அவர்கள் கப்பலில் வந்தார்கள்
அவர்கள் கைகளில் பைபிள் இருந்தது
எங்களிடம் நிலம் இருந்தது
கண்ணை மூடி பிரார்த்திக்க சொன்னார்கள்
பிரார்த்தித்தோம்
கண்ணைத் திறந்தோம்
எங்களிடம் பைபிள்
அவர்களிடம் நிலம்!
இந்தக் கவிதையோடு ‘லத்தீன் அமெரிக்கா : நம்பிக்கையின் கீற்று’ என்னும் புத்தகம் ஆரம்பமாகிறது. கி.பி 1492ல் இந்தியாவைத் தேடிப் போன கொலம்பஸ் அமெரிக்கக் கண்டத்தில் கால் வைத்ததிலிருந்து வேதனை கொப்பளிக்கும் ஒரு நிலப்பரப்பின் வரலாற்றை 72 பக்கங்களில் சுருக்கமாகவும், சுவராஸ்யமாகவும் த்ந்திருக்கிறார் விஜயசங்கர். இன்று ஒங்கி உயர்ந்து நிற்கும் அமெரிக்கக் கட்டிடடங்களின் அஸ்திவாரம், கூட்டம் கூட்டமாய் கொன்று குவிக்கப்பட்ட செவ்விந்தியர்களின் எலும்புகளால் எப்படி கட்டப்பட்டது என்பதைப் படிக்கும்போது நடுக்கமாய் இருக்கிறது. ஆயுதம் என்றால் என்ன்வென்று அறியாமல் இயற்கையின் மடியில் சுதந்திரமாய்த் திரிந்த செவ்விந்தியர்கள், ஸ்பானியக் கொள்ளைக்காரர்களின் குதிரைகள் மற்றும் வாட்களின் முன்பு மண்டியிட்டு நின்ற கணத்திலிருந்து பூமியின் வரலாறு வேறுவிதமாய் எழுதப்பட்டதைச் சொல்கிறது இந்த புத்தகம்.
அந்த மண்ணின் பூர்வ குடி மக்களைக் கொன்றும், அங்கிருந்து தங்கத்தையும் இயற்கை வளங்களையும் ஐரோப்பாவுக்குச் சூறையாடிச் சென்ற நூற்றாண்டுகளின் மனித அலறல்கள் புத்தகத்திலிருந்து நமக்குக் கேட்கிறது. ஆங்கிலேயர் புலம்பெயர்ந்து பூர்வகுடிகளை விரட்டிய வட அமெரிக்கப் பகுதிகள் ‘ஆங்கில அமெரிக்கா’ என்றும், ஸ்பானியர்கள் ஆக்கிரமித்த தென் அமெரிக்கப் பகுதிகள் லத்தீன் அமெரிக்கா என்று அழைக்கப்படுகின்றன. தோட்டங்களில் வேலை செய்ய ஆப்பிரிக்காவிலிருந்து நீக்ரோக்களை அடிமைகளாக கொண்டு வந்த அடுத்த துயரம் நிரம்பிய காட்சிகள் ஆரம்பிக்கின்றன.அமெரிக்கா மெல்ல மெல்ல ஆதிக்கம் பெறுவதும், ஏகாதிபத்தியத்தின் மையம் வட அமெரிக்காவில் நிலை கொள்ளும் அத்தியாயமும் சொல்லப்படுகின்றன.
அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கியூபா, வெனிசுலா, அர்ஜெண்டினா, பிரேசில் என ஒவ்வொரு லத்தின் அமெரிக்க நாடுகள் விழித்துக் கொண்டு தலைதூக்கிப் பார்ப்பதோடு புத்தகம் முடிவடைகிறது. “பத்தொன்பதாம் நூற்றாண்டும், இருபதாம் நூற்றாண்டும் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் நூற்றாண்டுகளாய் இருந்தன. ஆனால், இந்த நூற்றாண்டு ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவுக்குச் சொந்தமானது.” என்று சாவேஸின் குரல் உலகை நம்பிக்கையோடு திரும்பிப் பார்க்க வைக்கிறது. புத்தகம் கிடைக்குமிடம் : பாரதி புத்தகாலயம், 7,இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை -18. அற்புதமான மொழியில், நெரூடாவின் கவிதைகளோடு வரலாறு சொல்லப்பட்டு இருக்கிறது.
