நாய் பிழைப்பு

வாங்க வந்த மனிதர்கள் ஆளுக்கொரு பையோடு நெருக்கமாய்  மாரிமுத்துவின கறிக்கடையைச் சுற்றி நின்றிருந்தார்கள்.

அவர்கள் கால்களின் இடுக்கு வழியே மாமிசம் வெட்டுபவனை பார்த்தபடி இரண்டு நாய்கள் இருந்தன. நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு, கீழே விழும் மிச்சங்களை முந்தி எடுக்க வேண்டுமெனத் தயாராக இருந்தன. அதில் ஒன்றிற்கு பாதி கால் இல்லை..

எங்கிருந்தோ இன்னொரு நாய் மெல்ல கறிக்கடை அருகே வரவும், இருந்த நாய்கள் இரண்டுக்கும் ஒன்று போல அடிவயிற்றிலிருந்து உறுமல் வந்தது. வந்த நாய் தயங்கி, சினேகமாய் முகம் காட்டி, மேலும் இரண்டு அடி வைத்தது. இருந்த நாய்கள் ஊனெல்லாம் தெரிய எழுந்து நின்று குரைக்க ஆரம்பித்தன. வந்த நாயும் பதிலுக்கு குரைக்க, யுத்தம் துவங்கியது.

மாமிசம் வெட்டுபவனோ, மாரிமுத்துவோ முதலில் சட்டை செய்யவில்லை. அவை பாட்டுக்கு தள்ளி நின்றுதான் சண்டையிட்டுக் கொண்டு இருந்தன. ஒரு தருணத்தில் உச்சமாய் ஒன்றின் மீது ஒன்று பாய்ந்தபடி கடையருகே வந்தன.

கறிவாங்க வந்தவர்கள், மிரண்டு கடையை விட்டுத் தள்ளிப் போனார்கள். அவ்வளவுதான். மாரிமுத்து ஒரு கட்டை ஒன்றை எடுத்து நாய்கள் மீது வீசிக்கொண்டு கத்தினான். “வா இந்தப் பக்கம், குறைக் காலையும் ஒருநாள் எடுக்கத்தாம் போறேன்”.

வாங்க வந்த மனிதர்கள் சமாதானமாகி மீண்டும் மாரிமுத்துவின் கடையைச் சுற்றி நெருக்கமாய் நின்றிருந்தார்கள்.

கருத்துகள்

9 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. இதில் ஒரு பெரிய விடயம் இருக்கிறது... சகிப்புதன்மையின் அளவு....தூரம்...அவரவர் அனுமானத்தில்...

    பதிலளிநீக்கு
  2. அது எப்படி வாழ்வின் சிறு சிறு விடயங்களையும்... சுவைபட உங்களால் மட்டும் பதியமுடிகிறது...

    பதிலளிநீக்கு
  3. /“வா இந்தப் பக்கம், குறைக் காலையும் ஒருநாள் எடுக்கத்தாம் போறேன்”./

    அய்யோ!

    பதிலளிநீக்கு
  4. இந்த பதிவின் மூலம் என்ன சொல்ல நினைக்கிறீங்க? ப்லிஸ் சொல்லுங்க...

    பதிலளிநீக்கு
  5. ஆமாண்ணே,

    ரெண்டு நாளா கறி கடையில ரொம்ப கலாட்டா.

    பதிலளிநீக்கு
  6. சில தருணங்களில் சில இடங்களில், நாமும் புதிய மனிதர்களை உள்ளே வர அனுமதிப்பதில்லை, நாமும் மிருகங்களாகி விடுகிறோம் சில தருணங்களில்.

    பதிலளிநீக்கு
  7. இது எதுவும் பதிவுலகத்தைப் பத்தி இல்லையே ?? :-)

    பதிலளிநீக்கு
  8. முதலில் பின்னூட்டமிட்டவரை எப்படி அழைப்பதென்று தெரியவில்லை.
    புரிதலுக்கும், பார்வைக்கும் நன்றி அவருக்கு!


    ஆ...ஆ... புரிந்துவிட்டது!
    நன்றி நண்பரே. நீங்களும் எழுதலாம். அப்புறம் உங்கள் பெயர்க்காரணம்?


    வானபாடிகள்!
    இதுதான் இரைச்சிக்கடை நாய்களின் வாழ்க்கையே!

    பொன்ராஜ்!
    புரிய முடியவில்லையா? ஸாரி.


    சத்ரியன்!
    நீங்களும் பாத்தீங்களா!


    ராம்ஜி யாஹூ!
    விஷயம் பொதுவானதுதான்.


    உழவன்!
    அதென்ன காக்கா பிரியாணீ?

    ரோஸ்விக்!
    பதற்றம் தேவையில்லை. பொதுவாகத்தான் சொல்லி இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!