"யாராகப் போகிறீர்கள்?”

inspiration

சில நாட்களுக்கு முன்பு ஒரு உயர்நிலைப் பள்ளியில் பேசச் சென்றிருந்தேன். 'உங்களுக்குப் பிடித்த தலைவரைப் பற்றி எழுதுங்கள் என்று கேள்வி கேட்கப்பட்டால் யாரைப் பற்றி எழுதுவீர்கள்' என்று பேச்சோடு ஒரு கேள்வி கேட்ட போது தயக்கமில்லாமல் ஒவ்வொருவரும் வேகவேகமாக பதில் சொன்னார்கள். பெரும்பாலும் காந்தி, நேரு, காமராஜ் என்ற பெயர்களே உச்சரிக்கப்பட்டன. ஒன்றிரண்டு பேர் இந்திரா காந்தி என்றும், ஒரு பையன் சுபாஷ் சந்திர போஸ் என்றும் சொன்னார்கள்.

என் கேள்வியை இன்னும் கொஞ்சம் விரிவாக்கிக்  கொண்டேன்.  'தலைவரின்றிலாமல் நீங்கள் மதிக்கும் மிகச் சிறந்த மனிதர்கள் யார் யாரென்று சொல்லுங்களேன்' என்றேன். இப்போது ஏற்கனவே வந்த பதில்களோடு பாரதியார், வ.உ.சி ஆகியோர் சேர்ந்து கொண்டனர். பகத்சிங்கை, அம்பேத்காரை, பெரியாரை யாரும் சொல்லவில்லையே என்ற ஏக்கமும் வருத்தமும் வந்தது. சொல்லப்பட்ட பதில்களுக்குரியவர்கள் முக்கியமானவர்கள்தான். ஆனாலும் நமது பள்ளிக்கூடங்களும், சமூகமும் இளையவர்கள் சிந்தனையில் விதைத்திருக்கிற சரித்திர அறிவில் பெரும் ஊனம் இருப்பதாகவேத் தோன்றுகிறது. முதலில் இந்திய எல்லையைத் தாண்டாமல் முடக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள். இரண்டாவது இங்கேயே இவர்கள் மிகச் சிறந்த மனிதர்களைத் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். ஒருவித 'காங்கிரஸ் மூளை' கடந்தகாலத்தின் ஞாபகங்களுக்குள் இயங்கிக் கொண்டிருக்கிறது. இப்படி ஊட்டப்பட்டிருக்கிற ஞானப்பால் எப்படிப்பட்ட சமூகத்தை நம் கண்முன்னே படைக்கும் என்று தெரியவில்லை.

“சரி, நீங்கள் சொன்ன தலைவர்கள், மனிதர்கள் எல்லோருமே ஒன்றிரண்டு தலைமுறைக்கு முந்தையவர்கள். நாம் வாழ்கிற இந்தக் காலத்தில் அப்படிப்பட்ட மனிதர்களின் பேர்களை சொல்லுங்களேன்" என்றேன். மாணவர்கள் மத்தியில் பெரும் மௌனம் நிலவியது. திடுக்கிட்டுப் போன மாதிரி இருந்தது. யாரைச் சொல்லலாம் எனத் தேடித் தேடி விழித்துக் கொண்டிருந்தார்கள். ஒருவன் மட்டும் பெரிதாய் கண்டுபிடித்து விட்டதாய் எழுந்து "அப்துல் கலாம்" என்றான். சிரித்தபடியே, "சரி... வேறு யாரும் இல்லையா" என்றேன். அமைதியாக இருந்தார்கள்.

இதைவிட நாம் வாழும் காலத்தை விமர்சனம் செய்துவிட முடியாது என்றுதான் தோன்றியது. இப்போது கூட எத்தனையோ மனிதர்களைச் சொல்ல முடியும்தான். கடந்தகாலத்திலும் அப்படி மறைத்ததன் விளைவுதான், இந்தத் தலைமுறையில் ஒரு சிறந்த மனிதரை அறியமுடியாமல் அடுத்த தலைமுறை இங்கே தடுமாறுகிறது. இந்த வெற்றிடத்தை புரிந்து கொண்டுதான், அப்துல் கலாமை வைத்து நிரப்புவதற்கு பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும், அரசும் பெரும் பிரயத்தனங்கள் செய்து கொண்டிருக்கின்றன என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

