ஜனநாயகத்தில் சங்கராச்சாரியார்

sankarachari

(பழைய டைரியின் பக்கங்களிலிருந்து...)

இதற்கு முன்னரும் ஒரு சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்.

1965ம் வருடம் காட்டுப்பள்ளியில் வைத்து நெருக்கமானவர்களிடம் இதனை காஞ்சியின் 68வது மடாதிபதி ஏழாம் சந்திரசேகரர் மிகுந்த பீடிகையோடும்  புன்னகையோடும் கதையாய் சொல்லி இருக்கிறார். அது நடந்தது 1844ம் வருட வாக்கில். திருச்சிக்கு அருகில் ஜம்புகேஸ்வரத்தில் உள்ள அகிலாண்டேஸ்வரியின் காது தோடுகள் பழுதடைந்து இருந்தனவாம். அதைப் சரிசெய்து, அகிலாண்டேஸ்வரியின் காதுகளில் அணியும் விழாவினை நடத்தித் தரும்படி காஞ்சியின் 64வது மடாதிபதியான ஐந்தாம் சந்திரசேகரரிடம் கோவில் நிர்வாகிகள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவரும் சம்மதித்து சென்றிருக்கிறார்.

பணிகள் தொடங்கிய காலத்தில் இந்த காரியத்தை எதிர்த்து திருச்சி நீதிமன்றத்தில் ஒரு சிவில் வழக்கு போடப்பட்டு இருக்கிறது. அந்த விசேஷத்தை தாங்கள்தான் செய்வோம் என்று வேறு ஒரு அமைப்பினர் கேட்டிருந்தனர்.  கீழக்கோர்ட்டு மேல்கோர்ட்டு என்று ஒருவழியாக முடியும்போது, வழக்கு ஆரம்பித்த சமயம் சந்திரசேகரர் அந்தக் கோவிலில் வீசியிருந்த எலுமிச்சை விதைகள் மரங்களாகி காய்க்கத் தொடங்கியிருந்தனவாம். ஆரம்பித்த பணியினை பாதியில் விட்டு விட்டு போக முடியாது என்பதால் சந்திரசேகரர் அங்கேயே தங்க வேண்டி இருந்ததாம். அப்போது மடத்தின் இடைக்கால தலைமையகம் கும்பகோணத்தில் இயங்கி வந்திருக்கிறது. அகிலாண்டேஸ்வரியின் காதுகளில் தோடுகளை அணியும் விழா நடந்துமுடிந்ததாம்.

தொடர்ந்து நடைபெற்று வந்த வழக்கு, மிகச் சிறப்பான விழா ஆகிய செலவுகளால் மடத்தின் நிதிநிலைமை மிக மோசமாயிருந்ததாம். மடத்திலிருந்த பொறுப்பான ஒருவர் தஞ்சாவூர் மன்னராயிருந்த சரபோஜியின் மைந்தன் சிவாஜியிடம் யாருக்கும் தெரியாமல் போய் இந்த விஷயத்தை சொல்லி இருக்கிறார். சந்திரசேகரரை அழைத்து மன்னர் மரியாதை செய்ய வேண்டும் என்பது அவர் விருப்பம்.  மன்னர்  எந்த ஆர்வமும் செலுத்தவில்லை. கண்டு கொள்ளவேயில்லை. மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிய மடத்து மனிதர் நடந்தவைகளை சங்கராச்சாரியார் சந்திரசேகரரிடம் சொல்லி இருக்கிறார். எல்லாம் தேவியின் செயல் என்று மனதுள் எண்ணியவாறு திருச்சியிலிருந்து கும்பகோணத்திற்கு பயணத்தை ஆரம்பித்தாராம்.

தஞ்சாவூருக்குச் செல்லாமல் கோவிலாடி வழியாக எல்லோரும்  சென்றிருக்கிறார்கள். அடுத்தநாள் காலை விடியும் நேரம் திருவையாறு காவேரி கரையில் வைத்து திடீரென்று சிப்பாய்கள் வந்து அவர்கள் அனைவரையும் சூழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். முன்னால் சென்று கொண்டிருந்த குதிரைகள், யானைகள் எல்லாம் நிறுத்தப்பட்டு அதிலிருந்தவர்கள் அனைவரையும் காவேரியின் அடுத்த கரைக்கு பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டு இருக்கிறார்கள். சந்திரசேகரரை தூக்கிச் சென்ற சிவிகையும் நிறுத்தப்பட்டு இருக்கிறது. அவரும் சிப்பாய்கள் புடைசூழ அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார். இதுதான் அந்த கைது நடந்த முறை.

