பட்டாம் பூச்சியின் சிறகசைப்பில் இரு கவிதைகள்

butterfly-2

 

 

என்னை மறித்ததொரு
வண்ணத்துப் பூச்சி!
சொல்லிய சேதி
காற்றை வாசி!

 

உதயசங்கரின் இந்தக் கவிதையை ஞாபகப்படுத்தியபடி, வடகரை வேலன் வலைப்பூவிலிருந்து பட்டாம்பூச்சி இப்போது என் வலைப்பூவிலும் வந்து உட்கார்ந்திருக்கிறது. சந்தோஷமாய்த்தான் இருக்கிறது.

 

வடகரைவேலன் வாசித்த பட்டாம்பூச்சி நாவலை நானும் குமுதத்தில் தொடர்கதையாகப் படித்திருக்கிறேன். சிறைப்பட்ட அந்தக் கதாநாயகன் தப்பிக்கப் பிரயத்தனம் செய்து கொண்டே இருப்பான். பட்டாம்பூச்சி என்பது விடுதலையின், சுதந்திரத்தின் குறியீடாய் நமக்குள் பதிந்திருக்கிறது.

 

எட்டுத் திக்கும் பறந்து திரியும் என்று பாரதி சொன்னது, குருவிக்கும் மட்டுமல்ல. பறவைகளுக்கு பொருந்தும். பட்டாம்பூச்சிக்கும் பொருந்தும். அப்படியொரு காரியத்தைத்தான் தாமிரா செய்திருக்கிறார் என நினைக்கிறேன். தொடரும் இந்த ஆட்டத்தில், பட்டாம்பூச்சிகளோடு பல வலைப் பூக்கள் இனி காட்சியளிக்கும் அல்லவா!

 

ஆட்டத்தின் விதிப்படி, இப்போது நான் இந்தப் பட்டாம் பூச்சியை, மேலும் சில வலைப் பூக்களின் முகவரி சொல்லி அனுப்பி வைக்கிறேன்.

 

காமராஜ்
லேகா

 

நிற்க. அதற்கு முன் பட்டாம்பூச்சி பற்றிய இந்தக் கவிதையில், தாங்கள் யார் பக்கம் என்பதை அவர்கள் தெளிவுபடுத்தி விட்டு 'பட்டாம்பூச்சி' விருதைப் பெற்றுக் கொள்ளட்டும். விருது என்றால் சும்மாவா?

 

பசித்த
சிலந்தியின் வலையில்
அழகிய வண்ணத்துப் பூச்சி!
நீங்கள் யார் பக்கம்?

 

அவர்கள் மட்டுமல்ல, எல்லோரும் சொல்லலாம்.

 

பி.கு:

1. விருது பெறுபவர்கள் விதிமுறையைத் தெரிந்திருப்பார்கள் எனினும், வேலன் எனக்குச் சொன்னதை நானும் இங்கு சொல்லியனுப்பி விடுகிறேன். நாம ர‌சிக்கிற ப‌திவ‌ர்க‌ளுக்கு பாஸ் பண்ணனும், விருதை வ‌லைப்பூவில போடனும், கொடுத்த‌வ‌ர், கொடுக்க‌ப்ப‌டுப‌வ‌ர் ரெண்டுபேருக்கும் இணைப்புக‌ள் த‌ர‌னும், பின்னூட்ட‌த்துல அறிவிக்கனும்.

 

2. கேள்வி எழுப்பியிருக்கும் கவிதையை நான் படித்து பல வருடங்கள் இருக்கும். யார் எழுதியது என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் அதையும் சொன்னால் சந்தோஷப்படுவேன்.

கருத்துகள்

12 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. வாழ்த்துக்கள்

    தங்களுக்கும்

    பெற்றவருக்கும்.

    பதிலளிநீக்கு
  2. அழகான வண்ணத்து(ப்) பூச்சியின் படம்.

    \\என்னை மறித்ததொரு
    வண்ணத்துப் பூச்சி!
    சொல்லிய சேதி
    காற்றை வாசி!\\

    அழகு கவிதை - நல்ல பகிர்வு ...

    பதிலளிநீக்கு
  3. மாதவராஜ்,

    நல்லா இருக்குங்க பதிவும் கவிதைகளும். வெறுமனே விருதுகளை பிறருக்கு வழங்குவதைவிட இது மாதிரி அது குறித்த நினைவுகளைப் பகிர்தல் நலம்.

    பதிலளிநீக்கு
  4. நட்புடன் ஜமால்!

    வடகரை வேலன்!

    இருவருக்கும் நன்றி. சரி நீங்கள் 'யார் பக்கம்'என்று சொல்லவில்லையே?

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துகள் மாதவ். இரண்டு வ.பூச்சி கவிதைகளும் முதல் முறையாகப் படிக்கிறேன். நன்று.

    நான் வண்ணத்துப்பூச்சி பக்கம்தான். பசியில் புசிக்காவிடில் சிலந்தி சாகாது; புசித்து விட்டால், என்னருமை வண்ணத்துப்பூச்சி சாகும். ஆதலால்.....

    அனுஜன்யா

    பதிலளிநீக்கு
  6. அனுஜன்யா முந்திக்கொண்டு விட்டார், என் கருத்துகளுக்கு. ஒருவேளை, நான் அவ்விடத்தில் இருந்தால், பட்டாம்பூச்சியை எடுத்து தப்பிக்க விடுவேன். காரணம், அனுஜன்யா சொன்னதுதான்.

    பதிலளிநீக்கு
  7. மாதவராஜ்,

    நம்மைப்போல் இலக்கியத்தில் ஈடுபாடுள்ளவர்கள் பட்டாம்பூச்சியின் பக்கம்தான் இருப்பர் எனினும், நடைமுறை மாறாக இருப்பதுதான் வருத்தமானது.

    பதிலளிநீக்கு
  8. அனுஜன்யா!

    உங்கள் கருத்தில் கவி உள்ளமும், தர்க்கமும் தெளிவாக வெளிப்பட்டுள்ளது.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. தங்கள் வருகைக்கு நன்றி.

    முத்துவேல்!

    //பட்டாம்பூச்சியை எடுத்து தப்பிக்க விடுவேன். காரணம், அனுஜன்யா சொன்னதுதான்.//

    ம்...இப்போது அனுஜன்யாவை முந்திக் கொண்டிர்களே! தங்கள் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. வடகரைவேலன்!

    நாம் இவ்வளவு பேசிக்கொண்டு இருக்கிறோம். விருது பெறுபவர்களை இங்கு காணோமே. இந்தக் கவிதைக் கேள்விக்கு என்னிடம் இன்னொரு நியாயம் இருக்கிறது. பார்ப்போம், அவர்கள் சொல்கிறார்களா என்று.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!