“அப்பாவுக்கு உடம்பு சரியில்ல, வயிற்று வலியில் கஷ்டப்பட்டார். ஆஸ்பத்தியில் சேர்த்திருக்கிறோம்” என தீபா போன் செய்து, ஞாயிறோடு ஞாயிறு எட்டு, இன்று ஒன்பது நாளாகிவிட்டது. மருத்துவரீதியான காரணங்கள் அறிவதற்கு இரண்டு மூன்று நாட்களாக, எங்களுக்கு பதற்றம் தொற்றிக்கொண்டது. எழுத்தாளர் ஜெயகாந்தனின் நெருங்கிய நண்பர்கள் வந்து ஆதரவாய் இருந்தபோதிலும் அந்த சமயத்தில் அருகிலிருந்து உறுதியோடு எதிர்கொண்ட தீபாவை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது.
பித்தப்பை அகற்றப்பட்டு, இரண்டு நாட்கள் இன்டென்சிவ் கேரில் கவனிக்கப்பட்டு, தனியறையில் எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. பகலில் உறவினர்களும், அவரது நண்பர்களும் வந்து பார்த்துவிட்டுச் சென்ற பிறகு இரவுகளில் அவரும் நானும் மட்டுமே அந்த அறையில் இருந்தோம். கண்கள் மூடியபடி இழுத்துவிடும் மூச்சுக்கு அசையும் அவரது உடலைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். உற்சாகமாய் நண்பர்களோடு பேசுகிற, கடகடவென்று சிரிக்கிற, ஆங்காரமாய் முகம் நிமிர்ந்து ஆரவாரிக்கிற, சிலிர்த்து பாரதியாரின் கவிதைகளை பாடுகிற, கர்வம் அடைகாக்கும் மௌனம் சாதிக்கிற அவரின் கோலங்கள் எல்லாம் நினைவுக்கு வந்துகொண்டு இருந்தன. இடியோசையுடன் மின்னிய வெளிச்சங்கள் இளகி, ஒரு விளக்கின் திரியின் மீது கொண்ட அமைதியான ரூபம் போலிருந்தது.
ரீபிரிண்ட் செய்யப்பட்ட அவரது புத்தகங்கள் சிலவற்றை நண்பர் ஒருவர் கொடுத்துச் சென்றிருந்தார். எனக்குப் பிடித்தமான அவரது முன்னுரைகளின் தொகுதி அதிலிருந்தது. எடுத்துப் படித்தேன். ஜெயகாந்தன் என்னோடு உரத்த குரலில் பேச ஆரம்பித்தார். மங்கிய அறை பிரகாசமானது.
நேற்று இந்த நேரம் சென்னையிலிருந்து சாத்தூருக்குக் கிளம்பினேன். இன்று மாலை அம்மு போன் செய்தாள். “அப்பாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கிறதாம். இன்னும் இரண்டு நாட்களில் அப்பாவை வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிடலாம் என டாக்டர் சொன்னார்”.
happy to hear for his speedy recovery, thanks for your help and caring
பதிலளிநீக்குI am very very happy to know from you that he is well to day...He is a man of courage in opinions..we may differ with some..But his bold opinions are always superb..His MUNNURAIKAL are excellent than his stories..you could have spend more days with him..He is a special SAGA of our time..He is a man of great humanitarian thoughts.
பதிலளிநீக்குI wish his speedy recovery...Efforts to taking care is a chance for DEEPA to serve a great Indian writer..Our beloved JK....Come on JK..come and write more /fresh for us...take care saha...
ஜெயகாந்தன் விரைந்து குணம் பெற வாழ்த்துகள்
பதிலளிநீக்குஜே கே விரைந்து குணமடைய வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குஎஸ் வி வி
அவர் நலம் பெற பிராத்திக்கிறேன்.
பதிலளிநீக்குதிரு ஜெயகாந்தன் உடல் நலம் பெற்று திரும்பி வர மனப்பூர்வமாக பிரார்த்திக்கிறோம்.
பதிலளிநீக்குஜெயகாந்தன் அவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குஅன்பு மாதவராஜ்,
பதிலளிநீக்குநேற்று தகவல் அறிந்த போதே மனசு கஷ்டமாக இருந்தது... எங்களின் அன்பும், குவித்த ப்ரியமும் அவரை விரைவில் குணமடையச் செய்யும்...
அன்புடன்
ராகவன்
ஜே கே மீண்டும் எழுந்துவர வாழ்த்துக்கள். இப்பொழுது அவருக்கு நிறைய எழுத ஆசை வரும் என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஅது சரி மாதவ் சார், முல்லை பெரியார் அணை விசயத்தில் நீங்கள் அமைதி காப்பது ஏனோ ? நீங்கள் சார்ந்திருக்கும் கட்சி தவறு செய்தாலும் அதை வன்மையாக கண்டிக்க மாட்டீர்களா ? இல்லையென்றால் உங்கள் சொல்லுக்கும் செயலுக்கும் முரண் இல்லையா சார்
கடைசி பாரா படித்ததும் தான் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அன்பிற்குரிய ஜெயகாந்தன் விரைவில் நலம்பெற்று மீண்டு வருவார்.
பதிலளிநீக்குஎனக்குப் பிடித்தமான அவரது முன்னுரைகளின் தொகுதி அதிலிருந்தது. எடுத்துப் படித்தேன். ஜெயகாந்தன் என்னோடு உரத்த குரலில் பேச ஆரம்பித்தார். மங்கிய அறை பிரகாசமானது.
பதிலளிநீக்குஜெயகாந்தன் விரைந்து குணம் பெற வாழ்த்துகள்
Get Well Soon JK Sir.
பதிலளிநீக்குஜெயகாந்தன் பூரண நலமடைய மதுரையையும், தமிழையும் வணங்குகிறேன்.
பதிலளிநீக்குஅன்புத் தோழர் மாதவராஜ்,
பதிலளிநீக்குவணக்கம்.
எழுத்தாளர் ஜெயகாந்தன் விரைவில் குணமடைய அவரது வாசகர்களின் அன்பு துணையிருக்கும். பித்தப்பை திந்தரவு என்பது இக்காலத்தில் ரசாயனப்புழக்கத்தால் அனைவருக்கும் வருகின்ற சாதாரணப் பிரச்சினையாகி விட்டது. இரவுத் தூக்கத்தை ஒழுங்குபடுத்துமாறு ஜெ.கே.விடம் கூறுங்கள். விரைவில் இயல்புக்குத் திரும்ப அது உறுதுணையாக இருக்கும்.
///ரீபிரிண்ட் செய்யப்பட்ட அவரது புத்தகங்கள் சிலவற்றை நண்பர் ஒருவர் கொடுத்துச் சென்றிருந்தார். எனக்குப் பிடித்தமான அவரது முன்னுரைகளின் தொகுதி அதிலிருந்தது. எடுத்துப் படித்தேன். ஜெயகாந்தன் என்னோடு உரத்த குரலில் பேச ஆரம்பித்தார். மங்கிய அறை பிரகாசமானது./// - இதுவும் ஒரு வகை மருந்துதான் உளநோய் ஆற்றும் ஊண் நோய் மறந்துவிடும். நல்ல முய்ற்சி மாது. அவர் நலம் பெற விரும்புகிறேன்.
பதிலளிநீக்குஎழுத்தாளர் ஜெயகாந்தன் விரைவில் எழுந்து நடமாட உரையாட நல்விருப்பங்கள் ---ஆர்.எஸ்.மணி திண்டுக்கல்
பதிலளிநீக்கு