முதல் பாடம்

child

 

வீடு முழுவதும் ஒரு பறவை போல சுற்றிக் கொண்டிருந்தான் அவன். அழ அழ எல்.கே.ஜியில் சேர்த்து இரண்டு நாளாகியிருந்தது. கசங்கிய உடுப்புகளோடு சாயங்காலம் வீட்டிற்குள் நுழைந்தான். கூடவே ஐந்தாம் வகுப்பு படிக்கும் அவனது அக்காவும் வந்தாள்.

“அம்மா, இப்ப பாருங்களேன்” என்றவள், தம்பியைப் பார்த்து “ஷட் அப் அண்ட் ஸிட் டவுன்” என்றாள்.

சட்டென்று கீழே உட்கார்ந்து உதடுகளின் மீது விரலை வைத்துக் கொண்டான். கண்களில் ஒரு மிரட்சி இருந்தது.

 

*

கருத்துகள்

17 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. முதல் பாடமே மிரட்டல்தானா!!

    பதிலளிநீக்கு
  2. அடக்குமுறை அங்கேயே துவங்கி விடுகிறது, அடிமைகளை உருவாக்கும் இடமாகவே பாடசாலைகள் இருக்கிறதென்பது வேதனையான விஷயம் தான், குழந்தைகளை எப்படி அணுக வேண்டும் என்பதைப் பற்றிய அடிப்படை விழிப்புணர்வு பெற்றோர் ஆசிரியர் என அனைவருக்கும் தேவை.

    பதிலளிநீக்கு
  3. மனதில் பாரங்கல் ஏற்றியது போல் ஆகிவிட்டது. ஆகப்பெரிய சோகம். ஒவ்வொரு மனிதனும், ஒட்டுமொத்த சமூகமும் கையாலாகதவர்களாக வேடிக்கை பார்க்கிறோம்.

    பதிலளிநீக்கு
  4. மனதில் பாரங்கல் ஏற்றியது போல் ஆகிவிட்டது. ஆகப்பெரிய சோகம். ஒவ்வொரு மனிதனும், ஒட்டுமொத்த சமூகமும் கையாலாகதவர்களாக வேடிக்கை பார்க்கிறோம்.

    பதிலளிநீக்கு
  5. நச்சுன்னு ரெண்டே வரியில ஒரு மிக முக்கியமான விஷயத்தை சொல்லி இருக்கீங்க

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் மாதவராஜ்
    ம்ம்ம் இதத்தான் ரோம்ப நாளா பாத்துகிட்டு இருக்கோம்- ல

    அடங்கிப்போ சிந்திக்காதே என்பதுதானே பள்ளிகளின் முழுநேர போதனை
    நன்றி
    இராஜராஜன்

    பதிலளிநீக்கு
  7. பக்கா! பக்கா!!
    தொடர்ந்து எழுதுங்கள்..
    நிறைய பதிவை எதிர்பார்கின்றேன்!

    நம்ம பக்கங்களுக்கும் வாங்க..
    ஓட்ட குத்துங்க!!

    பதிலளிநீக்கு
  8. ஆஹா !நான் ஜஸ்ட் மிஸ் பண்ணிட்டேன் அல்லது நீங்க முந்திக்கிட்டிங்க. வேற ஒன்னுமில்ல. இதேபோல கிட்டத்தட்ட ஒன்னு நான் கவிதைன்னு லேபிள் போட்டு எழுதி வச்சுருக்கேன்.ரொம்ப சாதாரணமா எழுதியிருக்கேனேன்னு தயங்கிட்டிருக்கேன்.சீக்கிரம், சும்மாப் போடுறேன். பாருங்க.

    இது நல்லாயிருக்குது.

    பதிலளிநீக்கு
  9. ரொம்ப ஆச்சரியமா இருக்குங்க..எப்படி இப்படி எழுதினீங்கன்னு.... கதை சிறிசுதான்.. ஆனா கரு ரொம்ப பெரிசு!!!

    பதிலளிநீக்கு
  10. ஆ.முத்துராமலிங்கம்!
    அனானி!
    சந்தனமுல்லை!
    மங்களூர் சிவா!
    யாத்ரா!
    தீபா!
    சுபா!
    வித்யா!
    ராஜ் !
    வனம்!
    கலையரசன்!
    முத்துவேல்!
    தீப்பெட்டி!
    ஆதவா!

    அனைவரின் வருகைக்கு நன்றி.
    இது ஒரு சின்ன நிகழ்வுதான்.
    முளையிலேயே நம் பிள்ளைகள் இங்கு கிள்ளப்படுகிறார்கள்
    ஒழுக்கம் என்கிற பேரில் அடிமையாக்க திட்டமிட்ட பாடத்திட்டங்கள் இருக்கின்றன.
    சுதந்திரம் குறித்து பள்ளிக்கு வெளியேதான் அறிய முடியும்.
    இதென்ன கல்வி முறை?
    கேள்விகள் எழட்டுமே!

    பதிலளிநீக்கு
  11. அன்பின் மாதவராஜ்

    சிறு குழந்தைகளிடம் அன்பினையும் கண்டிப்பினையும் சரி சமமாகத் தான் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் காட்டுகின்றனர். இங்கொன்றும் அங்கொன்றுமாக எல்லை மீறலாம் - அது ஆசிரியத்தொழிலுக்கு உரிய மரியாதை அளிக்கப் படாததினால் தான்.

    இன்றைய மாணவ சமுதாயத்தினையும் அதற்குள்ள அரசியல் ஆதரவினையும் சற்றே நினைத்துப் பாருங்கள்.

    கல்விமுறை மாறலாம் - எப்படி என்பது விவாதத்திற்குரியது.

    நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  12. ஒரு குட்டிக் கதையில் ஒட்டுமொத்தக் கல்விமுறை மீதான கேள்வியை முன்வைத்திருக்கிறீர்கள்.. அற்புதம்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!