தீராத பக்கங்கள் - 2

தீராத பக்கங்கள் – 2

அன்புள்ள வாசகா, வாசகி!
என் வலைத்தளம் கிட்டத்தட்ட நாப்பது லட்சமாவது இடத்தைப்பிடித்திருப்பதை அறிவாயா, மொத்தம் உள்ள தமிழின் நாற்பது இலட்சம் தளங்களில் நாற்பது லட்சமாவது இடத்தைப்பிடித்திருப்பதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறாய். எல்லாம் நீங்கள் தருகிற ஆதரவும் பின்னூட்டமும் ஊக்கமும் ஆக்கமும் தான். எந்த பின்புலமும் இல்லாமல் நான் நடந்து போய்க்கொண்டிருக்கையில் வாடகை சைக்கிளின் பின்புறமாய் கூகுள் ஏற்றிக்கொள்ளாவிட்டால் என் நாற்பது லட்சமாவது இடம் கிடைத்திருக்குமா, என் தளம் படிக்காமல் , பதிவே இல்லாவிட்டாலும் பழையப்பதிவை படுத்துக்கொண்டு படிக்கும் என் மூன்று வாசகர்களில் என்னை விட்டால் மற்ற இருவரின் உற்சாக பாராட்டுப்பத்திரங்கள் என்னை மென் மேலும் வலுவேற்றி உருவேற்று நாற்பது லட்சமாவது இடத்தை தொடர்ச்சியாய் தக்க வைக்க உதவிட வேண்டுகிறேன்.

கூகிள் பஸ்ஸில் கென்

EarthAngelmed 

குழந்தை புத்தகங்கள்

சின்னச் சின்ன வடிவங்களில், வண்ணப்படங்களுடன் குழந்தைகளுக்கான புத்தகங்களை பாரதி புத்தகாலயம் உருவாக்கி, வெளியிட்டு இருக்கிறது.

1.கிளிக்குஞ்சு 2.ஆகாய யுத்தம் 3.ஒடியட்டும் பிரம்பு 4.பூனை கணக்குப் படிக்கிறது 5.சித்திரம் வரைதல் 6.எறும்பு அரண்மனை 7.மேகங்களின் கதை 8.சூரியனைத் தொட வேண்டி 9.மந்தாரக்கிளி 10.இனி பால் வேண்டாம் அம்மா 11. குட்டிக் குட்டி முயல் 12.வால்களின் கதை 13.இலஞ்சிப்பூக்கள் சொன்ன கதை 14.நான் குட்டி மூசா 15. படர்ந்து படர்ந்து படர்ந்து 16.யாருடையது இந்தத் தோட்டம்? 17.ஸ்கூலுக்குப் போகிறாள் சுஸ்கித் 18.ரயிலும் குதிரையும் 19.நன்மையே தரும் மரம் 20.என் கதை 21.என்னுடைய நண்பர்கள் 22.ஒரு போராட்டம் 23.சில்...சில்...சில்.. 24.பாட்டி சொன்ன கதைகள் 25.நீங்கள் என் அம்மாவா?

 

இந்தப் புத்தகங்களின் எந்தக் கதையிலும் நீதி என்று சொல்லப்படவில்லை. அதுவே இப்புத்தகங்களின் பலம் என்கிறார் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன்.

 

 


புதிய பதிவர்கள் அறிமுகம்

 

 

 

35. வேல்கண்ணன்

நுட்பமான கவிதைகளை படைக்கும் இவரது வலைப்பக்கம் வேல்கண்ணன். வார்ப்பு, தடாகம், உயிர் எழுத்து இதழ்களில் இவரது கவிதைகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. புதிய வாசிப்பனுபவத்தை இவரிடம் நாம் பெற முடியும்.
“பொழுதுகள் போதவில்லை தான்
நட்சத்திரங்களை எண்ணுவதற்கு
ஆறுதல் ஒரே ஒரு
நிலவு” என்று வரும் வரிகளில் கொஞ்சம் பயணம் செய்து பாருங்கள்.36. கிருஷ்ணசாமி

ர.கிருஷ்ணசாமியின் படைப்புகள் என்றே வலைப்பக்கம் வைத்திருக்கும் இவரது கவிதைகளில் காதலே பெரும்பாலும் பேசுபொருளாய் இருக்கிறது. ஏக்கம், தவிப்பு, கிறக்கம் பல்வித உணர்வுகளின் வடிகாலாய் வரிகள் பெருக்கெடுக்கின்றன. 2007லிருந்து எழுதினாலும், மொத்தமே 10 பதிவுகள் போலத்தான் எழுதியிருக்கிறார்.


