கோபங்களை ஒருமுகப்படுத்துவோம்!

All unions-Feb 28

 

“நாளைக்கு நான் வேலைக்கு வருவேன்” எனச் சொல்லிக்கொண்டு இருந்தார் எங்கள் சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் நேற்று. இதுவரை நடந்த எல்லா வேலைநிறுத்தங்களிலும் பங்கு பெற்றவர் அவர். சங்கத்தின் நடவடிக்கைகளில் தன்னை அதிகமாக ஈடுபடுத்திக் கொள்பவர்தான். அவரை நேரில் சந்தித்துப் பேசினேன்.

 

“நீங்களே இப்படிச் சொன்னால் எப்படி..” என்று ஆரம்பித்து நான் அவரிடம் பிப்ரவரி 28 பொதுவேலை நிறுத்தம் ஏன் என்று விளக்க ஆரம்பித்தேன். நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டேயிருக்கும் விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்த வேண்டும், ஓய்வூதியச் சலுகையான பென்ஷன் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும், தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக ரூ.10000/- கொடுக்கப்பட வேண்டும், தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,  முழுக்க முழுக்க ஒப்பந்த தொழிலாளர்களை வைத்து தனியார் நிறுவனங்கள் இயக்கப்படுவதை நிறுத்த வேண்டும் எனப்  பிரச்சினைகளை ஒவ்வொன்றாக சொன்னேன். நாடு முழுவதும் அனைத்து பெரிய சங்கங்களும் இணைந்து நடத்தும் மபெரும் வேலை நிறுத்ததில் தாங்கள் பங்கு கொள்ளாமல் இருப்பது எப்படிச் சரியாய் இருக்கும் என கேட்டேன்.

 

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு  “சரி. இந்த வேலை நிறுத்தம் செய்வதால் எல்லாம் சரியாகிவிடுமா? அட போங்க தோழர்” என மிகச் சாதரணமாகச்  சொன்னார்.

 

“ஒருநாளில் எப்படி சரியாகி விடும். சரியாகாதுதான். அதற்காக பாதிக்கப்படுகிற நாம் எந்த எதிர்ப்பையும் காட்டாமல் இருந்தால்...?” என்றேன்.

 

”இல்ல தோழர். இதெல்லாம் வேஸ்ட். இப்படி வருசத்துக்கு ஒருமுறையோ இருமுறையோ  ஸ்டிரைக் செய்வோம்.  அவ்வளவுதான். கவர்ன்மெண்ட்டு அது பாட்டுக்கு செய்றத செஞ்சுக்கிட்டே இருக்கும்” என்றார்.

 

“ஒருத்தன் உங்களை விடாம அடிச்சுக்கிடே இருக்கான். எதுத்து ஒரு அடி கூட அடிக்க மாட்டீங்களா. தடுக்கக் கூட மாட்டீங்களா. அல்லது சத்தமாவது போட மாட்டீங்களா?” என்றேன். அமைதியானார். “இது பெரிய விளைவை ஏற்படுத்தாது. ஆனா கவர்மெண்ட்டுக்கு இத்தனை பேர் நம்மை எதுக்குறாங்கன்னாவது தெரியுமா இல்லியா.  இது போன்ற ஸ்ட்ரைக்தானே அதை சொல்லும்?” என்றேன்.

 

“சரிதான் தோழர், ஆனா  இந்த கவர்ன்மெண்டை நாம எதுத்து ஒண்ணும் ஆகப் போறதில்ல....”என  திரும்பவும் இழுத்தார்.

 

“ஆகும் தோழர். நிச்சயம் ஒருநாள் நல்லது நடக்கும். இப்போ புகையுது. ஒருநாள் பற்றும். அதுவரைக்கும் நெருப்ப அணையாம நாம வச்சிருக்கணும். அதுக்காகத்தான் இந்த ஸ்டிரைக்” என்று நம்பிக்கையாய் சொல்லி, தொடர்ந்து பேசி ,  ஒருவழியாய்  அவரை சம்மதிக்க வைத்தேன்.

 

அரசுக்கு எதிராக கோபம் மக்களிடம் இருக்கிறது. அதை தீவீரமடைய விடுவதில்லை இந்த அமைப்பு. உடனுக்குடன் நீர்த்து போகச் செய்யுமாறு நம் சிந்தனைகளை வடிவமைக்கிறது. பஸ் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு எல்லாம் அன்றாட வாழ்வைப் பாதித்தாலும் அன்றாடம் நாம் கோபப்படுவதில்லை.  பெட்ரோல் விலை கூடினால் கோபம் பொத்துக்கொண்டு வரும். இரண்டு நாளைக்குத்தான் அதன் ஆயுள். பிறகு பழகிவிடுகிறது. நண்பர்களுடனான உரையாடலின் போது, மாத ஊதியம் பற்றாமல் தவிக்கும்போது செத்துப் போன கோபங்கள் வயிற்றெரிச்சலாய் வெளிவரும். அவ்வளவுதான். எனவேதான் தைரியமாக மக்களுக்கு எதிரான காரியங்களை அதிகார வர்க்கம் ஓய்வில்லாமல் அடுக்கடுக்காய் செய்துகொண்டே இருக்க முடிகிறது.

 

சிந்திச் சிதறும் இந்தக் கோபங்களை ஒருமுகப்படுத்தவும், அடைகாக்கவுமே இது போன்ற வேலைநிறுத்தங்கள்.

