மாதவராஜ் பக்கங்கள் -2

நீரஜ் பாந்தேவின் 'a wednesday', சந்தோஷ் சிவனின் ‘tahaan' அருந்ததீ, அயன் மற்றும் பட்டாளம் படங்கள் கிடைத்தன. குழந்தைகள் தமிழ்ப்ப்டங்களை பார்க்க அடம் பிடித்தததால் பார்க்க வேண்டியதாயிற்று. அருந்ததீ  குப்பை என்றால் அயன் சர்வதேச குப்பை. அருந்ததீ படத்திற்கு பின்னணி இசையே ஒரு மனிதனின் மூச்சிறைப்புதான் போல. சதா நேரமும் புஸ் புஸ்ஸென்று சகிக்கவில்லை. விட்டலாச்சார்யா படங்களில் பேய்கள், மந்திரக் காட்சிகள் எல்லாம் எவ்வளவு சுவராஸ்யமாய் இருக்கும் எனத் தோன்றியது. அயனில் ஒரு காட்சியும் நினைத்துப் பார்க்கவும், சொல்வதற்கும் இல்லை (பாதிப்படத்திற்கு மேல பார்க்கவே முடியவில்லை). கனாக்காலம் தொடரின் விடலைப்பருவ சுவராஸ்யம், பட்டாளமாக உருமாறியிருக்கிறது. இதைவிட,  இதே காலங்கள் தமிழில் அருமையாக படம்பிடிக்கப்பட்டு இருக்கின்றன.

0000

எனக்குப் பிடித்த சினிமாக் காட்சிகள் பலவற்றை கம்யூட்டரில் பதிவு செய்து வைத்திருக்கிறேன். அதில் மொழி படத்தில் ஜோதிகாவுக்கு இசையினை புலன்கள் வழியாக உணர்த்தும் அந்தக் காட்சியும் உண்டு. எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காத காட்சியமைப்பு.  பிருத்விராஜின் ஆர்வம் கொப்பளிக்கும் கையசைவுகள், ஜோதிகாவின் விரல்கள், கண்கள், இசை, காமிராவின் சுழற்சி, எடிட்டிங் என அப்படியே பார்வையாளனை தன் வசமிழக்கச் செய்யும் அற்புதமான கணம் அது. அவ்வப்போது அதைப் பார்ப்பேன். அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த என் மகள் (பிளஸ் டூ படிக்கிறாள்) “அப்பா, அப்படியே இந்தக் காட்சியில் திரிஷா நடித்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள்” என்று சொன்னாள். யோசிக்கவே முடியவில்லை. மகள் வாயைப் பொத்திக்கொண்டு அடக்க மாட்டாமல் சிரித்துக் கொண்டு இருந்தாள்.

0000

“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலைக் கட்டுவோம்”
“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் வளர்ச்சியை 9 சதவீதத்துக்கும் அதிகமாக்குவோம்”
“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நதிகளை இணைப்போம்”
“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தனி ஈழம் அமைப்போம்”
“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவோம்”

இப்படி எழுதிவிட்டு, “அண்டாகா கசம் அபுகா குகம்.. திறந்திடு சீசே!” என்று தலைப்பிட்டால் எப்படி பொருந்துகிறது?

0000

கிரமணி ஷர்மாவின் இந்தக் கவிதை தொலைவிலிருக்கும் நம் கிராமத்தை அசைபோட வைக்கிறது.

சாணம் மெழுகிய தரையில்
வட்டமாய் உட்கார வைத்து
உருண்டையாய்ப் போடுவாள்
பழைய சோற்றைப் பாட்டி
பப்பாளி மரத்திலிருந்து
காக்கைகள் கத்திக்கொண்டு இருக்கும்
மிச்ச மீதிக்கு

காலையில்
பெருமாள் சோவில் சுற்றுச்சுவர்
வெய்யில் ஏற ஏற
தோப்புக்குச் சென்று
மரநிழலில் மண்ணில் புதைவது

‘தாகமா இருக்காக்கும்’
என்கிற தோப்புக் காவல்
மீசை ஆறுமுகத்தின்
கேள்விக்கு முன்னதாகவே
கண்கள் இளநீர் தேடும்

போதாக்குறைக்கு
மாங்காய் பறித்து
தின்னத் தெரியாமல்
உதட்டோரத்துப் புண்ணும்
சேர்ந்து கொள்ளும்

ஊரணியில் கொட்டமடித்தும்
உப்பளம் பார்த்தும்
இதமாய்க் கழியும் விடுமுறை

திரும்பவும்
அடுக்குச் சுவர்களின்
ஆக்கிரமிப்பில்
காற்றோட்டமிழந்த
நகரப் புழுதியில்
வந்து விழும்போது
களைத்துப் போகும்
மனசு ஏங்கும்
இன்னொரு விடுப்புக்கு

 

*

கருத்துகள்

16 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. திரிஷா வந்த புதிதில் அழகு பொம்மையாகவாவது தெரிந்தார். இப்போ ம்ம்ஹூம் ஒண்ணும் சொல்ல முடியாது.
    ஜோதிகாவின் ,குஷி,தூள்,மொழி இந்தப் படங்கள் அவருக்கு நடிப்புக்குத் தீனி போட்டன,. காக்க காக்கவை மறந்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான், மொழி படத்தில் அந்த காட்சியில் ஜோதிகா சிறப்பாக நடித்திருந்தார்.
    கவிதை அருமை... :)

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா2 மே, 2009 அன்று 10:43 AM

    கவிதை அற்புதம். எதைத்தொலைத்து எதை அடைகிறோம் எனச் சில சமயம் யோசிக்கையில் நெஞ்சடைக்கிறது.

