வெட்கப்படுவோம், வேதனைப்படுவோம், ஆத்திரப்படுவோம்!

தான் வாழும் சமூகத்தில் நடந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுத்த அந்த மனிதனை வன்முறைக்கும்பல் ஒன்று வெட்டி வீழ்த்தியிருக்கிறது. நேற்று காலையில் இந்தச் செய்தியைப் படித்ததும் துடித்துப் போனேன். ‘என்னடா உலகம் இது’ என கடுங்கோபம் வந்தது.

கந்துவட்டிக் கும்பல் ஒன்று, பணத்தைத் திருப்பித் தரமுடியாத விசைத்தறி தொழில் செய்யும் குடும்பத்தில் உள்ள, அப்போதுதான் திருமணமான பெண்ணை, வன்புணர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறது. அந்தக் காட்சிகளை வீடியோவில் பதிவு செய்து இணையத்திலும் வெளியிட்டு இருக்கிறது. செய்தியறிந்த பெண்ணின் பெற்றோர் கலங்கி நிற்கின்றனர். அவர்களுக்கு ஆதரவாக உதவ முன்வருகிறார் வேலுச்சாமி. ஈரோடு அருகே உள்ள பள்ளிப்பாளையத்தில், சி.பி.எம் கட்சியின் கிளைச்செயலாளர் அவர். கந்துவட்டிக் கும்பலுக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் செய்கிறார். அயோக்கியர்களைக் கைதுசெய்ய வலியுறுத்துகிறார். வேலுச்சாமியின் உயிருக்கு மிரட்டல்கள் விடப்படுகின்றன. அதையும் அவர் காவல் நிலையத்தில் சொல்கிறார். 11.3.2010, வியாழன் இரவு வெறிபிடித்த கும்பல் ஒன்று வந்து அவரை வெட்டிக் கொல்கிறது. (இதுகுறித்து எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கி பதிவு எழுதி இருக்கிறார்.)        

  veluchamy           veluchamy family             

நித்யானந்தாவையும், ரஞ்சிதாவையும் பற்றிய செய்திகளை இன்று வரை மாறி மாறி, படங்கள் படங்களாக, பக்கம் பக்கமாக வெளியிட்டு வரும் நமது பிரபல பத்திரிகைகள் இந்த அநியாயத்தை பத்துப்பதினைந்து வரிகளில் ‘பள்ளிப்பாளையத்தில் கொலை’ என சிறு செய்தியாகப் போட்டு தங்கள் தர்மத்தை நிலைநாட்டிக்கொண்டன. மக்களின் ரசனைகளை சிறுமைப்படுத்தி, அதற்கு தீனி போட்டு, அதில் பணம் பார்க்க வைக்கும் செய்தி இல்லை இது. சமூக அநியாயங்களுக்கு எதிராக மக்கள் கோபமடைந்துவிடக் கூடாது என்பதில் இந்த பிரபல பத்திரிகை முதலாளிகள் எப்போதும் தெளிவாக இருக்கின்றனர். இவைகளைத்தான் நாம் படிக்கிறோம். வெட்கப்படுவோம்.

வேலுச்சாமிக்கு 11 வயதில் சித்ரா, 8 வயதில் தாரணி பிரியா என்று இரு மகள்களும், 7 வயதில் வினோத் என்ற மகனும்  இருக்கின்றனர். எதற்காக அந்தச் சின்னக் குழந்தைகள் தங்கள் அருமையானத் தந்தையை இழந்து நிற்கின்றனர் என்பதை இந்த சமூகம் யோசித்துப் பார்க்குமா என்று தெரியவில்லை. வேதனைப்படுவோம்.

பணமும், செல்வாக்கும் இருந்தால் எது வேண்டுமானாலும் தாங்கள் செய்யலாம், தங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது என்னும் அதிகாரத்தின் வெளிப்பாடுகளே இந்த பகிரங்கமான குற்றங்கள். சமூகத்துக்கே விடப்படும் மிரட்டல்கள் இவை. நிம்மதியில்லாமல், தினம் தினம் பயந்து வாழ வேண்டியிருக்கிற சாதாரண ஜனங்கள் ஒரு பொருட்டே இல்லை இந்த அமைப்புக்கு. அவர்களுக்காக குரல்கொடுக்க முன்வருபவர்களையும் இரத்தம் சொட்ட சொட்ட அழிக்க முடியுமானால், எதிர்காலத்திற்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது. யாருடைய அரசு இது? யாருடைய அமைப்பு இது? ஆத்திரப்படுவோம்.