37. லதாமகன்

சில ரோஜாக்கள் இவரது வலைப்பக்கம். கீற்று, திண்ணை, உயிரோசை மின்னிதழ்களிலும், ஆனந்தவிகடன் பத்திரிகையிலும் இவரது கவிதைகள் வந்திருக்கின்றன. சொல்லாடல்களில் எழுத்து நடை ஈர்க்கிறது. இத்தனை நாளும் இவரைப் படிக்காமல் இருந்திருக்கிறோமே எனத் தோன்றியது.38.வெற்றி

சென்னையைச் சேர்ந்த இவரின் வலைப்பக்கம் நீ-நான்-அவன். மிகச் சமீபத்தில் எழுத வந்திருக்கும் இவர் மொத்தம் ஐந்து பதிவுகள் எழுதியுள்ளார். வாழ்வில் நாம் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்த கவனத்தை ஏற்படுத்துகிறார். சுருக்கமாகவே பதிவுகள் இருக்கின்றன.

இந்த வாரம் படித்ததில்….

 

 

படியில் விழும் வெளிச்சம்
வத்றாப்பு சுந்தர்


இலையுதிர் காலம்
வத்றாப்பு சுந்தர்


அ கவிதை அல்லது A கவிதை
என்.விநாயக முருகன்


சிறு வயது மழை
ஆடுமாடு


அம்மா என்றொரு மனுஷி
ரிஷபன்


சூர்ப்பனகை - மலையாள மொழிபெயர்ப்பு
லேகா


மஜித் மஜிதியும் பீம்சிங்கும்
சுரேஷ் கண்ணன்


என்ன 'வலி' அழகே
சந்தனமுல்லை


ஒளிகளின் நீட்சி...
பாலாசி


ஸெர்யோஷாவும் குட்டீஸ் சிந்தனைகளும்
முத்துலெட்சுமி


காமாட்சிப் பாட்டி

கயல்


கல்வித்துறையில் கார்ப்பரேட் நிறுவனங்கள்... தெருவில் நிற்கப் போகும் இந்திய மாணவர்கள்

பைத்தியக்காரன்

கருத்துகள்

8 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. அருமை, பகிர்ந்தமைக்கு நன்றிகள்

  பதிலளிநீக்கு
 2. அருமை, பகிர்ந்தமைக்கு நன்றிகள்

  பதிலளிநீக்கு
 3. ஆஹா.. இது ரொம்ப நல்லாயிருக்குண்ணா. ஒரே பதிவில் ரசித்த பதிவுகள், புதிய பதிவர்கள் என்று அழகுறச் சொல்கிறீர்கள்.

  தீராத பக்கங்கள் தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
 4. குழந்தைகள் புத்தக தலைப்புகளே கவிதை போல இருக்கிறது

  பதிலளிநீக்கு
 5. சமீபத்தில் புத்தகத்திருவிழாவில் இதுபோன்ற குழந்தைகளுக்கான புத்தகங்களை அலுவலக நண்பர் வாங்கினார். குழந்தைகளைக்கவரும் வகையில் சிறிய வடிவமைப்பிலான புத்தகங்கள் இருப்பதை கண்டு மகிழ்ந்தேன்.

  //கென்// :-)

  புதிய பதிவர்களுக்கான அறிமுகத்திற்கும், இந்த வாரம் படித்ததில் எனது இடுகையை குறிப்பிட்டமைக்கு நன்றிகள்...

  பதிலளிநீக்கு
 6. பகிர்விற்கு நன்றி மாது.

  ஆடுமாடு, பாலாசி, முத்துலெட்சுமி, கயல் (என் மகளாக்கும்) வாசித்த நினைவு.

  பதிலளிநீக்கு
 7. தீராத‌ப் ப‌க்க‌ளில் என்னை அறிமுக‌ப்ப‌த்திய‌த‌ற்கு என் உள‌ங்க‌னிந்த‌ ந‌ன்றிக‌ள்!!த‌ங்க‌ளின் ஆத‌ர‌வு என் எழுத்தார்வ‌த்திற்கு தூண்டுகோலாக‌ இருக்கும்.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!