0000
தேர்தல் நேரத்தில் இந்த அரசியல்வாதிகள் ஒருவரையொருவர் விமர்சனம் செய்யும் விதமும், பேசிக்கொள்ளும் விஷயங்களும் எரிச்சலைத் தருகின்றன. பிரச்சினைகளைப் பேசாமல் இப்படி லாவணி பாடுவது அருவருப்பையேத் தருகிறது. மோடி, அத்வானி, மன்மோகன், சோனியா, லாலு என பெரும் தலைகளே இப்படிப் பேசும்போது, நம் தமிழ் நாட்டுக்காரர்களை என்ன சொல்வது. ‘தமிழினத் தலைவரு’க்கும், ‘புரட்சித்தலைவி’க்கும் நடக்கும் சொற்போரைச் சொல்லி மாளாது போலிருக்கிறது. அதிலும் நேற்று கோயம்புத்தூரில் ஹெலிகாப்டரில் வந்திறங்கிய ஜெயலலிதா பேசியது கொஞ்சங்கூட நாகரீகமற்று இருந்தது. கூட்டத்திற்கு காலதாமதமாக வந்ததற்கு கருணாநிதிதான் காரணம் என்றும், அவர் திருச்சியிலிருந்து விமானத்திலிருந்து சென்னைக்கு வந்ததால் காத்திருக்க வேண்டியதாயிற்று என்றும் சொன்ன வரைக்கும் கூட சரிதான். பிறகு, “கருணாநிதியை மூட்டையாய் கட்டி, அந்த மூட்டையை மேலிருந்து இறக்கி, ஆம்புலன்சில் படுக்க வைத்து கொண்டு போவதற்கு நேரமாகிவிட்டது” என்று பேசுவது நன்றாகவா இருக்கிறது? ரசிக்க முடியவில்லை. நாகரீகமாய் பேசுவதும், மக்களின் பிரச்சினைகளைப் பேசுவதும்தான் ஆரோக்கியமான அரசியலாய் இருக்க முடியும்.
0000
மதுரையிலிருந்து வந்த தோழர் ஒருவரிடம் பேசிக் கொண்டு இருந்தேன். எம்.பி மோகனுக்கு வாய்ப்புகள் நன்றாக இருப்பதாகச் சொல்லிக் கொண்டு வந்தவர் ஜாலியாகவும் பேசினார். ஒரு இடத்தில் பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தபோது ஒரு பாட்டியிடம் “அம்மா, அரிவாள் சுத்தியல் நட்சத்திரத்திற்கு ஓட்டுப் போடுங்கள்” என்று சொன்னாராம். அந்த அம்மா, “ஐயா, எதாவது ஒருச் சின்னத்துக்கு ஓட்டுப் போடச் சொல்லுங்க, மூணுச் சின்னத்துக்கு சொல்றீங்களே” என்று சொன்னாராம்.
0000
சுதந்திரமடைந்து இந்த 62 ஆண்டுகளில், காங்கிரஸை மூன்று காந்திகளின் மரணங்களே காப்பாற்றி இருக்கின்றன. காங்கிரஸைக் கலைக்கச் சொன்ன மகாத்மா உயிரோடு இருந்திருந்தால் என்ன ஆகியிருக்குமோ? நெருக்கடிநிலைப் பிரகடனம், மாநிலத்தலைவர்களின் எழுச்சியால் காங்கிரஸுக்கு செல்வாக்கு குறைந்த தருணத்தில் இந்திராகாந்தியின் மரணம் காங்கிரஸை மீட்டது. அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் காங்கிரஸ் மீண்டும் வீழ்ச்சியுற்றபோது ராஜீவ் காந்தியின் மரணம் அதை சமாளித்தது.
