பரமபதம் அல்லது மாயாபஜார்- 2

 


vk-som03-chess

 

 

 

 

 

 

 

 

ஏணிகளிலேயே பயணம் செய்தது
பாம்பு கடித்து
பாதாளத்தில் விழுந்திருக்கிறது.

 

விழுந்த பிறகுதான்
தெரிகிறது
விழுந்ததும்
பாம்பு என்று.

 

இன்னும் தெரியவில்லை 
இருக்கும் ஏணிகளும்
பாம்புதான் என்பதும்
கட்டங்களிலும், ஆட்டங்களிலும்
ஏணிகளே இல்லை என்பதும்.

கருத்துகள்

2 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!