 

பிப்ரவரி 28, பொதுவேலை நிறுத்தம் வெல்லட்டும்!

கருத்துகள்

10 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. கோபத்தை புதைத்து
    புதிய விதை செய்து
    விண்ணை முட்டி இடித்திடுவோம்

    அருமை பதிவு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. //அரசுக்கு எதிராக கோபம் மக்களிடம் இருக்கிறது. அதை தீவீரமடைய விடுவதில்லை இந்த அமைப்பு. உடனுக்குடன் நீர்த்து போகச் செய்யுமாறு நம் சிந்தனைகளை வடிவமைக்கிறது// இந்த வேலைய செய்வதில் முன்னணியில் நிற்பதே சி பிஎம்தான்.

    பதிலளிநீக்கு
  3. அரசுக்கு எதிராக கோபம் மக்களிடம் இருக்கிறது. அதை தீவீரமடைய விடுவதில்லை இந்த அமைப்பு. உடனுக்குடன் நீர்த்து போகச் செய்யுமாறு நம் சிந்தனைகளை வடிவமைக்கிறது

    பதிலளிநீக்கு
  4. அடைகாக்கும் கோபங்களின் சக்தியை திசை திருப்பி மொன்னை ஆக்கத்தானே இத்தனையும் நடக்கிறது.
    கெண்டகி சிக்கனை கொண்டு வருவதிலிருந்து,,,,,,,/

    பதிலளிநீக்கு
  5. எதையும் எதிர்த்து எதுவும் ஆகப் போவதில் என இங்கு இருக்கும் மந்தை மனநிலை தான் எல்லா தீமைகள் வளர்வதற்கு நாற்றாங்கால்

    பதிலளிநீக்கு
  6. The angry of the people must be generated continuously...more over we have to mobilize the mass for the
    PARALYZING STRIKES..ONCE IN A YEAR-THE TOKEN STRIKE-ALONE WILL NOT GENERATE THE ANGRY OF the people...AIR INDIA EMPLOYEES STRIKES+SBI EMPLOYEES STRIKES are recent best examples..so the frustration voices arises...we have to go for a open+open hearted debate on this subject ...In future no other way...

    பதிலளிநீக்கு
  7. @DhanaSekaran .S!
    நன்றி...

    @podang_maan!
    நாம் நம் எதிரிகளைப் புரிந்துகொள்வதுமில்லை. வெறுப்பதுமில்லை. நேசமானவர்களிடம் மட்டும் குறை காண்பதும், கொட்டித் தீர்ப்பதுமென வழக்கம் கொண்டிருக்கிறோம். இது ஒரு சாபம்!


    @விமலன்!
    மிக்க நன்றி.



    @Nellai Xavier!
    மிகச் சரியாகச் சொன்னீர்கள்!


    @vimalavidya!
    இதுபோன்ற உரையாடல்கள் நிச்சயம் அவசியம் இயக்கத்துக்கு. நன்றி தோழர்!

    பதிலளிநீக்கு
  8. //நாம் நம் எதிரிகளைப் புரிந்துகொள்வதுமில்லை. வெறுப்பதுமில்லை. நேசமானவர்களிடம் மட்டும் குறை காண்பதும், கொட்டித் தீர்ப்பதுமென வழக்கம் கொண்டிருக்கிறோம். இது ஒரு சாபம்!
    /// யார் நேசமானவர்கள்? நந்திகிராமில் டாடாவுக்காக மக்களைக் கொன்றவர்களா? மார்க்ஸியமெல்லாம் வேலைக்காவது, முதலாளித்துவத்த அட்ஜஸ்ட் பன்னிட்டு போக வேண்டியதுதான் என்று சொன்ன சிபி எம் தலைவர்களா? முல்லைப் பெரியாறு பிரச்சினையை உருவாக்கி அதை வைத்து இன்று வரை அரசியல் செய்யும் கேரள காம்ரேடுகளா? கூடங்குளம் போராட்டக்காரர்கள் அமெரிக்க ஏஜெண்டுகள்தானே என்று அணு உலையின் அரசியல் தெரியாதவர்கள் போல அப்பாவிகளாய் கேள்வி கேட்கும் செஞ்சட்டை போலிகளா? யாருங்க நேசமானவர்கள்? நீங்க நேசமானவரா என்றால் ஆம், அதனால்தான் உங்ககிட்ட கேக்குறேன்.

    பதிலளிநீக்கு
  9. முந்திய அரசுக்கு எதிராக கோபப்பட்டு மக்கள் போட்ட ஓட்டினால் இன்று மக்கள் எந்த நிலைமைக்கு வந்துவிட்டார்கள் தெர்யுமா?
    "கரண்ட் இல்லாமல் பக்கலிலும் இரவிலும் திண்ணைல உக்கார நிலைமை வந்ததுவிட்டது "
    "நீங்கள் ஒருநாள் போராடினாலும் சாதிதுவிடுவீர்கள் "

    பதிலளிநீக்கு
  10. மாதுவிடமிருந்து நான் எதிர்பார்ப்பது இப்படிப்பட்ட கட்டுரைகள் தான்.கடந்த இரன்டு வாரங்களுக்குமுன் பிரசுரமானதை அல்லா. நன்றி. ரெங்கசாமி

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!