“இவங்க எல்லாம் ஜெயிக்க மாட்டாங்களா?”

voting

“அப்பா, இதென்ன உங்க கையில கருப்பா மை இருக்கு?”
“ஓட்டு போட்டேன்”
“ஓட்டுன்னா என்னப்பா?”
“இதோ டிவில காண்பிக்கிறாங்க... பாரு!”
“கருணாநிதி ஓட்டு போடுறாரா?”
“ஆமா”
“இப்ப... ஜெயலலிதா ஓட்டுப் போடுறாரா?”
“ஆமா”
“அப்பா... விஜய்காந்த்தும் ஓட்டுப் போடுறார்!”
“ஆமா”
“எதுக்குப்பா ஓட்டுப் போடுறாங்க?”
“நிறைய ஓட்டுக் கெடைச்சவங்க ஜெயிப்பாங்க”
“கருணாநிதி, ஜெயலலிதா, விஜய்காந்த்துல்லாம் ஜெயிச்சுருவாங்களா?”
“யாராவது ஒருத்தர்தான் ஜெய்ப்பாங்க”
“இவங்க எல்லாம் ஜெயிக்க மாட்டாங்களா?”
“................”.
டி.வியில் மக்கள் வரிசையில் நின்று ஒட்டுப் போட்டுக் கொண்டு இருந்தார்கள் அப்போது.

கருத்துகள்

18 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. ஜெயிக்கும் காலம் விரைவில் வரும்

  பதிலளிநீக்கு
 2. நம் வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு
  வழி ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையில் தான் ஓட்டு போடுகிறார்கள் (ஓட்டு போடுபவர்கள்-
  நகரத்தை விட கிராமங்களில் ஓட்டு
  விழுவதற்கு இதுவும் காரணம்!!)

  பதிலளிநீக்கு
 3. ஆதங்கத்தையும் ஆறாத காயத்தையும் கூட அற்புதமாகக் குழந்தை மொழியில் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.

  என்ன பதில் சொன்னீர்கள் அவனுக்கு?
  :-(

  பதிலளிநீக்கு
 4. எப்பவும் அவிங்கதான் ஜெயிப்பாங்க பொதுமக்கள் எப்பவும் ஜெயிக்க மாட்டாங்க குழந்தைதானே வளர்ந்ததும் தெரிஞ்சிப்பான்.

  :)))

  பதிலளிநீக்கு
 5. திலிப் நாராயணன்13 மே, 2009 அன்று 11:42 PM

  வசதி உள்ளவர்களுக்கான ஏற்பாடாகிப்போனது நமது அரசியல். மமதா பானர்ஜி (பிரமன்) ஜெ(பிரமன்) மாயா (தலித்)கருணா (மி.பி சாதி)லாலு( பி சாதி)முலாயம்(பி. சாதி) ஷரத் பவார் ( பி.சாதி)மோதி (மி. பி. சாதி)அத்வானி (சிந்தி)மன் மோஹன் (சீக்கியன்)சிதம்பரம் (பனியா) குமாரசாமி பனியா) சந்திர பாபு நாயுடு பி.சாதி)என்று எவருமே ஏழை இல்லாதவர்கள்.இழப்பதற்கு எதுவும் இல்லாத தினம் இருபது ரூபாய் சம்பாதிக்கும் 80 கோடிப்பேர்களின் வாழ்வு எந்தவிதத்திலும் முன்னேறப்போவதாக எந்த அறிகுறியும் தட்டுப்படவில்லை இப்போது.

  பதிலளிநீக்கு
 6. அவர்கள் யார் ஜெயித்தாலும், தோற்கும் கட்சியை சேர்ந்தவர்கள் என கூறவேண்டியது தானே !!!!!

  பதிலளிநீக்கு
 7. இவங்க எப்பதான் ஜெயிக்கிறது...

  பதிலளிநீக்கு
 8. பெயரில்லா14 மே, 2009 அன்று 10:37 AM

  neeyum vetri peralaam yenru ummal koora mudiyatho !..

