விமர்சனங்கள் : “வார்த்தைகளைக் கொட்டாதீர்கள்”

theeratha pakkangal 01

 

பின்னூட்டங்களிலும், தனி மெயிலிலும், தொலைபேசியிலும் நண்பர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். அன்பும் அக்கறையும் கொண்டவர்களால் கடந்த இரண்டு பதிவுகள் குறித்து வந்த விமர்சனங்கள் அவை. ‘தங்கள் நியாயமும், ஆத்திரமும் முழுக்க நியாயமானவை என்ற போதிலும் தங்களைப் போன்றவர்கள் அதுபோன்ற வார்த்தைகளை எழுத்தில் பயன்படுத்த வேண்டாம். அவைகளை சரிசெய்துவிடுங்கள்.’ என்பதுதான் அவர்கள் சுட்டிக்காட்டும் விஷயம்.

 

அந்த டி.எஸ்.பி யாரென்று தெரியாது. ஆனால் அந்தப் பெண்மணியின் குரல்வளையில் கைவைத்து அந்த டி.எஸ்.பி தள்ளிவிட, கதறிக்கொண்டே அவர்கள் கீழே விழுந்த காட்சியைப் பார்த்ததும், கொதித்துப்போன மனநிலையில் வந்த வார்த்தைகளே அவை. அந்தக் கோபத்திற்கும், உணர்வுக்கும் நானும் என் எழுத்தும் உண்மையாய் இருந்திருக்கிறோம்.

 

அதுபோலத்தான் இந்த ஆட்சியாளர்கள் மீது ஏற்பட்ட கோபமும். தங்கள் ஆட்சியில் மக்களுக்கு எவ்வளவு அநியாயம் செய்தாலும் அவர்களால் ஐந்து வருடங்கள் கழித்து, மீண்டும் பதவிக்கு வரமுடிகிறது. இந்த ஜனநாயக நடைமுறையில், ஐந்து வருடம் பதவியில் அவர்கள் இல்லாமலிருப்பதே மக்கள் அவர்களுக்குக் கொடுக்கும் கடும் தண்டனையாய் கருதப்படுகிறது. ஆனால் மக்களுக்கோ வாழ்க்கையே பெரும் தண்டனையாய் உருக்குலைந்து போகிறது. அவர்கள் எப்போதுமே மீண்டும் பதவிக்கு வராமல் போகட்டும் என்ற ஆத்திரத்தில் வந்த வார்த்தைகளே அவை.

 

தனிப்பட்ட மனிதனின் கோபம் இல்லை இது. ஒரு சமூக மனிதனின் குரலும், அடையாளமும் ஆகும். அடிப்பவர்களுக்கு எதிராக அடிவாங்குகிறவர்களின் சிந்தனை. அதிலிருக்கும் தார்மீக கோபத்தை புரிந்துகொள்ளுங்கள் என வேண்டுகிறேன்.

 

இருந்தபோதிலும், அந்த நண்பர்கள் சுட்டிக்காட்டும் பிரக்ஞையோடு இருக்க முயற்சிக்கிறேன் இனி.

 

நன்றி.

கருத்துகள்

8 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. அண்ணா, நல்ல கலைஞன் ஒருபோதும் ‘டோன் டவுண்’ பண்ணக்கூடாது; பவுடர் பூசிய அல்லது காயடிக்கப்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்த நாமென்ன சினிமாவுக்கா எழுதிக்கொண்டிருக்கிறோம்?! அடிச்சு ஆடுங்க!

    பதிலளிநீக்கு
  2. மாது,கடந்த உங்கள் இரண்டு பதிவும் சமூகத்தின் மீது உண்மையான அக்கறை கொண்டவர்களின் கோபத்தின் வெளிப்பாடாகத்தான் இருந்தது.இதில் வருத்தப்படுவதற்கு ஒன்றும் இல்லை.யாருடைய மனதையும் பாதிக்காமல் பதிவு இருந்தால் அதில் உண்மைத்தன்மை இருக்காது.சபை நடுவில் அந்தபெந்மனியின் மீது கை வைக்கும் போது அவர்கள் அவமானத்தில் எப்படி பாத்க்கப்பட்டிருப்பார்கள்.அந்த அதிகாரத்தை அந்த மிருகத்திற்கு யார் கொடுத்தார்கள்.

    பதிலளிநீக்கு
  3. நாம் நாமாக இருக்க முடியாத சில கால கட்டங்களும் வருவதுண்டு. ஆம்.. சில நேரங்களில், சில மனிதர்களுக்கு, ’அவர்களின் மொழியில்’ பேசினால்தான் விளங்க வைக்க முடிகிறது.

    தனக்கு வரும் இழப்புக்களை/அவமானங்களை மன்னிப்பதற்கு மட்டும்தான் ஒரு மனிதனுக்கு அனுமதி உண்டு (கொன்றக்க இன்னா செயினும்...); சமூகத்திற்கு வரும் இழப்புக்களை/அவமானங்களை மன்னிப்பதற்கோ, மறப்பதற்கோ யாருக்கும் உரிமை இல்லை (அது களை கட்டதொனொடு நேர்).

    பதிலளிநீக்கு
  4. உங்களின் கோபத்தில் யாருக்கும் இரண்டாம் அபிப்ராயம் இருக்கமுடியாது. ஆனால் ஓசை செயலாக முடியாதல்லவா?

    நம் கோபத்துக்கும் வடிவம் கொடுப்போம்-எதிர்க் கருத்துக் கொண்டவர்களும் மதிக்கும் விதமாக.யாரையும் காயப்படுத்தாமல்.

    நிச்சயம் நாம் விரும்பும் மாற்றம் நிகழும்.எழுத்திலும் வாழ்க்கையிலும் ஒன்றாய் ஒருமிக்கும் நண்பர்கள் இணையும்போது மாற்றத்துக்கான தடம் பிறக்கும்.

    வாழ்த்துக்கள் மாதவ்.

    பதிலளிநீக்கு
  5. இந்த தார்மீக கோபம் தேவைதான் சார் ! இன்றைய சுழலில் இது கட்டாயம் தேவை . இந்த கோபம் இல்லாத மனிதன் தான் எதையும் சமரம் செய்து கொண்டு நமக்கென்ன என்று போய் விடுகிறான் .கடுமையான பேருந்து கட்டண உயர்வை அடுத்து இப்ப மிகக்கடுமையான மின் கட்டண உயர்வு .....மக்களால் என்ன செய்ய முடியும்...... என்கிற ஆட்சியாளர்களின் அதிகாரத் திமிர்தான்.....மக்களுக்கு இழைக்கப்படும் இந்த எல்லா அநீதிகளும் !

    பதிலளிநீக்கு
  6. தங்களின் இரண்டு பதிவும் படித்தேன் அதில் உள்ள கோபம் சரியானது தான். அதில் எந்த தவறும் இல்லை.

    நன்றி

    செய்யது
    துபாய்

    பதிலளிநீக்கு
  7. வாருங்கள்... 'ரப்பர்' நெம்புகோலால் உலகத்தைப் புரட்டுவோம்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!