"என்ன டீஷர்ட்டும்...ஜீன்சுமாய் கௌப்புறீங்க. இளவட்டம்னு நெனைப்போ?"
இங்கு நாற்பதை கடந்தவர்கள் இந்த கிண்டல் கலந்த வசனங்களை கேட்க நேருகிறது. அவர்களும் சிறு பெருமிதம் கலந்த புன்சிரிப்பை உதிர்த்து அதை ஒரு அன்பளிப்பாக ஏற்றுக் கொள்கிறார்கள். "வயசு எனக்கு இருபத்தைஞ்சுதானே' என்று ஒரு பொய்க்கோபத்தோடு உள்ளுக்குள் சந்தோஷப் பிரவாகத்தில் நனைந்து போகிறவர்களும் இருக்கிறார்கள். இதற்கென வயது குறைந்து போக மெனக்கெடவும் செய்கிறார்கள்.
வயசும், இளமையும் வெறும் டீ ஷர்ட்டிலும், ஜீன்சிலும் அடைத்து வைக்கப்பட்டு இங்கு லேகிய மருந்துகளாய் விநியோகிக்கப்படுகிறது. 'ஜீன்ஸ்' என்று பேர் வைத்துவிட்டால் அது இளைஞர்களின் சினிமாவாகி விடுகிறது. ஜீன்ஸ் அணிந்து ஒரு கருப்பு பையை முதுகில் தொங்கவிட்டுக் கொண்டால் 'எம் பேரு படையப்பா' என்று ரஜினி இளைஞனாகிவிடுகிறார். இளைஞன் ஒரு பெண்ணோடு உறவு கொண்டுவிட்டு பிடிபடாமல் தப்பித்து ஓடுவதற்கு ஜீன்ஸ் வசதியாக இருப்பதாக விளம்பரமே வந்தது.
ஜீன்ஸ் ஒரு குறியீடுதான். அடையாளம்தான். இளமைக்கு மேலும் பல அடையாளங்கள் இருக்கின்றன. நார்த் ஸ்டார் ஷூக்களோடு மிதத்தல், பனியன் போட்டு, சட்டைப் பொத்தான்களை மாட்டாமல் இருத்தல், சவரம் செய்துகொள்ளாமல் மூன்றுநாள் தாடியை அடைகாத்தல், கைவிரல்களை காக்கா வலிப்புக்காரனைப் போல அசைத்தல், இன்னபிற அங்க லட்சணங்களும், அங்க சேஷ்டைகளும் உண்டு. துடிப்பு மிக்கவர்களாக. வேகம் கொண்டவர்களாக தங்களைக் காட்டிக் கொள்ள இவைகளைத் தவிர வேறொன்றும் இந்த இளைஞர்களுக்கு கைவசம் இல்லாமல் போய்விட்டது ஒரு சமூக அவலம்தான்.
சாகசங்கள் நிறைந்த, காதலும் அன்பும் பீறீடுகிற வயதில் அவைகளை தோற்றங்களிலும், அசைவுகளிலும் மட்டுமே கரைத்து விடுகிற அல்லது தொலைத்து விடுகிற பரிதாபத்துக்கு உரியவர்களாக இருக்கிறார்கள். ஆயிரமாயிரம் கனவுகள் மலர்களாய் பூத்துக் குலுங்க வேண்டிய இளமையின் வனத்தில் உதிர்ந்து போன சருகுகளும், நிழல்களைத் தர முடியாத மரங்களுமே நிறைந்திருக்கின்றன. குன்றென நிமிர்ந்து வீரம் காட்ட வேண்டிய தருணங்களில், விஜய் தனது சட்டைக் காலரிலிருந்து சிகரெட்டை வாயால் கவ்வி பற்ற வைப்பதைப் பார்த்து கைதட்டும் களிமண் உருண்டைகளாகிப் போகிறார்கள். வானத்து தேவன் ஒருவன் தரையிறங்கி எதிரில் நிற்பதாய் பரவசப்படுகிறார்கள். எவ்வளவு பெரிய சாதனை அது. பாரதியின் கவிதையை விட, பகத்சிங்கின் தேசப்பற்றை விட, மகாத்மாவின் சத்திய சோதனையை விட எவ்வளவு ஆன்ம பலம் கொண்ட செயல் அது!
முகப்பரு வந்ததற்கு கவலைப்படுகிற அளவில்கூட பெரும்பாலோருக்கு தங்களின் கல்விக்கும், வேலைக்கும் இங்கு உத்திரவாதம் இல்லையே என்கிற வேதனை அலைக்கழிக்க மாட்டேன்கிறது. அதற்கான காரணங்களை ஆராயத் தோன்ற மாட்டேன்கிறது. 'கொஞ்சம் தள்ளி நின்னா என்ன?' என்று எரிச்சல் படுகிற பஸ்கண்டக்டர் உடனடியாக உலகமகா எதிரியாகத் தோன்றுகிறார். சுய மரியாதை அப்போது விண்ணென்று தெறிக்கிறது. வாழ்க்கையை விட்டே இங்கு தாங்கள் தள்ளி நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறோம் என்பது உறைக்க மாட்டேன்கிறது. தங்களை சுரணையற்றவர்களாக, ஊனமுற்றவர்களாக மாற்றுவதில் சுற்றிலும் ஒரு பெரிய சதிவலை பின்னப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை இளைஞர்கள் அறியாமலேயே இருக்கிறார்கள். தங்கள் மீது இளைஞர்களின் கோபம் திரும்பிவிடக் கூடாது என்று சதா நேரமும் அவர்களை இயந்திரகதியான படிப்பிலும், வெள்ளித்திரை பிம்பங்களிலும், உடல்ரீதியான மயக்கங்களிலும் ஒரு அருபமான இயக்கம் இழுத்து வைத்திருப்பதை புரியாமலே இருக்கிறார்கள்.
