சலனமற்ற அமைப்பின் மீது சரியான அளவில் தொடுக்கும் தாக்குதல்கள்

 

naknamuni copy

 

 

 

 

 

படைப்புகள் ஒரு படைப்பாளியை அடையாளம் காட்டுகின்றன. மேலும் அவனைப்பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வமூட்டுகின்றன. தேட வைக்கின்றன. அதற்காகவே “இந்தக் கவிதைகள் உங்களை என்ன செய்கின்றன” என்ற பதிவில் சில கவிதைகளை மட்டும் சொல்லி நிறுத்தியிருந்தேன்.   ஜ்யோவ்ராம் சுந்தர், “ யாருடைய கவிதைங்க இதெல்லாம் ” என்று கேட்டிருக்கிறார். அனுஜன்யாவோ “சீக்கிரம் சொல்லுங்கள்” என்று அவசரப்படுத்துகிறார். வேணுகோபால பொறுக்க முடியாமல் கவிஞரைச் சொல்லியும் விட்டார். எனக்கும் இதற்கு மேல் விளையாட்டை அடைகாக்க முடியவில்லை. நம்மை இந்தக் கவிதைகள் எப்படி படாத பாடு படுத்தியதோ, அதுதான் நம் நண்பர்களுக்கும் நிகழ்ந்திருக்கிறது எனும் போது சந்தோஷமாய்த்தான் இருக்கிறது.

 

மானேப்பள்ளி ஹிருஷிகேசவராவ் என்ற நக்னமுனி என்பவர்தான் அந்தக் கவிஞர்! “விடுதலை பெற்று ஐம்பது ஆண்டுகள் ஆகியும் சமூகத்தில் நிலவுகிற ஏற்றத்தாழ்வுகளுக்கு நான்  மிகவும் கவலைப் படுகிறேன். இந்த அமைப்பை சரியாக மாற்றாவிட்டால் மனிதர்களுக்கு மகிழ்ச்சியே இல்லை” என்று கவலைப்பட்டவர் அவர். 1960களில் தெலுங்கு இலக்கிய உலகை வெடிவைத்து தகர்க்க ஆந்திராவில் தோன்றிய திகம்பரக்கவிகள் இயக்கத்தோடு தொடர்பு கொண்டவராய் இருந்திருக்கிறார். 1965களில் திகம்பரக் கவிகளின் முதல் கவிதைத் தொகுப்பை ஹைதராபாத்தில் ஒரு ரிக்‌ஷாக்காரரும், 1966ல் இரண்டாவது கவிதைத் தொகுப்பை ஒரு உணவு விடுதி சிப்பந்தியும், 1968ல் மூன்றாவது கவிதைத் தொகுப்பை ஒரு பாலியல் தொழிலாளியும் வெளியிட்டு இருக்கின்றனர்.

 

பதிவில் நான் காட்டியிருந்த கவிதைகள் தனித்தனியானவையல்ல. மரக்குதிரை என்னும் முழுநீளக் கவிதையிலிருந்து எடுத்துச் சொல்லப் பட்டவை. 1977ல் ஆந்திர மாநிலத்தில் தீவாசீமாப் பகுதிகளில் வீசிய கடும் புயலாலும், வெள்ளத்தாலும் 20000 பேர் கொல்லப்பட்டனர். சகலமும் அழிந்து பிணங்களக் கூட அகற்ற முடியாமல்  அரசு காட்டிய அசிரத்தையின் மீது வெளிப்பட்ட நக்னமுனியின் கோபக்குமுறலே மரக்குதிரை!  1978 ஜனவரி முதல் தேதி வெளியிடப்பட்டது. அப்போது எந்த பாதிப்பும் இல்லை. அகில இந்திய வானொலியும் இக்கவிதையை ஒலிபரப்பியது. அப்போதும் பெரிய அளவில் யாரும் பேசவில்லை. இரண்டு வருடங்களுக்குப் பிறகு செகுரி ராமராவ் மரக்குதிரையை மகாகாவியம் என்றதும், பெரும் விவாதங்கள் எழுந்தன.

 

“எல்லா புதிய கவிதைகளும் ஒரே மாதிரியானவை அல்ல. இந்தக் கவிதையை உங்களுக்குள்ளேயே உரத்துப் பாடுங்கள். இதன் குரல்கள் உங்கள் மனதின் தனிமையில் வெகுவாய் ஒலிக்கும். இதன் அடியாழத்தில் புதைந்துள்ள உண்மைகள் உங்களைத் தொடும். உங்கள் மனசாட்சியின் ஞாபகச் சுவடுகளை ஒவ்வொன்றாய்த் தொட்டு செயல்படும்” என்கிறார் செகுரி ராமராவ்.

