புதிய பதிவர்கள் அறிமுகம் - 4

அற்புதமாகவும், நம்பிக்கையாகவும் எழுதுகிற பலருடைய பதிவுகள் கவனிக்கப்படாமலேயே இருக்கின்றன. இது வருத்தம் மட்டுமல்ல. சாபக்கேடும் கூட. சில புதிய பதிவர்கள் தங்களை திரட்டிகளில் இணைத்துக் கொள்ளாமலும் இருக்கிறார்கள். இந்த அறிமுகத்தின் மூலம், தங்களுக்குப் பிடித்தமான எழுத்துக்களை, பதிவுகளைப் அறிந்து, தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவளித்து, உற்சாகமளித்திட வேண்டுமென நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

23. கருணா

அற்புதமான வீதி நாடகக் கலைஞர் இவர். ‘பாப்பம்பட்டி ஜமா என்னும் குறும்படத்தின் இயக்குனர். இவரது வலைப்பக்கம் திரை-பறை. சிரிக்கவும், ஆத்திரப்படவும் வைக்கிற இவரது சிந்தனையும் பேச்சும் இப்போது எழுத்து வடிவத்தில் நம்மை நெருங்குகிறது. இவரைப் போன்றவர்கள் வலைப்பக்கம் வரமாட்டார்களா என்ற ஏக்கம் கொஞ்சம் தணிந்திருக்கிறது. இருபது வருடங்களாக எனக்குத் தெரிந்த இவரைப்பற்றி நான் அதிகம் சொல்லக் கூடாது. நீங்களே வாசித்துப் பாருங்கள்.


24. ஆர்.கே.சதீஷ்குமார்
இவரது வலைப்பக்கத்தின் பேர் நல்ல நேரம். கடந்த ஒரு வருடமாக இயங்கி வந்தாலும் 4 மாதங்களாகத்தான் அதிகம் எழுதி வருவதாகச் சொல்கிறார். ஜோதிடராக ஈரோடு அருகில் சித்தோடு என்னும் ஊரில் இருக்கிறார். அவ்வப்போது ஜோதிடம் பற்றியும் எழுதினாலும் பல்சுவையாக எழுதுவதே விருப்பம் என்கிறார். ஜோதிடத்தைத் தவிர்த்து எழுதலாமே என்பது என் கருத்து.


25. சந்தானகிருஷ்ணன்
இவரது வலைப்பக்கம் மதுமிதா. இந்த வருடம் எழுதத் துவங்கிய இவர் இதுவரை நூற்றுக்கும் அதிகமான பதிவுகளை எழுதியிருக்கிறார். தெளிந்த  பார்வை எழுத்தில் இருக்கிறது. இலக்கியம், சினிமா, அரசியல் என சகல பகுதிகளிலும் சிந்தனை செலுத்துகிறார். “ஒவ்வொரு தொலைபேசி அழைப்பிற்கும் சுரக்கின்றன மார்புகள்’ என்னும் இவரது அண்மையக் கவிதை வரிகளைப் படித்துப் பாருங்கள்.

26.சரண்
ஜல்லி என்னும் தலைப்பில் வலைப்பக்கம் வைத்திருக்கிறார். சின்னச் சின்ன அனுபவத் தெறிப்புகளை நகைச்சுவையோடு சொல்ல ஆரம்பித்திருக்கிறார். சரளமான மொழிநடையை ஆங்கிலக் கலப்பில்லாமல் தமிழ்படுத்தினால் இன்னும் சிறப்பாய் இருக்கும்

27.அண்ணாமலைச்சாமி
அண்ணாமலை என்ற பெயரிலேயே வலைப்பக்கம் வைத்திருக்கிறார். 2008லேயே வலைப்பக்கம் தொடங்கி இருந்தாலும் தொடர்ந்து எழுதுவதில்லை. தொடர்ந்து இவரைப் படித்துக் கொண்டு வந்த நான் இடையில் எப்படியோ தப்பவிட்டு இருக்கிறேன். வாழ்வின் அனுபவங்களிலிருந்து, மனிதர்களை சித்திரங்களாக்கும் இவரது கிளிஞ்சல்கள் வரிசை அழகானவை. நம் நினைவுகளைத் தூண்டுபவை.

28. ஸ்ரீஅகிலா
சென்னைதான் இவருக்கு. இவரது வலைப்பக்கம் மல்லிகை. மிகச் சமீபத்தில் எழுதத்துவங்கிய இவர் மூன்று பதிவுகள் எழுதியிருக்கிறார். ரசிக்கவும், நெகிழவுமான எழுத்து இவருடையது. அவருடைய குட்டி தேவதைகள் அருமையான பதிவு.

பதிவர்களுக்கு வாழ்த்துக்களைச் சொல்லி வரவேற்போம். ஆதரவளிப்போம்.
(புதிய பதிவர்கள், தங்கள் வலைப்பக்க முகவரி, தங்களைப் பற்றிய சிறு குறிப்புகளைjothi.mraj@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தீராத பக்கங்களில் அறிமுகப்படுத்த முடியும்.)

கருத்துகள்

20 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. மாதவராஜ் அவர்களுக்கு!


  உங்க‌ளின் தீராத‌ப் ப‌க்க‌ளில் என்னை அறிமுக‌ப்ப‌த்திய‌த‌ற்கு என் உள‌ங்க‌னிந்த‌ ந‌ன்றிக‌ள்! உங்க‌ள் ஆத‌ர‌வு என் எழுத்தார்வ‌த்திற்கு மிக‌ப் பெரிய‌ தூண்டுகோலாக‌ உள்ள‌து.