ஒரே ஒரு நிபந்தனையைத்தான் இந்த சமூகம் விதிக்கிறது. அருவருப்பும், அநாகரீகமும், ஏற்றத்தாழ்வுகளும் கொண்ட இந்த அமைப்பை எப்போதும் ஒத்துக் கொண்டாக வேண்டும். அதை எதிர்த்து சிந்திக்கக் கூடாது. பேசக்கூடாது. மக்களை திரட்டக் கூடாது. அவ்வளவுதான்.
இதிலிருந்து விட்டு விடுதலையான இளைஞர்களே வரலாற்றில் மகத்தான புருஷர்களாக உருவெடுத்திருக்கிறார்கள். கங்கைக் கரையில் நின்று பூணூலை அறுத்தெறிந்த பாரதி ஒரு இளஞன். மொசெய்ல் நதிக்கரை திராட்சைத் தோட்டத்து விவசாயிகளுக்காக கட்டுரை எழுதி பத்திரிக்கையிலிருந்து நீக்கப்பட்ட மார்க்ஸ் ஒரு இளைஞன். 'மீண்டும் ஒருமுறை பிறப்பேன்..அப்போதும் இந்திய சுதந்திரத்திற்காக போராடுவேன்' என்று தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட போதும் கவிதை எழுதிய குதிராம் போஸ் ஒரு இளைஞன். அடக்குமுறைகளுக்கும், ஆணவத்திற்கும் எதிராக எழுந்து நின்ற ஆயிரமாயிரம் இளஞர்கள் கடந்தகாலத்தின் வெளிச்சங்களாய் நமது கண்களை கூசச் செய்கிறார்கள். அத்தனை மகத்தான தியாகங்களும், திடமான கோபங்களும் நம்மிடம் இல்லாமல் இருக்கலாம். அந்த சூரியன்கள் அருகில் நட்சத்திரங்களாகக் கூடவா நாம் இல்லாமல் இருப்பது?
மாற்றங்களை யோசித்தவர்கள் அனைவருமே இளைஞர்களிடம் பேசத் துடித்திருக்கிறார்கள். “இளைய பாரதத்தினாய் வா... வா” பாரதியின் வரிகளும், விவேகானந்தரின் அறைகூவல்களும் எவ்வளவு அர்த்தமுள்ளவை. லெனின் இளைஞர்களுக்கென்று ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார்.
இளமை என்பது உலகை துச்சமாக மதிப்பதல்ல. உலகையே கட்டியணைத்துக் கொள்ள துடிப்பது. பருவகால உடல்மாற்றத்தின் மௌன ரகசியங்களை புரிந்து கொள்ளும் தருணங்கள் மட்டுமல்ல. தனது காலை ஊன்றி நின்று உலகை பார்க்கவும், புரிந்து கொள்ளவும், எதிர்கொள்ளவும் வழிகளைத் திறந்து வைக்கிற வாசல். வானவில்லாலும், தீயின் நாக்குகளாலும் தீட்டப்பட்ட வர்ண ஓவியம் அது. இளமை என்பது உறுதி. வெப்பம். படைப்பின் ஆர்வம். சாகசங்களின் உலகம். சமூகத்தை மாற்றுகிற ஆற்றல். போயும், போயும் அதை டீஷர்ட்டுகள், ஜீன்ஸ்களில் மட்டுமே தேட வேண்டாம்.
ஏ..அற்புத பறவைகளே! உங்கள் சிறகுகள் கீழே உதிர்ந்து கிடக்கின்றன. நீங்கள் எதை மண்ணில் கிளறிக்கொண்டு இருக்கிறீர்கள்?
//இளமை என்பது உலகை துச்சமாக மதிப்பதல்ல. உலகையே கட்டியணைத்துக் கொள்ள துடிப்பது.//
பதிலளிநீக்குஆஹா...!
இதை நேஹா ஜீன்ஸ் அணியும் காலத்தில் ஞாபகமாகச் சொல்ல வேண்டும்.
இளமை என்பதை இந்தக் காலமும் இப்போதைய ஊடகங்களும் “பொறுப்பின்மை” ”ஊதாரித்தனமாக ஜாலி பண்ணுவது” என்ற அர்த்தங்களைத் தானே போதிக்கின்றன.
பொறுப்பொடும் உள்ளன்போடும் உங்களைப் போன்றவர்கள் பேசுவது நிச்சயம் இளைஞர்களைச் சென்றடைய வெண்டும். என்னிட்ம் எவ்வளவு பேசி இருக்கிறீர்கள். நான் மறக்கவே மாட்டேன்!
