இப்போது அவர் ஒரு ராஜதுரோகி. ஒரு மனிதாபிமானியாக, நல்ல மருத்துவராக, மனித உரிமைகள் இயக்கச் சேவகராக மட்டுமே இதுவரை அறியப்பட்டிருந்த 58 வயதான டாக்டர் பினாயக்சென்னுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. சட்டீஸ்கர் மாநிலத்தின் இந்த கீழ்க்கோர்ட்டு தீர்ப்பு இப்போது நாடெங்கிலும் கிழிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது. சமூக ஆர்வலர்கள், அறிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் என பலதரப்பிலிருந்தும் கண்டனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. மே.வங்கத்தைச் சேர்ந்த, நோபல் பரிசு பெற்ற டாக்டர் அம்ரித்யா சென் மனமுடைந்தவராய் “நீதியின் கருச்சிதைவு” என்று கடுமையான வார்த்தைகளோடு தன் கண்டனத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
பினாயக்சென் 2007ம் வருடம் மார்ச் 14ம்தேதி சட்டீஸ்கர் மாநிலக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். மாவோயிஸ்டுகளுக்கு கூரியராக செயல்பட்டார் என்பதும், மாவோயிஸ்டுகள் மீது அனுதாபம் கொண்டு இருந்தார் என்பதும் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள். அவரது வீட்டைச் சோதனையிட்டு, அதற்கான இரண்டு கடிதங்களையும், சில பிரசுரங்களையும் கைப்பற்றி, நீதிமன்றத்தில் ஆதாரங்களாக சமர்க்கப்பட்டு இருக்கின்றன. அந்த ஆதாரங்கள் போலியானவை என்றும், சாட்சியங்களால் உறுதிசெய்யப்படவில்லையென்றும் பினாயக்சென் ஆதரவாளர்கள் சொல்கின்றனர். இருந்தபோதும் இந்தியக் குற்றவியல் சட்டத்தின் செக்ஷன் 124A அவர் மீது பாய்ந்திருக்கிறது.
ஆதாரங்களும், சாட்சியங்களும் இங்கு தேவையற்றவை. நிஜத்தில் டாக்டர் பினாயக் சென யாருக்கு ஆதரவாளராக இருந்தார் என்பது உலகுக்கே தெரிந்திருக்கிறது. அரசால் புறக்கணிக்கப்பட்ட விளிம்புநிலை மனிதர்களுக்கு சேவை செய்வதையே தன் வாழ்வாக கொண்டிருக்கிறார். அவர்களுக்கான குரலாக இருந்திருக்கிறார். பெரும் முதலாளிகளால் படுகொலை செய்யப்பட்ட சங்கர் குஹா நியோகி எனும் தொழிற்சங்கத் தலைவரின் பெயரால் மருத்துவமனை கட்டி எழை எளிய மக்களுக்கு இலவச சிகிச்சை அளித்து வந்திருக்கிறார். இதற்காக பல அமைப்புகள் அவரைப் பாராட்டி, விருதுகள் வழங்கி கௌரவித்திருக்கின்றன.
சட்டீஸ்கர் மாநில அரசான பா.ஜ.கவின் அணுகுமுறையில்தான் பிரச்சினையே. மாவோயிஸ்டுகளை ஒடுக்குகிறோம் எனக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அரசு. ‘சல்வா ஜூடும்’ என்னும் அமைப்பை நக்சலைட்டுகளுக்கு எதிராக ஏற்படுத்தி அரசே நிதியுதவியும், ஆயுத உதவியும் செய்து வருகிறது. அந்தப் படையினரால் ஒரு லட்சத்துக்கும் மேலான பழங்குடியினர் தங்கள் இருப்பிடங்களை விட்டு துரத்தியடிக்கப்பட்டு இருக்கின்றனர். ஆட்சியினரை கொள்கை ரீதியாக விமர்சனம் செய்பவர்களையும், நக்சலட்டுகளாக முத்திரை குத்தி படுகொலை செய்யப்படுகின்றனர். மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், ஜனநாயகம் நசுக்கப்படுவதாகவும் சட்டீஸ்கர் மாநில அரசை டாக்டர் பினாயக் சென் குற்றஞ்சாட்டி வந்தார். பழிவாங்கும் நோக்கத்துடன் அரசு பினாயக் சென்னை ‘மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு உண்டு” எனக் குற்றஞ்சாட்டியது. மாவோயிஸ்ட்களின் ஆயுத நடவடிக்கையை எப்போதும் விமர்சித்தே வந்த பினாயக்சென்னுக்கு இப்போது ஆயுள் தண்டன!