  பதிலளிநீக்கு
 2. மாதவராஜ் அவர்களுக்கு!


  உங்க‌ளின் தீராத‌ப் ப‌க்க‌ளில் என்னை அறிமுக‌ப்ப‌த்திய‌த‌ற்கு என் உள‌ங்க‌னிந்த‌ ந‌ன்றிக‌ள்! உங்க‌ள் ஆத‌ர‌வு என் எழுத்தார்வ‌த்திற்கு மிக‌ப் பெரிய‌ தூண்டுகோலாக‌ உள்ள‌து.

  பதிலளிநீக்கு
 3. நல்ல அறிமுகங்கள். திரை பறை நன்கு எழுதுகிறார். தொடர்ந்து இதுபோல நல்ல பதிவர்களை அறியத்தாருங்கள்!!

  பதிலளிநீக்கு
 4. உங்களை போன்ற பதிவுலகின் மூத்தவர்கள் புதியவர்களுக்கு அளிக்கும் ஊக்கம் அவசியமானது. நன்றி.

  பதிலளிநீக்கு
 5. திரை-பறை வலைத்தளத்தின் கருணாவை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி மாது. 1990 ஜுனில் உழவர்கரை (பாண்டிச்சேரி) முகாமில் புதுவை அறிவொளி இயக்க இரண்டாவது கலைப்பயணத்தின் போது பயிற்சி அளித்தவர்களில் ஒருவர். பிரளயன், தாஸ், லாசுப்பேட்டை ஜெயராமன் என எங்களை வீதி நாடகத்தில் இயக்கியவர்களின் ஞாபகம் அலை மோதுகிறது. விருது நகர் மாவட்டக்கலைக்ப்பயணக்குழுவினை உருவாக்கும் பயிற்சியில் தாஸ். பிரளயன், கருணா வந்திருந்து பயிற்சி அளித்ததும் நினைவில் நிழலாடுகிறது.

  பதிலளிநீக்கு
 6. மாதுவுக்கு நன்றி..அடடே.. நானும் பதிவர் ஆகிவிட்டேனே...திலீப் நாராயணன் அறிவொளி நினைவுகளை கிளறிவிட்டுவிட்டார்..என் பதிவுகள் பற்றி மாது கருத்து எதுவும் சொல்லவில்லையே...

  பதிலளிநீக்கு
 7. புதிய அறிமுகங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் . பகிர்வுக்கு நன்றி . அனைவரின் பதிவுகளையும் விரைவில் வாசித்துவிடுகிறேன்

  பதிலளிநீக்கு
 8. அருமையான அறிமுகங்கள் மிக்க நன்றி.
  கருணாவின் பக்கத்தில் போய் அந்தக் குறும்படத்தைப் பார்த்தேன். அற்புதம்! மீண்டும் நன்றி.

  பதிலளிநீக்கு
 9. வலைபக்கத்தை காண அழைகின்றேன் http://ujiladevi.blogspot.com

  பதிலளிநீக்கு
 10. இப்பகுதியில் என் வலைப்பூவை பற்றி எழுதியதற்கு நன்றி மாதவராஜ் அவர்களே!

  பதிலளிநீக்கு
 11. புதிய பதிவர்களை அறிமுகப் படுத்திய விதம் அருமை!!

  பதிலளிநீக்கு
 12. ராம்ஜி யாஹூ!
  நன்றி.

  வெறும்பய!
  நன்றி.

  அகிலா!
  தொடர்ந்து எழுதுங்கள்.


  ஆதவா!
  கருணா, இன்னும் நன்றாக எழுதுவார்.

  ஜெ!
  சந்தோஷமும், நன்றியும்.

  திலீப் நாராயணன்!
  நினைவுப்பகிர்வுக்கு மிக்க நன்றி தோழா!

  பதிலளிநீக்கு
 13. கருணா!
  உங்கள் பதிவில் பின்னூட்டமிட நானும், காமராஜும் முயற்சித்து தோற்றுப் போனோம். சரி செய்துவிட்டீர்களா?

  பா.ரா!
  நன்றி மக்கா.


  பனித்துளி சங்கர்!
  நீங்கள் நிச்சயம் வாசித்துவிடுவீர்கள். நன்றி நண்பரே!

  தீபா!
  கருணாவை நாடகங்களில் பார்த்து பிரமித்திருக்கிறேன்.


  உஜிலா!
  பார்த்தேன். கருத்து தெரிவிப்பேன்.


  அண்ணாமலை!
  உங்கள் எழுத்துக்கள் எனக்குப் பிடித்தமானவை.

  ஆரண்யநிவாஸ்!
  நன்றி.

  அம்பிகா!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 14. நீங்கள் எனது வலைப்பக்கத்தை அறிமுகப்படுத்தியதற்க்காக .. மிக மிக நன்றிங்க...

  அன்புடன்
  http://onlyjalli.blogspot.com/

  பதிலளிநீக்கு
 15. சூப்பர் வேலை பண்ணிட்டிருக்கீங்க..அப்படியே நமக்கும் கொஞ்சம் கருணை காட்டினீங்கன்னா..நல்லா இருக்கும்...

  http://rameshspot.blogspot.com/

  பதிலளிநீக்கு
 16. என்னை அறிமுகபடுத்தியதற்கு நன்றி...உங்கள் யோசனைகளை ஏற்றுக்கொள்கிறேன்

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!