேருக்கும் தெரியும். தங்கள் சொல்படி கேட்கிற ஒரு மாற்று அரசை அமைCது எண்ணெய் வளத்தில் உலகின் இரண்டாவது பெரிய நாடான ஈராக்கை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரவே இத்தனை நாசவேலைகள். அங்கு ஒரு இராணுவத்தளத்தை அமைத்து அரபு உலகத்தை நடுக்கமுறச் செய்து என்றென்றும் தங்களுக்கு கப்பம் கட்ட வைப்பதற்குத்தான் இத்தனை உயிர்பலிகள்.

அதனால்தான்  பீரங்கிகளின் அணிவகுப்பின், புகை மண்டலத்தின், தீப்பிழம்புகளின் பின்னணியில் அமெரிக்க அதிபர் புஷ் டி.வி யில் தோன்றி "நாங்கள் முன்னேறுகிறோம்." என்று கொக்கரிக்கிறார். எத்தனையோ தேசங்களின், எத்தனை எத்தனையோ மனிதர்களின் அவலக்குரல்கள் மோதியும் அசையாத அந்த பாறை முகத்தில் ஒரு சிறுவலி கூடத் தெரியவில்லை. தனது மிருக இராணுவத்தை அனுப்பி சேகரித்த எத்தனையோ லட்சம் மனிதர்களின் பிணங்களை ருசித்து  உருவான அந்தத் தோற்றம் வரலாற்றின் கறையாக உற்றுப்பார்த்தால் தெரியும். காலம் முகங்களை மட்டுமே கிளிண்டன்  என்றும், முதல் புஷ் என்றும், ரீகன் என்றும் கார்ட்டர் என்றும் மாற்றிக் கொண்டிருக்கிறது. "உலகில்  எந்த ஒரு நாளிலும் எங்காவது ஒரு  ஆண், ஒரு பெண், ஒரு குழந்தை அரசின் கைகளால், ஆயுதமேந்திய அரசியல் கும்பலால் துன்புறுத்தப்படுகின்றனர்; காணாமல் போகின்றனர்; கொல்லப்படுகின்றனர். இந்த பழி பாவத்தில் அமெரிக்காவே அதிகமாக சம்பந்தப்பட்டிருக்கிறது" 1996 அம்னஸ்டி இண்டர்நேஷனல்தான் இப்படிச் சொல்கிறது.

செப்டம்பர் 11ல் அமெரிக்காவின்  உயர்ந்த அந்த இரண்டு மாடிக்கட்டிடங்களும்  நொறுங்கி விழுந்த போது உலகமே அதிர்ந்து போனது. ஆனால் பெண்டகனும். வெள்ளை மாளிகையும் ஆப்கானிஸ் தானத்தின் மீது யுத்தம் தொடுக்க ஆயுதங்களையும், துருப்புகளையும் மிகுந்த ஆரவாரத்தோடு ஆயத்தம் செய்து கொண்டிருந்தன.

அமெரிக்காவைப் பொறுத்த வரையில் பயங்கரவாதத்தின் மீதான தாக்குதல் என்பது அரூபத்தின் மீது  தொடுக்கும் தாக்குதல் என்பது தெரியும். ஆனால் அது அமெரிக்காவுக்கு வேண்டியிருக்கிறது. உலகிற்கு தன் பலத்தை காட்ட வேண்டும். தன்னையும், தன்னை இந்த அதிகாரத்தில் உட்கார வைத்திருக்கும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும்  எந்த நாடும் எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது . அதுதான் புஷ் சொல்கிறார்.."ஒன்று நீங்கள் எங்களுடன் இருக்க வேண்டும். அல்லது பயங்கரவாதிகளோடு இருக்க வேண்டும்" உலகம் முழுவதிற்கும் விடுத்த மிரட்டல் இது.

வரலாற்றின் நிகழ்ச்சிகளிலிருந்து பார்த்தால் அமெரிக்காவின் இந்த இராணுவ  நடவடிக்கைகளுக்கு காரணம் புரியும். முதலாளித்துவம் வளர்ந்த ஒவ்வொரு காலக் கட்டத்திலும் அது எதிர்ப்புகளை சந்தித்தே வந்திருக்கிறது. ஒவ்வொரு காலக் கட்டத்திலும் ஈவிரக்கமின்றி அந்த எதிர்ப்புகளை நசுக்கி இருக்கிறது.  அவை மீண்டும் மீண்டும் இந்த மண்ணில் வெடிக்கும் என்று  அவர்களுக்குத் தெரியும். அதை நசுக்குவதற்கும், அவநம்பிக்கை உருவாக்குவதற்குமே இந்த இராணுவ மயமாக்கல். உலகமயமாக்கலும், இராணுவமயமாக்கலும் கைகோர்த்து நடந்து வருகின்றன.

இப்படிப்பட்ட உலகமயமாக்கல் எப்படி இருக்கும்?

உலகமயமாக்கல் - முதல் பகுதி
உலகமயமாக்கல் - இரண்டாம் பகுதி

*

கருத்துகள்

24 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. How did USSR treat the East European countries. Who sent tanks to quell revolt in Prague.USSR and China also supported many dictators
    including Saddam.Today it is China which is supporting junta in Myanmar, genocide in Sudan and Srilanka.In your version of history there is no place for all this and for what Pol Pot did in
    Cambodia.What is happening in
    North Korea.Dictators like Gadaffi dont figure in your list-why?.

