(முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்கள் எழுதிய இக்கடிதம் இந்துப் பத்திரிகையில் வெளியானது.)
அன்புள்ள ராகுல் காந்தி,
நான் தங்களைச் சந்தித்ததில்லை.என்றாலும் கூட தாங்கள் ஏழை எளிய மக்களின்பால் இரக்க சிந்தனை படைத்தவர் என்றும், சோஷலிசக் கோட்பாட்டில் ஈடுபாடுள்ளவர் என்றும் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். நாட்டின் பிரதமராகப்பட்டவர் ஒரு மக்களவை உறுப்பினராக இருக்க வேண்டும் என்பது என்னுடைய கொள்கையாகும். தாங்கள் இந்திய நாட்டு இளைஞர்களின் பிரதிநிதியாகத் திகழ்கிறீர்கள். மேலும் தாங்கள் நம்முடைய மதச்சார்பற்ற, ஜனநாய்க மற்றும் சமதர்ம இந்தியக் குடியரசின் லட்சிய வேட்கையெல்லாம் உள்ளடக்கியவராக விளங்குகிறீர்கள். இந்திய நாட்டின் பாரம்பரியமானது புஷ்ஷிடமிருந்தோ, வெள்ளை மாளிகையிலிருந்தோ கடன் வாங்கப்பட்ட ஒன்றல்ல. அவ்வாறெல்லாம் கருதுவது ஆபத்தானதோர் கதியாகும். ஆனால் இன்றைய அமெரிக்க அதிபரான ஒபாமா, உலகெங்கிலுமுள்ள பாமர மக்களின்பால் கருணையுள்ளம் கொண்டவராகத் தெரிகிறார்.
உண்மையிலேயே ஒரு பொருளாதார ஜனநாயகமானது சோஷலிசக் கோட்பாட்டை உள்ளடக்கியதாகவே விளங்கிட முடியும்.
பிரதமர் மன்மோகன்சிங் நேர்மையான மனிதர்தான். ஆனால் என்னால் அவருடைய பொருளாதாரக் கோட்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாது. அவருடைய பொருளாதாரக் கொள்கைகள் யாவும் சுதேசித் தன்மையுள்ளவையல்ல. மன்மோகன் ஒரு சிறந்த ராஜதந்திரி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இன்றைய இந்திய நாட்டுக்கு மூன்றாவது உலகைச் சேர்ந்த பொருளாதாரமே அவசியத் தேவையாக உள்ளது. இந்திய நாட்டின் விவசாயத் துறையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியக் கிராமங்களில் புத்தொளி பரவிட வேண்டும்.
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நாம் தோல்வியடைந்து விட்டோம். மேலும் நம்முடைய தார்மீக ஒழுக்க நெறிகள் யாவும் சீரழிந்து போயுள்ளன. நம்முடைய அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள சமுதாயச் சிந்தனைகளைப் பற்றிய அம்சங்களிலும் நாம் தோல்வியடைந்து நிற்கிறோம். மேலும் நாம் மகாத்மா காந்தி, நேரு, இந்திரா காந்தி, விவேகானந்தர், மாமன்னர் அசோகர் போன்ற, மனித நேயச் சிந்தனையாளர்களையெல்லாம் மறந்தே போனோம்.
(விவேகானந்தர் புத்தரைப் பற்றியும், வரலாற்றாசிரியர் எச்.ஜி.வெல்ஸ் அசோகரைப் பற்றியும் சொன்ன குறிப்புகள் கடிதத்தில் சொல்லப்படுகின்றன. அவைகளைத் தொடர்ந்து....)
அன்புள்ள ராகுல்!
ஒரு தேசீயத் தலைவர் என்ற முறையில் தாங்கள் தங்களுடைய பொறுப்புக்களைத் தட்டிக் கழிக்கக் கூடாது. நீங்கள் இந்திய நாட்டிலுள்ள கோடானுகோடி ஏழை எளிய மக்களுடைய ஊழியனாக செயலாற்றிட முன் வர வேண்டும். மீண்டும் உங்களுக்கு விவேகானந்தரின் பொன்மொழிகளிலிருந்து மேற்கோள் காட்டிட விரும்புகிறேன்.
“ஏழை எளிய மக்களுக்காக உணவு பூர்வமாகச் சிந்தியுங்கள். உங்கள் இத்யத் துடிப்பு அடங்கிடும் வரை, அந்த பாமர மக்களுக்காகவே பணியாற்றுங்கள்”
நான் உங்கள் தாத்தா பண்டித நேருவிடமிருந்து தேசீயச் சிந்தனைகளை சுவீகரித்துக் கொண்டவன். 1947ம் வருடம் ஆகஸ்ட் 15ம் நாளன்று பண்டித நேரு பின்வருமாறு முழங்கினார்.
