ஆண், பெண்
கடற்கரை மணலில் அவனும், அவளும் உட்கார்ந்திருந்தார்கள்.
அவன் பேசும்போது, அவள் மணலில் எழுதிகொண்டு இருந்தாள்.
அவள் பேசும்போது, அவன் அதை அழித்துக்கொண்டு இருந்தான்.
அறியாத காதல்
அவள் அவனிடம் கேட்டாள் “நீ என்னைக் காதலிக்கிறாயா?”
“அப்படித்தான் நினைக்கிறேன்” என்றான் அவன்.
அவன் அவளிடம் கேட்டான் “நீ என்னைக் காதலிக்கிறாயா”
“அப்படித்தான் நினைக்கிறேன்” என்றாள் அவளும்.
“நாங்கள் காதலிக்கிறோமா?” இருவரும் கேட்டார்கள்
“உங்கள் இருவருக்கும் நான் அழகாய்த் தெரிந்தால் நீங்கள் காதலிக்கிறீர்கள்” என்றது மேலே இருந்த நிலவு.
“உங்கள் இருவருக்கும், நான் ருசியாய் இருந்தால், நீங்கள் காதலிக்கிறீர்கள்” என்றது மேஜையில் ஆவி பறக்க இருந்த தேநீர்.
“உங்கள் இருவருக்கும் நான் இருப்பதே தெரியாமல் போனால், நீங்கள் காதலிக்கிறீர்கள்” என்றது கடிகாரம்.
முறிவு
தாமதமாக அவன் வந்தான்.
“.ச்சே! எவ்வளவு கொடுமை இப்படிக் காத்திருப்பது, தெரியுமா?” அவள் எரிச்சலடைந்தாள்.
அடுத்தநாள் அவள் தாமதமாக வந்தாள்.
“ச்சே! வேண்டுமென்றே நீ இன்று தாமதமாய் வந்தாய்” அவன் எரிச்சலடைந்தான்.
பிறகு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தனர்.
(இனி, காதல் காட்சிகள் அவ்வப்போது தொடரும் இப்படியாக....)
*
:-)
பதிலளிநீக்குமாதவராஜ் தோழர்,
பதிலளிநீக்குஉங்கள் ஊரில் வெயில் இல்லை என்று நினைக்கிறேன்.
அதான் இப்படி... குளுகுளுன்னு எழுதறீங்க.
‘அகநாழிகை‘
பொன். வாசுதேவன்
நடக்கட்டும் நடக்கட்டும்... :)
பதிலளிநீக்கு//மணலில் அவனும், அவளும் உட்கார்ந்திருந்தார்கள்.
பதிலளிநீக்குஅவன் பேசும்போது, அவள் மணலில் எழுதிகொண்டு இருந்தாள்.
அவள் பேசும்போது, அவன் அதை அழித்துக்கொண்டு இருந்தான். //
உடல் நலம் சரி இல்லாததால் விசிலடிக்க முடியவில்லை...
வாசுதேவன் சார், இதில் குளு குளுன்னு என்னத்த சார் கண்டீங்க?
:-)
//“உங்கள் இருவருக்கும் நான் இருப்பதே தெரியாமல் போனால், நீங்கள் காதலிக்கிறீர்கள்” என்றது கடிகாரம்.//
பதிலளிநீக்குரசித்தேன்
மூன்றும் ரசனையான எழுத்து.
பதிலளிநீக்குரசித்தேன்.
|இனி, காதல் காட்சிகள் அவ்வப்போது தொடரும் இப்படியாக|
தொடருங்கள்.. தொடருங்கள்.
மேலும் தொடருங்கள் அருமை..:)
பதிலளிநீக்குகடுமையான யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. வெற்றிக்கொடி நமது கைகளில் பத்திரமாக இருந்தாலும் வெட்டுப்பட்டவர்களை எண்ணினால் நமது பக்கம்தான் சேதம். எப்படி உங்களால் கடற்கரை மணலை கிளறி விட்டுக் கொண்டிருக்க முடிகிறது...???
பதிலளிநீக்குஇதில் ஒருவர் ரசிக்கிறார்...
நடக்கட்டும்... நடக்கட்டும் என்கிறார் மற்றொருவர்...
அருமை....என்று தட்டிக் கொடுக்கிறார் ஒருவர்...
ஜனநாயகத்தைப் பாதுகாக்க கீ-போர்டில் நர்த்தனமாட வேண்டிய விரல்கள் கடற்கரை மணலின் அடியில் ஈரமாக இருக்கிறதா இல்லையா என்று பார்த்துக் கொண்டிருப்பதை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை....
காதல் காட்சிகள் அருமை, தொடருங்கள், ஆவலோடிருக்கிறேன்.
பதிலளிநீக்கு:) :) :)
பதிலளிநீக்குso nice
நல்ல கவிதைகள்.
பதிலளிநீக்குவெறும் வர்ணனைகள் நிறைந்த வார்த்தை தோரணங்களாக இல்லாமல், வித்யாசமான பரிமாணத்தில் எழுதப்பட்டவை என்று தோன்றுகிறது.
சந்தனமுல்லை!
பதிலளிநீக்குநன்றி.
அகநாழிகை!
தீபா சொன்னதை கேட்டீர்களா?
தமிழன் கறுப்பி!
உங்களின் ஆதரவோடுதான் நடக்கும்.
தீபா!
புரிதலுக்கு நன்றி. விசில் சத்தம் கேட்டது. அகநாழிகைக்கும் தெரிவித்து விட்டேன்.
கடைக்குட்டி!
வருஅகைக்கும், ரசனைக்கும் நன்றி.
ஆ.முத்துராமலிங்கம்!
நீங்களும் என்னோடு வருவீர்கள் என்ற நம்பிக்கையில் தொடருவேன்.
கேபிள்சங்கர்!
மிக்க நன்றி.
கணேஷ்!
உங்கள் வருத்தம் புரிகிறது.
யாத்ரா!
நன்றி.
சுபாஷ்!
நன்றி.
ஜோ!
தங்கள் புரிதலுக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நண்பர் அன்பின் மாதவராஜ் நல்ல மகிழ்வான மனநிலையில் எழுதி இருக்கிறார். குறும்பாக்கள் ( ??? ) அருமை அருமை. காதலைப் பற்றிய வரிகள் நன்று நன்று.
பதிலளிநீக்குஅவன் பேசும் போது அவள் எழுத -
அவள் பேசும் போது அவன் அழிக்க ....
ஆணாதிக்கமா ?
காதல் என்பது என்ன - ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிந்தனை. அருமை அருமை.
முறிவு - இப்படித்தான் நடக்கிறது - புரிதலுணர்வு இல்லையெனில் காதல் முறிவுகள் தான் தொடரும்.
நல்வாழ்த்துகள்