ஒரு கம்பெனி, ஒரு கிராமம், ஒரு பாட்டில் தண்ணீர்

locker

இந்த மூன்று கவிதைகளும், வெவ்வேறு கவிஞர்களால், வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு பொருளில் எழுதப்பட்டவை. ஆனால் ஒரே குரலில் ஒரே தொனியில் ஒலிக்கின்றன. படித்துப் பாருங்கள்.

~~~~~~~~~

இதோ நீளமாக வளர்ந்திருக்கிறதே கோட்டைச்சுவர்
இங்கே ஒருகாலத்தில் கார்கள் செய்யப்பட்டன
பத்தாயிரம் கைகள் வேலை செய்தன
இன்று ஒருச் சின்னப் பூட்டு
இந்தப் பெரிய கதவைக் கடித்துக் கொண்டிருக்கிறது
ஆச்சு... நாலாயிரத்துச் சொச்சம் இரவுகள்
சூரியனுக்கு இது ரொம்பச் சவுகரியம்
இருட்டானதும்
இந்தக் கம்பெனிக்கு உள்ளே வந்து
அது படுத்துக் கொள்கிறது.

- நாட்டுப்பூக்கள் சுயம்பு

~~~~~~~~~

முன்னொரு காலத்தில்
இங்கே ஒரு கிராமம் இருந்தது
அந்த நாட்களில்
நிலமும் காற்றும் வானமும்
இங்கே மக்களால் நிரம்பி இருந்தது
அவர்களின் சிரிப்பு, கவலைகள்,
பெருமூச்சுக்கள், பாடல்கள் இவற்றை
நீ கேட்டு இருக்கலாம்
காற்றில் நீந்தும் பச்சை இலைகள்
கனிகொத்திச் சிதறும் கிளிக்கூட்டம்
ஆண்பேடைகளின் காதல் கீச்சொலிகள்
நீ அறிந்திருக்கலாம்
முன்னொரு காலத்தில்
ஆனந்த அலைகளில்
தங்கமாய் தானியமணிகள் நடனமாடின
நீ பார்த்திருக்கலாம்.

-நக்னமுனி

~~~~~~~~~

என் தாத்தா
வெள்ளப் பெருக்கென பார்த்தார்

தந்தையோ
ஆற்று நீராக பார்த்தார்

நானோ
அடிகுழாயில் பார்த்தேன்

என் மகனோ
பிளாஸ்டிக் பாட்டிலில் பார்க்கிறான்.

-அமிர்தலிங்கம்

 

*

கருத்துகள்

13 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. மூன்றுமே அருமை.

    பகிர்விற்கு நன்றி.

    வாழ்த்துகள் மாதவராஜ் சார்.

    பதிலளிநீக்கு
  2. நான் தான் ஃபார்ஸ்ட்!

    மூன்றாவது கவிதை முன்பே படித்திருக்கிறேன். நக்னமுனியின் கவிதைகள் எல்லாமே அசத்தல். அறிமுகத்துக்கு மிக்க நன்றி. புத்தகம் கிடைக்குமா?

    பதிலளிநீக்கு
  3. அருமையான கவிதைகள். பகிர்ந்ததற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  4. தலைமுறையை தண்ணீர் கொண்டு பிரித்திருக்கிறார் அமிர்தலிங்கம்.அருமையாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கிறது.தொகுப்புக்கு நன்றி.தேடிக்கொண்டிருக்கிறேன் ஆவலோடு இவர்களது படைப்புகளை.

    பதிலளிநீக்கு
  5. நல்ல கவிதைகள். குறிப்பாக மூன்றாவது கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
  6. மூன்று கவிதைகளுமே தலைமுறைகளுக்கு இடையில் தொலைந்து போகும் இயற்கையை வாழ்வை ஏக்கங்களை மிக மிக அருமையா அறிதா சொல்லியிருக்கின்றது.
    படித்ததை படித்தோடு விட்டுவிடுடாமல் அதை கோர்த்து மற்றவர்களுடன் பகிர்வது மிகவும் எத்தனை நல்ல விசயம்.

    பகிர்வுகு நன்றி மாதவராஜ் சார்.

    பதிலளிநீக்கு
  7. மூன்று கவிதைகளுமே அருமை!!!

    அறிமுகத்திற்கு நன்றி!!!

    பதிலளிநீக்கு
  8. மூன்று கவிதைகளுமே பிடித்திருக்கிறது, அறிமுகத்திற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. 'என் தாத்தா
    வெள்ளப் பெருக்கென பார்த்தார்
    தந்தையோ
    ஆற்று நீராக பார்த்தார்
    நானோ
    அடிகுழாயில் பார்த்தேன்
    என் மகனோ
    பிளாஸ்டிக் பாட்டிலில் பார்க்கிறான்'

    பிளாஸ்டிக் பாட்டிலில் நீரை பார்ப்பவனுக்கு நீச்சல் கற்றுக் கொடுப்பேன்.ஆற்றையும், கடலையும்
    காண்பிப்பேன். இப்படியும் யோசிக்கலாம்.

    பதிலளிநீக்கு
  10. உண்மை தான் அண்ணா
    எல்லா கவிதையிலும்
    கடந்த கால நிகழ்கால ஒப்பீடுகள்
    வருங்காலத்தை பற்றிய ஒரு கேள்விகுறியுடன்

    பதிலளிநீக்கு
  11. வண்ணத்துப் பூச்சியார்!
    தீபா!
    சந்தனமுல்லை!
    சைக்கோ!
    வேலன்!
    ஆ.முத்துராமலிங்கம்!
    நரேஷ்!
    அமுதா!
    யாத்ரா!
    அனானி!
    புன்னகை!
    அனைவரின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  12. மூன்று கவிதைகளும் நன்று... முதல் மற்றும் இறுதி கவிதைகள் ரொம்ப சிறப்பு!!1 அதிலும் மூன்றாம் கவிதை சொல்லவருவது எளிமை+ஆழம்..

    பகிர்ந்தமைக்கு நன்றிங்க.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!