முடிந்தும் முடியாத கதைகள்: “கழுதையும், குருவியும்”

donkey

நாட்டுப்புறக் கதைகளை எத்தனை முறை கேட்டாலும் அலுப்பதில்லை. மூதாதையரின் குரல்கள் ஒளிந்திருக்கும் தொன்மையின் வசீகரம் நம்மை எளிதாக விழுங்கிவிடுகின்றன. கதை சொல்லுகிறவன் தோன்றித் தோன்றி மறைவான். புதிர்களோடு வாழ்வின் அனுபவங்கள் பிசுபிசுப்பாய் ஒட்டிக் கிடக்கின்றன. ரொம்ப எளிமையான சொல்லாடல்களும், கதைகளும் நவீன புத்திகளை சர்வசாதாரணமாக தாண்டிச் செல்கின்றன.

அறிவொளி காலத்தில் பேராசிரியர் மாடசாமி தொகுத்தளித்த இந்தக் கதைகள் எல்லாம் நம் பாரம்பரியத்தின் செல்வங்கள். இன்று அவைகளில் ஒரு கதையை கேட்போம்.

கழுதையும் குருவியும் நண்பர்களாம். இரண்டும் சேர்ந்து விவசாயம் செய்ய ஒப்பந்தமிட்டன.

ஒப்பந்தத்தில் ஆளுக்கொரு ஒரு உரிமை தரப்பட்டது. பயிரில் எந்தப்பகுதி யாருக்கு என்று தீர்மானிக்கும் முதல் உரிமை கழுதைக்கு. என்ன பயிரிடுவது என்று தீர்மானிக்கும் இரண்டாவது உரிமை குருவிக்கு.

ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. “விவசாயம் செய்ய ஆரம்பிப்போம். நண்பா! பயிரில் உனக்கு எந்தப் பகுதி வேண்டும்?” என்று குருவி கனிவோடு கேட்டது.

கழுதை விறைப்பாகச் சொன்னது. “பயிரின் கீழ்ப்பகுதி எனக்கு, மேல்பகுதி உனக்கு” என்று முதல் உரிமையை நிலைநாட்டிக் கொண்டது.

குருவி நெல்லைத் தேர்தெடுத்துப் பயிரிட்டது. கழுதைக்கு வைக்கோலும், குருவிக்கு நெல்மணியும் கிடைத்தன. கழுதை ஏமாந்தது.

அடுத்தமுறை கழுதை ஜாக்கிரதையாய்ச் சொன்னது. “இந்தமுறை மேல்பகுதி எனக்கு, கீழ்ப்பகுதி உனக்கு”

“சரி, சரி” என்று குருவி இணக்கமாய் ஒப்புக் கொண்டது. இந்தமுறை கடலை பயிரிட்டது. குருவிக்கு கடலையும், கழுதைக்குச் செடியின் இலைகளும் கிடைத்தன. ஏமாற்றத்தால் கழுதை தொங்கிப் போனது.

அடுத்தமுறை  கழுதை பதில் சொல்ல ரொம்ப நேரம் எடுத்துக் கொண்டது. இறுதியில், “மேல்பகுதி, கீழ்ப்பகுதி இரண்டும் எனக்கு. நடுப்பகுதிதான் உனக்கு” என்றது.

குருவி நமுட்டுச் சிரிப்போடு பயிரைத் தேர்தெடுத்தது. கழுதை இந்த முறையும் ஏமாந்து போனது.

குருவி எந்த பயிரை தேர்தெடுத்தது?

சரி... நீங்கள் கழுதைப் பக்கமா... குருவிப் பக்கமா?

இந்தக் கதை எதை உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறது?

கதைகள் முடிந்தாலும், முடியவில்லை தானே?

கருத்துகள்

15 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. குருவி எந்த பயிரை தேர்தெடுத்தது?
    கரும்பு
    சரி... நீங்கள் கழுதைப் பக்கமா... குருவிப் பக்கமா?
    சொல்லத்தெரியவில்லை ஆனால் சுயநலமாக யோசித்தால் குருவி பக்கம் தான்
    இந்தக் கதை எதை உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறது?
    குருவி-அரசியல்வாதி கழுதை-மக்கள்
    கதைகள் முடிந்தாலும், முடியவில்லை தானே?
    ஆமாம் (வேற என்னத்த சொல்ல)
    ஆனால் இக்கால குழைந்தைகள் அனைவரும் இதுபோல் நல்ல அறிவை வளர்க்கும் கதைகளை கேட்காமல் ஆங்கிலம் மட்டும் படித்து வாழ்கையின் அடிபடை அறிவு இல்லாமல் வளர்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  2. நல்ல கதை!! முன்பே கேட்டமாதிரி இருக்கு ...