“ஒவ்வொரு இந்தியனுடைய கண்ணீரையும் துடைத்திட வாருங்கள்”.
நாம் மேற்கொண்ட நன்னெறிகளையெல்லாம் இன்று மறந்தே போனோம். நாட்டில் கோடீஸ்வரர்களும், தாதாக்களும், வகுப்பு வெறியர்களும் கொடி கட்டிப் பறக்கிறார்கள். எங்கும் ஊழல். பல்வேறு கிறுக்குத்தனமான அரசியல்வாதிகள் மக்களுடைய உரிமைகளையெல்லாம் தங்கள் கால்களில் போட்டு மிதித்து துவைத்து வருகிறார்கள்.
கோடானுகோடி இந்திய மக்கள் பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் வாடி வதங்குகின்றனர். இப்படிப்பட்டதோர் சூழ்நிலையில் தாங்கள் தங்களுடைய பொறுப்பைத் தட்டிக் கழிக்கவே கூடாது.
இதனை கே.அறம் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். தீக்கதிர் பத்திரிகையில் வெளியாகி இருக்கிறது. இதனை படித்தவுடன் எனக்கு ஒரு நிமிடம் அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை. எப்பேர்ப்பட்ட சிந்தனையும், கருத்துக்களும் கொண்டவர் இந்த அற்புதமான மனிதர் வி.ஆர்.கிருஷ்ணய்யர். இந்தக் கடிதத்திலும் அவை தெரிகின்றன. வெளிப்பட்டும் இருக்கின்றன. ஆனால் யாரை, எந்த இடத்தில் வைப்பது என்பது தெரியாமல் இருக்கிறாரே என்றுதான் வருத்தமாக இருக்கிறது.
ராகுல்காந்தி இந்திய கார்ப்பரேட்களின் தோழனாகி நாளாகிவிட்டது. அவர்கள் தங்கள் பொருட்களுக்கு செய்யும் விளம்பரங்களின் அளவுக்கு ராகுல் காந்திக்கும் விளம்பரம் செய்து கொண்டு இருக்கிறார்கள். இந்தியக் குக்கிராமங்களின் குடிசைக்குள் அவர் நுழைவதை, தரையில் உட்காருவதை, ஒரு ஏழைக் குழந்தையை அவர் தூக்கி கொஞ்சுவதை திரும்பத் திரும்ப தங்கள் ஊடகங்களில் காட்டிக் கொண்டு இருக்கிறார்கள். காங்கிரஸையும், இந்த நாட்டையும் காக்க வந்த அவதார புருஷனாக ஒளிவட்டம் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இதை அனுபவிக்கவும், ரசிக்கவும் தயாராகிவிட்டார் ராகுல்காந்தி. இலங்கைத் தமிழர் செத்தால் என்ன.... இங்குள்ள இந்தியர் செத்தால் என்ன? யார் இரத்தம் சிந்தினால் என்ன?. எல்லாக் காமிராக்களும் அவர் முகம் நோக்கித் திரும்ப வேண்டும். அப்போது சிந்துவதற்கு புன்னகை அவரிடம் இருக்கிறது.
மேதகு நீதிபதி அவர்கள் தனது கவலையை, வருத்தங்களை சொல்வதற்கு இந்த தேசத்தில் அற்புதமான எத்தனையோ இளைஞர்கள் இருக்கிறார்கள் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். விவேகானந்தர், புத்தர், அசோகர் எல்லோரையும் அந்த இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லுங்கள்.
நீங்கள் சொல்லும் நபருக்கு எழுத வேண்டிய விஷயம் இதுவல்ல.
திரு.ராகுல் காந்தி அவர்களுக்கு தேசத்தின் பிரஜையாக நான் எழுதும் கடிதம் நாளையப் பதிவில்.....
*
thanks for sharing here.
பதிலளிநீக்குKrishna Iyer will write like this when Rahul's son/daughter becomes P.M.
பதிலளிநீக்கு//திரு.ராகுல் காந்தி அவர்களுக்கு தேசத்தின் பிரஜையாக நான் எழுதும் கடிதம் நாளையப் பதிவில்.....
பதிலளிநீக்கு//
எதிர் நோக்குகின்றேன்.
கிருஷ்ணய்யரின் உணர்வு மதிக்கத்தக்கது.