முதல் முப்பதாண்டுகள் தனிப்பெரும் கட்சியாக இருந்த காங்கிரஸுக்கு அடுத்த முப்பதாண்டுகள் வீழ்ச்சியின் பாதையாக இருக்கிறது. பெரும்பான்மை, தனிப்பெருங்கட்சி என்ற பிம்பங்கள் எல்லாம் உடைந்த காலம் அது. பலமுறை ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டது. வெளியிலிருந்து ஆதரவு கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கூட்டணி ஆட்சிக்கு ஏங்க ஆரம்பித்தது.
இப்போது இன்னொரு முப்பதாண்டுகள் ஆரம்பித்திருக்கிறது. மாநிலக் கட்சிகளே பாராளுமன்றத்தில் செல்வாக்கு செலுத்தும் காலம் ஆரம்பித்திருக்கிறது. வேறு வழியில்லாமல் கூட்டணி ஆட்சி என்றே காங்கிரஸ் கோஷத்தை முன்வைக்கிறது. ஒரு நூற்றம்பது சீட்கள்தான் அதன் இலக்கே. அதை எட்டிவிட்டால், அரசு அமைக்கத் தேவையான இடங்களுக்கு மாநிலக் கட்சிகளை ’இழுத்து’விட முடியும் என நினைக்க ஆரம்பித்துவிட்டது. கருத்துக் கணிப்புகள் எப்படியாவது காங்கிரஸைக் காபாற்றத் துடியாய் துடிக்கின்றன. மக்களவைத் தேர்தலில் நின்று வெற்றி பெற்று இதுவரை முன்புற வாசல் வழியாக வராத மன்மோகன்சிங்கை முன்னிறுத்தி காங்கிரஸ் சகல வித்தைகளையும் செய்து கொண்டு இருக்கிறது. ஏற்கனவே அறிமுகமாகிவிட்ட ராகுலின் பிம்பமும் இனி பெரிய அளவில் உதவிடாது. ஒரு நூறு சீட்டுகள் கிடைக்குமா என்பதே சந்தேகம்தான்.
மக்களுக்கு விரோதமாகவே சிந்தித்து செயல்பட்டு வந்த ஒரு கட்சியின் அழிவு கண்ணெதிரே தெரிகிறது. பாரம்பரியம், தார்மீக நெறி, தியாகம் எல்லாம் இனி கடந்த காலம்தான். அடுத்த முப்பதாண்டுகள் முடியும்போது........
*
//மக்களுக்கு விரோதமாகவே சிந்தித்து செயல்பட்டு வந்த ஒரு கட்சியின் அழிவு கண்ணெதிரே தெரிகிறது. பாரம்பரியம், தார்மீக நெறி, தியாகம் எல்லாம் இனி கடந்த காலம்தான்.//
பதிலளிநீக்குசர்தாங்கோ!!!
மஞ்சல் துண்டு+சொக்கத்தங்கம்=தமிழர் தலைவாங்கி.
பதிலளிநீக்கு//சுதந்திரமடைந்து இந்த 62 ஆண்டுகளில், காங்கிரஸை மூன்று காந்திகளின் மரணங்களே காப்பாற்றி இருக்கின்றன.//
பதிலளிநீக்குஅனுதாப வாக்குகள் தான் எல்லாம்.
இந்த முறையாவது மரணம் நிகழாமல் இருக்க வேண்டும்.
இந்த அரசியல்வாதிகள் எதுவும் செய்வார்கள்.
பழியைதான் அடுத்தவர் மேல் சுகமாக போடலாமே.
//கி.பி 1492ல் இந்தியாவைத் தேடிப் போன கொலம்பஸ் அமெரிக்கக் கண்டத்தில் கால் வைத்ததிலிருந்து
வேதனை கொப்பளிக்கும் ஒரு நிலப்பரப்பின் வரலாற்றை//
எல்லா நாடுகளிலும் பூர்விக குடிகளுக்கு இது தான் நிலை.