    Dont think that others are fools.There is blood in the hands of capitalists and socialists.Let us accept that.This one sided version of yours is too silly.

    பதிலளிநீக்கு
  2. லால்கர், நந்திகிராம் நடந்த உலகமயமாக்கல் ராணுவ, போலீசு வெறி நடவடிக்கைகளையும் மாதவராஜ் எழுதுவார் என்று ஆவலுடன்.

    ஜங்கி மங்கி

    பதிலளிநீக்கு
  3. //
    அதுசரி அவர்கள் பல கருத்துக்கள் சொல்லியிருக்கிறார்கள். சிலவற்றில் எனக்கு உடன்பாடு உண்டு. ஆனாலும் அவர் மூலதனம், அதன் குணாம்சம், அதன் செயல்பாடுகள் குறித்து இன்னும் தெளிவாக புரிந்து கொண்டு விவாதிக்கலாம் என்று தோன்றுகிறது.
    //

    உனக்கு ஓன்றும் தெரியவில்லை...எதுவும் புரியவில்லை...அதனால இன்னும் நல்லா படிச்சிட்டு அப்புறமா பேச வா....என்று சொல்வது போல் இருக்கிறது.... மாவோவும், மார்க்ஸும், கீன்ஸும், ஆடம் ஸ்மித்தும் என்ன சொன்னார்கள் என்று நான் படித்ததில்லை...எனது எழுத்துக்கள் ஒரு அலைந்து திரிபவனின் சொந்த அனுபவங்கள், எண்ணங்களே தவிர, நான் படித்த புத்தகங்களின் மீதான் விமர்சனமல்ல‌...அதனால் புரிதலில் மாறுபாடுகள் இருக்கலாம்...

    கவனித்து பார்த்தால், நான் எழுப்பிய எந்த கருத்துக்கும் நீங்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பதில் சொல்லவில்லை...இது உரையாடலாக இல்லை...எனக்கு நானே பேசிக் கொள்வது போல இருக்கிறது....:0))

    ஈழப்படுகொலையிலும், பர்மாவின் ராணுவ ஆட்சியிலும் சைனாவின் பங்கு குறித்து கேள்வி எழுப்பியதில் மிக முக்கிய காரணம் இருக்கிறது...விவாதத்தை திசை திருப்பும் நோக்கமில்லை....வேறு காரணம்...

    முழுமையாக பார்த்தால், கேப்பிடலிசத்தை குறை சொல்வதே இந்த கட்டுரைகளின் நோக்கம்....அதற்கான தீர்வையோ, மாற்று அமைப்பை குறித்தோ எங்கும் சொல்லப்படவில்லை....

    மாற்று பற்றி மார்க்ஸ் ஏற்கனவே சொல்லிவிட்டார்...அதை படிச்சிக்க என்று நீங்கள் சொல்லக்கூடும்...இருக்கட்டும்....

    இப்படி சொல்வீர்களானால்....நீங்கள் ஒரு மிக முக்கியமான விஷயத்தை தவற விட்டுவிட்டீர்கள் மாதவராஜ்...கொஞ்சம் யோசித்து பார்த்தால் இந்த விஷயத்திற்கும், கம்யூனிஸம் ஏன் விரல் விட்டு எண்ணக்கூடிய நாடுகளில் மட்டுமே இருக்கிறது என்பதற்கும் காரணம் புரியும்...கம்யூனிஸம் ஏன் அதிகம் படித்தவர்களின் கனவாகவும், முதலாளித்துவம் ஏன் மக்களின் வாழ்க்கை முறையாகவும் இருக்கிறது என்றும் கூட தெரிய வரலாம்....

    நேரம் கிடைத்தால், உங்களின் கட்டுரைக்கு விரிவான பதில் பின்னர்...

    பதிலளிநீக்கு
  4. //
    வியட்நாமில் நடந்த பத்து வருடப் போரில் மட்டும் எத்தனையோ லட்சம் மக்கள் இறந்து போனார்கள். 1953ல் ஈரானில், 1954ல் கெளதமாலாவில், 1960ல் காங்கோவில், பல தடவை கியூபாவில், 1964ல் பிரேசிலில், 1965ல் இந்தோனேஷியாவில், 1973ல் சிலியில் சி.ஐ.ஏ மூலம் அந்த நாட்டு அரசியலில் தலையிட்டது. 1965ல் டொமினிக் குடியரசில் நடந்த ஒரு தேர்தல் பிரச்சாரத்திற்காக தனது கப்பற்படைகளை அனுப்பி வைத்தது. 1980ல் நிரராகுவாவில் சாண்டிஸ்டா தலைமையில் அமைந்த இடதுசாரி அரசாங்கத்தை எதிர்த்து அங்குள்ள வலதுசாரிகளோடு அமெரிக்க படைகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்தது. மருத்துவ மனைகள், பள்ளிக் கூடங்கள் மீது தாக்குதல் நடத்தியது பயங்கரமான கொடூரம்.1982ல் இஸ்ரேல் லெபனானை ஆக்கிரமித்த போது, அமைதி ஏற்படுத்துவதற்காக அமெரிக்க படைகள் சென்று இஸ்ரேலுக்கு சாதகமான ஒரு ஆட்சியை நிறுவ முயற்சித்தது. 1986ல் லிபியா மீது குண்டு போட்டது. 1989ல் பனாமாவில் அதன் அதிபர் மானுவெல் நொரிகோவை கைதுசெய்து அவரை ஆட்சியில் இருந்து அகற்ற 20.000 அமெரிக்கப் படை வீரர்களை அனுப்பினார் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ். 2500 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பனாமா அதிபருக்கு நெருங்கிய உறவினர்களை எரித்தும், அவர்களை காரில் வைத்து டாங்கிகளால் நசுக்கியும் கொன்றனர். இவையெல்லாம் நான்கே நாட்களில் நடந்தது. இந்த படையெடுப்புக்கு operation just cause என்று பேர்
    //

    யப்பா....எவ்ளோ பெரிய லிஸ்ட்டு.....

