சின்னப் பையன்


வாசல் படிகளின் மீது ஏறி நிற்பான். அங்குமிங்கும் பார்த்து சட்டென்று தரையில் குதித்து தடுமாறாமல் நிற்பான். அப்படியே எம்பி காற்றில் கால்களை உதைத்து “டிஷ்யும்” என்று குரல் எழுப்பி பெருமிதத்தோடு பார்ப்பான். படித்துக்கொண்டு இருக்கும் அக்கா முன்பு சென்று நெஞ்சை சுருக்கி, இரண்டு கைகளையும் மடக்கி பெரும் பயில்வான் போல காட்சி கொடுப்பான். “தனுஷ், சிம்பு எல்லாத்தயும் நா அடிச்சிருவேன் தெரியுமா?” என்பான்.

தாளமுடியாத அக்கா ஒருநாள் அவன் அருகில் சென்று தனது கையை மடக்கி பலம் காட்டி, அவனைப் பிடிக்கச் சொன்னாள். அவனது விரல்களுக்குள் அடங்கவில்லை. அழுத்தி அழுத்திப் பார்த்து தோற்றுப் போனான். பிறகு “இப்போது நீ பலம் காண்பி” என்றாள். வலது கையை மடக்கி முகமெல்லாம் இறுக்கி, முக்கியவாறு பலம் காண்பித்தான். தனது கட்டைவிரலையும், சுண்டு விரலையும் சேர்த்து எளிதாக அவனது பலத்தைப் பிடித்து “ப்பூ” என்றாள் அக்கா.

அவ்வளவுதான். தரையில் உருண்டு உருண்டு அழ ஆரம்பித்தான் அவன்.

பார்த்துக்கொண்டு இருந்த அம்மாவுக்கு சிரிப்பு வந்தது. அடக்கிக்கொண்டு, வருத்தப்படுவதாய் முகத்தை வைத்துக்கொண்டு “ஏங்கண்ணே... நீ வாம்மா...” என்று தூக்கினாள்.

“என்னைக் கேவலப்படுத்திட்டாம்மா” கண்ணீரோடு உதடுகள் துடிக்க, முகம் பரிதாபமாக இருந்தது.

“ஏண்டி தம்பிய அழ வைக்கிற..?”

“உண்மை என்னன்னு அவன் தெரிஞ்சுக்கட்டும்”

“ஆமா... இவ பெரிய உண்மையக் கண்டுட்டா....” அம்மா அவனைச் சமாதானப்படுத்தினாள்.

“நா... சின்னப் பையந்தானம்மா... ஏங்கிட்டப் போயி வீரத்தைக் காண்பிக்கா... இவள்ளாம் ஒரு அக்காவா?” அவன் வெகுநேரம் தேம்பிக்கொண்டு இருந்தான்.


Comments

13 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. Subtextல் உள்ள உண்மை... யதார்த்தம்...

    ReplyDelete
  2. ஹா... ஹா... ஹா.... !! ரொம்ப அருமையா இருக்குது.....!!!

    ReplyDelete
  3. இதுக்குத்தான் நல்லா யோசிக்கணும்னு சொல்றது!!

    நல்லா இருக்குங்க மாதவராஜ் சார்

    ReplyDelete
  4. சிறு சம்பவம். கருத்தானது.
    இப்படி சின்ன சின்னதா விசயங்களை சுருக்கமா எழுத்தில் பிரமாதபடுத்திடுறீங்க மாதவராஜ் சார்.

    ReplyDelete
  5. அருமை, ரொம்ப நல்லா இருக்கு.

    ReplyDelete
  6. அன்பின் மாதவராஜ்

    நல்ல கதை - சுருக்கமான கதை - நலலாவே இருக்கு

    ReplyDelete
  7. மஹேஷ்!
    லவ்டேல்மேடி!
    சந்தனமுல்லை!
    சதீஷ் கண்னன்!
    தீபா!
    குப்பன் யாஹூ!
    ஆதவா!
    நாஞ்சில்நாதம்!
    நிகழ்காலத்தில்!
    ஆ.முத்துராமலிங்கம்!
    யாத்ரா!
    சீனா!
    அமிர்தவர்ஷிணி அம்மாள்!

    அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete

You can comment here