மன்மோகன் கொள்ளை

உட்கார்ந்த, நின்ற, நடந்த
ஒரு இடம் பாக்கியில்லாமல்
இரவு பகலென
நேரம் காலம் இல்லாமல்
கோடானு கோடியிடம்
கோடி கோடியாய்
கொள்ளையோ கொள்ளை

நிலமிழந்து
வீடிழந்து
வாழ்விழந்து
பிளாட்பாரத்தில்
கோடானு கோடி
ஒதுங்கிக்கொண்டே இருக்கிறார்கள்

கொள்ளை கொள்ளையாய் வந்த
பத்திரிகைச் செய்திகளில்
இந்தக் கொள்ளை
இடம்பெறவே இல்லை
பலநாள் திருடர்
ஒருநாளும் அகப்படவில்லை
போன இடம் தெரியாமல்
புலன் விசாரணைக்கும் வழியில்லை
கடவுளிடம் வேண்டுவதைத் தவிர
வேறுவழியும் அறியவில்லை

ஒருநாள்
திடீர் கோடிஸ்வரர்களும்
புதிய கோடீஸ்வரர்களுமாய்
நாடு வளர்ச்சியடைந்ததைப் பார்த்து
நமது கோடானு கோடி
அதிசயிக்க மட்டும் செய்கிறார்கள்

*

கருத்துகள்

10 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. அதுதான் தேர்தல்ல மக்கள் தீர்க்கமா மன்மோகன் சோனியா அழஅகிரி யை ஆடரிதாயிற்றே.

  இனிமேல் எழுதி என்ன பயன் சாமி.

  பதிலளிநீக்கு
 2. உட்கார்ந்த, நின்ற, நடந்த
  ஒரு இடம் பாக்கியில்லாமல்
  இரவு பகலென
  நேரம் காலம் இல்லாமல்
  கோடானு கோடியிடம்
  கோடி கோடியாய்
  கொள்ளையோ கொள்ளை

  நிலமிழந்து
  வீடிழந்து
  வாழ்விழந்து
  பிளாட்பாரத்தில்
  கோடானு கோடி
  ஒதுங்கிக்கொண்டே இருக்கிறார்கள்

  வரிகள் உள்ளத்தை கசக்குகிறது

  அருமையான வரிகள்

  பதிலளிநீக்கு
 3. ஒருநாள்
  திடீர் கோடிஸ்வரர்களும்
  புதிய கோடீஸ்வரர்களுமாய்
  நாடு வளர்ச்சியடைந்ததைப் பார்த்து
  நமது கோடானு கோடி
  அதிசயிக்க மட்டும் செய்கிறார்கள்

  :((

  பதிலளிநீக்கு
 4. //திடீர் கோடிஸ்வரர்களும்
  புதிய கோடீஸ்வரர்களுமாய்
  நாடு வளர்ச்சியடைந்ததைப் பார்த்து
  நமது கோடானு கோடி
  அதிசயிக்க மட்டும் செய்கிறார்கள் //

  ஹ்ம்ம்ம்...ஆதங்கத்தோடு !!

  பதிலளிநீக்கு
 5. பிரியாணிக்கும் , நூறு ரூவாக்கும் ...
  அப்பன் , மாமன் அரசாங்க வேலைக்கும் ...
  கோடான கோடி அடிமைகள் !!!

  பதிலளிநீக்கு
 6. தீபா!
  மங்களூர் சிவா!
  நன்றி.

  குப்பன் யாஹூ!
  அதனால் எல்லாவற்றையும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு மௌனமாக இருக்க முடியுமா... நம் கடன் இப்படி முணுமுணுப்பது என்பதாக இருக்கட்டுமே!


  மோனிபுவன் அம்மா!
  உங்கள் வருகைக்கும், உணர்வை வெளிப்படுத்திஒயமைக்கும் நன்றி.


  தீப்பெட்டி!
  நன்றி.

  rapp!
  நன்றி.

  அமிர்தவர்ஷிணி அம்மா!
  நன்றி.

  சந்தனமுல்லை!
  ஆதங்கத்திற்கு நன்றி.

  அஹோரி!
  உங்கள் கோபத்திற்கும் நன்றி.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!