இந்தக் கவிதைகள் உங்களை என்ன செய்கின்றன?

doves

 

நடைபாதை ஓரங்களில்
பிளாஸ்டிக் மரங்களைப் பயிரிடுவோம்
பிளாஸ்டிக் கிளைகளில் பிளாஸ்டிக் பறவைகள்
பிளாஸ்டிக் தங்கக் கதிர்களில்
பிளாஸ்டிக் தானியங்களை மகசூல் செய்வோம்
பிளாஸ்டிக் பசுக்களின் பிளாஸ்டிக் மடுக்களில்
பிளாஸ்டிக் பாலருந்துவோம்.

 

0000

 

முன்னொரு காலத்தில்
இங்கே ஒரு கிராமம் இருந்தது
அந்த நாட்களில்
நிலமும் காற்றும் வானமும்
இங்கே மக்களால் நிரம்பி இருந்தது
அவர்களின் சிரிப்பு, கவலைகள்
உரையாடல்கள், பெருமூச்சுக்கள், 
பாடல்கள் இவற்றை
நீ கண்டும் கேட்டும் இருக்கலாம்
காற்றில் நீந்தும் பச்சை இலைகள்
கனி கொத்திச் சிதறும் பறவைக் கூட்டம்   
ஆண் பேடைகளின் காதல் கீச்சொலிகள்
ஒரு காலத்தில்
ஆனந்த அலைகளில்
தங்கமாய் தானியமணிகள்
நடனமாடின.

 

0000

 

வாழ்க்கையை விட
ஒலியை விட
வேகத்தை விட
பெரிதான மௌனம் இருக்கிறது
பிரபஞசம் முழுவது விரிந்துள்ள
அந்த மௌனம்
பிணத்தின் கண்களில் தங்கியுள்ளது

 

0000

 

கவிதை ஒரு பொய்
உலகிற்கு நன்மை இது என்கிற
கவிதை
காமரசப் பாடல்களில்
இளம் கதாநாயகிகளின் தொடைகளுக்கிடையே
ஒட்டிக் கிடக்கிறது
இளைஞர்களின் கால்களில்
கனவுத் தைலம் பூசிய கதைகளினால் தேய்த்து
பறக்க வைப்பதாகவும் நிற்கிறது.

 

000

நான் பெரும்பாலும்
ஒரே ஒரு பாடலைப் பாடுகிறேன்
என் வாழ்வு முழுவதும்
அதே பாடலைப் பாடுவேன்
என் வயிற்றின் குடலை உருவி
அதையே குழலாக்கி
வீதிவீதியாக
என் பாடலைப் பாடுவேன்
உண்மையைச் செவி மடுக்கும்
காதுகளைத் தேடிக் கொண்டே இருப்பேன்

 

000

 

இந்தக் கவிதைகள் உங்கள் என்ன செய்கிறது?  படிக்கும் போதெல்லாம் கலங்கியும் அதிர்ந்தும் போகிறேன். இதை எழுதிய கவிஞர் யாரென்று தெரிகிறதா? ஒரு சின்ன க்ளு மட்டும் இப்போது. இவர் ஒரு தெலுங்குக் கவிஞர். இவரைப் பற்றி விரிவாக அடுத்த பதிவில். 

 

 

கருத்துகள்

12 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. \\"இந்தக் கவிதைகள் உங்களை என்ன செய்கின்றன?"\\

  நிறைய யோசிக்க வைக்குது

  என்ன செய்து விட முடியுமென்று.

  பதிலளிநீக்கு
 2. \\வாழ்க்கையை விட
  ஒலியை விட
  வேகத்தை விட
  பெரிதான மௌனம் இருக்கிறது
  பிரபஞசம் முழுவது விரிந்துள்ள
  அந்த மௌனம்
  பிணத்தின் கண்களில் தங்கியுள்ளது \\

  மிகவும் அருமை.

  பதிலளிநீக்கு
 3. யாருடைய கவிதைங்க இதெல்லாம்.. அதுவும் முதல் கவிதை மிகப் பிடித்திருக்கிறது.

  பதிலளிநீக்கு
 4. Theriyum
  Enakku theriyum
  you only introduced this great poet to me through your wrappers:
  Nagna Muni...

  you are again proving different..
  with regards

  svv

  பதிலளிநீக்கு
 5. உண்மைதான் மாதவ். அபாரமாக, எளிமையாக, வலியுடன் இருக்கு. முதல் கவிதை அருமை.

  //அந்த மௌனம்
  பிணத்தின் கண்களில் தங்கியுள்ளது //
  சிலீர் என்கிறது.

  போலவே //உண்மையைச் செவி மடுக்கும்
  காதுகளைத் தேடிக் கொண்டே இருப்பேன்//
  என்ற வரிகளும் நிறைய சொல்கின்றன.

  சீக்கிரம் சொல்லுங்கள். அப்போ கடைய மூட வேண்டியதுதானா?

  அனுஜன்யா

  பதிலளிநீக்கு
 6. திகைக்க வைக்கின்றன, ஏங்க வைக்கின்றன, அச்சுறுத்துகின்றன, ஆனாலும் நம்பிக்கை அளிக்கின்றன... இந்த அளவு சிந்திக்கும் மனிதர்களும் நம்மிடையே இருப்பதை உணரும்போது.

  பதிலளிநீக்கு
 7. நட்புடன் ஜமால்!

  நிறைய யோசிப்போம். நீங்கள் குறிப்பிட்ட கவிதை வரிகள் என்னை மிகவும் தொந்தரவு செய்தவை.

  பதிலளிநீக்கு
 8. சுந்தர்!

  கவிஞரை இன்று பதிவில் அறிமுகம் செய்து விட்டேன்.

  ஞானப்பால் அறிந்த சமூகம், பிளாஸ்டிக் பால் அறிந்திருக்காதுதான்.

  அந்த வார்த்தையிலிருந்து எட்டு வருடங்களாக விடுபடாமல் இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 9. வேணு!

  ஏன் இந்த அவசரம்....வருகைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 10. அனுஜன்யா!

  சொல்லிவிட்டேன்.
  அதுசரி ... அதென்ன //அப்போ கடைய மூட வேண்டியதுதானா? //..?

  பதிலளிநீக்கு
 11. தீபா!

  உண்மையைச் செவி மடுக்கும் காதுகள் நம்மிடம் இருக்கின்றன.
  நம் யாவரையுமே இந்தக் கவிதைகள் எதோ ஒரு அவஸ்தைக்குள்ளாக்குகின்றன.

  பதிலளிநீக்கு
 12. ENTHA KAVITHAIGAL ENAI MIGAUM ENNGA VAIKINRANA ANALUM NAMPIKAIUDAN.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!