கருத்துகள்

59 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. வருத்தமாக இருக்கிறது.

    இன்றைய எதிர் கட்சிகளும் இந்த மாதிரி பிரச்னைகளுக்கு போராடாமல் அறிக்கை அரசியலும், கேரளாவிற்கு செல்லும் வாகனங்களை மறிப்போம் என்று விளையாடி கொண்டு இருக்கின்றன.

    பத்திரிக்கைகள் பாலியல் செய்திகள் எழுதியே விற்பனையை பெருக்குகின்றன.

    பதிவர்கள் அனைவரும் பள்ளிப்பாளையம் சென்று போராட வேண்டும் என்று சொல்கிறீர்களா.

    பதிவர்களாகிய நாமோ வெளி நாடுகளில் குளிர் சாதன அறைகளில் உக்காந்து கொண்டு ஹிட்டுக்களை எண்ணிக் கொண்டு இருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  2. சில மைல் தொலைவில் நடந்த இந்த கொடிய செயலை... உங்கள் இடுகை வாசித்துதான் தெரிந்து கொள்கிறேன்

    முதலில் அதற்கு வெட்கப் படுகிறேன்...

    பதிலளிநீக்கு
  3. உண்மையிலேயே வெட்கப்படவேண்டிய சம்பவம்தான் :(

    பதிலளிநீக்கு
  4. உண்மையிலேயே வெட்கப்படவேண்டிய சம்பவம்தான் :(

    பதிலளிநீக்கு
  5. நானும் படித்து வேதனைப்பட்டேன் சார்..

    இதில் நடந்த்தது இரண்டு கொலை...அந்தப்பெண்ணைக் கற்பழித்து, அதை இணையத்திலும் வெளியிட்டார்களாமே.. இது எப்பேர்ப்பட்ட கொடுமை. இதுவும் ஒரு உயிர்க்கொலைதானே. இணையத்திற்கு கட்டாயம் ஒரு கட்டுப்பாடு தேவை..இப்படியே போனால் யாரும் யாரையும் பலிவாங்க் இது ஒரு கருவியாக அமைந்துவிடும்..இது ஒரு தொழிநுட்ப பேராபத்து..அதுவும் பெண்களுக்கு இது ஒரு பேராபத்து....

    சம்பந்தமே இல்லாமல் ஒரு அநியாய்த்திற்கு எதிராக காவல் நிலைத்தில் புகார் செய்த காரணத்துக்காக் தன்னு யுரை இழந்த வேலுச்சாமி....இனி அவர் குடும்பத்தின் கதி.....

    நாம் இந்தியநாட்டில்தான் இருக்கிறோமா...

    பதிலளிநீக்கு
  6. The matter should be handled in better way and manner...The atrocities of the murderers must be condemned vehemently by the Press and organizations...

    பதிலளிநீக்கு
  7. நியாயமான கோபம்தாண்ணே..!

    ஊடகங்கள் சிற்றின்பத்தை பொதுமக்கள் புத்தியில் வலுக்கட்டாயமாக புகுத்திக் கொண்டிருக்கின்றன..!

    அவர்களுக்குப் பணமும், புகழும்தான் பெரியதே தவிர.. நாடோ, வீடோ அல்ல..!

    பதிலளிநீக்கு
  8. This Thugs might have the Political back ground. The Power corrupts and obsalute power corrupts obsolutely. No party / welfare body is morally right to raise these issues against the criminals. This is the effect due to the Criminals nexus with power brokers. We never learn until it knocks OUR DOOR, by then all have gone. Medias are wagging the tails who throw the bones. Criminals are the one who can afford to throw bones. All the 5 ESTATES are now bend towards materialitic benefits instead of ethics.