பதிலளிநீக்குநல்ல பதிவு...நாளைய பதிவுக்காக WAITING
பதிலளிநீக்கு|ராகுல்காந்தி இந்திய கார்ப்பரேட்களின் தோழனாகி நாளாகிவிட்டது.|
பதிலளிநீக்கு|எல்லாக் காமிராக்களும் அவர் முகம் நோக்கித் திரும்ப வேண்டும். அப்போது சிந்துவதற்கு புன்னகை அவரிடம் இருக்கிறது. |
உங்கள் சிந்தனை வீச்சு அனுபவத்தில்
மிக நுன்னுயமாக ஆழப்படுகின்றது.
ஒரு விசயத்தை அதன் எல்லாத் திசைகளிலும் பார்வையை செலுத்துகின்றீர்கள்.
உங்கள் கேள்விகளை எதிர்பார்த்து....
கிருஷ்ண அய்யர் எழுதுவது, கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் போன்றது.
பதிலளிநீக்குநாடாளுமன்ற தேர்தலுக்கு முன் களத்தில் இறங்கி முதலாளித்துவத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்து மக்களின் வாக்குகளை திசை திருப்பாமல்.இப்போது கடிதம் எழுதி என்ன பயன்.
எங்கே தன் பென்ஷன் கட் ஆகி விடுமோ என்று பயந்து தேர்தலின் பொது சும்மா இருந்து விட்டு இப்போது ராகுல் காந்தி, கமல்நாத், ப்ரனப்பிர்க்கு கடிதம் எழுதி என்ன பயன்.
இந்த மாதிரி ஓய்வு பெற்ற பின் கடிதம், புத்தகம் எழுதுவதை தடை செய்ய வேண்டும். அதேபோல ஒருவர் இறந்த பிறகு அவரிடம் தனக்கு உள்ள உறவு நிகழ்வு பற்றி எழுதலும் விரும்ப தக்கது அல்ல (இறந்தவர் வந்து மறுப்பு சொல்ல மாட்டார் என்ற தைரியம்).
நல்ல பதிவு மாதவராஜ்.
பதிலளிநீக்குசாருவின் பதிவில் இந்த கட்டுரையின் லிங்க் மட்டும் கொடுக்கப்பட்ட போது, சற்று அதிர்ச்சியடைந்தேன்.
சிவப்பா இருக்கிறவன் நல்லவனாத் தான்யா இருப்பான்-ன்னு வெள்ளைக்காரன் நம்ம மக்கள் மனசுல ஆழமா பதிய வைச்சிட்டு போய்ட்டான்.
இப்படி வேஷம் போட்டே, நம்ம நாட்டை நாசமாக்கிட்டானுங்க. இனிமேலும் இது மாறும்னு நம்பிக்கையில்லை.
//மன்மோகன் ஒரு சிறந்த ராஜதந்திரி என்பதில் சந்தேகமில்லை. //
பதிலளிநீக்குஇப்படி சொல்லி சிறந்த என்பதை காயப்படுத்தி விடாதீர்கள் நண்பர்களே....
உண்மையில் அவர் சிறந்த ராஜததிரியாக இருந்திருந்தால், சீனாவும், பாகிஸ்தானும் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதை தடுக்க அவர் வேறு நியாயமான ராஜ தந்திர நகர்வுகளை எடுத்திருப்பார். ஆனால் அவர் செய்தது என்ன? சீனாவும், பாகிஸ்த்தானும் கொடுக்கிற ஆயுதங்களை விட அதிகம் ஆயுத்தங்களை கொடுத்து அந்த நாடுகளின் ஆத்திக்கத்தை தடுக்க நினைத்தார். இது சாதாரண மனிதன் எவரும் செய்யக்கூடியது?
அதற்கு எந்தவிதமான ராஜதந்திரமும் தேவை இல்லை ..
அதுமட்டுமா ஒரு சிறிய நாடான இலங்கையே இந்தியாவை எப்படி கவுக்கலாம் எண்டு நினைத்து கவுத்துவிட்டு இருக்கிறது.. அதாங்க இலங்கை அதிபர் முதலில் சீனாவுக்கு சென்று ஒரு யானையை பரிசளித்த பின்தானே இந்தியா வரிந்து கட்டிக்கொண்டு உதவி செய்தது......
மற்றது நண்பரே , ஒரு சின்ன வேண்டுகோள்! இந்தக் கருத்துக்களையும் உங்கள் கடிதத்தில் சேர்த்து விடுங்கள் இடம் இருந்தால்..