    திரிசா ஜோக், ஹா ஹா.

    பதிலளிநீக்கு
  4. கிரமணி ஷர்மாவின் கவிதையை ரசித்தேன். இங்க பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  5. //நீரஜ் பாந்தேவின் 'a wednesday', சந்தோஷ் சிவனின் ‘tahaan' அருந்ததீ, அயன் மற்றும் பட்டாளம் படங்கள் கிடைத்தன.//

    கிடைத்தன என்றால் 'குறுந்தகடுகளா'?!!!

    பதிலளிநீக்கு
  6. நான் ஜோதிகாவின் தீவிர ரசிகை பூவெல்லாம் உன் வாசம் படம் வந்ததிலிருந்து... அவர் நடிப்பில் எப்போதுமே நிறை தான் :) அய்யோ நீங்க சொன்ன மாதிரி இந்த திரிஷாவ அங்க வைச்சு நினைச்சுப்பாக்கவே முடியல...

    பதிலளிநீக்கு
  7. தீராத பக்கங்கள்-2 நல்ல தொகுப்பு..:-)..ஜோதிகாவின் நடிப்பு அருமைதான்! கவிதையில் நல்லாருக்கு..அது போன்ற ஊர்கள் இன்னமும் இருக்கிறதாவென்று சந்தேகம் எனக்கு!

    பதிலளிநீக்கு
  8. தீராத பக்கங்கள்- உ ம், சிறப்பா தந்திருக்கீங்க. கவிதை பகிர்வு அருமையானது.
    முதல் பத்தி மட்டும் சற்று அத்தீமான உங்கள் கண்ணோட்டத்தில் உள்ளது.
    அருந்ததீயும் அயனும் எனக்கும் பிடித்திர வில்லை என்றாலும். சற்று அத்தீத சாடுதான் உங்களது.

    பதிலளிநீக்கு
  9. அருமையான கவிதையை பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்.நன்றி.
    மனம் ஏங்குகின்றது விடுமுறைக்கு சென்றுவந்த கிராமத்தை எண்ணி...

    பதிலளிநீக்கு
  10. கவிதை பகிர்வுக்கு மிக்க நன்றி.
    மொழி ஒரு அருமையான கவிதை,
    யாவரும் நலம் திரைப்படம் பார்க்கலாம், அதன் திரைக்கதை நேர்த்திக்காக.

    பதிலளிநீக்கு
  11. அண்ணே, த்ரிஷாவைக் குறைத்து மதிப்பிட வேண்டாம். வர இருக்கிற படங்களில் அவர் 'நடிக்க' இரூக்கிறாராம்.

    பதிலளிநீக்கு
  12. வல்லிசிம்ஹன்!
    வாங்க. ரொம்ப நாள் கழித்து வந்திருக்கீங்க. சந்தோஷம். உங்கள் பகிர்வுக்கும் நன்றி.

    வேந்தன்!
    நன்றி.

    வடகரை வேலன்!
    நன்றி. பிரித்துவிடம் நீங்கள் ரசித்ததை சொல்லி விட்டேன்.

    சயராபாலா!
    நன்றிங்க.

    மண்குதிரை!
    நன்றி.

    ஊர்சுற்றி!
    நன்றி. ஆமாம்.

    ஆகாயநதி!
    நேரில் சொன்ன மாதிரி இருக்கிறது உங்கள் பகிர்வு.

    தீப்பெட்டி!
    நன்றி.

    மங்களூர் சிவா!
    நன்றி.

    சந்தனமுல்லை!
    உண்மைதான். அப்படி ஊரைக் கூட கவிதையிதான் பார்க்க முடியும் போலிருக்கிறது.

    ஆ.முத்துராமலிங்கம்!
    நன்றி.
    அந்தப் படங்கள் குறித்து என் மனதிற்கு பட்டதைச் சொன்னேன்.

    மணிநேரன்!
    நன்றி. அந்த ஏக்கம்தான் இந்தக் கவிதையின் சிறப்பு.

    யாத்ரா!
    நன்றி. யாவரும் நலம் பார்த்தேன். பாதியில் தூங்கி விட்டேன்.

    செல்வேந்திரன்!
    வாங்க தம்பி, வாங்க. அப்படியா, நடிக்கப் போறிங்களா...!

    பதிலளிநீக்கு
  13. கவிதைக்கு நன்றி..!

    ஜோதிகா எனக்கும் பிடிக்கும்... :)

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!