பேச்சும், எழுத்தும் வேறு வேறாய்....

writer shajahan

தள்ளி நின்று அவரிடம் நான் போனில் பேசினால்  கூட “ஷாஜஹான் கிட்டத்தான பேசுனீங்க..?”  என்று அம்மு கண்டுபிடித்துவிடுவாள்.  சிரித்துக் கொண்டேதான் இருக்க வேண்டும். அப்படியொரு இயல்பான நக்கலும், நையாண்டியும் அவரது வார்த்தைகள் முழுக்க குதித்து கும்மாளமிடும். இதற்கு நேர்மாறாய் அவரது எழுத்துக்கள் இருக்கின்றன. அவரது கதைகளும், கவிதைகளும் பெரும்பாலும்  இழப்பின் வேதனையையும், வலியையும் சுமந்து நம்மை வதைக்கும் அல்லது மௌனங்களில் ஆழ்த்தும். மிகுந்த அகவயப்பட்ட மனிதர்களாலும், அனுபவங்களாலும் ஆனவை. எப்போதோ எழுதிய அவரது கவிதைகள் சில இங்கே.....

 

(1)


ஒருவரை ஒருவர்
கண்டுகொள்ள நேரமற்ற
பரபரப்பான நகர வீதியில்
நாற்சந்தியில் நிற்கும்
கண் தெரியா கலைஞனுக்கு
வாய்த்திருக்கிறது
சகலரின் துக்கத்தைப் பார்க்கவும்
புல்லாங்குழலில் அதை வாசிக்கவும்

 

(2)


சுகமாய் ஏதும்
நினைவிலில்லை
நினைவில் இருப்பது
சுகமாயில்லை
பவர்ணமி இரவில்
தென்றல் சுகமும்
பழைய பாட்டில்
அவளது முகமும்
நினைவில் நின்றிடினும்
சுகமாய் இல்லை
சுகமாய் ஏதும்
நினைவிலில்லை


(3)


எந்தக் கடலின் கரிப்பாலும்
நிறம் மாற்றிட இயலா
முத்தின் வெண்மையில்
தெரிவதெல்லாம்
சத்தியத்தின் பிடிவாதம்

 


(4)

 

தேகம் நாடி
நீளும் விரல்கள் பற்றி
நகக்கண்களில்
ஊசிகள் பாய்ச்சு

அடிவயிற்றில்
ஆழச் செருக
புத்தம் புதுக் கத்திகள்
உறை நீக்கி வை

பிஞ்சுக் கன்னங்கள்
பக்கம் நெருங்கி
முத்தமிடுகிறாற்போல்
கடித்துத் துப்பு

கண்டு கொள்வது
கடினமாகும்
முகமற்ற முகங்களின்
முகமிட்டு நிரப்பும் வரை

 

ஏற்கனவே ஷாஜஹான் பற்றி தீராதப்பக்கங்களில் பேசியிருந்தாலும் இப்போது இவையெல்லாம் எதற்கு தெரியுமா? விரைவில் எழுத்தாளர் ஷாஜஹான் வலைப்பக்கம் ஆரம்பிக்க இருக்கிறார். சினிமாவுக்குத்தான் டிரைலர் போடுவதா. வலைப்பக்கங்களுக்கும் போடுவோம்ல.

கருத்துகள்

20 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. ஷாஜி வருவது மகிழ்ச்சியளிக்கிறது.நிறைய எழுதியிருக்க வேண்டிய படைப்பாளிகளின் பட்டியலில் ஷாஜியும் ஒருவர்

    பதிலளிநீக்கு
  2. எனக்கு இரண்டு நண்பர்கள்.இரண்டுபெருமே ஷாஜகான்கள். ஒருவர் டிரான்ஸ்போர்ட். குண்டாக இருப்பார். அவரை 70mm என்போம். மற்றொருவர் திருமங்கலம் ஷாஜகான். ஒல்லியானவர் .8mm என்று அழைப்போம்.பதிவுலகத்திற்கு வரும் ஷாஜகானை வரவேற்கிறேன் ---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  3. ம் நல்லது அவர் தொடங்கும் வலைபக்கத்தின் முகவரியை உங்களது பதிவில் தெரியபடுத்துங்கள் !

    பதிலளிநீக்கு
  4. இப்படிப்பட்ட ஒருவர் வலைப்பூவை இவ்வளவு தாமதித்து.ஏன்?
    கவிதை என்ற பெயரில் வார்த்தைகளை ஒன்றின் கீழ் ஒன்றாக
    எழுதி வெறுப்பேற்றும் நேரத்தில் இவர் வருகை சந்தேகமில்லாமல்
    அவசியம்.நல்வரவு.

    பதிலளிநீக்கு
  5. என் மனதுக்கு நெருக்கமான சிறுகதைகள் தோழர் ஷாஜஹான் கதைகள். வரவேற்போம் அவரை!...வருக!.... இக்பால்

    பதிலளிநீக்கு
  6. shajahaan nalla palli aasiriyar. avar petchil enrum inimai nirainthu irukkum.. kavithaikal neengkal solvathu pola sokam kondullathu.. viraivil arambam.. vaa .. vaa ena alaikirom..!