 

“நாம் சொல்லப் போவது குறித்து நமக்குத் தெளிவு முக்கியம். வாசகனுக்கு எந்த அர்த்தமும் தராத, வடிவ அழகுகளில் சேதி முக்கியமற்று போய்விடக் கூடும். நக்னமுனிக்கு உள்ளடக்கம் முதன்மையானது. வடிவம் இரண்டாவது பட்சமே” என்கிறார் சந்திரகாந்த்.

 

“அவரின் படைப்புகள் தெலுங்கு இலக்கிய உலக்கிய உலகின் எல்லைகளை மாற்றி அமைத்தன. அவரால் தெலுங்கு வார்த்தைகள் சரியான அர்த்தத் தளங்களில் புதிய உயரங்களைத் தொட்டன. நக்னமுனியின் கவிதைகள் புதிய உயரங்களைத் தொட்டன. முற்றிலும் புதிய அடர்த்தியை, தீவீரமான பரிமாணங்களுடன் காட்டின. சலனமற்ற அமைப்பின் மீது சரியான அளவில் தொடுக்கும் தாக்குதல்கள் ஆயின.” என்கிறார் ராமகிருஷ்ணா.

 

மரணத்தின் துயரம்  பொதிந்த இந்த வரிகளை வாசித்துப் பாருங்கள்.

நூற்றாண்டுகளாக
நிழல்தந்த ஆலமரம்
வேரிழந்து விழுந்து விட்டது
வேகப் புயற்காற்றால்
பறவைகள் விழுந்தன
மின்கம்பங்கள் செடிகளாய் சுருண்டன

 

அனாதரவான உலகின் ஓலம்
தூள்தூளாகித் தண்ணீரைத் தழுவி
நாம் அறியாத
மரணத்தின் தீவுகளை அடைகின்றது
ஆதரவற்ற பறவையின் சிற்குகளென
கண்ணிமைகள் சிறகடித்தன

 

மனிதன், பறவை மற்றும் மிருகம்
மரணத்தின் முன்
தலைகளைத் தொங்கப் போட்டு
ஒரே மாதிரி நின்றன

 

பிணங்களை அகற்றிச் சுத்தம் செய்ய
போதுமான காகங்களும்
கழுகுகளும்
வல்லூறுகளும்
அங்கே இருக்காது
ஆனாலும்
காண்ட்ராக்டர்கள் உள்ளனர்
அவர்கள் நாட்டுக்குச்
சேவை செய்வார்கள்
வீடில்லா பிணம்
கேள்வி கேட்காது

 

என்றாவது ஒருநாள்
இந்த மலட்டு நிலங்கள் உழப்பட்டால்
மண்டை ஓடு ஒன்று தோன்றி சிரிக்கும்.

 

மொத்தம் 28 பக்கங்களே கொண்ட இந்த மரக்குதிரை கவிதைத் தொகுப்பை நந்தினி பதிப்பகம் தமிழில் 2001ல் வெளியிட்டது.  தமிழில் ஜீவன் மொழி பெயர்த்திருக்கிறார். கவிஞர் உதயசங்கர் வெளிக்கொண்டு வருவதில் உதவி செய்திருக்கிறார். நண்பர் மாரீஸ்தான் வடிவமைத்திருக்கிறார். புத்தகம் கிடைக்குமிடம் என கீழ்க்கண்ட முகவரி தரப்பட்டிருக்கிறது.

தமிழோசை பதிப்பகம்
797E  ஸ்ரீராம் மோகன் வணிக வளாகம்
சக்தி ரோடு
காந்திபுரம்
கோயம்புத்தூர் -641 012

 

“நாட்டில் பிறமொழிகளில் நடப்பதை நாம் தெரிந்திட வேண்டும். மொழிபெயர்ப்புகள் அவசியம். நாம் மற்றவர்களோடு தொடர்பு கொண்டு மற்றவர்களை அறியாவிட்டால் எதிர்காலத்தை பார்க்க முடியாது” என்கிறார் நக்னமுனி. 

 

அந்த வழியிலேயே நாம் நக்னமுனியை தெரிந்து கொள்வோம்.