தஞ்சாவூருக்குள் காலடி வைத்ததும் வேதங்கள் சொல்லப்பட, ராஜ உபச்சாரம் செய்யப்பட்டு இருக்கிறது. எல்லாம் ஒரு விழா போல நடந்திருக்கிறது. புகழ் வாய்ந்த வெண்ணாற்றங்கரை சத்திரத்தில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். மன்னர் நேரில் வந்து சந்திரசேகரருக்கு மிகுந்த மரியாதை செய்து பூஜை, தியானங்கள் செய்ய ஏற்பாடுகள் செய்தாராம். நிறைய பொன், வைரக்கற்களை மடத்துக்கு பரிசாக அளித்திருக்கிறார். இப்படி ஆச்சரியம் நிறைந்த செயல்களும், காரியங்களும் அரங்கேறுவதற்குக் காரணம், முந்தின நாள் இரவில் மன்னரின் கனவில் சிவபெருமான் வந்து சங்கராச்சாரியாருக்கு மரியாதைகள் செய்யச் சொன்னாராம். அதுதான் முதலில் மறுத்த மன்னரை இப்படி அசுர பக்தியையும், மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் கொடுக்க வைத்ததாம்.

இப்படி பெருமையோடு சொல்லிக் கொண்டு வந்த ஏழாம் சந்திரசேகரர், "சரி. மன்னர் செய்ததெல்லாம் சரிதான். ஆனால் எதற்கு கைதுப் படலம்?" என்று சுற்றியிருந்தவர்களிடம் கேள்வி கேட்கிறார். பிறகு அவரே தொடர்கிறார். "தன்னிடம் வந்து நின்ற மடத்தின் ஆளிடம் முதலில் முகத்தில் அடிக்காத குறையாக மன்னர் நடந்திருக்கிறார். ஆனால் சிவபெருமான் அவர் கனவில் வந்து சொல்லிவிட்டார். இப்போது மன்னர் திரும்ப நேரில் போய் அழைத்திருந்தால் சுவாமிகள் மறுத்திருப்பார். உங்கள் விருப்பு வெறுப்புகளுக்கெல்லாம் மடாதிபதி வளைந்து போக வேண்டுமா என்று கேட்டு இருப்பார். ஏனென்றால் மடாதிபதி என்பவர் அரசரவைக்கும் மேலானவர். சுவாமிகள் இருப்பது ஆதி சங்கரர் உட்கார்ந்த இடம். தனிப்பட்ட முறையில் சுவாமிகள் இந்த மரியாதையையோ, அவமானத்தையோ பொருட்படுத்துவது இல்லை. ஆனால் மடாதிபதி என்று வருகிற போது அவர் யாருக்கும் தலை வணங்குவதில்லை"

இந்த வார்த்தைகள் இன்று உடைந்து நொறுங்கி இருக்கின்றன. சங்கராச்சாரியாரின் உருவம் என்பது போலீஸ் வேனிலிருந்து  தண்டத்தோடு இறங்குவதாகவும் ஒரு பிம்பம் இப்போது நம் நினைவுகளில் பதிந்து போயிருக்கிறது. 'சுப்பிரமணி, சுப்பிரமணி' என்று காஞ்சிபுரம் கோர்ட்டில் அழைக்கப்பட உள்ளே சென்று கையெழுத்து போடுகிறார். உயர்நீதிமன்றத்தில் அவரை ஒரு கிரிமினல் என்று அரசு வழக்கறிஞர் சொல்ல முடிகிறது.  தொட முடியாத உயரத்தில் இருந்தவர் இன்று கீழே விழுந்து கிடக்கிறார். 'வானம் வில்லாக வளைக்கமுடியும் என்பது செய்து காட்டப்பட்டிருக்கிறது' என்ற திருமாவளவனின் வார்த்தைகளில் தொனிக்கிற கற்பனைக்கெட்டாத ஆச்சரியம் எல்லோருக்குள்ளும் நிறைந்திருக்கிறது.