மனிதர்கள் சாகும் பொழுது கவனிக்காத காங்கிரஸ் ,காங்கிரஸ் சாகும் பொழுது
பதிலளிநீக்குயாரும் கவனிக்க தயார் இல்லை
மனிதர்கள் சாகும் பொழுது கவனிக்காத காங்கிரஸ் ,காங்கிரஸ் சாகும் பொழுது
பதிலளிநீக்குயாரும் கவனிக்க தயார் இல்லை
மிகச் சரியான கண்ணோட்டம்
பதிலளிநீக்குபுத்தக விமர்சனம் மிக அருமை படிக்கத் தூண்டுகிறது.
பதிலளிநீக்குஇன்று தமிழினத்தையே இலங்கையில் அழிக்க அனைத்து ஆதரவையுன் கொடுத்த காங்கிரசுக் கபோதிகள் நாளை தமிழகத்துத் தமிழர்களுக் கெதிராக ஆம்!இந்திய ராணுவத்தை அனுப்பி வைப்பார்கள்.
பதிலளிநீக்குகாரணம் வேண்டுமா?
தமிழனாக இருப்பது ஒன்றே போதும்,ஏதாவது ஒருகழுதை கத்தியது அது இந்திய இறையாண்மைக்கு எதிராகக் கத்தியது. இனி தமிழ் என்றே பேசக் கூடாது என்பார்கள்.
அதற்குமுன் காங்கிரசைக் காலியாக்க வேண்டும்.
புத்தக அறிமுகம் மிக சிறந்தது.
பதிலளிநீக்குநல்ல புத்தகமொன்றை அறிமுப் படுத்தியிருக்கீங்க.
|நாகரீகமாய் பேசுவதும், மக்களின் பிரச்சினைகளைப் பேசுவதும்தான் ஆரோக்கியமான அரசியலாய் இருக்க முடியும். |
உண்மையாக சொன்னீர்கள்,
அந்த மூதாட்டியின் செயல் எத்தையோ
உணர்த்துகின்றது. அந்த அளவுக்கு கட்சிகளும் கொடிகளும் பெருத்து விட்டது.
காங்கிரசின் வீழ்ச்சி.. நல்ல அலசல்.
தீராத பக்கங்கள்- நு, அருமையான பதிவு.
ஒரு நாள் இந்தப் பக்க வரவில்லையெனில் எத்தனை பக்கங்கள் விடுபட்டு போய்விடுகிறது...:-) புத்தகத்தை வாங்கிப் படிக்க முயற்சிக்கிறேன்!
பதிலளிநீக்குபாட்டிதான் எத்தனை சின்னங்களை நினைவுக் கொள்வார்...
இன்று வரை செருப்பு விசப்பட்டது என்ற செய்தி வ்ந்தது,
பதிலளிநீக்குமே மாதம் 6 முதல் செருப்புகள் விசப்பட்டது!!!!
என்ற செய்தி வரும்...
FLASH NEWS :
Sonia meeting in Chennai:-
Tamilnadu Government ordered,those who were participating in the meeting should not wear Shoe or Slipper.
This is not a Joke!!!!
காங்கிரஸ் சாவது இருக்கட்டும். புதைகுழியில் புதைந்து போய்விட்ட கம்யூனிஸ்டுகள் மேலே வருவதற்கு ஏதாவது வாய்ப்பு இருக்கா தோழர்.
பதிலளிநீக்குதேர்தலுக்குப் பின் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவு தரப் போகிற சிபிஎம் கட்சி, பாஜக ஆட்சிக்கு வருவதை தடுக்க காங்கிரசுக்கு ஆதரவு என்று சொல்லும்.காங்கிரஸ் சாகிறதோ இல்லையோ கம்யுனிஸ்ட் கட்சிகள்
பதிலளிநீக்குவிரைவில் சாகும்.
சீனா திபெத்தில் செய்ததெல்லாம்
மனித உரிமை மீறல் இல்லையா?