Its really funny to see people like who critising the youth. i meant the people in their 40+'s screwed up the whole system and you people give us lecture. See the politicians wheo were there between 1940 and 1970 and see the politicians who are now... they were lifted to the heights by the previous generation. That is people like you.
பதிலளிநீக்குand u ppl are worried abt people wearing jeans. your generation made us illeterate in hindi, i dont say hindi is must., but go and ask people who work outside tamilnadu.. what it has done to them.
its like a fashion to blame others, did u ever look into the own shit u people created in the last 25 yrs... if u had voted for right politicians will we be in such a siutation.dont preach as if u r all saints.
u say youth are worried in pimples than their job, was the economic downturn created by us, it was created by the politicians who made the rules in between 1985 and 2005.
atleast todays youth are living their life. todays youth are overcoming the dowry system u ppl have created and caste politics which u ppl held over ur heads.
இன்றைய நிலையில் இளைஞர்கள் தனக்கு எதுவும் நேராத வரையில் எதை பற்றியும் கவலை படும் மனநிலையில் இல்லை இது தான் முக்கியமான பிரச்சனை ஒரு முறை பேருந்தில் போய் கொண்டிருந்த பொழுது ஒரு டுவிலரை பேருந்து இடித்து விட்டது பேருந்தின் ஒட்டுனர் மேல் தான் முழுத்தவறும் ஆனால் பேருந்தில் இருந்த அனைவரும் தாங்கள் விரைவாக செல்ல வேண்டும் என்ற நோக்கதில் டுவிலரில் வந்த இளைஞனையும் இந்த சம்பவத்தை நேரில் பார்த்து பேருந்து ஒட்டுனரை திட்டி கொண்டிருந்த இன்னூரு இளைஞனையும் திட்டியபடி பேருந்தை எடுக்க சொல்கிறார்கள் அடிபட்ட இளைஞனை பற்றி யாரும் சிறிதளவுகூட கவலை படுவதாக தெரியவில்லை இது தான் இன்றைய நிலையில் இளைஞர்களை சமுகம் எதிர்கொள்ளும் விதம் இதனால் இதுபோல் சமுக அக்கறை உள்ள ஒரு சில இளைஞர்களும் என்ன நடந்தால் எனக்கு என்ன என்று போய்கொண்டு இருகிறார்கள் என்று தோன்றுகிறது
பதிலளிநீக்குHello ! Jeans is a very comfortable dress in cold countries like UK,RUSSIA ETC.Here, in the Northern states also having heavy cold in many months.What is wrong in wearing "jeans" It is comfort and need not be washed often.It is strong in quality also.
பதிலளிநீக்குNext you people will talk about dress code for ladies also??Then what??All shall wear decent ,comfort,clean and neat dress.No wrong Sir .You create awareness on social things.And analys the reasons for youths mind.-R.Selvapriyan-Chalakudy
தீபா!
பதிலளிநீக்குமிக்க சந்தோஷம்.
மாயாவி!
பதிலளிநீக்குநான் எழுதியிருந்ததை முழுவதும் படிக்காமலேயே, அல்லது உள்வாங்கிக் கொள்ளாமலேயே ஏன் இவ்வளவு கோபப்படுகிறீர்கள்.
நான் ஜீன்ஸ் அணிவது தவறு என்று எங்கும் சொல்லவில்லையே. ஜீன்ஸ் மட்டுமே இளமையின் குறியீடாக இங்கு கருதப்படுகிறது என்றுதான் வருத்தப்பட்டு இருந்தேன். அந்த மட்டுமே என்பதை இன்னொருமுறை வாசித்துப் பாருங்கள் புரியும்.
நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் தவறு செய்து அதை தாங்கள் சுமத்து போல் வருத்தப்படுகிறீர்கள். நீங்கள் சொல்லியிருப்பவை அனைத்துக்கும் காலம் காலமாய் இருக்கும் இந்த அமைப்புதான் காரணம். எங்கள் சக்திக்கு நாங்கள் அதை எதிர்த்தே வந்திருக்கிறோம். நீங்கள் நினைத்தால் மாற்ற முடியும் என நம்புகிறோம். அந்த ஏக்கத்தில்தான் இந்தப் பதிவு.சரியா நண்பா?
வெங்கடேஷ் சுப்பிரமணியம்!
பதிலளிநீக்குநான் உட்பட நம்மில் பலரும் இன்னும் இளைஞர்களின் உலகத்தை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன். அவர்களோடு உரையாடல் நடத்த வேண்டும். அப்போதுதான் அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவும், கற்றுக் கொடுக்கவும் முடியும். இந்தப் பதிவு அதற்கான எளிய முயற்சி.
செல்வப்பிரியன்!
பதிலளிநீக்குநீங்களுமா தவறாக புரிந்து கொண்டீர்கள். நான் ஜீன்ஸை மட்டம் தட்டவில்லை.
இளமைக்கு அது மட்டுமே குறியீடாக இருக்கக்கூடாது என்றுதான் சொல்லியிருக்கிறேன். திரும்பவும் ஒருமுறை வாசித்துப் பாருங்கள்.
செல்வப்பிரியன்!