அப்படி ஒரு அதிகாரம் படைத்தவராக இருந்தவர் அவர். பூரண புனிதம் கொண்டவராக கற்பிக்கப்பட்டிருந்தார். கங்கை அவர் காலடியில் ஓடிக்கொண்டு இருப்பதாக சித்தரித்தார்கள்.  இந்தியாவின் முதல் குடிமகன் ஜனாதிபதியும் அவர் முன் பவ்யமாக நின்று கொண்டு இருப்பார். பல அரசியல் கட்சியின் பெருந்தலைவர்கள் அவரிடம் ஆசி பெற்றுச் செல்வார்கள். அரசின் விசேஷ பாதுகாப்பு அவருக்கு உண்டு. மத்தியிலும், மாநிலத்திலும் அரசமைப்புக்குள் அவர் நினைத்த மாத்திரத்தில் காரியங்கள் ஆற்ற சக்தி மிக்கவர்கள் காத்திருந்தார்கள். பூ கேட்டால் பூ விழும். தலை கேட்டால் தலை விழும். அப்படி விழுந்த தலை ஒன்று சங்கராச்சாரியாரின் தலைக்குப் பின்னால் இருந்த ஒளிவட்டத்தை இன்று விழுங்கி கருநிழலாய் சுற்றிக்கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் மடத்தோடு நெருக்கமாயிருந்து பிறகு மடத்தின் நடவடிக்கைகளின் மீது விமர்சனங்களை வெளிப்படுத்திய சங்கரராமன் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாய்  நிறுத்தப்பட்டு இருக்கிறார். தீயசக்திகள் அழிந்த நாள் என்று அவர் வர்ணித்த அதே தீபாவளி நாளில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். சோமநாதபுரக் கோவிலை இடித்தது போல இருக்கிறது என்று அசோக் சிங்கால் தாங்க முடியாமல் அரற்றியிருக்கிறார்.

இந்துக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று இந்த இந்துக்களின் ஏகபோக உரிமையாளர்கள் எங்கோ தொலைவில் இருந்து கொண்டு அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கிறார்கள். ஹரித்துவாரில் கூடிய சாமியார்கள் கூட்டமைப்பு ஒன்று சங்கராச்சாரியாரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் இல்லையென்றால் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர். ஹைதாராபாத்தில் இந்துச் சாமியார்கள் கூடி கண்டனங்களை வெளியிட்டார்கள். இதுபோலவே வாரனாசி சாமியார்களும் பேசினார்கள் இவர்களோடு விஸ்வஹிந்து பரிஷத் சேர்ந்து கொண்டு பந்த் என்று ஒன்றை நடத்தியது. அதை பத்திரிக்கையில் படித்துத்தான் தமிழக மக்கள் தெரிந்து கொண்டிருப்பார்கள். ஆர்.எஸ்.எஸ்.குண்டர்களோ நீதி மன்ற வளாகத்தில் புகுந்து வக்கீல்களைத் தாக்கியிருக்கிறார்கள். பாரதீய ஜனதாக் கட்சி ஜனாதிபதியை  சந்தித்துத் தலையிட வேண்டுமென்றும், நாடு தழுவிய உண்ணாவிரதம் நடத்தப் போவதாகவும் சொல்லியிருக்கிறது. இவர்கள் அனைவரும் சட்டத்தையும், நீதிமன்றங்களையும் எதிர்த்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மக்கள் பல நூற்றாண்டுகளாக அடைகாத்துக் கொண்டிருந்த கேள்விகளுக்கு மௌனமாக விடையை அறிந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு பயங்கர கொலை நடந்திருக்கிறது. அவரும் ஒரு இந்துதான். கோவிலுக்குள் வைத்தே கொன்றிருக்கிறார்கள். அதுபற்றி அவர்களுக்கு கவலையில்லை. அந்தக் கொலையாளிகளை தண்டிக்க வேண்டும் என்று இந்து மதக் காவலர்கள் யாரும் சும்மா ஒரு பேச்சுக்காகக் கூட சொல்லவில்லை. சங்கராச்சாரியாரை எப்படி விசாரிக்க முடியும் என்பதே  அவர்கள் கோபமாய் இருக்கிறது. அரசியலமைப்புச் சட்டம், நீதி எல்லாவற்றுக்கும் மேலே உள்ள மனிதர் அவர் என்பதே அவர்களது சொல்லிலும் செயலிலும் தெரிகிறது. கொலையே செய்திருந்தால் கூட அவரை நோக்கி கையை நீட்டக் கூடாது என்பதுதான் அவர்களது புனிதமான பார்வை. சட்டம் மட்டுமல்ல சந்தேகத்திற்கும் அப்பாற்பட்டவர் அவர் என்பதை சொல்லாமல் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். சங்கராச்சாரியாரைவிட இதில் நிலைகுலைந்து போயிருப்பது இந்துத்துவா அமைப்புகளே. யாரைக் குற்றம் சாட்டுவது என்று தெரியாமல் இஷ்டத்திற்கு உளற ஆரம்பித்திருக்கிறார்கள். முரளி மனோகர் ஜோஷி இதில் சர்வதேச சதி இருப்பதாக தெரிவித்தார். ராமகோபாலன் மைனாரிட்டி ஓட்டுகளைப் பெறுவதற்கான அரசியல் சூழ்ச்சி என்றார்.

நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த அந்தக் கைதையும், இன்றைய கைதையும்  இணைத்துப் பார்த்தால் எல்லாவற்றுக்குமான பின்னணி தெரிய வரும். அது நடந்தது மன்னர்களின் காலம். மக்களின் கருத்துக்களுக்கு இடமில்லாத ஒரு காலம். 'சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்னும் வார்த்தைகளுக்கும், ஏழாம் சந்திரசேகாரரின் வார்த்தைகளுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.

மன்னர் சிவாஜியின் கனவில் சிவபெருமான் வரலாம்.. மக்கள் அனைவரின் கனவிலும் வந்துவிட முடியாது. ஜனநாயகத்தின்  குணாம்சம் இது.

கருத்துகள்

21 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. //கொலையே செய்திருந்தால் கூட அவரை நோக்கி கையை நீட்டக் கூடாது என்பதுதான் அவர்களது புனிதமான பார்வை. சட்டம் மட்டுமல்ல சந்தேகத்திற்கும் அப்பாற்பட்டவர் அவர் என்பதை சொல்லாமல் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்//

    :) நான் கடவுள் படத்தில்

    "சமூகத்தை கெடுப்பவர்களின் மரணம் தண்டனையாகவும், சமூகத்திற்கும், தனக்குமே தேவையற்றவர்களின் மரணம் அவர்களே வரமாகக் கொள்ள வேண்டும்" என்று சொல்லுவார்கள், சங்கர இராமனுக்கு 'ஸ்வாமி' கொடுத்தது தண்டனையா ? வரமா ?

    பதிலளிநீக்கு
  2. //மன்னர் சிவாஜியின் கனவில் சிவபெருமான் வரலாம்.. மக்கள் அனைவரின் கனவிலும் வந்துவிட முடியாது. ஜனநாயகத்தின் குணாம்சம் இது//.

    சரியான கருத்து.

    அந்த வழக்கு என்ன சார் ஆச்சு?

    பதிலளிநீக்கு
  3. //Blogger கோவி.கண்ணன் said...
    :) நான் கடவுள் படத்தில்

    "சமூகத்தை கெடுப்பவர்களின் மரணம் தண்டனையாகவும், சமூகத்திற்கும், தனக்குமே தேவையற்றவர்களின் மரணம் அவர்களே வரமாகக் கொள்ள வேண்டும்" என்று சொல்லுவார்கள், சங்கர இராமனுக்கு 'ஸ்வாமி' கொடுத்தது தண்டனையா ? வரமா ?//

    ரெண்டுக்கும் இடைப்பட்டது :)) கொலை!

    இந்த ஜென்மத்துல இந்த வழக்கு முடியுமா?

    பதிலளிநீக்கு
  4. உங்களைப்போன்ற சிலருக்காவது இன்னும் ஞாபகம் இருப்பதே ஆறுதலாக இருக்கிறது..தொடர்ந்து எழுதுங்கள்

    பதிலளிநீக்கு
  5. உங்கள் எழுத்தை தொடர்ந்து படித்து வருவதில் எனக்கு மிகவும் திருப்தியாக உள்ளது. நிறைய விசயங்களை தெறிந்து கொள்ளவும்
    நல்ல கருத்துகளையும் உயரந்த எழுத்தையும் கிரகித்துகொள்ள முடிகின்றது.