ஸ்டாலின் ஆட்சியில் கொல்லப்பட்டவர்கள், மாவோ
ஆட்சியில் கொல்லப்பட்டவர்கள்,
தியன்மன் சதுக்க எதிர்ப்பில் கொல்லப்பட்டவர்கள் என உங்களுடைய ஆட்சிகளும் ரத்ததில்
குளித்தவைதான்.
'புதைகுழியில் புதைந்து போய்விட்ட கம்யூனிஸ்டுகள் மேலே வருவதற்கு ஏதாவது வாய்ப்பு இருக்கா தோழர்.'
பதிலளிநீக்குநல்ல கேள்வி.
ஊர் சுற்றி!
பதிலளிநீக்குநன்றி.
ttpian!
வருகைக்கு நன்றி.
அனானிமஸ்!
நன்றி. ஆம்.. பூர்வகுடிகளுக்கு இதுதான் நிலை. ஆனால் இரத்தம் சொட்ட சொட்ட வரலாற்றில் கொடுமைப்படுத்தப்பட்டது அமெரிக்காவில் போல் எங்கும் இல்லை.
சுந்தரமீனாஷி!
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.கருத்துக்கு ரொம்ப நன்றி.
தீப்பெட்டி!
நன்றி.
மங்களூர் சிவா!
முடிந்தாக் வாங்கிப் படியுங்கள்.
அனானி!
வருகைக்கு நன்றி.
ஆ.முத்துராமலிங்கம்!
நன்றி.
சந்தனமுல்லை!
நன்றி. புத்தகம் அவசியம் படிக்கலாம்.
ஜான் பொன்ராஜ்!
உங்கள் கோபம் புரிகிறது.
அனானிகளுக்கு..!
//காங்கிரஸ் சாவது இருக்கட்டும். புதைகுழியில் புதைந்து போய்விட்ட கம்யூனிஸ்டுகள் மேலே வருவதற்கு ஏதாவது வாய்ப்பு இருக்கா தோழர்.//
மக்களுக்கு விரோதமாகச் செயல்படும் எதுவும் அழிந்து போகும். யாரும் அழிந்து போவார்கள். தக்கது நிற்கும், தகாதது அழியும் என்பதுதானே விதி.
மாதவராஜ்,
பதிலளிநீக்குநல்லதொரு புத்தக அறிமுகத்திற்கு நன்றி!!!
ஒவ்வொரு முறையும் பிண அரசியலை செய்யும் காங்கிரஸ் இந்த முறை தப்பிக்கக்கூடாது!!!
"லத்தின் அமெரிக்கா-நம்பிக்கையின் கீற்று " என்ற விஜயசங்கரின் புத்தகத்தை மனதிற்கு நெருக்கமாக அறிமுகம் செய்தீர்கள்.நன்றி என்கிற வார்த்தை எனது மனதில் எழும் நன்றியறிதலை வெளிப்படுத்தப் போதுமானதாக இல்லை.இருப்பினும் நன்றி.
பதிலளிநீக்கு//மக்களுக்கு விரோதமாகச் செயல்படும் எதுவும் அழிந்து போகும். யாரும் அழிந்து போவார்கள். தக்கது நிற்கும், தகாதது அழியும் என்பதுதானே விதி.
பதிலளிநீக்கு//
ஒட்டுண்ணிகள் இன்னும் உயிரோடு இருப்பதால் யாருக்கு லாபம்? அபாரமான விளக்கம் நாட்டில் மடையர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக இருக்கிறார்களோ அவ்வளவு தூரம் ஒட்டுண்ணிகளால் உயிர் வாழ முடியும்.
