அவர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.

தவிர கடற்கரையோரத்திலும், மலைமுகடுகளிலும் கட்டிப்பிடித்து, ஊரெல்லாம் விரகத்தை கூவி கூவி விற்கும் பாடல்கள்  போக, தங்க மாளிகை, டூட் பேஸ்ட் விளம்பரங்கள் காட்டிய நேரம் போக, புதிய அமைச்சரவையில் யார் யாருக்கு என்னென்ன பதவி என்றும், பங்குச் சந்தையில் வரலாறு காணாத எழுச்சி எனவும், தோல்வியால் எரியும் கட்சிகள் மீது எண்ணெய் ஊற்றியும் அவர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். 24 மணி நேரமும் வீடுகளுக்குள் உட்கார்ந்து அவர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.

ஆதரவுக்காக காற்றில் துழாவும் விரல்களைப் பிடிக்கும் நம்பிக்கை மிக்க ஒரு சொல்லுக்காக பிச்சைக்காரனைப்போல நான் என் வீட்டின் வெளியே காத்துக் கொண்டு இருக்கிறேன்.

 

 

*

கருத்துகள்

8 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. \ஆதரவுக்காக காற்றில் துழாவும் விரல்களைப் பிடிக்கும் நம்பிக்கை மிக்க ஒரு சொல்லுக்காக பிச்சைக்காரனைப்போல நான் என் வீட்டின் வெளியே காத்துக் கொண்டு இருக்கிறேன்.\\

    ஆழ்ந்த வலி சொல்லும் வரிகள்

    பதிலளிநீக்கு
  2. அந்தச் சொல் வந்துவிட்டது இல்லையா நண்பரே!

    பதிலளிநீக்கு
  3. //ஆதரவுக்காக காற்றில் துழாவும் விரல்களைப் பிடிக்கும் நம்பிக்கை மிக்க ஒரு சொல்லுக்காக பிச்சைக்காரனைப்போல நான் என் வீட்டின் வெளியே காத்துக் கொண்டு இருக்கிறேன்.//

    உணர்ச்சியுள்ள எந்தத் தமிழனுக்கும் இந்த வரிகள் படிக்கும் போது கண்ணீர் வரும்

    பதிலளிநீக்கு
  4. கேள்விப்பட்டு நானும் வீட்டிற்குவந்து தொலைக்காட்சி பார்த்து நொந்துபோனேன்.களிப்பில் வேறு இருக்கிறார்கள்.இதுவெல்லாம் அவர்களுக்குத் தெரிந்ததுதானே.

    பதிலளிநீக்கு
  5. வலிகளோடு இருக்கின்றது கடைசி வரி.

    பதிலளிநீக்கு
  6. நட்புடன் ஜமால்!
    தமிழ்நதி! (என்ன சொல்கிறீர்கள் என்பது புரியவில்லை)
    வேடிக்கை மனிதன்!
    விஜய்!
    முத்துவேல்!
    நாகேந்திர பாரதி!
    ஆ.முத்துராமலிங்கம்!

    வருகைக்கு நன்றி.
    பல்லாயிரக்கணக்கில் மக்கள் வலியிலும், வேதனையிலும் துடித்துக் கொண்டு,. எதிர்காலமற்று, திசைகளற்று நிற்கும் அவலம் இருக்க, இந்த தமிழ் தொலைகாட்சிகள் அடிக்கிற கூத்துக்கள் தாங்க முடியவில்லை. அனாதரவாக நிற்கும் அந்த மக்களுக்கு என்ன நம்பிக்கை இனி இருக்கிறது என்ற வெறுமையில் வெளிப்பட்ட வரிகள்தான் இந்தப் பதிவு.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!