பதிலளிநீக்கு//Next you people will talk about dress code for ladies also??Then what?//
இப்படியெல்லாமுமா நான் பேசுவேன், எழுதுவேன் என நினைக்கிறீர்கள். என்ன ஆச்சு உங்களுக்கு. வருத்தப்படுகிறேன்.
//your generation made us illeterate in hindi, i dont say hindi is must., but go and ask people who work outside tamilnadu.. what it has done to them.//
பதிலளிநீக்குமன்னிக்கவும் மாயாவி.ஒரு சின்ன கேள்வி. எல்லாவற்றையுமே ஸ்பூன் ஃபீடிங் செய்ய வேண்டுமென்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?
சரி இன்னொன்று கேட்கிறேன் தமிழ்நாட்டிலிருந்து வட மாநிலங்களிற்கு செல்பவர்கள் அதிகபட்சம் ஒரு 15 சதவீதம் இருப்பார்களா? இந்த 20 சதவீதத்தினருக்காக மீதி அத்தனை பேரும் கற்றுக் கொள்ள வேண்டுமா?
சரி அதுவும் வேண்டாம். எனக்கு இந்தி கற்றுத் தர வில்லை. அதனால் எனது வாழ்க்கையே ரொம்ப கஷ்டமாய் போயிடுச்சு என்று ஒப்பாரி வைப்பவர்களுக்கு: இவ்ளோவ் பேசறீங்களே. உங்களுக்கு கண்டிப்பா தேவைன்னு தெரிஞ்சிடுச்சுல்லை. அப்புறம் ஏன் நீங்களாவே சுயமாய் இந்தியோ, பெங்காலியோ, கன்னடமோ, தெலுங்கோ உங்களது தேவைக்கேற்ப கற்றுக் கொள்ளக் கூடாது?
உங்களுக்கு உடம்பு வளைய வில்லை. உங்களது கையாலாகாத் தனத்திற்கு அடுத்தவர் மீது ஏன் பழியை போட்டு தப்பித்துக் கொள்கிறீர்கள். இதெல்லாம் ஒரு வகையான எஸ்கேப்பிசம். தான் தவறுகளிலிருந்து தப்பித்துக் கொள்ள அடுத்தவர் மீது பழியைப் போடுவது.
அன்பின் அண்ணா,
பதிலளிநீக்குநான் தினந்தோறும் சுமார் ஐந்து முதல் பத்து கல்லூரிகளுக்குச் செல்கிறேன். குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கான இளைஞர்களைக் காண்கிறேன். நாம் ஒரு இறந்த காலத்தின் மிச்ச நினைவுகளில் நின்றுகொண்டு அவர்களைப் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறோமோ என்றொரு ஐயம் தோன்றுகிறது.
இன்றைய இளைஞர்களின் வேகமும், சிந்தனைகளும், முயற்சிகளும், இலக்குகளும் நிச்சயம் எனது இருபது வயதில் இருந்ததைக் காட்டிலும் எத்தனையோ மடங்கு அதிகம். கல்வியும், தகவல் தொடர்பும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிற வாய்ப்புகளை மிகச்சரியாகப் பயன்படுத்துகிறார்கள் என்பது என் எண்ணம். ஆனால், இதே மாதிரியான அனுபவங்களே உங்களுக்கும் ஏற்பட்டிருக்கும் என்று சொல்ல முடியாது. அவரவருக்கு காணக்கிடைத்ததை அவரவர் எழுத வேண்டியதுதானே சரி.
அப்புறம் ஜீன்ஸ்தான் இளமையின் அடையாளமா என்ற கேள்விக்கு... ஜீன்ஸூம் இளமையின் அடையாளங்களுள் ஒன்றுதான். கேண்டி சொல்வாள் 'ஜீன்ஸ் பெண்களுக்கு இரண்டு வயதையும் ஆண்களுக்கு இருபது வயதையும் குறைத்துக் காட்டுகிறது' என்று. அதனால்தான் நாடி தளர்ந்தாலும் நம்ம ஹீரோக்கள் ஜீன்ஸை விடுவதில்லையோ?!
அன்புத் தம்பி செல்வேந்திரன்!
பதிலளிநீக்குநான் சொல்ல வந்ததை தாங்களும் சரியாக புரிந்து கொள்ளவில்லயென்றால், நான் சரியாக புரிகிற மாதிரி எழுதவில்லையோ...
ஜீன்ஸ் ’மட்டுமே’ என்றுதான் குறிப்பிட்டு இருக்கிறேன். நம்மை விட வேகம், ஆற்றல் அவர்களுக்கு நிச்சயம் அதிகமாக இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
அவை வீணாகிவிடக்கூடாது என்றுதான் கவலை. இந்தப் பதிவின் நோக்கமும் அதுதான்.
என் கவலை.
//அந்த சூரியன்கள் அருகில்
பதிலளிநீக்குநட்சத்திரங்களாகக் கூடவா நாம் இல்லாமல் இருப்பது?//
Arumaiyaana sindhikka thoondum varigal.