மோடி, அத்வானி, மன்மோகன், சோனியா, லாலு ஆகியோர் பெருந்தலைகள் ; கருணாநிதி,ஜெயலலிதா சிறுதலைகள்; சரிதான் போங்க . கோவையில் ஜெயலலிதா பேசியதில் எப்படி அநாகரிகத்தைப் பார்த்தீர்களோ தெரியவில்லை. எதிர்க்கட்சியினரை வகை தொகை இல்லாமல் வசைபாடும் கருணாநிதி அதைவிட உயர்ந்த நாகரிகத்திற்கு உரியவர்தானா? தெரியவில்லை. சென்னை விமான நிலையம் அவ்வளவு சிறியதா. கருணாநிதி திருச்சியில் இருந்து வருகிறார் என்பதற்க்காக சென்னை விமான நிலையத்தில் ஜெயலலிதாவை நிறுத்தி வைப்பதை எந்த நாகரிகத்தில் சேர்ப்பது? தெரியவில்லை.
பதிலளிநீக்கு((அனானிகளுக்கு..!
பதிலளிநீக்கு//காங்கிரஸ் சாவது இருக்கட்டும். புதைகுழியில் புதைந்து போய்விட்ட கம்யூனிஸ்டுகள் மேலே வருவதற்கு ஏதாவது வாய்ப்பு இருக்கா தோழர்.//
மக்களுக்கு விரோதமாகச் செயல்படும் எதுவும் அழிந்து போகும். யாரும் அழிந்து போவார்கள். தக்கது நிற்கும், தகாதது அழியும் என்பதுதானே விதி.))
தோழரே, " புதைகுழியில் புதைந்து போய்விட்ட கம்யூனிஸ்டுகள்" என்று அனானிகள் கூறியதை நீங்கள் ஆமோதிக்கிறீர்களா? இல்லை அவர்கள் கூறியதற்கும் மேலே கம்யூனிஸ்டுகள் மக்களுக்கு விரோதமாக செயல்படுகிறார்கள் என்று கூறுகிறீர்களா?
நரேஷ்!
பதிலளிநீக்குமிக்க நன்றி.
சுபா!
தங்கள் பகிர்வுக்கு நானும் நன்றி சொல்லிக்கொள்கிறேனே!
அனானி!
ஓட்டுண்ணிகள் என்கிற பதம் உங்கள் அரசியலைச் சொல்கிறது. மக்கள் மடையர்களாகவும், உங்களைப் போன்றவர்களே அதிபுத்திசாலிகளாகவும் இருப்பதாக நினைத்துக் கொள்கிறீர்கள். வாழ்க.
ராம்!
//எதிர்க்கட்சியினரை வகை தொகை இல்லாமல் வசைபாடும் கருணாநிதி அதைவிட உயர்ந்த நாகரிகத்திற்கு உரியவர்தானா? தெரியவில்லை. //
நான் கருணாநிதி அவர்களை எங்கு உயர்த்திப் பேசவில்லை. அவர் கடந்தகாலத்தில், நிகழ்காலத்தில் எவ்வளவு உளறி இருக்கிரார் என்பது ஊர், உலகுக்கு தெரியும். நான் சொல்ல வந்தது, ஒருப் பிரச்சாரத்தில் மக்களின் பிரச்சினைகளைப் பேசுங்கள், தரக்குறைவாக ஒருத்தரை ஒருத்தர் பற்றி பேசுவது என்ன அரசியல் என்ற ஆதங்கத்தைத்தான். இது கருனாநிதிக்கும் பொருந்தும், அத்வானிக்கும் பொருந்தும், மோடிக்கும் பொருந்தும். சோனியாவுக்கும் பொருந்தும்.
அனானி!
//புதைகுழியில் புதைந்து போய்விட்ட கம்யூனிஸ்டுகள்" என்று அனானிகள் கூறியதை நீங்கள் ஆமோதிக்கிறீர்களா? இல்லை அவர்கள் கூறியதற்கும் மேலே கம்யூனிஸ்டுகள் மக்களுக்கு விரோதமாக செயல்படுகிறார்கள் என்று கூறுகிறீர்களா?//
கம்யூனிஸ்டுகள் மக்களுக்கு விரோதமானவர்கள் இல்லை என்கிற நம்பிக்கையில் எழுதியது அது.
பதிலளிநீக்குதன் மகனை நனைய விடாமல் தடுத்து தான் நனையும் தாய் - அன்னையர் தின வாழ்த்துகள் - 2009