    இப்படி பட்டியலிடும் அதே நேரத்தில் சம்பவம் நடந்த காலத்தில் அந்தந்த நாடுகளின் சூழ்நிலை என்ன, அங்கு இருந்த அரசாங்கங்கள் எப்படிப் பட்டவை, அந்த நாடுகளின் தெருக்களில் பாலாறும் தேனாறும் ஓடியதா என்றும் பட்டியலிட்டிருந்தால் இதை ஒரு நடுநிலைக் கட்டுரை என்று சொல்லலாம்....ஆனால் நீங்கள் அப்படி செய்யவில்லையே???

    ஷா ஆட்சியை எதிர்த்து மதவாதிகள் நடத்திய கலவரம் தான் இரானின் பிரச்சினை...மதமும் அரசும் பிரித்து வைக்கப்பட வேண்டியது...

    லெபனான மீது இஸ்ரேல் படையெடுக்க வேண்டிய சூழ்நிலை என்ன?? இன்றைக்கும் அங்கு தொடரும் பிரச்சினைகளின் அடிப்படை என்ன?? சிரியா, இரான், இராக், லெபனான் என்று சூழப்பட்டிருக்கும் இஸ்ரேலின் நிலை என்ன??? உலக மேப்பில் இருந்து இஸ்ரேலை ஒழிப்பதே நோக்கம் என்று சொல்லும் இரான் அதிபரை(???) எப்படி எதிர்க் கொள்வது??? இப்படியும் ஒரு மறுபக்கம் இருக்கிறது??

    க்யூபாவின் நிலை இன்னும் காமெடி....இத்தனை வருட கம்யூனிச இல்லை இல்லை சோஷலிச ஆட்சிக்கு பின், பிடலுக்கு தெரிந்த இன்னொரு ஒரே சோஷியலிஸ்ட் அவரது தம்பி தான்....இப்பொழுது அரசை நடத்துவதே அவர் தான்...என்ன ஒரு சோஷியலிஸம்!

    பதிலளிநீக்கு
  5. //
    ஈரானில், ஆப்கானிஸ்தானத்தில், இன்னும் உலகின் பல பிரதேசங்களில் அமெரிக்க இராணுவத் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டிருக்கின்றன. இவற்றில் இறந்துபோன ஒரு பாவமும் அறியாத சாதாரண மக்கள் கோடிக்கணக்கில் இருப்பார்கள். எல்லாம் அந்த மக்களின் 'விடுதலை'க்காகவும், அமெரிக்காவின் மிதமிஞ்சிய 'கருணை'யாலும்தான் நடந்து முடிந்திருக்கின்றன.
    //

    ஆஃப்கன் மக்கள் மீது கருணைப் பார்வை....நல்லது...

    ஆனால், முல்லா ஓமர் ஆட்சிக்காலத்தில், ஆஃப்கன் எப்படி இருந்தது??? பெண்கள் பள்ளிகள் மூடப்பட்டன...மீறி பள்ளிக்கு போன பெண் குழந்தைகள் மீது ஆசிட் வீசப்பட்டது...

    இது தான் உங்களின் மனித நேயம், கம்யூனிசம் மக்களுக்கு தரும் தீர்வு என்றால், அந்த கம்யூனிசம் ஒழியும் வரை போராடுவதில் தப்பில்லை...

    பதிலளிநீக்கு
  6. //
    இந்த யுத்தங்கள் ஒவ்வொன்றிற்கும் அமெரிக்கா ஒவ்வொரு கதை சொல்லும். சளைக்காமல் காரணமும் சொல்லும். அந்த நாடுகளை அயோக்கியத்தனமான நாடுகள் என்று முத்திரை குத்தும். எந்தெந்த நாடுகள் தங்கள் சுதந்திரத்தையும், தேசத்தின் நலன்களையும் முன் நிறுத்துகிறதோ அவையெல்லாம் அயோக்கியத்தனமான நாடுகள். அங்கு சர்வாதிகார ஆட்சியமைப்பு இருந்தால் ஜனநாயகம் இல்லையென்று சொல்லும். ஜனநாயக நாடுகள் என்றால் உள்நாட்டுக் கலகங்களை ஏற்படுத்தி அதையடக்க தன் இராணுவத்தை அனுப்பும். இப்படி அதற்கென்று நியாயங்கள். சட்டங்கள்.
    //

    ஆமா....சதாம் உசேன், முல்லா ஓமர், பின் லாடன், அயத்துல்லா கொமேனி எல்லாம் ரொம்ப நல்லவங்க...அமெரிக்காகாராய்ங்க வந்து இந்த நல்லவங்களை அழிச்சிட்டுது :0))

    உங்கள் நடுநிலைக்கு இதுவே சான்று???