அன்பின் ராகுல் காந்தி உங்கள் அப்பாவின் மரணத்திற்காக நீங்கள் பலி எடுத்த அப்பாக்கள் போது, உங்கள் அம்மாவின் கணவனின் மரணத்திற்காக நீங்கள் பலி எடுத்த கணவன்கள் போதும்...இனியாவது வாழ விடுங்கள் தமிழர்களை ( தேவை ஈழத்தமிழர் என்று போட்டுக் கொள்ளலாம்)
உங்களின் கடிதத்தை நான் ஆவ்லுடன் எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குஉங்க கருத்துகளை படிச்சி சிரிப்பதா அழுவதான்னே தெரியலை சார்..
பதிலளிநீக்கு//
பதிலளிநீக்குஇலங்கைத் தமிழர் பிரச்சினையில் நாம் தோல்வியடைந்து விட்டோம். மேலும் நம்முடைய தார்மீக ஒழுக்க நெறிகள் யாவும் சீரழிந்து போயுள்ளன. நம்முடைய அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள சமுதாயச் சிந்தனைகளைப் பற்றிய அம்சங்களிலும் நாம் தோல்வியடைந்து நிற்கிறோம். மேலும் நாம் மகாத்மா காந்தி, நேரு, இந்திரா காந்தி, விவேகானந்தர், மாமன்னர் அசோகர் போன்ற, மனித நேயச் சிந்தனையாளர்களையெல்லாம் மறந்தே போனோம்.
இலங்கைத் தமிழர் செத்தால் என்ன.... இங்குள்ள இந்தியர் செத்தால் என்ன? யார் இரத்தம் சிந்தினால் என்ன?. எல்லாக் காமிராக்களும் அவர் முகம் நோக்கித் திரும்ப வேண்டும். அப்போது சிந்துவதற்கு புன்னகை அவரிடம் இருக்கிறது. //
அவர் வார்த்தையில் மேலே குறிப்பிட்டவை கொஞ்சம் திருப்தி அளிக்கிறது.
குப்பன் யாஹூ!
பதிலளிநீக்குவருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.
தமிழ்ச்செல்வன் சொன்னதை கவனித்தீர்களா?
அனானி!
மனிதர்களிடம் நல்ல விஷயங்களை எதிர்பார்க்கிரார் அவர்.
எம்.எம்.அப்துல்லா!
அடுத்த பதிவைப் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.
தமிழ்!
பதிலளிநீக்குஅவர் உணர்வை மதிக்கிறேன். அவர் மதிப்பவர்கள் மீதுதான் விமர்சனம்.
கிருஷ்ணசாமி!
அடுத்த பதிவைப் படித்து விட்டீர்களா!
ஆ.முத்துராமலிங்கம்!
மிக்க நன்றி.... நண்பரே.
ஜோ!
//சிவப்பா இருக்கிறவன் நல்லவனாத் தான்யா இருப்பான்-ன்னு வெள்ளைக்காரன் நம்ம மக்கள் மனசுல ஆழமா பதிய வைச்சிட்டு போய்ட்டான்.//
உண்மை.
மயாதி!
உங்கள் பின்னூட்டத்திற்கு முன்பே பதிவிட்டு இருக்கிறேன்.
முரளிக்கண்ணன்!
பதிலளிநீக்குஅடுத்த பதிவைப் படித்திருப்பீர்கள்தானே?
சஞ்சய் காந்தி!
வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.
செந்தேள்!
ஆமாம். அவர் சொன்னது சரிதான். சொல்லப்பட்ட நபர்தான் சரியில்லை.
/* இந்திய நாட்டின் பாரம்பரியமானது புஷ்ஷிடமிருந்தோ, வெள்ளை மாளிகையிலிருந்தோ கடன் வாங்கப்பட்ட ஒன்றல்ல. அவ்வாறெல்லாம் கருதுவது ஆபத்தானதோர் கதியாகும். ஆனால் இன்றைய அமெரிக்க அதிபரான ஒபாமா, உலகெங்கிலுமுள்ள பாமர மக்களின்பால் கருணையுள்ளம் கொண்டவராகத் தெரிகிறார். */
பதிலளிநீக்குSir,
Mr.Bush may not be great American president and he may not be the great leader of free world, but he is very good friend of India. President Obama is not like Mr.Bush and he is not for India and of course he is great president for US. Let the US citizens hail him, why we need to do that if he is not useful to us.I dont understand this hypocrisy of supporting Obama by dumbing Bush.