இப்போதும் தமிழ்ச்சினிமாவைப் பற்றி பேசுகிற பலரும் ’உதிரிப் பூக்கள்’ படத்தைக் குறிப்பிடத் தவறுவதில்லை. இதுபோன்ற படங்களும் தமிழில் வந்திருக்கின்றன என்பதுதான் சொல்லிக்கொள்ளும்படியாகவும், ஆறுதலான விஷயங்களாகவும் இருக்கின்றன. பிரம்மாண்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் இல்லாமல் எடுக்கப்பட்ட ஒரு படம், நம் நினைவுகளில் காலங்களைத் தாண்டியும் வாழ்ந்துகொண்டு இருக்கிறது. மகேந்திரன் அவர்கள் இயக்கிய இரண்டாவது படம் இது.
அந்தக் குழந்தைகளின் தாய் அஸ்வினியின் மரணமும், தந்தை விஜயனின் மரணமும் படமாக்கப்பட்டு இருக்கும் விதம் சினிமாவின் மொழி எவ்வளவு வலிமையானது எனபதைச் சொல்கின்றன. இளையாராஜா அவர்களின் பின்னணியும், மௌனமும் அப்படி காட்சிகளோடு ஒன்றிப் போகின்றன.
அழகிய கண்ணே பாடலின் மெட்டு ஒலிக்க, அந்தக் குழந்தைகள் நதிக்கரையில் நடந்து செல்லும் கடைசிக்காட்சி, எதையோ பறிகொடுத்தவர்களைப் போல நம்மை அலைக்கழிக்கிறது. ஊருக்கேப் பிடிக்காமல் போன ஒருவனின் மரணமும் எவ்வளவு வலி நிரம்பியதாக இருக்கிறது.
தமிழ்ச்சினிமாவின் உன்னதங்கள் இவை. ஒவ்வொரு அசைவு குறித்தும் பேசுவதற்கு எவ்வளவோ இருக்கின்றன இங்கே.
(1)
(2)
இதுவரை படம் பார்த்ததில்லை அண்ணே.. குறுந்தகட்டைத் தேடிக்கிட்டு இருக்கேன்.. எப்படியும் ரெண்டு வாரத்துக்குள்ள பார்த்துறணும்..
பதிலளிநீக்குமகேந்திரன் அவர்களின் உதிரிப்பூக்கள் எத்தனை முறை பார்த்தாலும் கண்ணீரை வர வைக்கும் விஜயனின் மரணம்...
பதிலளிநீக்குமனசை கனக்கச் செய்யும் விடியோப் பதிவு அருமை அண்ணா.
இப்படியான சில (தமிழ்)படங்களை பார்த்துவிட்டேன் என்று சொல்ல மாட்டேன். பார்த்துக்கொண்டே இருக்கிறேன். ஓவ்வொரு முறை பார்க்கும் போதும் ஒவ்வொரு புரிதலை தருகிறது. உங்களின் நினைவுபடுத்தால் இன்றும் பார்க்க வேண்டும். இன்று எந்த தளத்திற்கு எடுத்து செல்ல போகிறதோ தெரியவில்லை.
பதிலளிநீக்குநண்பர் கார்த்திகை பாண்டியனுக்கு, மிக விரைவில் பார்த்து விடுங்கள்.
எனக்கு சினிமாவில அவ்வளவு ஆர்வம் இல்லைங்க. இருந்தாலும் நீங்க சொன்ன முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் இரண்டையும் தேடிக்கிட்டிருக்கேன்.. கிடைக்கல... கூடியசீக்கிரம் பாத்திடுவேன்.
பதிலளிநீக்குஉதிரிப்பூக்களை விஞ்சும்
பதிலளிநீக்குபடம் தமிழில் இன்னும்
எடுக்கப் படவில்லை
என்று சொன்னால்
அது மிகையில்லை.
ஒரு படத்தின் வசனங்கள் எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு இந்தப் படம் நல்ல உதாரணம்.
பதிலளிநீக்குகார்த்திகைப் பாண்டியன்!
பதிலளிநீக்குஅவசியம் பார்த்து விடுங்கள் தம்பி.
சே.குமார்!
மிக்க நன்றி தம்பி.
வேல்கண்னன்!
மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
க.பாலாசி!
ஏன் சினிமா மீது ஆர்வமில்லை, பாலாசி?
சந்தானகிருஷ்ணன்!
ஆம். அதேதான்.
மோகன்!
மகேந்திரன் வசனகர்த்தாவாக இருந்து இயக்குனரானவர்.
சினியாவில் வெகுவாக ஆர்வம் இல்லையெனினும் வெகு நாட்களாக தேடிய படத்தின் குறுந்தகடு வெறும் முப்பது ரூபாயில் மோசர் பியரின் வெளியீடாக இப்போதுதான் கிடைக்கப் பெற்று பார்த்து முடித்தேன்.
பதிலளிநீக்குஎங்கும் மிகையில்லாத நடிப்பு.
பஞ்ச் டயலாக்குகள் இல்லை.நட்சத்திர ஆர்ப்பாட்டம் இல்லை. சினிமாவில் மொழி என்பது காட்சி வழியே என்பது இப்படங்களின் வாயிலாகவே அறிந்து கொள்ள வேண்டியதாயிருக்கிறது.
அடுத்து முள்ளும் மலரும் பார்க்க வேண்டும்.
மிகவும் அருமையான படம்,
பதிலளிநீக்குபார்க்கும் போதெல்லாம் கண்களில் கண்ணீர்த்துளி வரவழைக்கும் காட்சியமைப்புகள்!