 

0

கருத்துகள்

3 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. ஒரு பேனா தீக்குச்சியாகியது!

    முத்துக்குமார்!

    நீ எரிந்த சேதி கேட்டு
    நெஞ்சம் ஏங்கித் தவிக்குதே.
    உந்தன் கடைசி நேரக்கடிதம் - எங்கள்
    உயிர் சுமக்குதே.
    விதியே விதியே
    என்செய் நினைத்திட்டாய்
    என் தமிழ்ச்சாதியை….

    பிஞ்சுப் பூக்கள் உதிரும் போது
    உருகி நின்றவா
    நெஞ்சக் கூட்டில் தமிழை நன்றாய்
    நிறைத்து வைத்தவா
    எரிமலையின் குழம்பு தான்
    உன் உடலில் ஓடியது.
    விடுதலையின் தீயில்
    பெரும் தமிழா வேகினாய்
    உலக வாய்கள் உதிர்ப்பதெல்லாம்
    அழகுப் பொய்யடா – தம்பி
    உண்மை சொன்ன உந்தன் மொழியில்
    தமிழன் வலியடா

    மனிதம் பேசும் வாய்கள்
    எல்லாம் மனிதர் இல்லையே
    மனிதம் செத்த உலகால் தானே
    தினமும் தொல்லையே
    சுற்றிச் சுற்றி வருவதெல்லாம்
    சோகச் செய்தியே

    இரண்டு கண்கள் அழுவதற்கு
    போதவில்லையே
    எழுக தமிழா சொன்னபோதும் - சில
    தமிழன் எழும்பவில்லையே
    நீ எரிந்த பின்பும் தூங்கும் தமிழன்
    மனிதன் இல்லையே

    சின்னச் சின்ன செய்தி கேட்டு
    சிலிர்த்துக் கொள்ளும் நாம் - நீ
    ஏரிந்து சொன்ன பின்பு ஏனோ
    குமுறி வெடிக்கிறோம்

    இறந்த காலக் காயம்
    நாளை ஆறும் நண்பனே – உந்தன்
    மரணம் தொட்ட கனவு
    நிஜமாகும் தமிழனே!

    பதிலளிநீக்கு
  2. ஒரு பேனா தீக்குச்சியாகியது!

    முத்துக்குமார்!

    நீ எரிந்த சேதி கேட்டு
    நெஞ்சம் ஏங்கித் தவிக்குதே.
    உந்தன் கடைசி நேரக்கடிதம் - எங்கள்
    உயிர் சுமக்குதே.
    விதியே விதியே
    என்செய் நினைத்திட்டாய்
    என் தமிழ்ச்சாதியை….

    பிஞ்சுப் பூக்கள் உதிரும் போது
    உருகி நின்றவா
    நெஞ்சக் கூட்டில் தமிழை நன்றாய்
    நிறைத்து வைத்தவா
    எரிமலையின் குழம்பு தான்
    உன் உடலில் ஓடியது.
    விடுதலையின் தீயில்
    பெரும் தமிழா வேகினாய்
    உலக வாய்கள் உதிர்ப்பதெல்லாம்
    அழகுப் பொய்யடா – தம்பி
    உண்மை சொன்ன உந்தன் மொழியில்
    தமிழன் வலியடா

    மனிதம் பேசும் வாய்கள்
    எல்லாம் மனிதர் இல்லையே
    மனிதம் செத்த உலகால் தானே
    தினமும் தொல்லையே
    சுற்றிச் சுற்றி வருவதெல்லாம்
    சோகச் செய்தியே

    இரண்டு கண்கள் அழுவதற்கு
    போதவில்லையே
    எழுக தமிழா சொன்னபோதும் - சில
    தமிழன் எழும்பவில்லையே
    நீ எரிந்த பின்பும் தூங்கும் தமிழன்
    மனிதன் இல்லையே

    சின்னச் சின்ன செய்தி கேட்டு
    சிலிர்த்துக் கொள்ளும் நாம் - நீ
    ஏரிந்து சொன்ன பின்பு ஏனோ
    குமுறி வெடிக்கிறோம்

    இறந்த காலக் காயம்
    நாளை ஆறும் நண்பனே – உந்தன்
    மரணம் தொட்ட கனவு
    நிஜமாகும் தமிழனே!

    பதிலளிநீக்கு
  3. பொன்ராஜ்!

    முத்துக்குமார் இறந்த செய்தியை நேற்றுதான் அறிந்தேன். வருத்தமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!