‘வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம்’ என செப்டம்பர் 17ல் சிறு பொறியாய் ஆரம்பித்த இயக்கம் இன்று அமெரிக்காவின் பல நகரங்களிலும் பரவிக்கொண்டு இருக்கிறது. பெரும் உரையாடல்களும், விவாதங்களும் எழும்பிக்கொண்டு இருக்கின்றன. ஜனநாயகத்தை மொத்தக் குத்தகை எடுத்துக்கொண்டதாய் பேசும் அமெரிக்க பேரரசு, தன் மக்கள் மீதே தாக்குதல் நடத்த ஆரம்பித்திருக்கிறது. அதிபர் ஒபாமா “அவர்கள் விரக்தியான நிலையில் இருக்கிறார்கள்” என வெள்ளை மாளிகையில் தன் இயலாமையைப் பூசி மழுப்பிக்கொண்டு இருக்கிறார். இந்தப் போராட்டம் அல்லது இயக்கம் குறித்த பலவித கண்ணோட்டங்களும், விமர்சனங்களும் இன்னொருபுறம் வெளிவருகின்றன. எல்லாவற்றுக்கும் மத்தியில், ஆர்ப்பாட்டக்காரர்களின் வார்த்தைகளில் ஒன்று தெளிவாகத் தெரிகிறது. அவர்கள் முதலாளித்துவத்தையும், முதலாளிகளையும் கடுமையாக வெறுக்கிறார்கள் என்பதே அது. இந்த படங்கள் அதைச் சொல்கின்றன.
கம்யுனிசம் தோல்வியடைந்துவிட்ட நிலையில் கண்மூடித்தனமான முதலாளித்துவமும் தோல்வியடைந்து வருகிறது. இனிமேல் இந்த இரண்டு துருவங்களுக்கும் இடையிலான ஒரு கட்டுப்படுத்தப்பட்ட முதலாளித்துவம் அமையலாம்.
பதிலளிநீக்குஅது என்ன கட்டுப்படுத்தப்பட்ட முதலாளித்துவம்? என்ன பொருளில்..? முதலாளித்துவம் தன்னைத் தானே கட்டுப்படுத்திக்கொள்ளுமா? இல்லை, மக்கள் கட்டுப்படுத்துவார்களா? வரலாறு சொல்லும் உண்மை இதுதான்: முதலாளித்துவத்துக்கு இரக்கமற்ற, இதயமற்ற லாபவெறி மட்டுமே, அது ஒன்று மட்டுமே முதலும் கடைசியுமான குறிக்கோள். அதற்காக அது என வேண்டுமானாலும் செய்யும். அடுத்த நாட்டு மக்களைக் கொல்லும், தேவையெனில் தன் நாட்டு மக்களையும் கொல்லும்...இப்போது வால்ஸ்ட்ரீட்டில் நடப்பதைப்போல். மேலும்: முதலாளித்துவத்தை கட்டுப்படுத்த முடியாது, அது உலகுதழுவியதாக, ஏகாதிபத்திய சக்தியாக பரிணாம வளர்ச்சி பெறும் என்பதே உண்மை,எனவே ‘கட்டுப்படுத்தப்பட்ட முதலாளித்துவம்’போன்ற புதிய சொற்களெல்லாம் முதலாளித்துவ ஆதரவாளர்களின் கற்பனைக்கு வேண்டுமானால் மகிழ்ச்சியை தரலாம்.
பதிலளிநீக்குதன் சொந்த நாட்டு மக்களை லட்சக்கணக்கில் கொலை செய்த பெருமை கம்யுநிசத்திற்கே உண்டு.
பதிலளிநீக்கு