    பதிலளிநீக்கு
  7. //
    இந்தப் போர் சதாம் உசேனுக்காக இல்லை என்பது புஷ்ஷுக்கும், பிளேருக்கும் தெரியும். தங்கள் சொல்படி கேட்கிற ஒரு மாற்று அரசை அமைCது எண்ணெய் வளத்தில் உலகின் இரண்டாவது பெரிய நாடான ஈராக்கை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரவே இத்தனை நாசவேலைகள். அங்கு ஒரு இராணுவத்தளத்தை அமைத்து அரபு உலகத்தை நடுக்கமுறச் செய்து என்றென்றும் தங்களுக்கு கப்பம் கட்ட வைப்பதற்குத்தான் இத்தனை உயிர்பலிகள்.
    //

    அது சதாம் உசேனுக்காக (மட்டும்) இல்லை என்று உங்களுக்கும் தெரியும்...எல்லாருக்கும் தெரியும்....ஆனால், எண்ணெய்க்காக என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் பிரச்சினை...இதன் உண்மைக் காரணங்கள் உலக வரைபடத்தையும், இராக்கை ஒட்டி இருக்கும் நாடுகளையும் சேர்த்து பார்த்தால் உங்களுக்கே தெரிய வரும்!

    தமிழில் வருமுன் காப்போம் என்று ஒரு வாக்கியம் உண்டு...அதிலும் இதற்கு விடை இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  8. //
    செப்டம்பர் 11ல் அமெரிக்காவின் உயர்ந்த அந்த இரண்டு மாடிக்கட்டிடங்களும் நொறுங்கி விழுந்த போது உலகமே அதிர்ந்து போனது. ஆனால் பெண்டகனும். வெள்ளை மாளிகையும் ஆப்கானிஸ் தானத்தின் மீது யுத்தம் தொடுக்க ஆயுதங்களையும், துருப்புகளையும் மிகுந்த ஆரவாரத்தோடு ஆயத்தம் செய்து கொண்டிருந்தன.
    //

    ஏன், அவர்களும் அழுது கொண்டிருக்க வேண்டும் என்பது உங்கள் கருத்தா???

    பாதுகாப்பு அவர்களது கடமை....தாக்குதல் நடந்த பின், மறு தாக்குதலுக்கு ஏற்பாடு செய்வார்களா இல்லை மூலையில் உட்கார்ந்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருப்பார்களா???

    பதிலளிநீக்கு
  9. //
    அமெரிக்காவைப் பொறுத்த வரையில் பயங்கரவாதத்தின் மீதான தாக்குதல் என்பது அரூபத்தின் மீது தொடுக்கும் தாக்குதல் என்பது தெரியும். ஆனால் அது அமெரிக்காவுக்கு வேண்டியிருக்கிறது. உலகிற்கு தன் பலத்தை காட்ட வேண்டும். தன்னையும், தன்னை இந்த அதிகாரத்தில் உட்கார வைத்திருக்கும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் எந்த நாடும் எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது . அதுதான் புஷ் சொல்கிறார்.."ஒன்று நீங்கள் எங்களுடன் இருக்க வேண்டும். அல்லது பயங்கரவாதிகளோடு இருக்க வேண்டும்" உலகம் முழுவதிற்கும் விடுத்த மிரட்டல் இது.
    //

    இது மிக மோசமான வாதம்!

    அரூபத்தின் மீதான தாக்குதல் என்று எதுவுமே செய்ய வேண்டாம் என்கிறீர்களா????

    பதிலளிநீக்கு
  10. //
    வரலாற்றின் நிகழ்ச்சிகளிலிருந்து பார்த்தால் அமெரிக்காவின் இந்த இராணுவ நடவடிக்கைகளுக்கு காரணம் புரியும். முதலாளித்துவம் வளர்ந்த ஒவ்வொரு காலக் கட்டத்திலும் அது எதிர்ப்புகளை சந்தித்தே வந்திருக்கிறது. ஒவ்வொரு காலக் கட்டத்திலும் ஈவிரக்கமின்றி அந்த எதிர்ப்புகளை நசுக்கி இருக்கிறது. அவை மீண்டும் மீண்டும் இந்த மண்ணில் வெடிக்கும் என்று அவர்களுக்குத் தெரியும். அதை நசுக்குவதற்கும், அவநம்பிக்கை உருவாக்குவதற்குமே இந்த இராணுவ மயமாக்கல். உலகமயமாக்கலும், இராணுவமயமாக்கலும் கைகோர்த்து நடந்து வருகின்றன.
    //

    உலக மயமாக்கல் எப்படியோ, ஆனால், இராணுவ மயமாக்கல் பயங்கரவாதத்தை, மதவாத மன நோயை எதிர்க்க வேறு வழியில்லாமல் செய்யும் ஏற்பாடு...

    இராணுவ மயமாக்கலை பற்றி நீங்கள் பேச ஆரம்பித்தால், இரட்டை கோபுர தாக்குதல், பெங்களூர் குண்டு வெடிப்பு, டெல்லி குண்டு வெடிப்பு, பார்லிமெண்ட் தாக்குதல், மும்பை தாக்குதல் வரை காரணம் ஆன, மனம் அழுகிய பன்றிகள் பற்றியும் பேச வேண்டும்....