    பதிலளிநீக்கு
  9. இப்படியேதான் போகுமா சார்:(

    பதிலளிநீக்கு
  10. ஒரிஜினல் கம்யூனிஸ்ட்13 மார்ச், 2010 அன்று 12:48 PM

    இந்த கொலையை செய்த மதிமுக குண்டர்களின் கூட்டணியான அதிமுக வேட்பாளருக்கு பெண்ணாகரத்தில் தனிமேடையில் சொம்பு தூக்கபோகிறார்களாம் மார்க்சிஸ்ட்கள்.

    வெட்கப்படுவோம், வேதனைப்படுவோம், ஆத்திரப்படுவோம்.

    பதிலளிநீக்கு
  11. நம்நாட்டிலிருந்து நல்ல சேதி ஏதும் உண்டா என்று தேடினாலும் கிடைக்காதது பெரும் அவலம்.

    அதைவிடக் கொடுமை இத்தகைய அநியாயங்கள் தொடர்வதும், பாதிக்கப்பட்டவர்கள் மேலும் மேலும் துயரத்திற்கு ஆளாவதும்.

    இந்த நிகழ்வுகளிடையே வாழ்கிறோம் என்பதே வெட்ககேடாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  12. மாதவராஜ்,

    சமயங்களில் காலையில் பத்திரிகை படிப்பதையே நிறுத்திவிடலாமா என்று ஆயாசம் தருமளவிற்கு வன்முறைச் சம்பவங்களையும் மனித உரிமை மீறல்களையும் பற்றின செய்திகள் பக்கம் பக்கமாய் நீள்கின்றன. சாமியாரின் குறிகளுக்கு தரும் முக்கியத்துவத்தைக் கூட சாதாரணனின் மரணத்திற்கு பத்திரிகைகள் தருவதில்லை.

    பேய்கள் அரசாட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.

    பதிலளிநீக்கு
  13. ஆத்திரப்பட முடியாதபடி அருவெறுப்பு தடுக்கிறது... ஆதங்கமும் ஆயாசமும்தான்.... இதுக்கெல்லாம் அங்க விமோச்சனமே இல்லை...

    பதிலளிநீக்கு
  14. கவலை வேண்டம் மாதவராஜ் கொலையாளிகளை காவல்துறை கைது செய்யும் பிறகு கோர்டில் போதுமான சாட்சிகள் நிருபிக்கபடவில்லை என கொலையாளிகள் வரும் அண்ணா பிறந்த நாள் அன்று அவர்களை கழக அரசு விடுதலை செய்துவிடும்.

    வாழ்க இந்திய அரசில் சட்டங்கள்.

    ஆடுவோமே பள்ளி படுவோமே
    ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்

    காமன்மேன்.

    பதிலளிநீக்கு
  15. இதை விடவும் பல கொடுமைகள் நம்மை சுற்றிலும் நடந்து கொண்டேதான் இருக்கிறது. பத்திரிக்கைகள் சிலவற்றை வெளியிடுகின்றன அவ்வளவுதான்.

    படித்ததும் வேதனைதான் வருகிறது.

    :(

    பதிலளிநீக்கு
  16. எனது வெட்கமும்,வேதனையும் ஆத்திரப்பட இயலாமல்.

    பதிலளிநீக்கு
  17. காவல் நிலையத்தின் தவறுகள் அரசின் பார்வைக்கு நேரமில்லாமல் அவர்கள் திறப்பு விழாக்களில்!

    பதிலளிநீக்கு
  18. // நித்யானந்தாவையும், ரஞ்சிதாவையும் பற்றிய செய்திகளை இன்று வரை மாறி மாறி, படங்கள் படங்களாக, பக்கம் பக்கமாக வெளியிட்டு வரும் நமது பிரபல பத்திரிகைகள் இந்த அநியாயத்தை பத்துப்பதினைந்து வரிகளில் ‘பள்ளிப்பாளையத்தில் கொலை’ என சிறு செய்தியாகப் போட்டு தங்கள் தர்மத்தை நிலைநாட்டிக்கொண்டன.//

    காசேதான் கடவுளடா... இந்த விச(ய)த்தை பெரிசாகப் போட்டா வியாபாரம் ஆகுமா... தர்மம் என்பது எங்கு பணம் கிடைக்கின்றதோ அங்கு இருக்கின்றது என்பதுதான் இப்போதைய பத்திரிக்கை தர்மம்.