இன்னும் மாணவர்களிடம் அந்த நேரத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் இருந்தது. "நீங்கள் படித்து விட்டு யாராகப் போகிறீர்கள்" என்றேன். கடகடவென பதில் வந்தது. 'சாப்ட்வேர் எஞ்சீனியர்' என்றார்கள். 'டாக்டர்' என்றார்கள். 'மல்டிமீடியாவில் புரோகிராமர்' என்றார்கள். "ஐ.டி முடித்து அமெரிக்கா போகப் போவதாக'வும் சொன்னார்கள். இன்னும் கூட வாயில் நுழையாத, கேள்விப்படாத லட்சியங்கள் எல்லாம் சொன்னார்கள். "எல்லோருக்கும் வாழ்வில் ஒருலட்சியம் இருக்கும். கனவு இருக்கும். நாமும் அவரைப் போல ஆக வேண்டும்...இவரைப் போல ஆக வேண்டும் என்றெல்லாம் தோன்றும். உங்களுக்கு அப்படி ஒரு ரோல் மாடல்களாக யார் இருக்கிறார்கள்?" என்றேன். கனத்த அமைதி நிலவியது. "உங்களுடைய ரோல் மாடல்கள் யார்" திரும்பவும் கேட்டேன். பதில் இல்லை.

எப்படிப்பட்ட சூழலில் நாம் இருக்கிறோம். தங்கள் மீது செல்வாக்கு செலுத்தக்கூடிய சக்தியாக யாரும், எதுவும் இல்லாமல் ஒரு தலைமுறை இருப்பதை 'சமூக வெறுமை'யாகவே அறிய வேண்டியிருக்கிறது. ஒரு அரிச்சந்திர நாடகம்தான் ஒரு மகாத்மாவை உருவாக்கியது. ஒரு நிவேதிதாதேவிதான் பாரதியை 'பெண்மை வாழ்க'வென்று கூத்திட வைத்தது. ஜாலியன்வாலாபாக்கின் மண்தான் ஒரு பகத்சிங்கை இந்தியாவுக்குத் தந்தது. இளைய தலைமுறைக்கு அப்படி யாரையும் முன்னிறுத்த முடியாத சமூகம் எதை நோக்கிச் செல்ல முடியும்? ஒரு நண்பரிடம் இதைப் பகிர்ந்து கொண்டபோது அதெல்லாம் செல்வாக்கு செலுத்தக்கூடிய சக்தி இல்லாமல் இல்லை என கோபத்தோடு பொரிந்து தள்ளினார். அவர் சொன்னதும் உண்மைதான்.

கருத்துகள்

27 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. உங்களோட பதிவுகளை தொடர்பு வைச்சு
  படிச்சா இளைஞர்களை கொஞ்சம்
  யோசிக்க வைக்கும், சில இடங்களில்
  உங்களோட எழுத்து ஏன் அமைதியாகுது
  இல்லன்னா வேற தளத்துக்கு கொண்டு
  போகுதுன்னு புரியல
  ஜீன்ஸ் பதிவு சொல்ல வந்தத முழுசா
  சொல்லல நினைக்கிறேன்
  இந்த பதிவுல
  "ஒருவித 'காங்கிரஸ் மூளை' கடந்தகாலத்தின் ஞாபகங்களுக்குள் இயங்கிக் கொண்டிருக்கிறது. இப்படி ஊட்டப்பட்டிருக்கிற ஞானப்பால் எப்படிப்பட்ட சமூகத்தை நம் கண்முன்னே படைக்கும் என்று தெரியவில்லை"
  உண்மை தான் ஆனா இதை நேரடியா
  சொல்லும் பொழுது சொல்ல வந்த கருத்தை விட இது தான் பெரிசா
  பேசப்படும்

  பதிலளிநீக்கு
 2. இதே கேள்வி என்னிட்ம் கேட்ட பொழுது எனக்கு நினைவிருக்கு ...
  நான் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆக வேண்டும் யென்று சொன்னேன் ...
  அப்போழுது நான் எட்டாம் வகுப்பு

  :-) கண்டிப்பாக ஆகுவேன் என்று என்னை பார்த்து சிரித்தவர்களுக்கு சொன்னேன் .. இதே போல் .. software trainingil சொன்னேன்

  எல்லாரும் கைத்தட்டினார்கள்

  பதிலளிநீக்கு
 3. அருமையான பதிவு ஸார்...
  என்ன ஆச்சர்யம்...எந்த பையனும் என்னோட பேரச் சொல்லலயா?

  பதிலளிநீக்கு
 4. என் கனவிற்க்கான இளய தமிழ்கம் மலரும் அதற்க்கான முயற்ச்சிகளில் இருக்கிறேன்

  பதிலளிநீக்கு
 5. சூப்பர்! இது போல ஒரு தடவை சும்மா நாங்க பேசிகிட்டு இருக்கும் போது ஒரு தடவை ஒரு குறும்பு கார ந்ண்பன் சொன்னான் "நான் ரேணுகா சவுத்ரிக்கு புருஷனா ஆக போறேன்":-)) சீரியசா சொன்னான். எல்லாரும் சிரிச்சுட்டோம்!