    நீங்கள் அதற்கு தயாரா??

    பதிலளிநீக்கு
  11. அனானி நண்பரே!
    நான் யாரையும் முட்டாள்களாக கருதவில்லை. ஒட்டுமொத்த வரலாற்று நிகழ்வில், எந்த அமைப்பு உலகத்தை ஆட்டுவித்துக் கொண்டு இருக்கிறது, அதன் நோக்கம் என்ன என்பதையே இந்த உலக மயமாக்கல் தொடரில் நான் சொல்ல வருகிறேன்... அல்லது சொல்லி வருகிறேன். சோவியத், சைனா வுக்கு நான் ஒன்றும் வக்காலத்து வாங்கவில்லை. முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான முகாம் ஒன்றை உருவாக்க முயன்றதில் சோவியத் தோல்வியடைந்தது. அத்தகைய சோவியத்தின் முயற்சியில் வரலாற்றுப் பிழைகளும் இருந்திருக்கக்கூடும். அது ஒரு தனிக்கதை. அதுகுறித்தும் ஆராயவேண்டும்... எழுத வேண்டும் இன்னொரு சமயம். (சில்லியாக இருந்தாலும்...)

    இங்கு மூலதனத்தின் தலைமைப்பீடமாக த்ன்னைக் காட்டிக்கொண்டு அமெரிக்காவின் அட்டூழியங்களைப்பற்றி எவ்வளவோ சொல்லப்பட்டு இருக்கிறது. அதுபற்றி எந்தக் கருத்தும் தெரிவிக்காமல், நீங்கள் எழுதியிருப்பது மட்டும் ஒருதலைப்பட்சமானதாக தெரியவில்லையோ?

    பதிலளிநீக்கு
  12. அனானி!

    லால்கர், நந்திகிராம் குறித்தும் எழுதுவேன் நண்பரே நிச்சயமாய்.

    பதிலளிநீக்கு
  13. செய்தி வளையம் குழுவினருக்கு!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  14. அதுசரி...!

    முதலில் மன்னிப்பு கோருகிறேன். தங்களை புண்படுத்தும் நோக்கில் அந்த வார்த்தைகளை பயன்படுத்தவில்லை. மூலதனம், நிதிமூலதனம் ஆகியவற்றின் தன்மைகள் குறித்து நிறையப் பேசப்பட்டு இருந்தது முந்தையப் பதிவில். வாழ்வின் அனைத்து மதிப்பீடுகளையும், மனிதர்களிடம் இருக்கும் நற்பண்புகளையும் துவம்சம் செய்து, தான், தன் நலன் என உருமாற்றும் அதன் வெறியை, வேகத்தை சுட்டிக்காட்டியிருந்தேன். அதை மிக இயல்பான ஒன்றாய், தவிர்க்கவே முடியாத விஷயமாய் உங்களின் பல கருத்துக்களில் எழுதியிருந்தீர்கள். நீங்கள் உங்கள் வாழ்வின் அனுபவங்களிலிருந்தே பேசிக்கொண்டு இருந்தீர்கள். மூலதனம் குறித்து இன்னும் தெளிந்து இருந்தீர்களானால், அது இயல்பானதன்று என்பதை நீங்களே ஒப்புக்கொண்டு இருப்பீர்கள். மூலதனம் மனிதனோடு சேர்ந்து பிறக்கவில்லை. இடையில் வந்ததுதான். மனிதனோடு பிறக்கும்போதே கூட வந்தது என்றால் கைகால்களை உதைத்துக் கொண்டு இருக்கும் குழந்தையின் அசைவுகளில் இருக்கும் உழைப்புத்தானே நண்பரே!

    கேப்பிடலசத்திற்கு நிச்சயம் தீர்வு சோசலிசம்தான் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. மனிதர்களை சுயநலவாதிகளாக மாற்றுகிற, அன்பு பாசம் என அனைத்தையும் விலை பேசுகிற இந்த அமைப்பை மாற்றவே முடியாதது என எனக்கு அவநம்பிக்கையில்லை.

    சோஷலிசம் என்னும் சித்தாந்தம் ஒரு நூற்றாண்டாகத்தான் அதிகமாகப் பேசப்படுகிறது. பலநூற்றாண்டுகள் இந்த அமைப்பின் பீடத்தை இறுகப்பற்றியிருக்கிற முதலாளித்துவம், அதன் முடிவுக்கும் சில நூற்றாண்டுகளாவது எடுக்கத்தான் செய்யும். இதுதான் மாற்றாக முடியும் என்று மட்டும்தான் மார்க்ஸ் சொன்னார். இப்படித்தான் மாற்றம் வரும் என யாராலும் சொல்லிவிட முடியாது. அதுதான் காலத்தின் சிறப்பும், சுவராசியமான புதிரும். அதை மக்களே தீர்மானிப்பார்கள். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது. ஒருநாள் என் பேரனோ உங்கள் பேரனோ அல்லது நம் பேரன்மார்களின் பேரன்மாரோ நிச்சயம் அப்படியொரு உலகத்தை சிருஷ்டிப்பார்கள். மனிதனை மனிதன் சுரண்டாத, அன்பு மட்டுமே ஆட்சி செலுத்துகிற ஒரு அழகிய கனவை நாம் காண்பதில் தவறொன்றும் இல்லையே நண்பரே!

