அன்று அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்து தண்டி யாத்திரை சென்றிருந்த போது அவரோடு நானும் சென்றிருந்தேன்.
அன்று மதவெறியை எதிர்த்து நவகாளி யாத்திரை சென்றிருந்தபோது அவரோடு நானும் சென்றிருந்தேன்.
இன்று ஒரு நூறு அந்நியக் கம்பெனிகள் தாராளமாய் நுழைந்து நம் வளங்களையெல்லாம் உறிஞ்சியபடி நிற்கின்றன.
அயோத்தியில் பற்ற வைத்த நெருப்பு தேசமெங்கும் பரவிக்கொண்டு இருக்கிறது.
மகாத்மாவின் நம்பிக்கைக்கு உரியவர்களே! நீங்கள் என்ன செய்யப் போவதாக உத்தேசம்?
//நீங்கள் என்ன செய்யப் போவதாக உத்தேசம்?//
பதிலளிநீக்குசினிமாவிலிருந்து எங்கள் ஆதர்ஷ கதானாயகன், முகமூடிகளிலொன்றை அணிந்துவந்தெம்மை வழிநடத்தக் காத்திருக்கிறோம்.
வீடு வளர நாடு வளரும். எங்கள் வீட்டில் காந்தீய சிந்தனைகளை முடிந்த வரை பின் பற்றுகிறோம். உற்றமும் சுற்றமும் எள்ளி நகையாடினாலும், கவலை இல்லை. மற்றவர்கள் பாதை தவறும் போது இடித்துரைத்து அவர்கள் கோபத்தையும் எதிர் கொள்கிறோம். அக்கம் பக்கம் தவறு நடக்காமல் இருக்க முயற்ச்சிக்கிறோம்.
பதிலளிநீக்குஆனால், பெரியதாக ஒன்றும் செய்யவில்லை என்று வெட்கமாக உள்ளது.
காந்தி நினைவு நாளை நீங்கள் மக்களுக்கு நினைவு செய்வது , உன்னதம்.
நாட்டில் காந்தி பற்றி அலட்டல் இல்லாதது குறையாக இருக்கிறது.
உங்களைப் பற்றி அறிந்தது, எனக்கு ஆறுதலாக உள்ளது.
வணக்கம்.
Wow! That's a great idea. Let's make Gandhi a youth icon!
பதிலளிநீக்குBrand ம்காத்மா!
மகாத்மா ப்டம் பொறித்த டி ஷர்ட்கள், ம்காத்மா ஸ்டைல் கண்ணாடிகள், கைத்தடிகள் உருவாக்கி "Allen Solly", "Louis Philippe", "nike" பிரான்டுகளில் விற்போம்; வாங்குவோம்.
how to react in tamil fonts? Beyond all our strong criticisms Gandhiji stands high in our heart.He stood and died for a secular India.The cultural goondas who killed him this day in 1948 are now wandering in our streets as cultural police.Our silence is a crime.Our silence is their strength.atleast we all should speak daily among all we meet against these RSS goondas. An effective speech campaign is the need of this hour which is no cost.everyone of us can do
பதிலளிநீக்குTamilselvan
Pattamadai
30.01.09
Dear Mr.TamilSelvan,
பதிலளிநீக்குHow are you, hope you are doing fine.
Paste the following address in the address bar of your browser and hit Enter.
http://www.higopi.com/ucedit/Tamil.html
You can use the text space to type in Tamil. Press F12 to switch between tamil and English typing.
Uncle will tell you more about unicode typing, but I wanted to be the first to help you! :-)
மிகவும் உண்மையான கருத்து.
பதிலளிநீக்குஇளைய தலைமுறை இதை உணர்ந்தால், அவர்களுக்கு இதை உணர வைத்தால், அதுவே நாட்டுக்கு நாம் செய்யும் கடமை
நன்றி
வெங்கடேசன்
வேலன்!
பதிலளிநீக்குநையாண்டியாய் இருந்தாலும் கடுங்கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.
வெற்றிமகள்!
பதிலளிநீக்குமறந்துகொண்டே இருப்பது மக்களின் இயல்பாக இருக்கிறது. அதை நம் போன்றவர்கள்தான் நினைவுபடுத்தித் தூண்டிக்கொண்டே இருக்க வேண்டும். தங்கள் வருஅகைக்கு நன்றி.
தீபா!
பதிலளிநீக்குவர வர கிண்டல் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது....
தமிழ்ச்செல்வன்!
பதிலளிநீக்கு//The cultural goondas who killed him this day in 1948 are now wandering in our streets as cultural police//
மிகச் சரியான வார்த்தைகள்.
இப்போதுதான் இந்தப் பக்கம் வந்து போக தங்களுக்கு நேரம் கிடைத்திருக்கிறது....! அடிக்கடி வாருங்கள். தமிழில் எழுத, தீபா குறிப்பிட்டிருப்பது போல முயற்சி செய்து பார்க்கலாம்.
வெங்கடேசன்!
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி.
குறைந்த பட்சம் அவரை நினைக்கவாவது செய்யவேணும்..
பதிலளிநீக்குநேற்று எனக்கு தியாகிகள் நாள் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள்..
காந்தி நேசர்கள் இன்னும் இருக்கிறார்கள்..
அமைதி எங்கும் திரும்பட்டும்
மகாத்மா உயிருடன் இருந்த போது,பின்னரும் கம்யுனிஸ்ட்கள் அவரைப் பற்றி என்னென்ன சொன்னார்கள் என்பதும் அவரது கைத்தடிக்குத் தெரியும்.
பதிலளிநீக்குபோலி மதச்சார்பின்மைவாதிகளாக
சிபிஐ(எம்),சிபிஐ மகாத்மாவின் பெயரை தங்களது மதவாத ‘இடதுசாரி' அரசியலுக்கு பயன்படுத்தாமல் இருப்பதே அவருக்கு
செய்யும் மரியாதையாக இருக்கட்டும்.
ஆதவா!
பதிலளிநீக்குஆம்..நாட்டில் மத நல்லிணக்கத்தையும், மக்கள் ஒற்றுமையையும் விரும்பும் காந்தி நேசர்கள் இருகத்தான் செய்கிறார்கள்.
பெரியார் விமர்சகரே!
பதிலளிநீக்குநிச்சயம் இந்தப் பதிவிற்கு வந்து எழுதுவீர்கள் என்று நினைத்தேன். வந்துவிட்டீர்கள். சந்தோஷம். ஆமாம். கைத்தடிக்குத் தெரியும்.யார் காந்தியை விமர்சித்தார்கள் என்பதும் தெரியும்.... யார் காந்தியைக் கொன்றார்கள் என்பதும் தெரியும்....