மாதவராஜ்,
பதிலளிநீக்கு// 'எம் பேரு படையப்பா' என்று ரஜினி இளைஞனாகிவிடுகிறார்.//
//விஜய் தனது சட்டைக் காலரிலிருந்து சிகரெட்டை வாயால்//
தியாகராஜ பாகவதர் காலத்தில் அவர்
ஹேர்ஸ்டைல்(பாகவதர்ஸ்டைல்)
வைத்துக் கொண்டு திரிந்தார்கள்
இளைஞர்கள்.அவரை பார்ப்பதற்கு ரயிலை மூன்று மணி நேரம் நிறுத்தினார்கள்.அவர் மயிரைப் பிடிங்கி
பாதுகாத்தார்கள்.
அந்த காலப்படங்களில் சிவாஜி/ச.பாபு/ஜெ.கணேசன்/கே.ஆர்.ராமசாமி மற்றும் பலர் ஆங்கில பட பாணியில்
சிக்ரெட்டை ஊதித்தள்ளுவார்கள்.
பார்த்திருக்கிறீர்களா?
என் அண்ணன் சிவாஜி ஸ்டைல் பார்த்து சிகரெட் பழக்கம் கற்றுக் கொண்டார்.இன்னமும் விடவில்லை.
ஒரு தலைமுறை ஜீன்ஸ். ஒரு தலை முறை ஹிப்பித் தலை.பெல் பாட்டம்.
ஜீன்ஸில் பொறுப்பான/விவரமான இளைஞர்களும்இருக்கிறார்கள்.அப்போது வேட்டி அணிந்து கொண்டு East India Coயில்குமாஸதாவாக இருந்தார்கள். இப்போது வெளி நாடுகளில் இருக்கிறார்கள்.
//கங்கைக் கரையில் நின்று பூணூலை அறுத்தெறிந்த பாரதி ஒரு இளஞன்.//
பாரதியார் எனக்கும் ஆதர்ஷ புருஷந்தான். ஆனால்....
இவரும் தன் இளமையில் விடாமல் உடல் நலம் கெடுக்கும் ஒரு பழக்கத்தைவைத்திருந்தார்.வீட்டையும் கவனிக்காமல் விட்டேத்தியாய் சுற்றிக்கொண்டிருந்தார்.இவரால் ஒரு தம்பிடி வருமானம் இல்லை என்று இவர் மனைவியேசொல்லியிறுக்கிறார்.
அடுத்து நீங்கள் சொன்ன தலைவர்கள் இருந்த காலம் pre-independence.
இப்போது யாராவது முன் உதாரண்ம் இருக்கிறார்களா? Role model ஆக?
"அற்புத பறவைகளே! உங்கள் சிறகுகள் கீழே உதிர்ந்து கிடக்கின்றன. நீங்கள் எதை மண்ணில் கிளறிக்கொண்டு இருக்கிறீர்கள்?"
பதிலளிநீக்குஅற்பத்தனங்கள் மலிவாக, எளிதாக விரைவாகக் கிடைக்கின்றன என்பதால்தான்.
எழுத்திற்கும் அதன் திசைக்கும் வாழ்த்துகள்
ஜீன்ஸ் மட்டுமே இளமையின் அடையாளமில்லைதான்! ஆனால் சமூகத்தை மாற்றும் கனவுகளை அடைக்காக்கத் தெரியாமல் போனது ஏன்? வாழ்க்கைமுறையின் மாற்றங்களா..சினிமாவின் தாக்கமா...என்றாலும் சாதிக்க நினைப்பவர்கள் ஒருபுறம் சாதித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள்! விட்டில் பூச்சிகள் போல இந்த மினுமினுப்புக்கு மயங்கி வாழ்வை இழப்பவர்களும் இருக்கிறார்கள்!
பதிலளிநீக்கு//முகப்பரு வந்ததற்கு கவலைப்படுகிற அளவில்கூட பெரும்பாலோருக்கு தங்களின் கல்விக்கும், வேலைக்கும் இங்கு உத்திரவாதம் இல்லையே என்கிற வேதனை அலைக்கழிக்க மாட்டேன்கிறது.//
பதிலளிநீக்குமேலை நாடுகள் பலவற்றில் குறிப்பிட்ட வயதுக்கு பின் பகுதி நேர வேலைக்கு செல்ல வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
இரண்டு வருட கட்டாய ராணுவ சேவை
போன்றவைகள் சீறான ஒழுக்கத்தையும் பொருளாதார தேவைகள் மற்றும் அதன் பயன்பாடுகளும் புரிகிறது.
இங்கே எப்படி அதெல்லாம் எதிர்பார்ப்பது!
//ஜீன்ஸ் ஒரு குறியீடுதான். அடையாளம்தான். இளமைக்கு மேலும் பல அடையாளங்கள் இருக்கின்றன.//
பதிலளிநீக்குபாவிகளா... ஜீன்ஸ்... ஒரு குறியீடும் இல்லை எந்த அடையாளமும் இல்லை. ஏங்க இப்படி ... ஏன் ஏன் ??
**
அது ஒரு உடை அய்யா அவ்வளவுதான். யாரும் போடலாம் எந்த அடையாளமும் இல்லை ஒரு குறியீடும் இல்லை அதற்கு. நிலக்கரிச் சுரங்கம் போன்ற சுரங்கத் தொழிலாளர்களுக்காக ஒரு காலத்தில் முரட்டுத்துணியுடன் அறிமுகமான வரலாற்றைத் தவிர ஒன்றும் இல்லை அதற்கு.
