திரி கருகும் நாற்றம்


முற்றிலும் முடிவாய் அழித்திடும் 
மூர்க்கம் மட்டுமே
ஆயுதங்களின் முனையிலிருக்கின்றன.

குண்டுகள் வீணாகும் கவலை
மனித உடல்கள்
வெடித்துச் சிதறுவதில் இருப்பதில்லை

ஆதரவும், கருணையும் கொண்ட
ஒரு முகம் கூட  அருகில் இல்லாமல்
விம்மி விம்மி
மரணத்தின் கடைசித்துளிகளாய்
பார்வைகள் வானத்தில் நிலைக்கின்றன.

அழுவதற்கும்  பேசுவதற்கும்
வார்த்தைகளற்று
பேரழிவில் நிலைகுத்தி
நெஞ்சடைத்துப் போகிறது மனிதம். 

புல்வெளிகளின் மீது
பூட்ஸ் கால்களும், பீரங்கிகளும் பாய்கின்றன
திரி கருகும் நாற்றம்
காற்று வெளியெங்கும் பரவுகிறது.


Comments

13 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. நெஞ்சடைத்துப் போகிறது மனிதம். யுத்தம் இரக்கமற்றது\\

    மிக(ச்)சரியே!

    ReplyDelete
  2. //குண்டுகள் வீணாகும் கவலை
    மனித உடல்கள்
    வெடித்துச் சிதறுவதில் இருப்பதில்லை //

    மனிதம் தேயும் காலம் :X

    ReplyDelete
  3. அழுவதற்கும் பேசுவதற்கும்
    வார்த்தைகளற்று
    பேரழிவில் நிலைகுத்தி
    நெஞ்சடைத்துப் போகிறது மனிதம்.

    யுத்தம் இரக்கமற்றது.

    உண்மையான வார்த்தை.
    இரக்கமற்றவையை கையில் எடுத்துக் கொண்டால்தான் அமைதி வருமாம!!!

    ReplyDelete
  4. நல்ல கவிதை. ஆயுதம் ஏந்தி போராடுவது தவறு என்பதை அழகாக படம் பிடித்துள்ளீர்கள். இப்போது என்ன ஆயிற்று? ஒன்றும் மிஞ்சவில்லை! மிஞ்சியர்வர்கள் இந்தியாவில் தஞ்சம் அடைந்தால் சரி. Phoenix will rise again!

    ஸ்ரீ லங்கா தமிழர்கள் ( இரண்டு பக்கம் டேக்ஸ் கட்டியவர்களுக்கு ) இப்போ நிம்மதி போல தோற்றம்.

    ReplyDelete
  5. வணக்கம் மாதவராஜ்

    நெஞ்சு பாரமாய் இருக்கின்றது

    ஆனால் அழுது பெருவது இல்லை உரிமைகள், அழுது முடித்திருக்கின்றோம் இனிதான் போராட்டம் இருக்கு

    இராஜராஜன்

    ReplyDelete
  6. //
    அழுவதற்கும் பேசுவதற்கும்
    வார்த்தைகளற்று
    பேரழிவில் நிலைகுத்தி
    நெஞ்சடைத்துப் போகிறது மனிதம்.
    //
    அற்புதமான வரிகள்.

    இலங்கையில் புலிகள் தோற்கடிக்கப்பட்டதாகவும், அனைத்துப் பகுதிகளும் ராணுவத்தால் கைப்பற்றப்பட்டதாகவும் அறிவிப்பு வந்த நேரத்தில் ...

    ReplyDelete
  7. //ஆதரவும், கருணையும் கொண்ட
    ஒரு முகம் கூட அருகில் இல்லாமல்
    விம்மி விம்மி
    மரணத்தின் கடைசித்துளிகளாய்
    பார்வைகள் வானத்தில் நிலைக்கின்றன.

    அழுவதற்கும் பேசுவதற்கும்
    வார்த்தைகளற்று
    பேரழிவில் நிலைகுத்தி
    நெஞ்சடைத்துப் போகிறது மனிதம்.//

    ஈழத்து மக்களின் அவல நிலையையும், நாம் அவர்களின் மீது காட்டும் மெத்தனப்போக்கையும் சுருக்கமாக விளக்கிக்கூறும் வரிகள்

    ReplyDelete
  8. ஹிட்லர் முசோலினி ஸ்டாலின் இவர்கள் மூன்று பேர் செய்த படுகொலைகளை விட மிக கொடுரமானது ராஜபக்ஷேஇன் தமிழ் இன படுகொலை இதற்கான தண்டனையை ராஜபக்சேயும் அவனுக்கு ஆலோசனை வழங்கிய அரசியல் கபடதாரிகளும் இதை விட கொடுமையாக உணர்வார்கள்.
    ராஜபக்சேக்கு நல்ல சாவு கிடையாது

    ReplyDelete
  9. முகமது பாருக்May 18, 2009 at 6:00 PM

    ஒரு இன விடுதலையை எப்படி ஆதிக்கவர்க்கம் முறியடிக்கும் என்பதற்கு தமிழீழம் ஒரு உதாரணம்..

    வரலாறுகள் வெற்றி பெற்றவர்களின் கைகளினால்தான் எழுதப்படும் என்பது மீண்டும் ஒருமுறை நிருபணம் ஆகியுள்ளது..

    தன் மண்ணை நேசித்த தன் இனத்துக்கு (தன் மண்ணிலே) ஒரு நாடு அமைத்திட சென்ற ஒரு மாவீரனை இன்று சாக அடித்திருக்கிறது (உறுதி படுத்தாத செய்தி) வல்லாதிக்கம்..

    காலத்தின் கைகளில் தவழ்ந்து வந்த குழந்தைகளை காலமே தத்தெடுத்து உள்ளது தற்காலிகமாக. மிக பயங்கர இன அழிப்பை தந்திரத்துடனும் உலக நாடுகளுடனும்
    இணைந்து செய்து முடிக்க போகிறது இந்திய வல்லாதிக்க (சிங்கள இனவெறி) ராணுவம்..

    இனி தமிழ் இனம் மெல்ல மெல்ல சாகும்...ஏற்கனவே தமிழ்நாட்டில் பாடை தயார்..இப்போது இலங்கையிலும் தயாராகியது..

    // யுத்தம் இரக்கமற்றது //..ஆமாம் ஆனால் எப்போதும் வெற்றி பெற்றவர்களுக்கு தெரியாது..



    தோழமையுடன்

    முகமது பாருக்

    ReplyDelete
  10. //
    ராஜபக்சேக்கு நல்ல சாவு கிடையாது
    //
    @John : But unfortunately most dictators have a great life and die a natural death.

    Like Bono's song went "Hope and history won't rhime ..., peace on earth"

    ReplyDelete
  11. நட்புடன் ஜமால்!
    அனானி!
    ஆ.முத்துராமலிங்கம்!
    விஜய்!
    சந்தனமுல்லை!
    வனம்!
    ஜோ!
    வேடிக்கை மனிதன்!
    பொன்ராஜ்!
    முகமதுபாருக்!
    ஜோ!
    தீபா!
    யாத்ரா!

    அனைவரின் வருகைக்கும், துயரத்தை பங்கு கொண்டதற்கும் நன்றி.

    ReplyDelete

You can comment here