    இப்பதிவு என் அனுபவத்திற்கும் உலகஅறிவிற்கும் அப்பார்பட்டவையே ஆனாலும் இதை முழுதும் படித்தேன்
    விசையங்களை புரிந்து கொள்ளமுடிகின்றது. புதிய அறிமுகமாகவே இருக்கு (எனக்குமட்டும்) நீங்கள் தொடர்ந்து நிறைய எழுத வேண்டும் நாங்கள் அதை படித்து பயணடைவோம்

    பதிலளிநீக்கு
  6. இடைக்கால தலைமையகம்??:-):-)

    பதிலளிநீக்கு
  7. ஒரு பயங்கர கொலை நடந்திருக்கிறது. அவரும் ஒரு இந்துதான். கோவிலுக்குள் வைத்தே கொன்றிருக்கிறார்கள். அதுபற்றி அவர்களுக்கு கவலையில்லை. அந்தக் கொலையாளிகளை தண்டிக்க வேண்டும் என்று இந்து மதக் காவலர்கள் யாரும் சும்மா ஒரு பேச்சுக்காகக் கூட சொல்லவில்லை.
    அந்த சமயத்தில் எனக்கும் இந்த கேள்வி எழுந்தது சரி அதை விடுங்கள் இப்பொழுது கூட சில வாரங்கள் முன்னர் குமுதம் இதழில் அவர் மடம் பற்றி ஒரு கட்டுரை இன்றும் அவரை மக்கள் சந்தித்து அசிர்வாதம் வாங்கி கொண்டு இருக்கிறார்களாம் (எந்த மக்கள் என்பது வேறு விசயம்) இவர்களை எல்லாம் என்ன செய்து திருத்த முடியுமோ தெரியவில்லை பின்னர் அவர் ஆடாமல் என்ன செய்வார் சொல்லுங்கள்

    பதிலளிநீக்கு
  8. அப்படிப்போடு அருவாளை.எங்க திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த காஞ்சிவாள் வருவதாக அறிவிக்கப்பட்டபோது நெல்லை சிவபக்தர்கள் ஒன்று கூடி சைவ ஆகமங்களுக்கு இது பொருந்தாது அந்த வாள் எங்க கோவிலுக்குள் நுழையப்படாது என்று கோர்ட்டில் வழக்குப் போட்டுவிட்டனர். இதுவும் ஜனநாயகத்தில் தான் நடக்க முடியும்.

    பதிலளிநீக்கு
  9. Alas ! The "Time " ! ! ! ? ? ?is not good for the sankarachari Jayendrar. The "sex" allegations and "Blue film " stories are toooo much sir >They are true.They exposed the sankarachari fully.But unfortunately the people are walking in the streets freely.They have no self respect.Because the mass main medias and papers are holding them in high places still.The court should speed up the trials and give punishment without any further delay---R.S.

    பதிலளிநீக்கு
  10. //இந்துக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று இந்த இந்துக்களின் ஏகபோக உரிமையாளர்கள் எங்கோ தொலைவில் இருந்து கொண்டு அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கிறார்கள். ஹரித்துவாரில் கூடிய சாமியார்கள் கூட்டமைப்பு ஒன்று சங்கராச்சாரியாரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் இல்லையென்றால் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர். ஹைதாராபாத்தில் இந்துச் சாமியார்கள் கூடி கண்டனங்களை வெளியிட்டார்கள். இதுபோலவே வாரனாசி சாமியார்களும் பேசினார்கள் இவர்களோடு விஸ்வஹிந்து பரிஷத் சேர்ந்து கொண்டு பந்த் என்று ஒன்றை நடத்தியது. அதை பத்திரிக்கையில் படித்துத்தான் தமிழக மக்கள் தெரிந்து கொண்டிருப்பார்கள். ஆர்.எஸ்.எஸ்.குண்டர்களோ நீதி மன்ற வளாகத்தில் புகுந்து வக்கீல்களைத் தாக்கியிருக்கிறார்கள். பாரதீய ஜனதாக் கட்சி ஜனாதிபதியை சந்தித்துத் தலையிட வேண்டுமென்றும், நாடு தழுவிய உண்ணாவிரதம் நடத்தப் போவதாகவும் சொல்லியிருக்கிறது.//

    கம்யூனிஸ்ட் கட்சியின் தூணாக கருதப்படும் ஒரு பெரும் பத்திரிக்கையாளரும் சங்கராச்சாரிக்கு ஆதரவாக குதி குதியென்று குதித்தாரே. அதையும் குறிப்பிட்டிருக்கலாம். மறந்து விட்டுவிட்டிருக்க வாய்ப்புண்டு. ஒரு வேளை அது யாரென்றே தெரியாதென்றால் நவீன கம்யூனிஸ்ட் இந்து ராம் தான் அது.

    எப்படியிருந்தாலும் மறுபடியும் இவ்வழக்கை நினைவு படுத்தியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. கோவிக் கண்ணன்!

    வரம், தண்டனை என்பதெல்லாம் அவர்களது அகராதி. அவர் கடவுளாக இருக்கலாம். ஆனால் சமூகத்துக்கு கிரிமினல்.