  பதிலளிநீக்கு
 6. இது ஒரு நக்கல் comparison, இந்தியாவில்தான் இதுவும் நடக்கும் http://tinyurl.com/cn49km

  பதிலளிநீக்கு
 7. (எப்படிப்பட்ட சூழலில் நாம் இருக்கிறோம். தங்கள் மீது செல்வாக்கு செலுத்தக்கூடிய சக்தியாக யாரும், எதுவும் இல்லாமல் ஒரு தலைமுறை இருப்பதை 'சமூக வெறுமை'யாகவே அறிய வேண்டியிருக்கிறது.)

  இன்றைய இளைஞர்களை நினைத்தால் வருத்தம் கலந்த பயம் தான் வருகிறது சில நாட்களுக்கு முன் தொலைகாட்சியில் பார்த்த ஒரு நிகழ்ச்சியில் அப்பா அம்மாவின் வற்புறுத்தலால் தனக்கு விருப்பம் இல்லாத பாட பிரிவுகளை எடுத்து படிக்கும் மாணவர்கள் பின் நாளில் குற்றவாளியாக மாறும் வாய்ப்புள்ளதாக ஒரு கல்லூரியின் முதல்வராக உள்ளவர் குறிப்பிட்டார் தனக்கு விருப்பமான பாடத்தை விடுத்து தன் பெற்றோர்களின் வற்புறுத்தலால் இப்படி மனம் ஒன்றாமல் படிக்கும் மாணவர்களுக்கு நல்வழி காட்டுவது யார்? நினைத்தால் சற்று வருத்தம் கலந்த பயம் தான் தோன்றுகிறது இன்றைய இளைஞர்களை வழிநடத்தும் பெறும்பொறுப்பு பெற்றோர்களிடமும் இருக்கிறது ஆனால் அவர்கள்?

  பதிலளிநீக்கு
 8. முதலில் குழந்தைபருவம் முதலே அவர்களுக்கு வரலாறு, சமூகம், அரசியல் குறித்து தெரிந்துகொள்ள கூடிய புத்தகங்களை படிக்கசெய்யவேண்டும், இதன் மூலம்தான் அவர்களுக்கு வரலாறு மற்றும் தலைவர்கள் குறித்து ஒரு தெளிவு வரும், பள்ளியின் வாயிலாக ஒரு போதும் இவர்களுக்கு உ‌ண்மையான வரலாற்றை வழங்க முடியாது. காந்திதான் சுதந்திரம் வாங்கிதந்தாகதந்தாக எல்லோராலும் காலம்காலமாக கூறப்படுகிறது,அதுகுறித்த உ‌ண்மை நிலையை விவரிக்கமறுக்கிறார்கள்,பள்ளியிலும் சரி பொதுவாழ்விலும் சரி.இந்த கடமை ஆசிரியர்களை தாண்டி பெற்றொர்கள் கையில் உள்ள்து.

  பதிலளிநீக்கு
 9. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 10. மாதவராஜ்!
  இன்று நாம் உருவாகிக்கொண்டு இருபது நாளைய இந்தியாவை இல்லை. பன்னாட்டு உலக நிறுவங்களின் கூலிப் பணி செய்யும் கருவிகளை மட்டுமே. அவர்களின் கனவு சுய சிந்தனை சார்ந்ததாகவே இருந்தால் அன்றி நீங்கள் விரும்புவது நிகழாது. ஆனால் இன்று நாம் விதைத்து கொண்டிருப்பது ஒரு கூட்டு கனவு வெளியை. எல்லோரின் கனவும் ஐ டி- யில் பணி புரிவதும், அமெரிக்கா சென்று குடியுரிமை பெறுவதுமே. இது குறித்து நாம் குறை சொல்ல வேண்டயது இந்த கனவை அவர்களிடம் விதைக்கும் பெற்றோர்களும் ஊடகங்களுமே..

  அது நிகழாத வரை, இவர்களும் படித்து, வேலை கிடைத்து, அமெரிக்கா சென்று நன்கு சம்பாதித்து, சுட்டுக் கொண்டு சாவார்கள்.
  :(

  பதிலளிநீக்கு
 11. உங்கள் சொந்த ஊர் சாத்தூர் என்றறிந்தேன். என்னோட இந்தப் பதிவுக்குச் சென்று பாருங்கள். உங்களுக்கு உபயோகப்படுமா என்றும் தெரிந்து கொள்ளுங்கள்.
  https://www.9-west.blogspot.com/2009/04/sslc-march-1959.html
  நன்றி!