    பதிலளிநீக்கு
  19. மிகவும் அவமானமாகவும், கோபமாகவும், கையாலாகாமலும், ரவுத்திரமாகவும், இன்னும் என்னென்னவோ உணர்வுகளாலும் ஆட்டிப்படைக்கிறது மனது...

    பேய் ஆட்சியில் பிணம் தின்னும் சாத்திரங்கள்” என்ற வரிகள்தான் நினைவில் வருகின்றது...தோழர்.

    பதிலளிநீக்கு
  20. சமூக சீர்கேடுகள் குறித்து வேதனைப்பட்டாலோ, ஆத்திரப்பட்டாலோ நக்சல் என்று முத்திரை குத்த ஒரு கூட்டமும், அரசு இயந்திரமும் தயாராய் இருப்பதே, இங்கே மனிதர்களை வெறும் பதர்களாய் இருக்க வைத்திருக்கிறது.

    சமூக சீர்கேடுகளை சுட்டிக்காட்டி பதிவிட்டாலும், எள்ளி நகையாட இங்கேயும் சிலர்.

    வாழ்க ஜனநாயகம்!

    பதிலளிநீக்கு
  21. இப்படி நடந்தால் அப்புறம் யார் நல்லது பண்ண வருவாங்க...பத்திரிக்கைக அசிங்கமானத படிக்க பழகிடுச்சு

    பதிலளிநீக்கு
  22. வெட்கப்படுகிறேன்!
    வேதனைப்படுகிறேன்!!
    ஆத்திரப்படுகிறேன்!!!

    http://sagotharan.wordpress.com

    பதிலளிநீக்கு
  23. சமூக வன்கொடுமைக்காகத் தன்னை அர்பணித்து மாண்டு போன குடும்பத் தலைவனின் இழப்பால் பரிதாபகரமாகியுள்ள குடும்ப அங்கத்தவர்களின் எதிர்கால வாழ்வுக்கு எங்களது தார்மீக அன்பை காணிக்கை ஆக்குகிறோளம்!
    மனவுறுதியுடன் வாழ எழுங்கள்... வாழ்க வளமுடன்!!
    தூர தேசமொன்றிலிருந்து
    அன்புடன் முகிலன்

    பதிலளிநீக்கு
  24. தமிழகக் காவல்துறைக்கு கொலைமிரட்டலும் கொலையும் நடவடிக்கை கோரும் புகார்கள் அல்ல.வேலுசாமி புகார் கொடுத்த பொழுது அந்தப் புகாரைப் பார்க்கக்கூட காவல்துறைக்கு நேரமில்லை. இரண்டாவது முறையும் கொலை மிரட்டல்.மீண்டும் புகார்.புகார் கொடுத்துவிட்டுத் திரும்பும் பொழுது கொலை நடக்கிறது. கடமையை மறந்த கட்டப் பஞ்சாயத்து காவலர்களுக்கு பதவி உயர்வுகள். வாழ்க காவல்துறை. வளர்க கரிகால் பெருவளத்தான் கருணாநிதியின் புகழ்.

    பதிலளிநீக்கு
  25. ஏனுங்க, இந்தியாவுல எவ்வளவோ நல்லது நடக்குது, அதையெல்லாம் விட்டுப்போட்டு, இந்த மாதிரி சேதியையெல்லாம் ஏன் எழுதிப் பெரிசுபடுத்துறீங்க?

    பதிலளிநீக்கு
  26. கந்துவட்டியும் ,காமவக்கிரங்களும் ஒரு சமூகத்தின் இழிநிலையின் வெளிப்பாடுகள். அதை வேடிக்கை பார்க்கும் ஒவ்வொரு மனசாட்சிக்கும் வேலுச்சாமியின் மரணம் ஒரு சவுக்கடி. கந்துவட்டிக்கும் ,காமவக்கிரங்களுக்கும் துணைபோகும் அரசும் , ஆட்சி செய்பவர்களும் கூட அந்த சமூகத்தின் இழிநிலையின் வெளிப்பாடுகள்தான் .