செத்த சும்மாயிருங்கள் உங்களின் குறியீடுகள் உறங்கட்டும்.
**
மதுரையில பெண்களுக்கு சுடிதாரே மாடர்ன் ட்ரெஸ்தான்.
சென்னையில் ஜீன்ஸ்/டாப்ஸ்/டவுசர் வகையறா மாடர்ன் ட்ரெஸ்.
மாடர்ன் என்பது புதிய/புதுமை என்ற அர்த்ததில்தான் நம்மூரில் சொல்லப்படுகிறது. உண்மை பேச வேண்டுமானால், சுடிதார் பஞ்சாபி ட்ரெஸ். ஜீன்ஸ்/டாப்ஸ்/டவுசர் வெஸ்டர்ன் (மேற்கித்திய) ட்ரெஸ் என்று சொல்ல வேண்டும்.
****************
ஆகா வந்திடாக மகராசனுக...
////your generation made us illeterate in hindi, i dont say hindi is must., but go and ask people who work outside tamilnadu.. what it has done to them.//
நக்கிப் பிழைக்கும் நாய்களாகிய எங்களுக்கு (வாழ்க அந்த சம்ஸ்கிரக அறிஞர்) கிந்தி படி சமஸ்கிரகத்தில் சாமி கும்பிடு ஒன்று புத்தி சொல்ல நிறைபேர் வருவார்கள். நேரம் அப்படி. இந்த மேட்டர் பல வருடங்களாக பேசி அலுத்துப் போய்விட்ட ஒன்று. கிந்தியோ,கிரகமோ தேவைனா போய் படிங்கப்பு. பல மொழி தெரிஞ்சிக்கிரது தப்பில்ல.
Thanks for your explanation, but may be i am ignorant to ur writing style, i read again and i am still not convinced what ur saying. anyhow i could not digest the fact , how our political systems has changed in last 30 to 40 yrs... defn last generations mistakes are carried on into this generations shoulders.
பதிலளிநீக்குHope atleast the next generation will have a more stable and sensible political system.
coming to your views on jeans, Jeans alone is not considered as the symbol of youth. it varies with generations, bell bottomas were symbol of youth for a period, then came Baggy ... now its jeans.. ipod...sunglasses... and in future some else ... life is a circle.... it goes on and on.
அண்ணே நீங்க எந்த காலத்துல இருக்கீங்க அண்ணே...
பதிலளிநீக்குஜீன்ஸ் எல்லாம் ஓல்ட் பேஷன் ஆயிடுச்சு...
இப்ப எல்லாம் நிறைய பாக்கெட் வெச்ச கார்கோஸ் தான் பேஷன் ஆக்கும் ...
பட்டாம்பூச்சி!
பதிலளிநீக்குநீங்கள் ரசித்ததுக்கு நன்றி.
ரவிஷங்கர்!
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது உண்மைதான்.
ஒவ்வொரு காலத்திலும், இப்படிப்பட்ட ரசிகர்கள், உடைகள் எல்லாம் மாறுகின்றது.
ஆனால் அப்போதெல்லாம் இல்லாத வாய்ப்புகள் இப்போது உயர்வதற்கும் இருக்கிறது, சீரழிவதற்கும் இருக்கிறது. அதைச் சுட்டிக்காட்டவும், எச்சரிக்கை செய்யவுமே இந்தப் பதிவு.
தோற்றம் தாண்டி, நம்மை அழகுபடுத்திக் கொள்ள நிரைய இருக்கிறதுதானே!
நீங்கள் குறிப்பிட்டுள்ள ரோல் மாடல் குறித்து இன்று ஒரு பதிவு இட்டிருக்கிறேன்.
ருத்ரன் சார்!
பதிலளிநீக்குசந்தனமுல்லை!
தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் நன்றி.
வால் பையன்!
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது புரிகிறது...
ஆனால் இராணுவம் ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கிறதா?
நண்பர் கல்வெட்டு!
பதிலளிநீக்குஜீன்ஸ் ஏன் குறியீடு இல்லை என்கிறீர்கள்.
நான் ஜீன்ஸை உடையாக பார்க்கவில்லை. அங்குதான் இந்தப்பதிவில் சிலருக்கு குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. அந்த உடை மீது எனக்கு எந்த விமர்சனமும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் எனக்குப் பிடித்த உடையும் கூட.
இளைஞர்களின் தோற்றம் குறித்த ஒரு குறியீடாக மட்டுமே குறிப்பிட்டு இருக்கிறேன். இளஞர்களின் படம் என்று ஜீன்ஸை அறிமுகப்படுத்தினார்களே...!
மாயாவி!
பதிலளிநீக்குசரிதான். நமது அரசியல் இந்த நாற்பது ஆண்டுகளுக்குள் மோசமாயிருக்கிறதுதான். இங்கு மட்டுமில்லை. தார்மீக நெறிகள், தனிமனித வாழ்விலிருந்து, குடும்பம், சமூகம் என சகல் பகுதிகளிலும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு ஒரு தலைமுறை காரண்மல்ல. இந்த அமைப்பின் கோளாறு. அதை சரி செய்ய யோசிப்போம்.
ஸ்ரீராம் தம்பி!