    பதிலளிநீக்கு
  15. அதுசரி!

    ஆஹா... இஸ்ரேலைப்பற்றி என்ன ஒரு அபிப்பிராயம் வைத்திருக்கிறீர்கள். எண்ணெய் வள நாடுகளை கண்கானிக்கும், எச்சரிக்கும் அமெரிக்காவின் வேட்டை நாய் அது. அமெரிக்க முதாலாளிகளின் செல்லப்பிள்ளை அது. ஒரு நாட்டின் அரசியல் பிரச்சினையை அந்த நாட்டு மக்களே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதானே சரியானதாய் இருக்க முடியும்! சக நாடுகளில் ஒன்றாய் அலோசனைகள் வேண்டுமானல் சொல்லலாம். இராணுவத்தை அனுப்புவதும், ஆயுதங்கள் கொடுப்பதும், நேரடியாகத் தலியிடுவதும் எப்படிச் சரியானதாய் இருக்க முடியும்? ஆமாம், அமெரிக்காவின் இத்தகைய லிஸ்ட் பெரிதுதான். இன்னும் கூட இருக்கிறது.....

    ஆப்கானின் பிற்போக்கு அரசுக்கு நான் எப்போதும் வக்காலத்து வாங்கவில்லை நண்பரே... நீங்களே ஒன்ரைச் சொல்லிக்கொண்டு, நீங்களே அதற்கு அர்த்தமும் கற்பித்துக்கொண்டு இருக்கிறீர்கள். அங்கும், அரசுக்கெதிரான போராட்டத்தை மக்களே நடத்த வேண்டும். ஈராக்கிலும் அப்படித்தான் நடந்திருக்க வேண்டும். ஜெயலலிதாவோ, கருணாநிதியோ, மன்மோகன் சிங்கோ சரியில்லை என்று அமெரிக்க ஆயுதங்களோடு வரிந்து கட்டிக்கொண்டு வருவது எப்படி சரி?

    உலகின் அதிபயங்கரவாதி அமெரிக்காவின் விதைகள்தானே நீங்கள் சுட்டிக்காட்டியவர்கள். பின்லேடனுக்கு பயிற்சி யார் கொடுத்தது. அமெரிக்காவுக்கு பயங்கரவாதம் குறித்து பேச என்ன அருகதை இருக்கிறது? பயங்கரவாதத்தின் மீது தாக்குதல் என்று எதை அமெரிக்கா இந்த பத்து ஆண்டுகளில் சாதித்திருக்கிறது. நாளுக்கு நாள் அது அதிகரித்துக்க்கொண்டுதானே வருகிரது. அருந்ததிராயின் கட்டுரைகளில் இந்த உண்மைகள் எவ்வளவு அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளன!

    பதிலளிநீக்கு
  16. //
    அதுசரி...!

    முதலில் மன்னிப்பு கோருகிறேன். தங்களை புண்படுத்தும் நோக்கில் அந்த வார்த்தைகளை பயன்படுத்தவில்லை
    //

    என் எழுத்தில் ஏதோ பிழை இருக்கிறது அல்லது நான் சரியாக சொல்லவில்லை...நீங்கள் மன்னிப்பு கேட்க அதை சொல்லவில்லை...நகைச்சுவைக்காக என்னை நானே கேலி செய்து எழுதியது...ஸ்மைலி போட விட்டு போய், சீரியஸாக அர்த்தம் வந்து விட்டது போல!

    அதைப் பற்றியெல்லாம் நீங்கள் வருத்தப்பட வேண்டாம்.

    பதிலளிநீக்கு
  17. //
    அதை மிக இயல்பான ஒன்றாய், தவிர்க்கவே முடியாத விஷயமாய் உங்களின் பல கருத்துக்களில் எழுதியிருந்தீர்கள். நீங்கள் உங்கள் வாழ்வின் அனுபவங்களிலிருந்தே பேசிக்கொண்டு இருந்தீர்கள்.
    //

    இன்னமும் அதையே சொல்கிறேன்....எல்லா வாழ்க்கையும், எல்லா செய்கையும் ஏதோ ஒரு லாபத்தை நோக்கியே ஓடிக் கொண்டிருக்கிறது....லாபம் என்றால் பணம் மட்டுமல்ல...பல்வேறு வகை....

    வெறுமையாய், நான்கு கால்களுடன் மற்றொரு உயிரியாக திரிந்த மனித இனம், அடுத்து என்ன என்று நகர்ந்தே இன்றைய மனிதன் ஆகியிருக்கிறது...இது அன்பினால் நடந்த விஷயம் அல்ல....

    பதிலளிநீக்கு
  18. //
    கேப்பிடலசத்திற்கு நிச்சயம் தீர்வு சோசலிசம்தான் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. மனிதர்களை சுயநலவாதிகளாக மாற்றுகிற, அன்பு பாசம் என அனைத்தையும் விலை பேசுகிற இந்த அமைப்பை மாற்றவே முடியாதது என எனக்கு அவநம்பிக்கையில்லை.
    //

    மனிதர்கள் சுயநலவாதிகளாய் மாற்றப்படவில்லை....இயல்பே அது தான்....வரம்பு மீறிய சுயநலம் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது என்பதை நான் மறுக்கவில்லை....ஆனால், சுயநலம் என்பதே திணிக்கப்பட்டது என்பதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை...