    பதிலளிநீக்கு
  27. மீடியா மக்களுக்கானது அன்று...
    வியாபாரத்துக்குப் பக்கத்தை நிரப்பி போதை வஸ்துக்கள் போல மதமதப்பு தரும் எழுத்துக்களால் சமுதாயத்தைக் கெடுக்கும் ஒரு கிருமி.... சாமியாரின் அந்தரங்க லீலைகள் இல்லாவிடிலும் வேலுச்சாமி போன்றவர்களின் மரணத்தையெல்லாம் பொருட்படுத்தாது இந்த வக்கிர உலகம்.... மீடியா மக்களுக்கானது அன்று...
    வியாபாரத்துக்குப் பக்கத்தை நிரப்பி போதை வஸ்துக்கள் போல மதமதப்பு தரும் எழுத்துக்களால் சமுதாயத்தைக் கெடுக்கும் ஒரு கிருமி.... சாமியாரின் அந்தரங்க லீலைகள் இல்லாவிடிலும் வேலுச்சாமி போன்றவர்களின் மரணத்தையெல்லாம் பொருட்படுத்தாது இந்த வக்கிர உலகம்.... shame on us

    பதிலளிநீக்கு
  28. // யாருடைய அமைப்பு இது? ஆத்திரப்படுவோம்.//

    முதலில் நான் வெட்கப்படுகிறேன்:((( இதுபோல் ஒரு சம்பவம் நடந்தது தெரியாமல், நித்தி ரஞ்சிதா "மேட்டரில்" காட்டிய ஆர்வம் தேடல் இதுபற்றி தெரியவில்லை. தெரிந்திருந்தால் என்ன செய்திருக்க முடியும் என்று கேள்வி மனசில் வந்தாலும், ஏதோ ஒரு குற்ற உணர்வு.:((

    பதிலளிநீக்கு
  29. பேய்கள் அரசாட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.

    பதிலளிநீக்கு
  30. தோழர் வேலுச்சாமி குறித்து எனக்கு பெருமையாக இருக்கிறது. அவர் கம்யூனிஸ்டுக்கே உரிய வீரத்துடன் தன்னை பதிவு செய்திருக்கிறார்.

    வீரவணக்கம் தோழனே, உனது வழியில், தொழிலாளி வர்கத்தின் துயர் துடைக்க இன்னும் ஆயிரம் ஆயிரம் பேராய் முன்நிற்போம்.

    பதிலளிநீக்கு
  31. வெட்கப்படுவோம், வேதனைப்படுவோம், ஆத்திரப்படுவோம்.

    பதிலளிநீக்கு
  32. பத்திரிகைத் தொடர்புடைய நண்பர்கள் இதனை வெளிச்சத்திற்குக் கொண்டுவர முடிந்தால் நல்லது.

    பதிலளிநீக்கு
  33. ஒரு வக்கீல் தாக்கப்பட்டால் அதனை வக்கீல்கள் சங்கம்தான் கவனிக்க வேண்டும் .
    ஒரு மருத்துவர் தாக்கப்பட்டால் அதனை மருத்துவர் சங்கம்தான் கவனிக்க வேண்டும் .
    ஒரு எழுத்தாளன் தாக்கப்பட்டால் அதனை எழுத்தாளர் சங்கம்தான் கவனிக்க வேண்டும்
    அதாவது பாதிக்கப்பட்டவன் சார்ந்த அமைப்புதான் அதனை கவனிக்க வேண்டும். இது இன்றைய நிலைமை . இந்த
    நிலை மாறி ஒரு நல்ல மனிதன் தாக்கப்பட்டால் எல்லா மனிதர்களும் அமைப்பு வித்தியாசம் இல்லாமல்
    எப்போது போராடுகின்றோமோ , அன்றுதான் குற்றங்கள் குறையும் .

    பதிலளிநீக்கு
  34. இது காமராஜ் அவர்களின் போஸ்ட் (படித்தவன்) குறித்து!

    தவறு செய்பவர்களை முதலில் அவர்கள் செய்வது தவறென்று உணரச் செய்ய வேண்டும். உணராவிட்டால் அதற்கு பின்விளைவுகள் ஏற்படும் என்றும், பலர் முன் அவமானம் ஏற்படும் என்றும் எச்சரிக்க வேண்டும். இதன் பின்னர் நடவடிக்கை எடுப்பது சாலச் சிறந்தது. அந்த நபரை தற்கொலைக்கு இட்டு செல்லாது.