பதிலளிநீக்குபதிவை நன்றாக திரும்ப படிங்க தம்பி.
உடையை நாம் முக்கியமானதாக குறிப்பிடவில்லை. அது எதுவாகவும் இருந்துவிட்டுப் போகட்டும்.
//ஜீன்ஸ் ஏன் குறியீடு இல்லை என்கிறீர்கள். //
பதிலளிநீக்கு..
//இளைஞர்களின் தோற்றம் குறித்த ஒரு குறியீடாக மட்டுமே குறிப்பிட்டு இருக்கிறேன். //
மாதவராஜ்,
எந்த உடையையும் உடை (நிர்வாணத்தை மற்றவர்களிடம் இருந்து மறைக்க) என்று கடந்து செல்ல முயலுங்கள். இது இவர்களின் உடை, இது இவர்களின் குறியீடு, என்று ஏன் வட்டமும் சதுரமும் போடுகிறீர்கள்?
மேற்கத்திய நாடுகளில் இருந்து புதிய பழக்கங்கள் அந்த காலகட்டத்தில் இருக்கும் இளைஞர்களின் வழியாகவே பெரும்பாலும் இறக்குமதியாகும். ஒரு புதிய பழக்கம் (ஜீன்ஸ்,வாக்மேன்,ஐபாட், சல்சா டான்ஸ்...) அறிமுகமாவதற்கு அக்காலத்திய இளைஞர்கள் காரணமாய் இருந்து இருக்கலாம். அதற்காக அது அவர்களின் அடையாளமாக (குறியீடு) தேங்கிவிடுவது இல்லை.
அறிக அது அவர்களைத் தாண்டி பயணிக்கும் போது, அவர்கள் வேறு புதிய முயற்சிகளில் ஆழ்ந்துவிடுவார்கள்.
***
சீருடைகள் மட்டுமே நாம் (நான்)எடுத்துக் கொள்ளவேண்டிய உடைகளின் குறியீடு. காவலரின் சீருடை , பள்ளி மாணவரகளின் சீருடை போன்றவை ஒரு அடையாளம் (குறியீடு)
அதுதாண்டி , சில சாதி மத பழக்கங்களில் தெரியும் உடைகள் ஒரு குழு அரசியலின் அடையாளம் (குறியீடு)
முலைகள் மறைய முந்தானை போடுவது மேட்டுக்குடியின் குறியீடு என்று கட்டமைத்து மற்றகுலப் பெண்களை அரைநிர்வாணமாக கேவலப்படுத்தினார்கள்.சேலையையும், வேட்டியையும் கோவண ஸ்டைலில் அணிவது பார்ப்பன அடையாளம் என்று சொல்லி புது சாதி அடையாளம் செய்தார்கள்.
தயவுசெய்து ஜீன்ஸ் போன்ற உடைகளை குறியீடுகளில் ஏற்றி குறுகச் செய்யவேண்டாம்.
******
//இளஞர்களின் படம் என்று ஜீன்ஸை அறிமுகப்படுத்தினார்களே...!//
என்ன சொல்ல வருகீறீர்கள்?
ஜீன்ஸ் என்ற படத்தின் தலைப்பிற்கும் , ஜீன்ஸ் என்ற உடைக்கும் அந்தப்படத்தில் ஏதாவது சம்பந்தம் உள்ளதா?
அப்படியே இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டுமே?
சங்கர்தான் தமிழகத்தில் குறீயீடுகளை சமைப்பவரா? வேட்டைக்காரன் என்று பெயருள்ள படத்தில் வேட்டைக்காரன் செய்வதுதான் வேட்டையாடும் மக்களின் குறீயீடா?
என்ன கொடுமை மாதவராஜ்??
**
ஜீன்சை மேற்கத்திய உலகில் "பார்பி" பொம்மையில் இருந்து பல்லுப்போன கிழவன் வரை போட்டு கிழித்துக் கொண்டிருந்த காலத்தில் , இந்தியாவில் அது அக்காலத்து இளைஞர்களின் மூலம் அறிமுகமானது.
இந்தியாவில் அது இளைஞர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதற்காக அதை இன்னும் இளைஞர்களின் குறியீடு என்றுதான் நான் சொல்வேன் என்றால்...அது உங்களின் உரிமை.
பூனைகள் கண்களை மூடுவதும், உலகம் இருட்டு என்று நம்புவதும் பூனைகளின் உரிமை.
உடைகள் குறித்த குறியீடுகளில் சொல்ல வேண்டியது...
பதிலளிநீக்குபாலைவன நிலத்தில் ஏற்படும் மணற்புயலில் (மணல் கலந்த காற்று)இருந்து சுவாசத்தைக் காத்துக் கொள்ள ஆண்கள் தாடியும் மீசையும் வளர்க்கும்போது, பெண்களுக்கு இலகுவான துணிகள் திரையாகப் பயன்பட்டது. அங்கிருந்து ஒரு மதம் தோன்றி அது பிற நாட்டிற்கும் பயணித்த போது அதுவே மதம் சார்ந்த உடைக்குறியீடாகி இன்னும் இருக்கிறது.