    கேப்பிடலிசத்திற்கு தீர்வு என்றில்லை...இன்றைய நிலையிலிருந்து அடுத்த கட்டம் நோக்கி நகரும் எதையும் பரீட்சித்து பார்ப்பதில் தவறில்லை...ஆனால், அப்படி தீர்வு என்று சொல்லப்படும் விஷயம் எதை நோக்கி மக்களை தள்ளுகிறது என்பது முக்கியம்...

    பதிலளிநீக்கு
  19. //
    ன்மாரோ நிச்சயம் அப்படியொரு உலகத்தை சிருஷ்டிப்பார்கள். மனிதனை மனிதன் சுரண்டாத, அன்பு மட்டுமே ஆட்சி செலுத்துகிற ஒரு அழகிய கனவை நாம் காண்பதில் தவறொன்றும் இல்லையே நண்பரே!
    //

    கனவு காண்பதிலும், ஆசைப்படுவதிலும் எந்த தவறும் இல்லை...மிக நிச்சயமாக இல்லை...

    அன்பு மட்டுமே ஆட்சி செய்வது அழகிய கனவாகவே இருக்கிறது :0))...ஆனால், கனவுகளில் சுகமாக இருப்பதை விட, நனவுகளில் ஓடுவது தான் எனக்கு பிடித்திருக்கிறது :0))

    பதிலளிநீக்கு
  20. //
    ஆஹா... இஸ்ரேலைப்பற்றி என்ன ஒரு அபிப்பிராயம் வைத்திருக்கிறீர்கள். எண்ணெய் வள நாடுகளை கண்கானிக்கும், எச்சரிக்கும் அமெரிக்காவின் வேட்டை நாய் அது. அமெரிக்க முதாலாளிகளின் செல்லப்பிள்ளை அது.
    //

    இஸ்ரேலைப் பற்றி எனக்கு பிரச்சினைகளின் அடிப்படையில் பல்வேறு அபிப்ராயங்கள் உண்டு....ஆனால் ஹிட்லரின் முகாம்களில் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான யூதர்களின் குரல்கள் இன்னமும் அங்கு ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது...

    சுற்றிலும் பகையால் சூழப்பட்ட ஒரு தேசம் சுயநலமாகத் தான் இருக்கும்...

    பதிலளிநீக்கு
  21. //
    ஒரு நாட்டின் அரசியல் பிரச்சினையை அந்த நாட்டு மக்களே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதானே சரியானதாய் இருக்க முடியும்! சக நாடுகளில் ஒன்றாய் அலோசனைகள் வேண்டுமானல் சொல்லலாம். இராணுவத்தை அனுப்புவதும், ஆயுதங்கள் கொடுப்பதும், நேரடியாகத் தலியிடுவதும் எப்படிச் சரியானதாய் இருக்க முடியும்? ஆமாம், அமெரிக்காவின் இத்தகைய லிஸ்ட் பெரிதுதான். இன்னும் கூட இருக்கிறது.....
    //

    ஒரு நாட்டின் பிரச்சினையை அந்த நாட்டு மக்கள் தான் தீர்க்க வேண்டும்...ஒத்துக் கொள்ள வேண்டிய விஷயம்....ஆனால், சதாம் உசேனை நீக்க மக்களால் முடிந்ததா?? எந்த ஒரு தலைவரையாவது அவர் வளரவிட்டாரா??? இப்படி இருக்கும் போது சதாம் உசேன் போன்றவர்களிடமிருந்து எப்படி விடுதலை பெற முடியும்???

    சில நேரங்களில் தலையிட வேண்டித் தான் இருக்கிறது...யூதர்களை ஹிட்லர் கொன்று குவித்த போது தலையிட்டிருக்கலாம்...விட்டு விட்டார்கள்...முல்லா ஓமர் தன் தேசத்து மக்களையே நாய்கள் போல நடத்திய போது தலையிட்டிருக்கலாம்...செய்யவில்லை....ராஜபக்ஷேவின் இனவெறியையும் எல்லாரும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்....தலையிடவில்லை...

    ஒரு நாட்டின் பிரச்சினையில், மக்கள் நன்மைக்காக தேவையென்றால் தலையிட்டு தான் தீர வேண்டியிருக்கிறது....

    பதிலளிநீக்கு
  22. //
    ஆப்கானின் பிற்போக்கு அரசுக்கு நான் எப்போதும் வக்காலத்து வாங்கவில்லை நண்பரே... நீங்களே ஒன்ரைச் சொல்லிக்கொண்டு, நீங்களே அதற்கு அர்த்தமும் கற்பித்துக்கொண்டு இருக்கிறீர்கள். அங்கும், அரசுக்கெதிரான போராட்டத்தை மக்களே நடத்த வேண்டும். ஈராக்கிலும் அப்படித்தான் நடந்திருக்க வேண்டும். ஜெயலலிதாவோ, கருணாநிதியோ, மன்மோகன் சிங்கோ சரியில்லை என்று அமெரிக்க ஆயுதங்களோடு வரிந்து கட்டிக்கொண்டு வருவது எப்படி சரி?
    //

    மக்கள் நடத்தும் நிலையில் இல்லை மாதவராஜ்...தலிபான்களை எதிர்த்து அந்த மக்களே போராட வலு இல்லை...இராக்கிலும் அதே நிலை தான்...

