பரமபதம் அல்லது மாயாபஜார் - 3

அண்மைக் காலங்களில் பங்குச் சந்தை தொடர்ந்து சரிந்து கொண்டே வந்தது. இதனால் ஹரிஸ்குமாருக்கு (இவர் பஞ்சாபில் ஒரு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியர்)  நஷ்டம் ஏற்பட்டது. சத்யம் நிறுவனத்தின் மோசடி வெளி வந்ததுமே சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. இதையடுத்து ஹரிஷ்குமாருக்கு ரூ.15 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டார்.

- தினகரன் பத்திரிக்கைச் செய்தி, 10.1.2009

 

share market 1

 

எந்த சித்திரகுப்தன் ஹரிஸ் குமாரின் கணக்கை எழுதியது?

 

இந்த பங்குகளுக்கு உயிரின் மதிப்பும், தேசத்தின் மரியாதையும் முக்கியம் இல்லை என்று தெளிவாகிறது. பங்குச் சந்தை அப்படியொரு மோசடிக்கான களமாக இருக்கிறது.   சந்தையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பை வைத்தோ, கம்பெனியின் உண்மையான லாபங்களை பொறுத்தோ பங்குகளின் விலை உயர்ந்தால் அது நேர்மையானதாக இருக்க முடியும். அப்படிப்பட்ட சந்தையின் நிலவரம் நமது சினிமாக்களில் ஆபரேஷன் தியேட்டர்களில் காண்பிக்கிற  மூச்சு அலைவரிசையின் பச்சை மின்கோடுகளைப் போல மேலும் கீழும்  வெட்டிக்கொண்டு இருக்காது. ஒரே நாளில் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. சீரானதாகவும், நிலையானதாகவும் இருக்கும். ஆனால் 'எதிர்பார்ப்புகள்'(speculations) என்று இங்கே ஒரு வர்த்தக சூதாட்டத்தை நிறுவி பங்குச்சந்தையை இந்த முதலாளித்துவ அமைப்பு தன் அபிலாஷைக்கு ஏற்ப தகவமைத்திருக்கிறது.

 

பங்குச் சந்தை வீழ்ச்சியால் நாட்டின் பொருளாதாரமே தலைகுப்புற வீழ்ந்துவிடும் என்று வாயிலும் வயிற்றிலும் அடிக்கின்றனரே... இந்த சாதாரண மக்களுக்கு சம்பந்தமில்லாத பொருளாதாரம் இந்த தேசத்தின் பொருளாதாரமாக எந்த அறிவாளி இங்கே கற்பித்தவன்? இந்தியாவின் கற்பகத்தரு இந்த பங்குச் சந்தை அல்ல. அதோ  வானம் பார்த்த பூமியில் வாழ்க்கையை கிடத்தி வெயிலில் உழுது கொடுக்கும் இந்த தேசத்தின் எளிய மக்கள்தான். வங்கிக்கணக்கே  இன்னும் 70 சதவீத மக்கள் வைத்திராத இந்த தேசத்தில் இந்த சென்செக்ஸ் புள்ளிகள் எதைக் கிழித்துவிடப் போகின்றனவாம்? பங்குகளின் மதிப்பு உயர்ந்துவிட்டால் இங்கே பாலாறும் தேனாறுமா ஓடிவிடப் போகிறது?

 

தன் வாழ்க்கையில் அப்படி எதாவது ஒடும் என்று ஹரிஸ்குமார் ஆசைப்பட்டிருக்கிறார். வேகமாக முன்னேற வேண்டும் என்று அவசரப்படிருக்கிறார். கனவுகள் விதைக்கப்பட்டு, எதிர்காலத்திலிருந்து பிடுங்கப்பட்டிருக்கிறார்.

 

மரணம் இயற்கையானது என்று எவன் சொன்னது?

கருத்துகள்

12 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 2. ம்ம்ம் - பங்குச் சந்தையில் ஈடுபடுபவர்களுக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம் - இருப்பினும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இது மாதிரி அப்பாவி மக்கள் - பங்குச் சந்தையினைப் பற்றி முற்றிலும் அறியாதவர்கள் ஆசைப்பட்டு ஏமாற்றம் அடையும் போது தவிர்க்க இயலாவண்ணம் துன்பத்தினைத் தேடுகிறார்கள்.

  வங்கிக்கு ஒரு நாள் தொடர்பு கொண்டேன் - விடுப்பில் இருந்தீர்களென அறிந்தேன்.

  பதிலளிநீக்கு
 3. Stock Market is a maze. If worked closely with one's own fate, and his/her chart, they can come out of losses.
  *******

  Unrelated to this post, regarding this post and your comments....

  பதிவுபோதை ஐயாவின் கதையை நான் காப்பியடித்தேனா?

  அட்மிஷன்- கல்கி தீபாவளி சிறப்பிதழ்

  அதில் நான் தான் முதல் கமண்ட்ஸ் போட்டுள்ளேன். என் கதைகள் மாதிரி உள்ளது என்று.... கிழே பாருங்கள்....

  //
  Hi Nice Story!

  I reminds me of multiple stories that I have written in my blog over the last 2 months.

