தல்கோனையென்றாலும், பார்வதியென்றாலும்....

"வணக்கம், தல்கோனை வந்துவிட்டாயா? இன்னும் மூப்படைந்து விட்டாய். ஒரேயடியாக நரைத்துப் போனாய். தடியூன்றி நடக்கிறாய்.”

“ஆம். வயது ஆகிக்கொண்டு போகிறது. மேலும் ஒரு ஆண்டு முடிந்துவிட்டது. வயலே உனக்கு இன்னும் ஒரு அறுவடை நடந்துவிட்டது. இன்று நினைவுநாள்.”

“தெரியும், உன்னை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன் தல்கோனை. நீ என்ன இந்த தடவையும் தனியாகத்தான் வந்திருக்கிறாயா?”

“அதுதான் பார்க்கிறாயே. தனியாகத்தான்”

சிங்கிஸ் ஐத்மாத்தவின் ‘அன்னைவயல்’ நாவலின் ஆரம்பத்தில் வரும் இந்த உரையாடல் நினைவுக்கு வருகிறது. தல்கோனையிடம் நிலம் கதை கேட்டுக்கொண்டே இருக்கும். அற்புதமான மண்ணில், மனித வாழ்வின் துயரக் காட்சிகள் புலப்பட ஆரம்பிக்கும். போரில் தன் அருமைக் குழந்தைகளை இழந்து நிற்கும் ஒரு தாயின் நினைவுப் பாதையில் நாமும் துயரம் பெருக்கெடுக்கச் சென்று கொண்டு இருப்போம்.

நாவலின் கடைசியில் தல்கோனை நிலத்திடமிருந்து விடைபெறுவாள்.

“போகிறாயா, தல்கோனை?”
“ஆம். போகிறேன். உயிரோடு இருந்தால் மறுபடி வருவேன். மறுசந்திப்பு வரை. வணக்கம் வயலே”

*

நிலமெல்லாம் தாய்களை மதிக்கின்றன. உபசரிக்கின்றன. பேசுகின்றன. தல்கோனையானாலும், பார்வதியானாலும் தாயே.

கருத்துகள்

9 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர் என்பது தெளிவாக புரிகிறது...

    பதிலளிநீக்கு
  2. உருவகித்து எழுதிய எழுத்துகளில் உள்ள மனிதாபிமானம்...உயிரோடு நடமாடிக்கொண்டிருக்கும் சில மரகட்டைகளுக்கு இல்லை...இந்த லட்சணத்தில் ஆட்சியில் வேறு...

    பதிலளிநீக்கு
  3. மண்ணின் புத்திகூட அற்ற நிலையில் மானிடர்கள் நம்முடன்...

    வெட்கி தலைகுனிய வேண்டிய நிகழ்வு....

    பதிலளிநீக்கு
  4. நிலமெல்லாம் தாய்களை மதிக்கின்றன. உபசரிக்கின்றன. பேசுகின்றன. தல்கோனையானாலும், பார்வதியானாலும் தாயே. //

    அருமை சார்:)

    பதிலளிநீக்கு
  5. இன‌மான‌ம் பேசி வ‌ருமான‌ம் பார்ப்ப‌வ‌ர்க‌ளுக்கு ஏது ம‌னிதம்?

    பதிலளிநீக்கு
  6. மண்ணிற்கு இருக்கும் மனிதாபிமானம் நம் மனிதர்களிடம் இல்லையே .

    பதிலளிநீக்கு
  7. ஓ இவங்களையெல்லாம் மண்ணுன்னு கூட திட்டக் கூடாது போலையே! அதுக்கு இருக்குற உள்ளம் இங்க காணோம்...

    பதிலளிநீக்கு
  8. கதிர்!

    சங்கர்!

    பாலாசி!

    வானப்பாடிகள்!

    பரிசல்காரன்!

    பனித்துளி சங்கர்!

    ரோஸ்விக!

    அனைவருக்கும் ம்நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!