ஜெருசலேம் நோக்கி ஒரு பயணம்…

muthukrishnan

விஜய் தொலைக்காட்சி நடத்திய நீயா நானாவில் பங்கேற்று,  அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை  அவர் தோலுரித்துக் காட்டிய  போது, ஆச்சரியமாக இருந்தது.  ‘ஆஹா, நம்ம முத்துக்கிருஷ்ணன்’ என பெருமையாகவும் இருந்தது. அத்தனை தெளிவும், தகவல்களும் அவரது பேச்சில் இருந்தன. சேகுவேரா குறித்த ஆவணப்படத்தை அவர் தயாரித்ததிலிருந்து எனக்குத் தெரியும். எப்போதாவது,  எதாவது எழுத்தாளர் சங்க நிகழ்ச்சிகளில் பார்ப்பது, உரையாடிக்கொள்வது  என்றிருந்த நட்பும் தோழமையுடன் கடந்த காலங்களில் பத்தி எழுத்தாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும், கட்டுரையாளராகவும் தன்னை வளர்த்துக்கொண்டு, முழுநேரமும் எழுத்தைச் சார்ந்த மனிதனாக தன்னை உயர்த்தியும் கொண்டு இருந்தார். தொடர்ந்து இயங்கிக்கொண்டு மனிதர்கள்,  தங்களது உற்சாகத்தை   சகமனிதர்களுக்கும் கொடுத்து விடுகிறார்கள்.

 

சென்ற வருடம் முத்துக்கிருஷ்ணன் புதுதில்லியிலிருந்து  தரைவழியாக 10 ஆயிரம் கி.மீ பயணமாக பாலஸ்தீனம் சென்றிருக்கிறார். அங்கிருக்கும் மக்களுக்கு  நிவாரணப் பொருட்கள் வழங்கச் சென்ற சர்வதேச அமைதிக்கு குழுவில் இடம் பெற்ற ஒரே தமிழர்  இவர்தான்.  ஹிந்து, வல்லினம் பத்திரிகைகளிலும் காணொளியிலும் அதுகுறித்த பதிவுகளைக் காணலாம்.

 

இந்த ஆண்டும் அதே குழுவினருடன் அவர் ஜெருசேலம் நோக்கி ஒரு நெடிய பயணம் மேற்கொள்ள இருக்கிறார். மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் துவங்கி,   8 நாடுகளின் வழியாக ஜோர்டன் தலைநகரம் அம்மான் சென்று அங்கிருந்து மார்ச் 30 ஆம் தேதி ஜெருசுலத்திற்கு செல்லவிருக்கிறார். எழுத்தை மட்டும் அவர் நம்பவில்லை. நம்மைப் போன்றவர்களையும் தான்.

 

இந்தப் பயணத்திற்கு உதவி செய்ய விரும்புகிறவர்கள், A.MUTHUKRISHNAN +919443477353 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். A.MUTHUKRISHNAN State Bank of India SB A/C no 30322814376 வங்கி கணக்கில் செலுத்தலாம். Branch - Madurai Kamaraj University Branch, IIFSC Code - SBIN0002235.

 

அவரது பயணம் சிறக்கவும், நல்ல அனுபவமாகவும் வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்!

கருத்துகள்

8 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணனின் பயணம் சிறக்க வாழ்த்துகிறோம். பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. தோழர் முதுகிருஷ்ணன் மதுரையிலிருக்கும் போதே பழக்கும் உண்டு. நாகபுரியில் என் இல்லத்திற்கும் வந்திருந்தார். ஸுரெஷ் கைரனார் எனக்கும் நெருக்கமான நண்பர்.நாகபுரியிலிரு ந்து பல நண்பர்கள் என்னையும் அழைத்தார்கள். என்வயதும்,உடல் நிலையும் மற்றவர்களுக்கு பாரமாக இருக்கும் என்பதால் தவிர்த்தேன். முத்துகிரு ஷ்ணன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  3. முத்துகிருஷ்ணனின் பயணம் -
    அ.முத்து கிருஷ்ணன் தமிழில் எழுதி வரும் இளம் படைப்பாளிகளில் முக்கியமானவர். சமூகம், சுற்றுப்புறச்சுழல், மனித உரிமைகள், விளிம்புநிலை மக்கள், சிறுபான்மையினர், உலகமயம் என பல்வேறு தளங்களில் எழுதிவருகிறார்.
    நீயா நானா, புதுப் புது அர்த்தங்கள் என பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து காத்திரமானவிவாதங்களை மேற்கொண்டு வருபவர். எழுத்தாளராக மட்டுமின்றி ஒரு தீவிரமான சமூக செயல்பாட்டாளராக தொடர்ந்து தனது கள ஆய்வுகளுக்காக இந்தியாவெங்கும் சுற்றிவருபவர்.

    for full article see link

    http://www.sramakrishnan.com/?p=2848

    பதிலளிநீக்கு
  4. எட்டு வருடங்களுக்கு முன்னர் என்று நினைக்கிறேன். ஒரு கலந்துரையாடலில் பாலஸ்தீனியர் ஒருவரைச் சந்தித்தேன். அதுதான் நான் முதல் தடவையாக ஒரு பாலஸ்தீனியரைச் சந்தித்தது. நான் இலங்கை என்று சொன்னதும் எங்களை அறியாமல் ஒரு சகோதர உணர்வு உடனேயே உண்டானது. ஒரு விதவை இன்னொரு விதவையை சந்திப்பதுபோல. ஓர் அனாதை இன்னொரு அனாதையை சந்திப்பதுபோல. ஒரு நாடிழந்தவன் இன்னொரு நாடிழந்தவனை சந்திப்பதுபோல. எங்கள் துயரத்தை அவர்கள் அறிவார்கள். அவர்கள் துயரத்தை நாங்கள் அறிவோம்.

    இன்று 18 நாடுகளைச் சேர்ந்த 500 பேர் பாலஸ்தீனம் நோக்கி பயணம் மேற்கொள்ளுகிறார்கள். அந்தக் குழுவில் நண்பர் அ. முத்துகிருஷ்ணன் இருக்கிறார். அவருடைய பயணம் வெற்றிகரமாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்.

    அ.முத்துலிங்கம்

    http://amuttu.net/viewArticle/getArticle/48

    பதிலளிநீக்கு
  5. மாதவராஜ் அவர்களின் பதிவை வாசித்த நண்பர்க்ளுக்கும், வாசித்து விட்டு வாழ்த்திய தோழர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல !!!!

    பதிலளிநீக்கு
  6. எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணனின் பயணம் சிறக்க வாழ்த்துகிறோம்...

    பதிலளிநீக்கு
  7. பகிர்ந்தமைக்கு நன்றி... தோழர் முத்துகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!