  Appreciate your inputs on them!

  Regards
  Ramesh

  4:39 AM//
  அவரும் அதை படித்ததற்கு அறிகுறியாக, பப்ளிஸ் செய்துவிட்டு, இதை கேட்டார்.

  //ரமேஷ், லிங்க் கொடுங்க. உங்க கதைகளைப் படித்துவிட்டு சொல்கிறேன்.//

  நானும், எனது பதிவுபோதை ப்லோக் URL கொடுத்தேன். என் ப்லோக் ப்ரோபையில் மூலம் இமெயில் தெரிந்து மெயில் செய்திருக்கலாம். அதை அவர் பப்ளிஸ் செய்யவில்லை. காரணமும் சொல்லவில்லை. என்னிடம் அந்த கமன்ட்சின் காப்பியும் இல்லை. இண்டேர்ணலைஸ் டாபிக் வந்த் போது இதை வைத்து தான் என் உரையாடல் திவ்யாவுடன் அமைந்தது.

  அந்த உரையாடலுக்காக நான் பகிரங்கமாக மன்னிப்பு கோருகிறேன். அதை எடுக்குமாறு திவ்யா அவர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 4. EXCELLENT ARTICLE...PEOPLE SUFFERS FROM THE DOWN FALL OF SHARE MARKET BECAUSE OF THEIR GREED...ALWAYS EXPERTS ADVICE TO DO SMALL INVESTMENT VALUE IN SHARES...THAT TOO OUR EXCESS MONEY(IF ANY)....BUT PEOPLE WANTS TO DO GAMBLING IN SHARES....ALSO DO INTRA DAY TRADING, WITH HUGE MONEY...WIHTOUT ANY SERIOUS THINKING...THE BEST WAY IS TO DO OUR JOB/BUSINESS, DO SOME SMALL SAVINGS FROM OUR HARD YEARNED MONEY....NEVER CONVERT THE "LUXURY" INTO "NECESSACITY"(H.H.SWAMI VIVEKANANDA)...STOP THE GAMBLING IN SHARE MARKET...DO SMALL INVESTMENTS ONLY(BECAUSE ALL OF A SUDDEN, PEOPLE WILL NOT COME OUT OF THEIR ROUTINE)...."THIS MAYABAZAAR IS SUITABLE FOR ALL BIG INDUSTRIALISTS AND OTHER GIANTS"..."INDIA, AS THE AUTHOR WIRGHTLY MENTIONED...IS A COUNTRY DEPENDS ON IRRIGATION....CRORES OF OUR FARMERS ARE STILL NOT AWARE OF THIS SHARES AND EVEN BANK DEMAT ACCOUNTS....WHAT TO SAY..."INDIA" IS EMERGING AS ONE OF THE ......BIGGEST COUNTRY IN THE WORLD....BUT OUR COUNTRY'S SPINAL CORD, IS UNDERGOING DISC PROLAPSE...NEED TO UNDERGO VERY CAUTIOUS TREATMENT....HOPE,WILL GET RECOVERED WITH THE GRACE OF "ALMIGHTY" ONLY...

  பதிலளிநீக்கு
 5. I am so ignorant about sharemarkets and have never bothered to know about it too. But I had colleagues who have offered to help me open a Dmat account (that's the only term i know!) I have politely declined because I was least interested.

  What I never imagined was this is such a mind-boggling web that could take innocent (may be a little greedy?!) lives at stake.
  I am shocked.

  பதிலளிநீக்கு
 6. சீனா!

  என்ன இது...!
  ஒரே நாளில் என் பதிவுகள் எல்லாவற்ரையும் படித்து இருக்கிறீர்கள்.
  சந்தோஷமாகவும் இருக்கிறது.... ஆச்சரியமாகவும் இருக்கிறது.

  வங்கிக்கு தொடர்பு கொண்டீர்களா?
  போன் நம்பர்... எப்படி?

  பதிலளிநீக்கு
 7. ரமேஷ்!

  பங்குச் சந்தை போதையை தெளிவு படுத்த வேண்டி இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 8. நண்பர் மாதவராஜ்,

  லாட்டரி, பைனான்ஸ் கம்பென்யில் பணம் போடுதல், மல்டி லெவல் மார்கெட்டிங் செய்தல் போன்ற வழிகளில் பணம் சம்பாதிப்பதற்கும் , பங்கு வர்த்தகத்திற்கும் என்ன வித்யாசம். இது என்னமோ வானத்தில் இருந்து குத்தாற்போல் பேசுவதில் ஒன்றுமில்லை. சீக்கிரம் பணம் பண்ண வேண்டிய தேவையும், பணமே வாழ்வின் பல்வேறு நிலைகளிலும் அவசியமானது என்ற மூடக் கருத்துக்கள் இருக்கும் வரை இதெல்லாம் இருக்கும். (Systemic Failure)

  பதிலளிநீக்கு
 9. aM REALLY APPRECIATE YOU I LOVE YOUR WORDS AND EVRYTHING Y AM SAID LIKE THIS BECAUSE AM A BRANCH MANAGER IN SHARE MARKET BROKERAGE

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!