ஒருநாள் அவளது தோழியின் வீட்டிற்கு அவளும் அவனும் போயிருந்தார்கள். புதுமணத் தம்பதிக்கு விருந்து. அவனும், அவளது தோழியின் கணவனும் அதற்கு முன்பு ஒருவரையொருவர் தெரிந்திருக்கவில்லை. சம்பிரதாயமான அறிமுகம், பேச்சுக்களுக்குப் பிறகு அவள் அவளது தோழியோடு சமையலறைக்குள் சென்று விட்டாள். அவனும், அவளது தோழியின் கணவனும் ஹாலில் டி.வி பார்த்துக் கொண்டு, என்ன பேசுவது என்ன சிந்தித்தார்கள். மௌனம் ஹால் முழுக்க வியாபித்திருக்க, சமையலறைக்குள் இருந்து சிரிப்பும் பேச்சும் விடாமல் கேட்டுக் கொண்டிருந்தது. அவ்வப்போது இருவரும் ஒருவரையொருவர் பார்த்து எதற்கென்று தெரியாமல் சிரித்துக் கொண்டார்கள். ஹாலில் இருந்த கடிகாரத்தை அவன் அடிக்கடி பார்த்துக் கொண்டான். இரண்டு மணி நேரம் கழித்து விடைபெற்று வெளியே வந்த போது அவனுக்கு அப்பாடா என்றிருந்தது.
இன்னொரு நாள் அவனது நண்பன் வீட்டிற்கு அவனும் அவளும் அதுபோலவே விருந்து நிமித்தம் சென்றார்கள். அவளும், அவனது நண்பனின் மனைவியும் அதற்கு முன்பு ஒருவரையொருவர் தெரிந்திருக்கவில்லை. ஹாலில் அவனும் அவனது நண்பனும் உட்கார்ந்து அரட்டை அடிக்க ஆரம்பித்தார்கள். இடையில் எழுந்துபோய் அவனது நண்பன் டி.வியை அணைத்து விட்டு, பேச்சைத் தொடர்ந்தான். நேரம் போனதே தெரியவில்லை. சமையலறையிலிருந்து எழுந்த பெரும் சிரிப்புச் சத்தங்களில் இருவரும் நினைவுக்குத் திரும்பினார்கள். "இந்த பெண்களுக்கு அப்படி என்னதான் பேசுவதற்கு இருக்குமோ' சொல்லியபடி, அவனது நண்பன் பேச்சைத் தொடர்ந்தான். விடைபெற்றுக் கிளம்பும் போது அவளும், அவனது நண்பனின் மனைவியும் வெகுநாள் நண்பர்கள் போல பிரிய மனமில்லாமல் பிரிந்தார்கள்.
அன்று இரவு அவன் அவளைத் தொட்டபோது, அவள் புதிதாய்த் தெரிந்தாள்.
பெண்மொழி இனிமை! பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குநன்றி ஷைலஜா...
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
சரியாத்தான் சொல்லீருக்கீங்க, பெண்கள் பேச ஏதாவது டாபிக்னு தனியா வேணுமா,அருமை
பதிலளிநீக்குபெண் மொழியும் அதில் மறைந்த ஆண்மொழி/மௌனமும் நல்லா இருந்தது. அந்த கடைசி வரி ("ஆண்மொழி"?) இல்லாமயே நல்லா இருக்கும் (பின்னூட்டம் போட வந்த போது தான் கடைசி வரியை கவனித்தேன்).
பதிலளிநீக்குநன்றாகவிருக்கிறது பெண் மொழி.
பதிலளிநீக்குபாரட்டுக்கள்.
அன்புள்ள நண்பரே
பதிலளிநீக்குபெண்மொழி என்றுமே மென் மொழி,
உங்கள் பெண்மொழி பொருள் பொதிந்து பண்மொழி போல் இருக்கிறது வசீகரமாக,
கடலாழம் காண முடிந்தாலும் பெண்கள் மனதாழம் காண முடியாது என்று சொல்லுவார்கள் அதற்கேற்ப பெண்மொழி பல நல்ல கருக்கு முத்துக்களை தன்னகத்தே பொதிந்து வைத்திருக்கிறது
வாழ்த்துக்கள்
அன்புடன்
தமிழ்த்தேனீ
rkc1947@gmail.com
http;//thamizthenee.blogspot.com
பாராட்டுக்கள்
பதிலளிநீக்குcongrats madhavaraj,
பதிலளிநீக்குwomens and magnets, both are having same characters.
they will attract faster then others.
பெண்கள் எப்பொழுதும் ஒரு பெட்டகம் போலக் கதைகளைத் தங்களுக்குள் கொண்டிருக்கிறார்கள். புது இடங்களிலும், இன்னும் பல இடங்களிலும் சூழ்ந்திருக்கும் மௌனப்பூட்டுக்களை சில புன்னகைகளாலும் , கதைச் சாவிகளாலும் எளிதில் உடைத்துவிடுகிறார்கள்.
பதிலளிநீக்குஉங்கள் பெண்மொழி சிறப்பு நண்பரே !