  பதிலளிநீக்கு
 12. அன்பின் மாதவ்,
  மனதில் வெகு நாட்களாய் இருந்த கேள்வி.நமது கல்வி முறை குறித்து மக்களோ அல்லது நம்மை ஆளுகின்ற அரசியல் பலமிக்கவர்களோ அல்லது அதிகார வர்கமோ அல்லது இந்நாட்டின் அறிவு ஜீவிகளோ யாரும் எதுவும் கவலைப்படுகின்ற மாதிரி தோன்றவில்லை இப்போதும் இனியெப்போதும்.
  தற்போது நாம் கற்பித்துவரும் மெக்காலே கல்வி முறையில் சுயசிந்தனை என்ற பேச்சுக்கே இடமில்லை அல்லவா...
  இது குறித்த ஒரு நாடகம் கூட இங்கு தமுஎச சார்பாக போட்டிருந்தோம்.
  அதனின் சுருக்கம்.. ஆசிரியர் முன்னிலையில் அனைத்து மானவர்களும் வயிரு முட்ட குடித்துவிட்டு பரீட்சைஅன்று வாந்தி எடுப்பதாக இருக்கும். வயல் வரப்புகளையும் பறவைகளின் பெயர்களையும் காடு மாடு உட்பட அன்றாட வாழ்வின் சகல விஷயங்களையும் அறிந்து வைத்துள்ள மானவன் ஒருவனுக்கு சரியாக குடித்து(ஒரு உவமானம்தான்) அதிகமாக வாந்தி எடுக்க தெரியாது.ஆனால் எதுவுமே தெரியாத ஆனால் குடிக்க அதனிலும் அதிகமாக வாந்தி எடுக்க தெரிந்தவர்களே இங்கு சிறந்த மானவர்களாக இருப்பதுபோல நாடகம் அமைக்கப்பட்டிருந்தது.

  இன்று நாம் வாழுகின்ற சூழ்நிலையில் கல்வி என்பது ஒரு ஓட்ட பந்தயம் போலவும் அதில் எப்போதும் முந்திச்செல்கின்ற பதட்டதுடனேயே பிள்ளைகளை வளர்க்கின்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டுவிட்டது.நல்ல மனிதர்களை உருவாக்குவதைவிடவும் நல்ல மெஷின்களை உருவாகித்தருகின்றது இந்த கல்விமுறை உருவாக்கிய அவர்கள் எதிர்பார்த்தமாதிரியே.
  இதில் நீங்கள் பதிவில் கேட்டுள்ள கேள்விகளுக்கு இன்றைய மானவர்களால் எந்த பதிலும் சொல்லமுடியவில்லை என்பது குறித்து எல்லோருமே கவலைப்படவேண்டிய விடயம்தான்.

  எல்லாம் வியாபாரமயமாகி பின் உலக மயமாகிவிட்ட சூழ்நிலையில் ஊதிய சங்கு எவ்வளவு தூரம் கேட்குமென தெரியவில்லை.இருந்தாலும் உங்களை போன்றவர்களால் இது போன்ற விடயங்கள் குறித்து கவலையில்லாமல் இருக்கமுடியாது என்பது எங்களுக்கு ஆறுதல்.
  நீண்ட பின்னூட்டத்திற்க்கு மன்னிக்கவும்.

  பதிலளிநீக்கு
 13. இன்றைய உலகில் நம்மைசுற்றி அனைவரும் மிகவும் சுயநலத்துடன் வாழ்கின்றனர்,எது குறித்தும் அவர்களுக்கு கவலையில்லை தமக்கு ஏதும் நேராதவரையில்,தனக்குமட்டுமின்றி,தன் மகன்,மற்றும் பேரனுக்கும் சேர்த்தே இவர்கள் சம்பாதிக்கநினைக்கிறர்கள், இவர்கள் தன்னை சுற்றியிருக்கும் சமூகத்தின் மீது பற்றோ,அக்கறையோ,அன்போ செலுத்துவதில்லை, இவர்கள் இது போல வாழ்வதற்க்கு காரணம் நம் கல்விமுறையா?இல்லை இவர்கள் சிந்திப்பதில்லையா? உண்மையிலேயே நமது கல்விமுறை தன் ஒருவனைமட்டுமே செழுமைபடுத்திக்கொள்ளும் வகையில் அமைத்திருப்பதாக நா‌ன் கருதுகிறேன்.