    பதிலளிநீக்கு
  12. மண்குதிரை!
    கோர்ட்டுக்கே வெளிச்சம்.

    திரு!
    சரியாகச் சொன்னீர்கள்.

    ருத்ரன் சார்!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  13. ஆ.முத்துராம்லிங்கம்!

    ரொம்ப நன்றிங்க.

    அனானிமஸ்!
    ரசித்தீர்களா...! நன்றி.

    பதிலளிநீக்கு
  14. சுப்புணி இன்னும் ஜெகத்குருவாக நாடகமாடிக் கொண்டு பல படித்த அறிவற்றவர்களையும் ஏமாற்றிக் கொண்டுள்ளார்.
    புதுவையில் தீர்ப்பை விலைக்கு வாங்கிட முயல்வார்.சாட்சிகளைக் கலைப்பார்.
    நாமெல்லாம் வேடிக்கை பார்க்க வேண்டியதுதான் மக்களாட்சி!

    பதிலளிநீக்கு
  15. வெங்கடேஷ் சுப்பிரமணியம்!
    அவர்களுக்கு இன்னும் அவர் கடவுள்தான். ஆனால் பிம்பம் சுருங்கிக் கொண்டிருக்கிறது .

    பதிலளிநீக்கு
  16. தமிழ்ச்செல்வன்!

    கற்றாருக்கு சென்ற இடமெல்லாம் சிராய்ப்பு!

    பதிலளிநீக்கு
  17. அனானிமஸ்!

    இந்து ராம் நவீன கம்யூனிஸ்டா...! ஹா.ஹா.ஹா.!

    பதிலளிநீக்கு
  18. அனானிமஸ்!
    //நாமெல்லாம் வேடிக்கை பார்க்க வேண்டியதுதான் மக்களாட்சி!//

    இது அரைகுறை மக்களாட்சிதானே... எனவே இதுவும் அரைகுறையாக இருக்கும். இதற்கே கொண்டாட வேண்டிய நிலையில் நாம் இருப்பதும் அவலம்தான்.

    பதிலளிநீக்கு
  19. He was arrested and many rumors were spread and the government tried to mislead the court.
    Those who hared Hindus and Hinduism used this as an opportunity. Despite all
    such attempts he got bail. He is facing the trial and let the courts decide. If held guilty
    he will be punished.

    Before writing about Shankaracharya
    think about the murders committed by goons of CPI(M) and goons supported by CPI(M) in Kerala and
    West Bengal. Atleast some of them
    have been convicted. Everyone in Kerala knows about the murder of
    a teacher, Jayakrishnan by goons
    right in the front of the students. Will you write about this.
    Left front deported Taslima
    to please muslim fundamentalists.
    Editor and Publisher of Statesmen
    were arrested for publishing an
    article because some muslims
    felt offended. Taslima's novel
    was banned to please mulsims.
    Will you dare to condemn these
    and criticise left front.
    I know you and Tamilselvan wont
    because you need the party and its organisations.
    Let me tell you one thing,
    India is a democratic country
    and Shanakarachrya is not above
    law. It is not the Stalinist Russia
    or Maoist China.So dont worry,
    you wont be sent to prison for
    criticising Shankaracharya or Modi or Advani.

    பதிலளிநீக்கு
  20. //ஒரு பயங்கர கொலை நடந்திருக்கிறது. அவரும் ஒரு இந்துதான். கோவிலுக்குள் வைத்தே கொன்றிருக்கிறார்கள். அதுபற்றி அவர்களுக்கு கவலையில்லை. அந்தக் கொலையாளிகளை தண்டிக்க வேண்டும் என்று இந்து மதக் காவலர்கள் யாரும் சும்மா ஒரு பேச்சுக்காகக் கூட சொல்லவில்லை. சங்கராச்சாரியாரை எப்படி விசாரிக்க முடியும் என்பதே அவர்கள் கோபமாய் இருக்கிறது. அரசியலமைப்புச் சட்டம், நீதி எல்லாவற்றுக்கும் மேலே உள்ள மனிதர் அவர் என்பதே அவர்களது சொல்லிலும் செயலிலும் தெரிகிறது.//

    அதெல்லாம் சரிதான். கொலை செய்த ஒரு கிரிமினலுக்கு கேரள சிபிஎம் அரசு ஏன் அரசு மரியாதை செய்தது? அது பற்றி மாதவராஜின் கருத்து என்ன?

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!