    கருத்துக்களை சொல்வதிலும் ஒரு நிதானம் தேவை. அது எளிதில் ஒருத்தர் மனதில் புகுவது மாதிரி இருக்க வேண்டும். மனம் புண்படுத்துவதில் ஒரு சுயஇன்பம் மட்டும் தான் அடையமுடியம். செய்திகள் போய்ச்சேராது.

    அன்புடன்
    சுவாமி

    பதிலளிநீக்கு
  35. சங்கர் ராமன் கொலையை "ப்ளாட்" பண்ணியவன், கொலையை எக்ஸெக்யூட் பண்ணியவர்கள் மற்றும் இந்தக் கொலையை செய்தவர்களை ஊரறிய மக்களின் பார்வையில் தூக்கிலிடனும்!

    சினிமாக்கார்களை கூட்டி கும்மாளம் அடிப்பதை நிறுத்திவிட்டு முதல்வர் இதுபோல் சட்டமொழுக்ன்கை அமல்ப் படுத்தனும்!

    குற்றவாளி செத்ததுக்கப்புறமா தூக்கில் போடமுடியும்?

    தமிழ்நாடு என்ன மிருகங்கள் வாழும் வனமா? இதுபோல்படுகொலைகள் செய்பவர்களை உடனுக்குடன் தூக்கில் தொங்க விடனும்! அதற்காகத்தான் அரசாங்கம் இருக்கு!

    காசு வாங்கிட்டு ஓட்டுப்போடுகிற நம்ம மக்கள் எல்லாத்தையும் உதிர்த்துட்-டானுக!

    பதிலளிநீக்கு
  36. சாமியார் விஷயங்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை மீடியாக்கள் இதற்கு கொடுத்திருந்தால் கொஞ்சமாவது ஏதாவது நடந்திருக்கும். வேதனையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  37. என்ன சொல்லறதுன்னே தெரியலைங்க....மனம் கனமாக உளளது.இந் நிகழ்வை பதிவில் காட்டிய உங்களை பாராட்ட மட்டுமே தோனுதுங்க.

    பதிலளிநீக்கு
  38. It shows the development of indian criminals and mindset of indian public,as long as im safe i don bother whats shappening next door,we will cry when it comes to us,it'l come to everyone, no one is safe theres no law no protection.

    பதிலளிநீக்கு
  39. பேய்கள் அரசாட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.

    பதிலளிநீக்கு
  40. //நித்யானந்தாவையும், ரஞ்சிதாவையும் பற்றிய செய்திகளை இன்று வரை மாறி மாறி, படங்கள் படங்களாக, பக்கம் பக்கமாக வெளியிட்டு வரும் நமது பிரபல பத்திரிகைகள் இந்த அநியாயத்தை பத்துப்பதினைந்து வரிகளில் ‘பள்ளிப்பாளையத்தில் கொலை’ என சிறு செய்தியாகப் போட்டு தங்கள் தர்மத்தை நிலைநாட்டிக்கொண்டன.//

    கிடைத்திருந்தால் இந்த செய்தியுடன் வீடியோவும் போட்டிருப்பார்கள்

    பதிலளிநீக்கு
  41. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் போலீஸ் துரத்தி மாணவர்கள் அநியாயமாக செத்தது, பள்ளிபாளையம் பாலியல் தொந்தரவு, மகளிர் இடஒதுக்கீடு மசோதா... இதெல்லாம் நம்ம பத்திரிக்கைகளுக்கு ஒரு செய்தியா என்ன? நித்யானந்தாவுடன் உறவு கொண்ட நடிகைகள் யார் யார் என லிஸ்ட் போடவே நேரம் போதவில்லை. நம்ம முதல்வருக்கோ தமிழ் மக்களுக்கு (தமிழ் மக்கள்னா ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, அந்த நிதி, இந்த நிதின்னு நீங்க புரிஞ்சுக்கணும்)
    எல்லாம் செஞ்சாச்சு, ஓய்வெடுப்போம் என்ற மனநிலை வந்தாச்சு, த்ரிஷா, அசின், ஸ்ரேயா, நமீதா... என புடை சூழ ஒரே ஆட்டபாட்டம்தான். புதிய சட்டசபை வளாகமோ இனிமேல் ராஜராஜசோழன் போல காலத்துக்கும் தானைத்தலைவர் புகழ் பாடும். இப்படியாகத்தான் நம் தமிழகத்தில் பேசுவதற்கும் 'பார்ப்பதற்கும்' ஆயிரம் விஷயங்கள் இருக்குது. களத்தில் வீழ்ந்த போராளி வேலுச்சாமிக்கும் அந்த அப்பாவிப் பெண்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். இடப்பட்டுள்ள பின்னூட்டங்கள் கனல் கொப்பளிப்பவை. நம்பிக்கை இன்னும் வற்றவில்லை.
    இக்பால்

