கதாபாத்திரங்கள்

drama stage

 

பலமாய் சத்தம் எழும்பி, கனகனவென  வீடே அதிர்ந்து சுருளும். உள்ளிருப்பவர்கள் அதிர்ச்சியோடும், பதற்றத்தோடும்  தலை நிமிர்வார்கள்.

 

“பார்த்து..” குரலொன்று எழும்பும்.

 

மௌனம் கொண்டு வீடு தன்னிலைக்குத் திரும்பும்.  அவ்வளவுதான். பிறகு அது பற்றிய  நினைவு யாருக்கும்  எப்போதும் இருக்காது. 

 

பாத்திரங்கள்  கை தவறும் போதெல்லாம் இந்தக் கதை  தவறாமல் நடக்கிறது.

கருத்துகள்

7 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. பதற்றத்தையோ எரிச்சலையோ
    ஆதங்கத்தையோ
    அழுத்தமாய்ச் சொல்லும்
    பாத்திரங்களின் பாஷை...!

    பதிலளிநீக்கு
  2. 'என்னத்தைப் போட்டு உருட்டினே சனியனே!'

    'கொஞ்சம் பாத்துப் போகக் கூடாதோடி பொண்ணே!'

    'ஒடம்பு வளைஞ்சாத்தானே! அத்தனை திண்ணக்கம்!'

    'அடி கிடி படலியே!'

    இப்படியும் குரல்கள் வரும்.

    ஆனால், அதுவும் மறந்து போகும்!:))

    பதிலளிநீக்கு
  3. Beautiful. The line பாத்திரங்கள் கை தவறும் போதெல்லாம் இந்தக் கதை தவறாமல் நடக்கிறது says it all.

    I also like sakthi's comment: பதற்றத்தையோ எரிச்சலையோ
    ஆதங்கத்தையோ
    அழுத்தமாய்ச் சொல்லும்
    பாத்திரங்களின் பாஷை...! Aahaa..!

    But, the real question is who made the 'paaththirangal' to fall? Who is the director? Who is pulling the strings from behind the scenes? Who is calling the shots?

    When we realise Him, I feel and am confident that we would understand the பாத்திரங்களின் பாஷை...!

    Thank you

    பதிலளிநீக்கு
  4. @சக்தி!

    அதை யார் கேட்கிறார்கள்?
    வருகைக்கு நன்றி.


    @VSK!
    இப்படியும் சில கதாபாத்திரங்கள் :-))))
    நன்றி.



    @மதுரை சரவணன்!
    மிக்க நன்றி.



    @Luthfullah Azeez. T!
    தங்கள் புரிதலுக்கும், வருகைக்கும் நன்றி.



    @DhanaSekaran .S!
    நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  5. பலமாய் சத்தம் எழும்பி, கனகனவென வீடே அதிர்ந்து சுருளும். உள்ளிருப்பவர்கள் அதிர்ச்சியோடும், பதற்றத்தோடும் தலை நிமிர்வார்கள்.

    “பார்த்து..” குரலொன்று எழும்பும்.

    மௌனம் கொண்டு வீடு தன்னிலைக்குத் திரும்பும். அவ்வளவுதான். பிறகு அது பற்றிய நினைவு யாருக்கும் எப்போதும் இருக்காது.


    பாத்திரங்கள் கை தவறும் போதெல்லாம் இந்தக் கதை தவறாமல் நடக்கிறது.

    இதை போல தான் "காவல் கோட்டம்" கதையும்


    கதை யில் வரும் பாத்திங்கள்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!