இங்கு பினாயக்சென் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக இருந்தார் என்பதெல்லாம் வெறும் பேச்சு. அரசுக்கு ஆதரவாக இல்லை என்பதுதான் பிரச்சினை. பாசிசத்தின் அடிப்படை குணாம்சங்களில் இது ஒன்று. தன்னை வ்ழிமொழியாத யாரையும் அது தன் எதிரியாகவே பாவிக்கும். அதுதான் இங்கு நடந்திருக்கிறது. ‘அறிவிக்கப்படாத அவசரநிலைப் பிரகடனம்’ என்கிறார்கள் மூத்த வழக்கறிஞர்கள் பலரும் இதனை. அம்னஸ்டி இண்டர்நேஷனல் முதற்கொண்டு ஏராளமான அமைப்புகள் முறையிட்டும், மத்திய அரசு இதுவரை வாயைத் திறக்கவில்லை. அது எதற்கு? பினாயக் சென்னுக்கு ஆதரவாக இங்கே கூட்டம் நடத்துவதற்கு தமிழக காவல்துறையும் மறுத்துள்ளது.
மே.வங்கத்தில் மட்டும் வேறு கதை. அங்கு மாவோயிஸ்டுகளுக்கு எதிராக சி.பி.எம் அரசு கூலிப்படை வைத்திருப்பதாக பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டுகிற மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சட்டீஸ்கரில் மட்டும் ‘சல்வா ஜூடும்’ பற்றி ஏன் வாயைத் திறப்பதில்லை. மே.வங்கத்தில் மாவோயிஸ்டுகளோடு பேரணி நடத்தியும், அவர்களுக்கு ஆதரவாகப் பேசியும் வருகிற மம்தா பானர்ஜி ராஜ துரோகி இல்லையா? நாடெல்லாம் ஒரு பார்வை, மே.வங்கத்தில் மட்டும் ஏன் வேறு பார்வை. அங்கு பா.ஜ.க, காங்கிரஸ், திரிணாமுல் என அனைத்து முதலாளித்துவக் கட்சிகளுக்கும் பொது எதிரியாக ஒரு இடதுசாரி அரசு தொடர்ந்து இருப்பதுதான்!
ராஜதுரோகம், ராஜதுரோகம் என இந்த கோர்ட்டுகளும், இந்த அரசும் அவர்களுக்கான அகராதியில் சொல்லிவிட்டுப் போகட்டும். உண்மையில் யார் ராஜதுரோகி என்பதற்கான மக்கள் அகராதி ஒன்று இருக்கிறது. உழைக்கும் மக்களைச் சுரண்டுகிறவர்கள், மக்களைப் பிரித்து ஆளத் துடிப்பவர்கள், நாட்டின் வளங்களைச் சுரண்டுபவர்கள், விவசாயிகளின் வாழ்வை அபகரித்து அவர்களை தற்கொலை விளிம்புகளுக்குத் தள்ளியவர்கள், அரசுத் திட்டங்களில் முறைகேடுகள் செய்கிறவர்கள், ஊழல் செய்கிறவர்கள், குள்ள நரிகள், மொள்ளமாரிகள் எல்லாம் ராஜ துரோகிகள்.
இப்போது சொல்லுங்கள், யார் ராஜ துரோகி?
கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று
பதிலளிநீக்குதங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குஉங்களுக்கு புது வருட வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஎனது பிளாக்கிற்கும் வருகை தாருங்கள்.
-கலையன்பன்.
இது பாடல் பற்றிய தேடல்!
கோவி.மணிசேகரன் பற்றி சிறு குறிப்பு + ஒரு பாடல்!
!
அண்ணா...
பதிலளிநீக்குராஜ துரோகிகளின் ராஜ்ஜியத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கும். வருத்தப்பட்டு பாரம் சுமந்தாலும் அவர்கள் அவர்கள் போக்கில்தான் போவார்கள். இது கண்டிக்கப்பட வேண்டிய விஷயம்தான்... என்ன செய்ய எல்லாரையும் போல் மௌனமே முந்திக் கொள்கிறது.
நாட்டின் பரம ஏழைகளின் பிணி தீர்க்கும் மருத்துவர் ராஜ துரோகி,
பதிலளிநீக்குநாட்டின் வளங்களை சுரண்டுபவர்கள் நாட்டின் ராஜாவாய், மந்திரியாய்!!
மக்களோ குருடர்களாய், ஊமையாய், நடை பிணமாய் டாஸ்மாக் டார்கெட்டாய்.