    பதிலளிநீக்கு
  42. இதயம் வலிக்கிறது மாதவாரஜ்
    கடந்த முறை நான் பள்ளிப்பாளையம் வாலிபர் சங்க நிகழ்வுக்கு சென்றிருந்த போது காவேரி வாலிபர் சங்க அலுவலத்தில் வேலுவுடன் பேசிக்கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது. இந்த கொலையில் முதல் குற்றவாளிகள் காவல்துறையினர்தான். அவர் தனது உயிருக்கு குறிவைக்கப்பட்டதை அறிந்து, காவல் நிலையாத்தில் புகார் கொடுத்தும் அவரை பலி கொடுத்திருக்கிறோம். 1999 ஆம் ஆண்டு நான் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் கடலூர் மாவட்ட செயலாளராக இருந்த போது இதேபோன்று கள்ள்சாராயத்தை எதிர்த்த தோழர்கள் குமார் ஆனந்தன் என்ற இரண்டு தோழர்கள் வெட்ட்டி படுகொலை செய்ய்ப்பட்டது நினைவுக்கு வந்தது.
    நிச்சயம் பதில் சொல்வோம். தியாகங்கள் இல்லாமல் முன்னேற்றம் இல்லை. இத்தகைய தியாகிகளின் தியாகத்திற்கு நீங்கள் சொன்ன களப்போராட்டங்களே தீர்வாக இருக்கும்

    பதிலளிநீக்கு
  43. இதற்கும் இரண்டு மைனஸ் ஓட்டு போட்டு தனது முதலாளித்துவ வெறியை தீர்த்து கொண்ட முதலைகள் இன்னும் எத்தனை உயிரை காவு வாங்க போகிறது!

    பதிலளிநீக்கு
  44. My heartfelt condolences.

    Rarely someone takes precaution knowing threat to their life. He would not have thought of having some self-restraint in his movements by being with the company of associates and friends, not moving out in night time, etc., until the problem precipitates. It is difficult to replace a loss like these both to his family and the organization.
    Swami

    பதிலளிநீக்கு
  45. ராம்ஜி யாஹூ!
    உங்கள் வருத்தத்தை புரிந்துகொள்கிறேன்.

    நிச்சயமாக பதிவர்களை பள்ளிப்பாளையம் சென்று போராடச் சொல்லவில்லை. இதுகுறித்து ஒரு தார்மீக கோபமும், வேதனையும் சமூகத்திற்கு வரவேண்டும் என்பதுதான் என் கவலை. வந்த பின்னூட்டங்கள் நம்பிக்கையளிக்கின்றன. நமது குரல் பெருங்குரலாய் உருவெடுக்கும்போது அதற்கு ஒரு பௌதீக சக்தி உண்டகும்.

    பதிலளிநீக்கு
  46. ஈரோடு கதிர்!
    இது நம் சமூகத்தின் மனசாட்சியாக உருபெற வேண்டும் என நினைக்கிறேன்.நன்றி.


    ராபின்!
    நன்றி.


    கண்ணகி!
    ஆம், நாம் இந்தியாவில்தான் இருக்கிறோம். இந்தியாவில்தான் இப்படி நடந்து கொண்டு இருக்கிறது. கையில் சிலம்போடு சமூகம் அரசவைகளை நோக்கி நிஒயாயம் கேட்டு கிளம்ப வேண்டும்.


    விமலா வித்யா!
    நிச்சயமாக. இன்னும், இன்னும் சக்தியோடு வெளிப்படுவோம்.


    உண்மைத் தமிழன்!
    தம்பி எப்படி இருக்கீங்க. நன்றி. நீங்கள் சொல்வது உண்மையே.