    பதிலளிநீக்கு
  7. ஷாஜகானின் படத்தை எடுத்தவருக்கு ஆயிரம் பாராட்டுக்கள்.யார் காலையோ வாருவதற்காக (பேச்சில்தான்) யோசிக்கும் அந்தமுகத்தின் சிறு பிள்ளைத்தனமான குறும்பு ---ஒரு பிரதியை அவருடைய துணைவியாருக்கு அனுப்பி வையுங்கள்-சட்டம் போட்டு மாட்டட்டும்--to preserve for பொஸ்டெரிடி---காஸ்யபன்

    பதிலளிநீக்கு
  8. வணக்கம். வருக வருக ஷாஜகான் அவர்களே..இங்கும் தங்களின் மணம் பரவும்..மல்லிகையாய்..மோகனா

    பதிலளிநீக்கு
  9. மகிழ்ச்சியான விசயம்தான். ஆனால், துவக்ககட்டத்தில் அவரிடமிருந்த துடிப்பை அது மீண்டும் கொண்டு வருமா... அமுது என்ற கையெழுத்துப்பத்திரிகை, பின்னர் ஸ்டென்சில் போட்டு அது வந்தது. அப்புறம் அச்சில்... கூடவே கவியமுது என்ற சிறு(வடிவத்தில்) பத்திரிகை... இதில் ஏற்பட்ட பின்னடைவை ஈன்ற பொழுது தாங்கிப் பிடித்து நிறுத்தியது... தமுஎச அவரைக் கூர்மைப்படுத்தியது. ஊருக்கெல்லாம் அறிமுகப்படுத்தியது. என்னை ஏன் டீச்சர் பெயிலாக்குனீங்க அடுதத கட்டத்திற்கு அழைத்துச் சென்றது... பேட்டியெடுத்தால்கூட அதில் தனித்தன்மை தெரிந்தது... இப்போது...??? நமக்குத் தேவை அந்தப் பழைய ஷாஜகான்...

    பதிலளிநீக்கு
  10. நமக்குத் தேவை அந்தப் பழைய ஷாஜகான்...????
    இதன் அர்த்தம் என்ன அய்யா..

    ஷாஜகான் அமைப்பில் இருந்து நீக்கப்பட்ட போது வாய் திறக்காது அமைதியாக இருந்து விட்டு, அவர் வேலைகள் ஏதும் செய்வதில்லை என்று தீவிர பிரச்சாரம் செய்து விட்டு, இப்ப வந்து எங்களுக்கு பழைய ஆள் வேண்டும் என்பது நீலிக் கண்ணீர் வடிப்பது போல உள்ளது

    பதிலளிநீக்கு
  11. நானும். அவரும் ஒன்றாகப் படித்தவர்கள். அமைப்பைத்தாண்டி எனக்கும். அவருக்கும் நட்பு உண்டு. மேலும் மாடசாமி கோம்பை என்ற பெயரை வைத்து எழுதியவர் சொல்வதில் எந்தவிதமான குற்றச்சாட்டும் என்னை நோக்கி எழுப்ப முடியாது. இதற்கு ஷாஜகான் சாட்சியாக இருக்க முடியும். இதில் சர்ச்சைகள் எதையும் வளர்க்க நான் விரும்பவில்லை. நன்றி.

    பதிலளிநீக்கு
  12. தமிழ்!

    ஆம். இந்த வருத்தத்தை தாங்கள் எப்போதுமே வைத்திருக்கிறீர்கள். கவிதைகளும், சிறுகதைகளும் சில எழுதிக்கொண்டு இருக்கிறார் என நினைக்கிறேன்.

    ஓலை!
    நன்றி.



    காஸ்யபன்!
    இப்படி தங்கள் நினைவுக்குறிப்புகளில் எவ்வளவு கொட்டிக்கிடக்கின்றன.


    கார்த்திகேயனி:
    நிச்சயம் சொல்வேன்.

    பதிலளிநீக்கு
  13. குமார்!
    தங்கள் வரவேற்புக்கும், பகிர்தலுக்கும் நன்றி.


    முத்துலெட்சுமி!
    தங்கள் வருகைக்கும் நானும் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.


    இக்பால்!
    அவர் எழுத்துக்களைப் படித்தவர்களுக்கும், அவரோடு பழகியவர்களுக்கும் அவர் எப்போதும் நெருக்கமாகிவிடுவார்.


    மதுரை சரவணன்!
    அந்த ஆசிரியரை இங்கு வரவழைத்து நாம் கேள்வி கேட்போம் :-))))


    அருணன் பாரதி!
    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  14. அன்புடன் அருணா!
    தங்கள் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.


    கணேஷ்!
    அது ஒரு காலம் :-)))))

    பதிலளிநீக்கு
  15. Madasamy Kombai!

    நண்பரே, மீண்டும் ஷாஜஹான் தன் எழுத்துக்களோடு வரவேண்டும் என்றுதான் ஆதங்கத்தில் கணேஷ் சொல்லியிருக்கிறார். இதில், அமைப்பு போன்ற விவகாரம் எதற்கு. அவரை யாரும் அமைப்பிலிருந்து நீக்கவில்லை என்பது நான் அறிந்த உண்மை.

    பதிலளிநீக்கு
  16. Thanks for showing my interactive pictures!
    http://www.artistsindevon.com/water/water_1.htm
    ..is a link showing more of my content for your viewers.
    Thanks! Regards, Paul Gillard
    Editor (Artists in Devon.com)

    பதிலளிநீக்கு
  17. நீங்கள் சொல்வது உண்மைதான் மாது!
    ஷாஜியை யாரும் எதிலிருந்தும் நீக்கிவிட முடியாது. அவனாக நீக்கிக் கொண்டால் தான் உண்டு. அந்த ஆளுமையைக் கண்டு அஞ்சியவர்கள் சொல்லும் கதை அது! ஆனால் அவன் பட்ட காயங்கள் கவிதையாகவும் ஈன்ற பொழுதாகவும் வந்தது போதாது... வலைப்பக்கமாகவும் வரவேண்டும்.
    அமுத மழையில் நம் கவிதை நனைய வரவேற்போம்... வா ஷாஜி.
    உன் சிம்மாசனம்
    உனக்காகவே காத்திருக்கும் அதில் உன்னைத் தவிர யார் அமர முடியும்?

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!