இப்போது அவரது மரணம்தான் அவரை ஞாபகப்படுத்தியிருக்கிறது

Nagesh-3

அரை நூற்றாண்டு காலம் திரையில் நடமாடிய அவரது அசைவுகள் இந்தக் கணத்தில் வளைய வருகின்றன.

தோற்றத்தைத் தாண்டி மனிதனை அணுகிப் பாருங்கள் என்பதுதான் சர்வர் சுந்தரத்திலிருந்து தொடங்கிய அவரது பயணம் சொல்லியிருப்பதாய் தோன்றுகிறது.

வைத்தியும், தருமியும் தெருவெல்லாம் பேசிக் கொண்டிருந்த காலம் உண்டு.

துடிப்பும், துடுக்கும் நிறைந்த அவரது உடல்மொழியும், மொழியும் ரீங்காரமிடுகின்றன.

நம் ஒவ்வொருவரின், எத்தனையோப் பொழுதுகளில் அவரோடு சிரித்துக் கிடந்திருக்கிறோம். அழவும் செய்திருக்கிறோம்.

கொண்டாடப்பட வேண்டிய அற்புதமான கலைஞன்தான்!

கூடவே வந்தவர்களை வாழ்வின் போக்கில் தப்ப விட்டு விடுகிறோம்.

இப்போது அவரது மரணம்தான் அவரைத் திரும்ப ஞாபகப்படுத்தியிருக்கிறது.

கடந்த காலத்தை நமக்குள் மீட்டிக் கொண்டிருக்கிறது. ....

துயரம்தான்!

கருத்துகள்

6 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. உண்மைதான் தோழரே...

  நகைச்சுவைக்கு ஒரு புதிய வரலாறு எழுதியவர்..

  வைத்தியும், தருமியும், காதலிக்க நேரமில்லையும் மறக்க முடியவில்லை. அவரது ஆட்டமும் மறக்க முடியாத ஒன்றுதான்.

  அன்னாருக்கு என் இதயம் கலந்த அஞ்சலி.

  பதிலளிநீக்கு
 2. நிசமான நகைச்சுவை நடிகனை(கலைஞனை) இழந்து விட்டோம்..

  பதிலளிநீக்கு
 3. என்னை மி்கவும் கவர்ந்த கலைஞர்களுள் ஒருவரான நாகேஷுக்கு எனது
  அஞ்சலியை சமர்ப்பிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 4. ராகவன்!

  சமகாலத்து, சக கலைஞர்களை, எழுத்தாளர்களைக் கொண்டாடத் தெரியாதது தமிழ் கலை இலக்கிய உலகமாக இருக்கிறது. பக்கத்தில் உள்ள கேரளாவில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. கதகளி கலைஞரைப் பற்றி அடூர் ஒரு ஆவணப்படம் எடுக்கிறார். அடூரைப் பற்றி இரண்டு மூன்று படங்கள் வந்திருக்கின்றன. தமிழில் யாரை அப்படியெல்லாம் பதிவு செய்திருக்கிறோம் எனத் தெரியவில்லை. என்.எஸ்.கே, எம்.ஆர்.ராதா விலிருந்து இதோ இறந்து போன நாகேஷ் வரைக்கும், அவர்கள் நடித்த காட்சிகள்தான் அவர்களைச் சொல்லிக் கொண்டு இருக்கின்றன. அப்புறம் மரணம்.....

  பதிலளிநீக்கு
 5. ஞானசேகரன்!

  ஊர்சுற்றி!

  நாகேஷ் என்ற கலைஞனுக்கு அஞ்சலி செலுத்திய தங்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 6. அசத்தலான அசலான கலைஞர். அவருக்கு என் இதயபூர்வமான அஞ்சலிகள்

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!