மகாத்மாவின் கடைசிக் கால கவலையும், கனவும்!

G23

“இன்று நான் தனிமையில் விடப்பட்டிருக்கிறேன். சர்தாரும் நேருவும் எனக்கு அரசியல் தெரியாது என நினைக்கிறார்கள். பிரிவினை இல்லாமலேயே அமைதியை ஏற்படுத்த முடியும். அப்படியே பிரிவினை இருந்தாலும், அது பிரிட்டிஷ்காரனின் குறுக்கீடுகளோடு இருக்கக்கூடாது என்று நான் சொல்வதை அவர்கள் ஏற்கவில்லை. உடனடியாக்த் தெரியாவிட்டாலும், சுதந்திரத்தின் எதிர்காலம் இருள் சூழப் போகிறது என்பதை உணர்கிறேன். அதை பார்ப்பதற்கு உயிரோடு இருக்கக் கூடாது என பிரார்த்திக்கிறேன்”

 

1947 ஜூன் 1ம் தேதி காலை பிரார்த்தனைக்கு முன்பாக காந்தி படுக்கையில் இப்படி சோகமாக முணுமுணுத்தார் என டெண்டுல்கரின் ‘மகாத்மா’ புத்தகத்தின் ஏழாவது தொகுதியில்

 

0000

 

“இந்நாட்டின் பிரதமராக ஒரு விவசாயிதான் இருக்க வேண்டும். அவர் அரண்மனையில் வாழ்பவராக இருக்கக் கூடாது. அவருக்கு ஆங்கிலம் தெரிந்திருக்கத் தேவையில்லை. அவருடைய செயலாளராக நேரு இருந்துகொண்டு அயல் நாட்டுத் தூதுவர்களை சந்திப்பது போன்ற அலுவல்களைச் செய்ய வேண்டும். பிரதமராக இருக்கும் விவசாயி ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் உழ வேண்டும்”

 

காந்தி தான் விரும்பும் அமைச்சரவை குறித்து பிரார்த்தனைக் கூட்டத்தில் சொன்னதாக, காந்தியின் அந்தரங்கச் செயலாளர் கல்யாணம் ‘புதிய பார்வை’ பத்திரிகையில்

 

*

கருத்துகள்

11 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. நல்ல நினைவுகூறுதல்
  //"மகாத்மாவின் கடைசிக் கால கவலையும், கனவும்!"//

  அது போலவேதானே நடந்து கொண்டிருக்கின்றது.

  பதிலளிநீக்கு
 2. நல்ல பதிவு! அவசியமானதொன்றும் கூட! அவரின் வார்த்தைகள் இன்றும் பொருந்திப் போவதுதான் வேதனை! ஹ்ம்ம்ம்!

  பதிலளிநீக்கு
 3. /*உடனடியாக்த் தெரியாவிட்டாலும், சுதந்திரத்தின் எதிர்காலம் இருள் சூழப் போகிறது என்பதை உணர்கிறேன்*/
  கிட்டதட்ட அப்படிதான் போய் கொண்டிருக்கிறது ...

  பதிலளிநீக்கு
 4. இந்த தருணத்திற்கான நல்லதொரு பதிவை பதிந்திருக்கிறீர்கள்

  பதிலளிநீக்கு
 5. மஹாத்மாவின் கடைசிக் கனா கனவாகவே போய்விட்டது.இனி அது ஒருபோதும் நிகழப்போவதேயில்லை.

  பதிலளிநீக்கு
 6. அவருடைய கனவு இன்று மேலும்
  வலுவிழந்து கொண்டிருக்கிறது
  விவசாயி பிரதமராக அல்ல விவசாயம்
  பண்ணுவதற்க்கு கூட கனவு காணும்
  காலமாக

  பதிலளிநீக்கு
 7. 1943-ல் காந்தியும், பெரியாரும் சந்தித்தித்தபோது பெரியார், அவருக்கு எடுத்துரைத்த இந்து மத தீவிரவாதிகள் குறித்த கருத்தையும், இங்கே நினைத்து பார்க்க வேண்டும் என நினைக்கின்றேன்.

  பதிலளிநீக்கு
 8. கனவு கனவாகவே இருக்கிறது... கவலை மட்டும் நீடிக்கிறது!!!

  என்னைக் கேட்டால், மகாத்மா மோஹன் தாஸ் ஒரு தெய்வம்.... அல்லது வழிகாட்டி... அவரை இன்னும் "காந்தி" என்ற பெயரில் கேவலப்படுத்துவதுதான் பொறுக்கமுடியவில்லை!!!!

  பதிலளிநீக்கு
 9. ஆ.முத்துராமலிங்கம்!
  வண்ணத்துப் பூச்சியார்!
  சந்தனமுல்லை!
  அமுதா!
  யாத்ரா!
  சைக்கோ!
  புன்னகை!
  பாலாஜி-பாரி!
  அனைவரின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.
  தாங்கள் சொல்லியிருப்பதுபோல இந்த நேரத்து தேவையான விஷயங்கள்தான் இவை.
  மகஃஅத்மாவின் கனவை நாம் அடைகாக்க வேண்டியிருக்கிறது.

  பதிலளிநீக்கு
 10. செய்வதை எல்லாம் செய்து விட்டு,
  கடைசியில் கனவு கண்டு, அல்லது புலம்பி என்ன பலன்...
  வருணாசிரமத்தில் இருந்து பிரதிநிதித்துவம் வரை அனைத்தையும்
  குழி தோண்டி புதைத்தவர் இவர்தானே..

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!