    கதைக்கு முன்னாடி நீங்கள் எழுதியிருக்கும் குறிப்பு பிர்மாதம் குருவி மாதிரி புத்திசாலியை எனக்கு ரொம்ப பிடிக்கும்!!! அட ஏமாத்துவது எவ்வளவு புத்திசாலித்தனம்!!!

    பதிலளிநீக்கு
  3. கதை எழிமையான எழுத்தில்
    அழகானதாக இருக்கு.
    குருவியின் புத்திசாலிதனத்தை
    எல்லோருக்கும் பிடிக்கும்...(ஒரு வேலை ஏமாற்றுரதுதான்
    புத்திசாலிதனமோ.) அறியாமையை கழுதையின் செயல்களில் குறியீடாக
    சொல்கின்றது

    பதிலளிநீக்கு
  4. வெங்கடேஷ் சுப்பிரமணியம்!
    ஆதவா!
    ரிஷான் ஷெரிப்!
    ஆ.முத்துராமலிங்கம்!

    தங்கள் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

    கரும்பு சரிதான்.

    அடுத்து இந்தக் கதைகள் என்னவெல்லாம் யோசிக்க வைத்தது என்பதையும் உரையாடி இருக்கலாமே.

    பொதுவாகவே, விலங்குகளா பறவைகளா என்றால் மனிதர்களுக்கு பறவைகள் பக்கமே இருக்கிறோம். அது நம் மரபுகளில் இருக்கிற உண்மை.

    இந்தக் கதை சொல்லும் ஒப்பந்தம் எனக்கென்னவோ இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நடந்த அணு ஒப்பந்தமாகவேத் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  5. கரும்பு... கதை நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  6. /*நாட்டுப்புறக் கதைகளை எத்தனை முறை கேட்டாலும் அலுப்பதில்லை*/
    உண்மை,

    நல்ல கதை. நான் யார் பக்கமும் இல்லை. நண்பர்கள் என்றால் இருவருக்கும் பயன் தருமாறு பயிரிட்டிருக்க வேண்டும். ஆனால் பல வேளைகளில் குருவியாக இருந்தால் தான் பிழைக்க முடியும்.

    பதிலளிநீக்கு
  7. |இந்தக் கதை சொல்லும் ஒப்பந்தம் எனக்கென்னவோ இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நடந்த அணு ஒப்பந்தமாகவேத் தெரிகிறது|

    சரின்னுதான் படுது

    பதிலளிநீக்கு
  8. மக்கள் கழுதைன்னு சொல்லாம சொல்லிட்டீங்க. இல்லைன்னா ஒரு கருணாநிதியை 6 முறையாகவும் (80 வயதில் அவரால் பணியாற்ற முடியுமா), ஒருஜெயலலிதாவையும், ஒரு எம்.ஜி.ஆரையும், ஒரு ராம தாசையும் (போதும் பட்டியல் போட்டால் தாங்காது) தேர்ந்தெடுப்பார்களா?

    பதிலளிநீக்கு
  9. ஒரு சிறிய கதை எத்தனை பொருள்கள் தருகிறது..நடப்புகளுக்கு ஏற்றாற்போல்! அறிவொளி இப்போது செயல்பாட்டில் இருக்கிறதா?!

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் நண்பர்களே ஏமாறுபவர்களும் ஏமாற்றுபவர்களும் இர்ருகதனே செய்கிறார்கள் எச்சரிக்கையாய் இருக்கவேண்டியது நாம் தானே

    பதிலளிநீக்கு
  11. தீபா!
    அமுதா!
    மண்குதிரை!
    முத்துராமலிங்கம்!
    ரங்கூடு!
    சந்தனமுல்லை!
    பிலிப்!

    அனைவரின் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.
    முடிந்தும் முடியாத கதைகள் இன்னும் தொடரும்...

    பதிலளிநீக்கு
  12. தீபா!
    அமுதா!
    மண்குதிரை!
    முத்துராமலிங்கம்!
    ரங்கூடு!
    சந்தனமுல்லை!
    பிலிப்!

    அனைவரின் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.
    முடிந்தும் முடியாத கதைகள் இன்னும் தொடரும்...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!