///மே.வங்கத்தில் மட்டும் வேறு கதை. அங்கு மாவோயிஸ்டுகளுக்கு எதிராக சி.பி.எம் அரசு கூலிப்படை வைத்திருப்பதாக பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டுகிற மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சட்டீஸ்கரில் மட்டும் ‘சல்வா ஜூடும்’ பற்றி ஏன் வாயைத் திறப்பதில்லை. மே.வங்கத்தில் மாவோயிஸ்டுகளோடு பேரணி நடத்தியும், அவர்களுக்கு ஆதரவாகப் பேசியும் வருகிற மம்தா பானர்ஜி ராஜ துரோகி இல்லையா? நாடெல்லாம் ஒரு பார்வை, மே.வங்கத்தில் மட்டும் ஏன் வேறு பார்வை. அங்கு பா.ஜ.க, காங்கிரஸ், திரிணாமுல் என அனைத்து முதலாளித்துவக் கட்சிகளுக்கும் பொது எதிரியாக ஒரு இடதுசாரி அரசு தொடர்ந்து இருப்பதுதான்!
பதிலளிநீக்குராஜதுரோகம், ராஜதுரோகம் என இந்த கோர்ட்டுகளும், இந்த அரசும் அவர்களுக்கான அகராதியில் சொல்லிவிட்டுப் போகட்டும். உண்மையில் யார் ராஜதுரோகி என்பதற்கான மக்கள் அகராதி ஒன்று இருக்கிறது. உழைக்கும் மக்களைச் சுரண்டுகிறவர்கள், மக்களைப் பிரித்து ஆளத் துடிப்பவர்கள், நாட்டின் வளங்களைச் சுரண்டுபவர்கள், விவசாயிகளின் வாழ்வை அபகரித்து அவர்களை தற்கொலை விளிம்புகளுக்குத் தள்ளியவர்கள், அரசுத் திட்டங்களில் முறைகேடுகள் செய்கிறவர்கள், ஊழல் செய்கிறவர்கள், குள்ள நரிகள், மொள்ளமாரிகள் எல்லாம் ராஜ துரோகிகள்.
இப்போது சொல்லுங்கள், யார் ராஜ துரோகி? //
இந்தக் கட்டுரை உங்களது ஜனநாயக உணர்வின் வெளிப்பாடு. வாழ்த்துக்கள்.
ஆனால், பா. சிதம்பரம் என்ன நினைக்கிறார் என்றும், அவர் ஒரு கல்லுளிமங்கன் என்பதையும் சொல்லுங்கள் நீங்கள், நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதையும் சேர்த்துச் சொல்லியிருக்க வேண்டும்.
மே.வங்கத்தில் அரசு கூலிப் படை பற்றி பேசும் பா. சிதம்பரம் சல்வாஜூடம் பற்றி அமைதி காப்பது ஒரு பக்கம் இருக்கட்டும், சல்வாஜூடம் பற்றி வாய்கிழியப் பேசும் நீங்கள் மே.வங்கத்தில் சிபி எம் கூலிப் படை பற்றி ஏன் அமைதி காக்கிறீர்கள்?
சட்டீஸ்கரில் மனித உரிமைவாதி பினாயக் சென் மாவோயிஸ்டுகள் எதிர்த்துப் போராடும் அதே மக்கள் எதிரிகளை எதிர்த்து போராடினார் என்பதால் துரோகி எனப்படுகிறார், நீங்களோ அதே அடிப்படையில் மே. வங்கத்தில் மம்தாவை ஏன் காங்கிரசு துரோகி என்று சொல்வதில்லை என்று கேள்வி கேட்பதன் மூலம் என்ன நிருபிக்க விளைகிறீர்கள்?
இங்கு யாருக்கு எதிராக யார் என்பதுதான் கேள்வியே ஒழிய, யாருடன் யார் கூட்டணி என்பதல்ல.
சட்டீஸ்கரில் வன்முறை எதிர்ப்பு ஹிமன்சுகுமார், பினாயக் சென் போன்றோர் ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகளுடன் ஒரே பக்கத்தில் நின்று பன்னாட்டு நிறுவன சுரண்டலை எதிர்க்கிறார்கள். காங்கிரசு, பாஜக அங்கு கூட்டணி.
மே.வவில் மாவோயிஸ்டுகளுடன் சேர்ந்து மம்தா கட்சியின் சில அணிகள் பன்னாட்டு நிறுவன சுரண்டலை எதிர்க்கிறார்கள். அங்கு காங்கிரசு-பாஜக-சிபிஎம் கூட்டணி.
இதில் நீங்க எந்த கூட்டணி என்று தெளிவுபடுத்திவிடுவது எதிர்கால சந்ததிக்கு நல்லது.