  பதிலளிநீக்கு
 14. புன்னகை!

  ரொம்ப நன்றிங்க.

  சுரேஷ்!
  ம்.. ரசித்தேன். பககிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 15. டக்ள்ஸ்!

  நன் அவர்களிடம் சொன்னேன்.

  பதிலளிநீக்கு
 16. அபி அப்பா!

  பரவாயில்லை உங்கள் நண்பர்.

  பதிலளிநீக்கு
 17. graphpapersurvey

  வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
  நீங்கள் சுட்டியிருந்ததைப் பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 18. திலீபன்!
  //முதலில் குழந்தைபருவம் முதலே அவர்களுக்கு வரலாறு, சமூகம், அரசியல் குறித்து தெரிந்துகொள்ள கூடிய புத்தகங்களை படிக்கசெய்யவேண்டும், இதன் மூலம்தான் அவர்களுக்கு வரலாறு மற்றும் தலைவர்கள் குறித்து ஒரு தெளிவு வரும்,//

  உண்மையான வரலாறை....

  பதிலளிநீக்கு
 19. Its Me The Monk!

  //இன்று நாம் உருவாகிக்கொண்டு இருபது நாளைய இந்தியாவை இல்லை. பன்னாட்டு உலக நிறுவங்களின் கூலிப் பணி செய்யும் கருவிகளை மட்டுமே. அவர்களின் கனவு சுய சிந்தனை சார்ந்ததாகவே இருந்தால் அன்றி நீங்கள் விரும்புவது நிகழாது. //

  உண்மைதான். இதுகுறித்து உரையாடல்கள் நடப்பதே சில வெளிச்சங்கலைக் கொண்டு வரும் என நம்புகிறேன்.

  பதிலளிநீக்கு
 20. வெங்கடெஷ் சுப்பிரமணியம்!

  //இளைஞர்களை வழிநடத்தும் பெறும்பொறுப்பு பெற்றோர்களிடமும் இருக்கிறது //
  நிச்சயமாக. பெற்றவர்களுக்கு முதலில் இதெல்லாம் குறித்து பிரக்ஞை வரவேண்டுமே...

  பதிலளிநீக்கு
 21. நானானி!

  கண்டிப்பாய் பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 22. கும்க்கி!

  இந்தப் பதிவிற்கு மேலும் அர்த்தங்களையும், விளக்கங்களையும் தருகிறது உங்கள் பின்னூட்டம்.
  ரொம்ப நன்றிங்க.

  பதிலளிநீக்கு
 23. Abdul Kalam is a good role model for students who want to have one.He interacts with and inspires the students. I dont agree with what all he says but anyday he is better that the typical intellectual from the left parties.

  There is no need for a role model. Why should the youth have x or y or z as their role models. If they are intelligent enough they will find their own way in the world.

  பதிலளிநீக்கு
 24. ' பகத்சிங்கை, அம்பேத்காரை, பெரியாரை யாரும் சொல்லவில்லையே என்ற ஏக்கமும் வருத்தமும் வந்தது'.

  Perhaps they are not familiar with these names.Ambedkar and Bhagat Singh can be role models but how can Periyar be a role model for youth. It is strange that a member
  of CPI(M) mentions about Periyar as a potentail role model. Periyar never recognised the left as a positive force. Perhaps you need some lessons in the real history.

  பதிலளிநீக்கு
 25. நீங்க போனது ஆண்கள் படிக்கும் உயர்நிலைப்பள்ளி, அல்லது, நீங்கள் கேட்டது ஆண்கள் நிறைந்த கூட்டம் என்று நினைக்கிறேன்.

  உங்கள் கேள்வியை பெண்கள் மட்டுமே படிக்கும், கிராமப்புறத்தில் இருக்கும் உயர்நிலைப் பள்ளியில் கேட்டிருந்தால், என்ன நடந்திருக்கும்?

  அப்படிப்பட்ட ஒரு பள்ளியில் என்னைப் பேசக் கூப்பிட்டார்கள். நான் மறுத்து விட்டேன்..

  பதிலளிநீக்கு
 26. அபி அப்பா, என் நண்பன் ஒருவன் பிரியங்காவை திருமணம் செய்வது குறிக்கோள் என்று சொல்லிக் கொண்டிருந்தான், அந்தம்மா அதில் மண்ணைப் போடும் வரை.

  பதிலளிநீக்கு
 27. Who can be good role models?.
  Karats, Yechurys, Jyoto Basus,D.Rajas and Bardhans cannot be good role models for students.
  It will be better if these students grow up and become
  normal citizens than becoming pseudo-secularists.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!