    ஜெ.வோ, கருணாநிதியோ, சிங்கோ இன்னொரு முல்லா ஓமராகவோ, ராஜபக்சேவாகவோ, சதாம் உசேன் ஆகவோ மாறும் போது தேவையென்றால் உலக சமுதாயம் தலையிடுவதில் தவறில்லை...

    கொள்கைகளையும், கோட்பாடுகளையும் விட, மக்களின் உயிரும், வாழ்வியல் சுதந்திரமும் முக்கியம்...அதை மீட்க கோட்பாடுகளை உடைப்பதில் தவறில்லை.

    முல்லா ஓமரை தனிப்பட்ட விதத்தில் நீங்கள் ஆதரிப்பீர்கள் என்று நானும் எண்ணவில்லை. ஆனால், அமெரிக்காவின் மித மிஞ்சிய "கருணை" குறித்து கண்டிக்கும் நீங்கள், அங்கிருந்த சூழ்நிலையை முற்றிலும் புறக்கணிப்பது ஓமர் தலைமையிலான ரவுடிகளின் ஆட்சியை ஆதரிப்பதாக தானே அர்த்தம் ஆகிறது??

    ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கம் உண்டு...அரசியல்/ராணுவ நடவடிக்கைகளுக்கு ஆயிரம் பக்கங்கள்...இன்றைக்கு தேவையில்லாத தலையீடாக தெரியக் கூடிய விஷயம் அடுத்து வரும் நூறு தலைமுறைகளை காப்பாற்றக் கூடிய விஷயமாகவும் இருக்கலாம்...

    இன்றைக்கு ஆஃப்கனில் அமெரிக்க தலையீடு மோசமான விஷயமாக கருதப்படலாம்...ஆனால், ஏற்கனவே மூன்று தலைமுறைகளை நாசம் செய்த தலிபானின் பொறுக்கி கும்பல், இன்னும் வரும் பல தலைமுறைகளை நாசம் செய்யாமல் இருக்க செய்யப்படும் முயற்சி என்றே நான் நினைக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  23. //
    உலகின் அதிபயங்கரவாதி அமெரிக்காவின் விதைகள்தானே நீங்கள் சுட்டிக்காட்டியவர்கள். பின்லேடனுக்கு பயிற்சி யார் கொடுத்தது. அமெரிக்காவுக்கு பயங்கரவாதம் குறித்து பேச என்ன அருகதை இருக்கிறது? பயங்கரவாதத்தின் மீது தாக்குதல் என்று எதை அமெரிக்கா இந்த பத்து ஆண்டுகளில் சாதித்திருக்கிறது. நாளுக்கு நாள் அது அதிகரித்துக்க்கொண்டுதானே வருகிரது. அருந்ததிராயின் கட்டுரைகளில் இந்த உண்மைகள் எவ்வளவு அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளன
    //

    இந்த முழுக்கட்டுரையிலும் ஒப்புக் கொள்ள வேண்டிய, மறுக்க முடியாத விஷயம்....பின்லேடனும் அவனது பொறுக்கி கும்பலும் அமெரிக்காவால் ஊட்டி வளர்க்கப்பட்டது என்பதே...

    அவர்கள் உருவாக்கியதை அவர்களே அழிக்க வேண்டும்...அதற்கான முயற்சி செய்வதில் தவறில்லை.

    நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் வருகிறது என்பதும் உண்மை தான்...ஆனால், அதற்காக அழிக்க முயற்சி செய்யாது இருக்க முடியாதே?? ஒரு வேளை இந்த முயற்சி செய்யாது போனால், இன்னும் அதிக வேகத்தில் வளரக் கூடும்!

    பதிலளிநீக்கு
  24. //அனானி!//

    எம்பேரு அனானில்லாம் இல்ல.. ஜங்கி மங்கி....

    ஜங்கி மங்கின்னே கூப்புடலாம்

    //
    லால்கர், நந்திகிராம் குறித்தும் எழுதுவேன் நண்பரே நிச்சயமாய்//

    ஏன்? இங்க எழுதுனா என்னவாம்?


    //முதலாளித்துவம் வளர்ந்த ஒவ்வொரு காலக் கட்டத்திலும் அது எதிர்ப்புகளை சந்தித்தே வந்திருக்கிறது. ஒவ்வொரு காலக் கட்டத்திலும் ஈவிரக்கமின்றி அந்த எதிர்ப்புகளை நசுக்கி இருக்கிறது. அவை மீண்டும் மீண்டும் இந்த மண்ணில் வெடிக்கும் என்று அவர்களுக்குத் தெரியும். அதை நசுக்குவதற்கும், அவநம்பிக்கை உருவாக்குவதற்குமே இந்த இராணுவ மயமாக்கல். உலகமயமாக்கலும், இராணுவமயமாக்கலும் கைகோர்த்து நடந்து வருகின்றன.//

    இது நீங்க எழுதுன கடசி வரிதான் மேலே உள்ளது. இதத்தான லால்கரிலும், நந்திகிராமிலும் செஞ்சிருக்காங்க? இந்த தலைப்புக்கு உட்பட்ட விசயம்தானே இவையெல்லாம். இதே பதிவுல பின்னூட்டத்துலயாவது எழுதலாமே? பதில போடுங்க...பாப்போம் எப்படிப் போகுதுன்னு....

    ஜங்கி மங்கி

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!