///மே.வங்கத்தில் மட்டும் வேறு கதை. அங்கு மாவோயிஸ்டுகளுக்கு எதிராக சி.பி.எம் அரசு கூலிப்படை வைத்திருப்பதாக பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டுகிற மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சட்டீஸ்கரில் மட்டும் ‘சல்வா ஜூடும்’ பற்றி ஏன் வாயைத் திறப்பதில்லை.//
பதிலளிநீக்குஇந்தக் கட்டுரை உங்களது ஜனநாயக உணர்வின் வெளிப்பாடு. வாழ்த்துக்கள்.
ஆனால், பா. சிதம்பரம் என்ன நினைக்கிறார் என்றும், அவர் ஒரு கல்லுளிமங்கன் என்பதையும் சொல்லுங்கள் நீங்கள், நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதையும் சேர்த்துச் சொல்லியிருக்க வேண்டும்.
மே.வங்கத்தில் அரசு கூலிப் படை பற்றி பேசும் பா. சிதம்பரம் சல்வாஜூடம் பற்றி அமைதி காப்பது ஒரு பக்கம் இருக்கட்டும், சல்வாஜூடம் பற்றி வாய்கிழியப் பேசும் நீங்கள் மே.வங்கத்தில் சிபி எம் கூலிப் படை பற்றி ஏன் அமைதி காக்கிறீர்கள்? யாரைக் காக்க அந்தப் படை லால்கர், நந்திகிராமில் படுகொலைகள் செய்தது - டாடா, சலீம் கும்பலைத்தானே?
சட்டீஸ்கரில் மனித உரிமைவாதி பினாயக் சென், மாவோயிஸ்டுகள் எதிர்த்துப் போராடும் அதே மக்கள் எதிரிகளை எதிர்த்து போராடினார் என்பதால் துரோகி எனப்படுகிறார், நீங்களோ அதே அடிப்படையில் மே. வங்கத்தில் மம்தாவை ஏன் காங்கிரசு துரோகி என்று சொல்வதில்லை என்று கேள்வி கேட்பதன் மூலம் என்ன நிருபிக்க விளைகிறீர்கள்?
இங்கு யாருக்கு எதிராக யார் என்பதுதான் கேள்வியே ஒழிய, யாருடன் யார் கூட்டணி என்பதல்ல.
சட்டீஸ்கரில் வன்முறை எதிர்ப்பு ஹிமன்சுகுமார், பினாயக் சென் போன்றோர் ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகளுடன் ஒரே பக்கத்தில் நின்று பன்னாட்டு நிறுவன சுரண்டலை எதிர்க்கிறார்கள். காங்கிரசு, பாஜக அங்கு கூட்டணி.
மே.வவில் மாவோயிஸ்டுகளுடன் சேர்ந்து மம்தா கட்சியின் சில அணிகள், மேதாபட்கர் போன்ற அமைதிவழியினர், அறிவுஜீவிகள்-ஜனநாயகவாதிகள் பன்னாட்டு நிறுவனச் சுரண்டலை எதிர்க்கிறார்கள். அங்கு காங்கிரசு-பாஜக-சிபிஎம் கூட்டணி டாடா-சலீம் கும்பலை காக்க ஆயுதம் ஏந்தியுள்ளது.
இதில் நீங்க எந்த கூட்டணி என்று தெளிவுபடுத்திவிடுவது எதிர்கால சந்ததிக்கு நல்லது.
தேர்தல் ஜனநாயகம் பற்றி வாய்கிழியப் பேசும் நீங்கள், மே. வங்கத்தில் தேர்தல் ஜனநாயகத்தை பணம், படை பலம் கொண்டு உறுதிப் படுத்தும் சிபிஎம் பற்றி என்ன சொல்கிறீர்கள்?
பதிலளிநீக்குசமீபத்தில் பஞ்சாலை தொழிலாளர் சங்க தேர்தலில் புடவை கொடுத்து வோட்டு வாங்கியும் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்ட சிபிஎம்ன் நடவடிக்கைதான் உங்களது புனிதமான தேர்தல் ஜனநாயக அரசியலா?
http://www.tehelka.com/story_main48.asp?filename=Ne150111Coverstory.asp
பதிலளிநீக்குSwami Aseemanand’s chilling confession is the first legal evidence of RSS pracharaks’ involvement in the Samjhauta Express and 2006 Malegaon blasts. ASHISH KHETAN scoops the 42-page document that reveals a frightening story of hate and deliberate mayhem
நல்ல கட்டுரை. எனது பிளாக்கில் வெளியிட்டுள்ளேன்.
பதிலளிநீக்குசீனிவாசன்
http://olirumpaadhai.blogspot.com