அமைதியும் இரத்தமும்.

genocide1

 

எப்போதும் வீட்டில் அந்தப் பூனைகள் இருந்தன.
துணிகளுக்குள் வந்து படுத்துக் கொண்டன.
மீன் கழுவும் போது எதிரே உட்கார்ந்து, “எனக்குரியதைத் தா..” என்று உரிமையோடு பார்த்தன.
சுவர் மீது உடகார்ந்து காற்றை அனுபவித்து கண்களைச் சிமிட்டின.
தோட்டத்தில் செடிகளுக்கு இடையே காதல் செய்தன.
குட்டிகள் போட்டு எல்லாம் தனக்குரியது போல அலைந்து திரிந்தன.
எந்த மூலையில்  இருந்து கேட்டாலும் “மியாவ்” வீட்டின் குரலாகவே எல்லோருக்கும் இருந்தது.
எந்தத் தீங்கும் செய்யாத அப்பாவிப் பூனைகள்.

 

ஒருநாள் வீட்டின் பின்னால் பூனையின் ஈனக்குரல்கள் கேட்டன.
பெரும் மிருகங்களின் உறுமல்கள் இடையிடையே அதிர்ந்தன.
அங்குமிங்கும் ஓடுகிற பதற்றங்கள் வெளியைப் பிசைந்தது.
பிறகு அவை அடங்கின.
கிணற்றடியில் சில பூனைகள் கழுத்துக் கடிக்கப்பட்டு கடைசி அசைவுகளோடு கிடந்தன.
சில விருவுகள் அந்த உடல்களை வெறியோடு சுவைத்துக் கொண்டும், நக்கிக்கொண்டும் இருந்தன.
அதிலொன்று நாக்கை நீட்டி நீட்டி வாயைத் துடைத்துக் கொண்டிருந்தது.

 

எங்கும் அமைதி.
எங்கும் பூனைகளின் இரத்தம்.

 

0

கருத்துகள்

8 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. ஐயோ என்ன இது? படமும் பதிவும் என்ன்வோ செய்கிறது மனதை.

  பதிலளிநீக்கு
 2. மனம் கனக்கும் பதிவு...

  பதிலளிநீக்கு
 3. சிறுபாண்மை இழப்புகள்
  வலியும், ரணமும் மிகுந்தவை
  அமைதியாகத் தாக்கும் வரிகள்
  அருமை

  பதிலளிநீக்கு
 4. தீபா!

  முரளிக்கண்ணன்!

  கவின்!

  தங்கள் வருகைக்கும், வெளிப்படுத்திய உணர்வுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 5. மனம் கனத்த உணர்வு

  பதிலளிநீக்கு
 6. கடையம் ஆனந்த்!

  வருகைக்கும், உளப்பூர்வமான உணர்வுகளுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!