  பதிலளிநீக்கு
 9. ஜனநாயகம் என்ற சித்தாந்தத்தில் பல பக்க விளைவுகள் இருப்பதால் பெரும்பான்மையோர் அரசியலுக்கு வர பயப்படுகிறார்கள்.எனக்குத் தோன்றுவது என்னவென்றால் IIT போன்ற கல்விகள் மாதிரி அரசியல் கல்வியும் முன்னிலைப் படுத்த வேண்டும்.பத்திரிகை,ஊடகம்,தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புக்களை இதன் அங்கமாக்க வேண்டும்.இப்ப நம்ம சரத்பாபு போன்ற முன்னோடிகளையெல்லாம் முன்னிலைப் படுத்த வேண்டும்.ஆனால் நடைமுறை அரசியலில் தென்சென்னை வாக்காளர்களில் எத்தனை பேருக்கு இந்த மாதிரி எண்ணங்கள் இருக்கிறது என்பது சனிக்கிழமை வெளிப்படும்.

  பதிவர் வட்டமும் உங்களைப் போன்ற சிந்தனைகளும் எழுத்தளவில் ஆக்கபூர்வமாகவே இருக்கிறது.ஆனால் இதனை பலருக்கும் போய்ச் சேர்வதன் மார்க்கெட்டிங்க் நிபுணத்துவம் மட்டுமே குறைகிறது.

  பதிலளிநீக்கு
 10. உண்மையை சொன்ன வரிகள்..:(

  பதிலளிநீக்கு
 11. பையன் அப்படியே அப்பா மாதிரி..
  கேள்வி மேல கேள்வி கேப்பாரோ?

  அப்படியே நம்ம பதிவுக்கும் வாங்க...
  www.kalakalkalai.blogspot.com

  பதிலளிநீக்கு
 12. பிரியமுடன் வசந்த்!
  சந்தனமுல்லை!
  ஜே!
  தீபா!
  மங்களூர் சிவா!
  ஆ.முத்துராமலிங்கம்!
  திலிப் நாராயனன்!
  பதி!
  தீப்பெட்டி!
  அனானி!
  ராஜ நடராஜன்!
  சாத்திரி!
  முத்துலெட்சுமி!
  கலையரசன்!
  வால்பையன்!

  அனைவரின் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.
  அரசியல் குறித்த பிரக்ஞையும், விழிப்பும் வேண்டும் முதலில்.
  தன்னலம் சார்ந்து யோசிப்பதை விட தேசத்தின் மக்கள் அனைவருக்காகவும் யோசிக்கிற, மனநிலை உருவாக வேண்டும்.
  இன்று கிடைக்கும் சிறு சிறு சாதகங்களை விட, நாளை நம் சந்ததி எப்படிப்பட்ட சமூகத்தில் வாழ வேண்டும் என்ற கனவு வேண்டும்.
  இதை நோக்கி சிந்தனைகளைத் தூண்டிவிட்டால் போதும்.... பற்றிக் கொள்ள....

  பதிலளிநீக்கு
 13. அன்பின் மாதவராஜ்

  பல் நூறு கோடி மக்கள் உள்ள உலகில் மிகப் பெரிய சன நாயக நாட்டில் - இதெல்லாம் இப்படித்தான் இருக்கும். சிந்தனை நன்று - மக்கள் ஜெயிக்க வேண்டுமென்ற சிந்தனை நன்று. யார் முதலடி எடுத்து வைப்பது ? அனைத்துக் கட்சியினருமே தங்கள் நலனில் தான் அக்கறை காட்டுகிறார்கள். சொத்துக் கணக்கு சமர்ப்பித்தார்களே ! பார்த்திர்ர்களா ?

  பதிலளிநீக்கு
 14. They do not win usually because most of them fight the politicians only for a few seconds once in five years, when they go into the polling booth to vote. After this exercise, their link with day-to-day politics ends. Only when people are made aware of the need to carry on this fight everyday on the social, cultural and economic fronts, besides the political front, will they win.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!