ஜீன்ஸ் குறீயீடுகளை கட்டமைத்துவிடாதீர்கள் மாதவராஜ்.
anna i hope u wont bother if i answer to friends like mayavi those who have criticized ur views on modern youths.
பதிலளிநீக்குit is always easy to blame others.but we easily forget what are the amenities and privileges that we enjoy from our society.
what have v done for the someone who stands for ur own safety & security amidst of severe cold & hot in borders?
do our nation provides education only to riches?do the poor & women have not achieved the right of education till now?
don't u guys r not able to see the right of justice have not gone far beyond the reach of poor & downtrodden.
keep aside all ur distress & say the truth what have u contributed to this country?
have u ever fought against communal discrimination?
have u ever paid a penny to prevent poverty?
you guys r talking about employment in other states & abroad.can any unemployed in this state can say that there is no vacancy in our state?u guys think employment means earning handful of money & u never ever bother abt the welfare of the country.there r numerous youth those who resign their government jobs for the sake private employment.all they need is money they least bother abt the country.
there are thousands of villages in our state and they starve of basic amenities such as medical facilities,education,etc.
no youth is ready to render their service in rural empowerment.
then abt politics........it is easy to blame politicians.yes i too agree the politicians of past three to four decades have ruined our country for their selfishness.what to do for that?shall v sit around & cry loudly?u guys r ready to criticize and u have no courage to clean & rectify the wrong.our country suffers a lot not bcoz of the violence of bad people but bcoz of the silence of good ones.
stand up raise up stop blaming.fight for ur justice.
கல்வெட்டு!
பதிலளிநீக்குதிரும்பவும் சொன்னதையேத்தான் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்.
அதுவும் நான் சொல்வதைத்தான் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்.
கட்டுரையின் ஆரம்பத்திலேயே அந்த உரையாடலில் வருகிறது. ஊடகங்களும், சமூகமும் அப்படியொரு குறியீட்டையே கட்டமைத்திருக்கிறது. அதை நான் ஒப்புக்கொள்ள மறுத்து வேறொரு தளத்தில் நின்று பேசியிருக்கிறேன். அதை உடைக்க வேண்டும் என்பதுதான் என் பதிவின் நோக்கமும்.
//
பதிலளிநீக்குமாதவராஜ் said...
நண்பர் கல்வெட்டு!
ஜீன்ஸ் ஏன் குறியீடு இல்லை என்கிறீர்கள்.
நான் ஜீன்ஸை உடையாக பார்க்கவில்லை. அங்குதான் இந்தப்பதிவில் சிலருக்கு குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. அந்த உடை மீது எனக்கு எந்த விமர்சனமும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் எனக்குப் பிடித்த உடையும் கூட.
இளைஞர்களின் தோற்றம் குறித்த ஒரு குறியீடாக மட்டுமே குறிப்பிட்டு இருக்கிறேன். இளஞர்களின் படம் என்று ஜீன்ஸை அறிமுகப்படுத்தினார்களே...!
//
****
மேலே உள்ளது நீங்கள் சொன்னதகத்தான் பிளாக்கர் சொல்கிறது...
ஊடகங்கள் சொல்கின்றன என்று நீங்கள் சொல்லவில்லை.
இப்போதுதான் சொல்கிறீர்கள்.
உங்களின் நோக்கமும் அதுவாயின் நன்று.
கல்வெட்டு!
பதிலளிநீக்கு//வயசும், இளமையும் வெறும் டீ ஷர்ட்டிலும், ஜீன்சிலும் அடைத்து வைக்கப்பட்டு இங்கு லேகிய மருந்துகளாய் விநியோகிக்கப்படுகிறது. 'ஜீன்ஸ்' என்று பேர் வைத்துவிட்டால் அது இளைஞர்களின் சினிமாவாகி விடுகிறது. ஜீன்ஸ் அணிந்து ஒரு கருப்பு பையை முதுகில் தொங்கவிட்டுக் கொண்டால் 'எம் பேரு படையப்பா' என்று ரஜினி இளைஞனாகிவிடுகிறார்.//
இதற்கு என்ன அர்த்தம் என்று நினைக்கிறீர்கள்.
நீங்கள் அது உடையாக மட்டுமே சொன்ன போது, இந்த சமூகத்தில் அப்படியொரு குறியீடு இருப்பதையேச் சுட்டி காட்டினேன். ஒன்று இருந்தால்தானே மறுக்கவே முடியும்.
நாம் முதலிலேயேச் சொன்னதை புரியவைக்க இத்தனை பாடு பட வேண்டியிருக்கிறது.
'பூனைகள் கண்களை மூடுவதும், உலகம் இருட்டு என்று நம்புவதும் பூனைகளின் உரிமை'.
பதிலளிநீக்குWell said. But the communisit cats are little different. They will see only saffron color in darkness too .
Youth of today dont need anything from these communists and leftists.
A section of the youth of toady is keen to use the opportunities than to blame some X or Y or Z or indulge in communal politics in the name of secularism. They dont want to become part of anti USA brigade even when they criticise USA. They want equality and not concessions based on faith or caste. All these obviously upsets persons like Mathavaraj.His frustations are reflected in his
writings.
Nobody prevents Yechury or Karat from wearing jeans and dyeing their hairs. You can ask them to do so to attract the youth.
பதிலளிநீக்கு