சின்ன அம்மிணி
பதிலளிநீக்குடாபிக் இல்லையென்றாலும், அவர்கள் எப்படி இயல்பாய் பேச, பழக முடிகிறது என்பது முக்கியமாகப் பட்டது.
ஆண்கள் எவ்வளவுதான் வெளியே சுற்றி வந்தாலும், தன் தலையை ஓட்டுக்குள் இழுத்துக்கொள்ளும் ஆமையின் மனோபாவம் கொண்டவனாய் இருக்கிறான்.
கெக்கே பிக்குணி!
பதிலளிநீக்குஆண் இன்னும் பெண்ணை புரிந்து கொள்ள முயல்கிறவனாய் இருக்கிறான் என்பதற்காகத்தான் கடைசி வரியை எழுதினேன். அது இல்லாவிட்டாலும் நன்றாயிருப்பின், சரிதான். நன்றி.
இனியா!
பதிலளிநீக்குதமிழ்த்தேனீ!
சந்திரவதனா!
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.
மாதவன்!
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ரிஷான் ஷெரிப்!
பதிலளிநீக்கு//பெண்கள் எப்பொழுதும் ஒரு பெட்டகம் போலக் கதைகளைத் தங்களுக்குள் கொண்டிருக்கிறார்கள்.//
மிக அழகாகச் சொல்கிறீர்கள்.
தங்கள் வருகைக்கு நன்றி.
இயல்பாகப் பழகிப் பேசும் பெண்களைப் போலவே, சகஜமாகப் பழகிப் பேசும் ஆண்களும் பலர் இருக்கிறார்கள். ஆனால், பெண்களுக்கே இவ்விஷயத்தில் முதல் மதிப்பெண்!
பதிலளிநீக்குவழக்கம் போலவே சுவையாக இருந்தது!
ஆணகள் பேசிப்பழகுவதில் இருக்கும் தயக்கமேதும் பெண்களிடம் இல்லை. பிரேக்கிங் தி ஐஸ் அவர்களுக்கு வெகு எளிது.
பதிலளிநீக்குஉங்களுக்கு ஒரு விருது என் வலையில் இருக்கிறது பெற்றுக் கொள்ள அழைக்கிறேன்.
வடகரைவேலன்!
பதிலளிநீக்குவிருதை தங்களிடமிருந்து பெற்றதில் மகிழ்ச்சி. தங்கள் கருத்துக்கும் நன்றி.
ரொம்ப நாள் கழித்து வருகிறேன் இந்தப்பக்கம்.
பதிலளிநீக்குமிக நன்றாகச் சொல்லி இருக்கின்றீர்கள். சொல்ல வந்த விஷயத்தையும் உணர முடிகின்றது. அடுத்த பதிவுகளில் பெண்மொழியின் வேறு பல பரிமாணங்களையும் எதிர்பார்க்கிறேன்.
ஒரு கவிதை வாசித்த அனுபவம்.
பதிலளிநீக்கு//பெண்கள் எப்பொழுதும் ஒரு பெட்டகம் போல//
குழந்தைமொழி பெண்மொழி எல்லாவற்றையும் நீங்கள் புரிய முற்படுவதே ஒரு அழகாக இருக்கிறது. வெளிப்படுத்தியிருக்கும் விதமும் அருமை.
பதிலளிநீக்குஅன்பின் மாதவராஜ்
பதிலளிநீக்குஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள, இயல்பான நட்பினை அடிப்படையாகக கொண்ட , பழகும் தன்மை அழகுற உணர்த்தப்பட்டிருக்கிறது.
பகிர்ந்தமைக்கு நன்றி மாதவராஜ்
vsk!
பதிலளிநீக்குவிருதை கண்டதில் உங்களை மறந்து விட்டேனே. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.,
ஆஹா, நந்தா...!
பதிலளிநீக்குவாருங்கள்.
நீங்க சொன்ன மாதிரி எழுதணும்.
எழுதி தீராத விஷயம் அது....
வருகைக்கு நன்றி.
சதிஸ்கண்ணன்!
பதிலளிநீக்குமுதன்முறையாக இங்கு வந்திருக்கிறீர்கள் என நினக்கிறேன். வருகைக்கு நன்றி..
தீபா,
பதிலளிநீக்குசீனா!
இருவருக்கும் நன்றி.
அழகாக வந்திருக்கிறது மாதவராஜ்..
பதிலளிநீக்குஇன்னும் பெண்களின் பல பரிமாணங்களைப் பலவித மொழிகளாக நீங்கள் விரிக்கலாம்.. விவரிக்கலாம்..
முயன்று பாருங்கள்..
காதல் ராஜாவுக்கு நன்றி. முயற்சிக்கிறேன்.
பதிலளிநீக்குகதை எழுதாமல் தப்பித்திரியும் மாது இப்படி அரைப்பக்கம் எழுதி ரொம்ப காலம் ஏமாற்ற முடியாது
பதிலளிநீக்குதமிழ்ச்செல்வன்