    வாசன்!
    சார். முகத்திலறைகிற மாதிரி இதற்கு பின்னணியை அம்பலப்படுத்தி இருக்கிறீர்கள். வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.


    வானம்பாடிகள்!
    நிச்சயமாக போகாது. நம்பிக்கை முதலில் அவசியம்.

    பதிலளிநீக்கு
  47. ஒரிஜினல் கம்யூனிஸ்ட்!

    வாங்க, எழவு வீட்டிலும் எண்ணெய் கடைஞ்சிட வாங்க.

    பதிலளிநீக்கு
  48. குலவுசனப்பிரியன்!

    வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் நன்றி.

    சுரேஷ் கண்ணன்!
    //சாமியாரின் குறிகளுக்கு தரும் முக்கியத்துவத்தைக் கூட சாதாரணனின் மரணத்திற்கு பத்திரிகைகள் தருவதில்லை. //

    செருப்பால் அடித்திருக்கிறீர்கள்.
    மிக்க நன்றி சுரேஷ்!

    பதிலளிநீக்கு
  49. கலகலப்பிரியா!

    ஆத்திரப்பட வேண்டும்.... தொடர்ந்து இவர்களுக்கு எதிராக, மிக உறுதியாக. நன்றி.



    காமன்மேன்!
    நடக்கலாம். நடந்திருக்கிரது. ஆனால் நடக்கவிடக் கூடாது என்கிற வேகம் நமக்குள் வெப்பமாய் இருந்துகொண்டே இருக்க வேண்டும். அணைந்து போனால், நாம் தோற்றுப்போனதாய் அர்த்தம்.


    கண்ணா!
    எல்லா அநீதிகள் குறித்தும் பேசுவோம். வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.


    ராஜநடராஜன்!
    ஆனாலும், ஒரு ஆத்திரம் உங்கள் வார்த்தைகளுக்குள் அடங்கி இருக்கிறது. நன்றி.



    இராகவன் நைஜிரியா!
    ஆமாம் நண்பரே. இந்த பத்திரிகை தர்மம் குறித்து விரிவாக ஒரு பதிவு போட்டு, நித்யானந்தாவைக் கிழிச்சுத் தொங்கவிட்ட மாதிரி தஒங்க விடணும்.

    பதிலளிநீக்கு
  50. கும்க்கி!
    ஆம். நண்பரே. அதே சாத்திரங்கள்தான்.நம்மை உணர்வுகள் ஆட்டிப்படைத்தால் போதும். அதுவே இந்த சமூகத்திற்குள் ஒரு தார்மீக கோபத்தை உருவாக்கும். நன்றி.


    கும்மி!
    நிச்சயமாக முத்திரை குத்தப்படும். எள்ளிநகையாடப்படலாம். அதற்கெல்லாம் நாம் அடங்கிவிட முடியுமா. வாருங்கள் சேர்ந்திசைப்போம்.


    BONIFACE!
    ஏன் நாம நல்லது பண்ன யோசிப்போமே. நன்றி.


    அருணா மேடம்!
    நன்றி.


    ஜெகதீஸ்வரன்!
    நாம் ஒன்றாய் இணைந்து நிற்போம். உங்கள் வலைப்பக்கம் வருவேன்.


    ஸ்டார்ஜன்!
    நன்றி.


    அனானி!
    அடேயப்பா! நன்றி.


    அக்கினிச்சித்தன்!
    அதையெல்லாம் நீங்க எழுதுங்க நண்பரே!

    பதிலளிநீக்கு
  51. subbu!
    சரியாகச் சொன்னீர்கள். நன்றி நண்பரே.


    பிரபு!
    shame on them! நன்றி.


    குசும்பன்!
    தெரிந்திருந்தாலும் என்ன செய்ய முடியும் என்கிற ஆற்றாமையே நம்மிடம் உள்ள பலவீனமாய் இருக்கிறது. கல்லைக்கூட வேண்டாம். சிறு மணலை அள்ளிப் போட்டுக்கொண்டே இருந்தால் கூட அதற்கு ஒரு விளைவு உடனடியாக இல்லாவிட்டாலும், நிச்சயம் ஒருநாள் இருக்கும். அந்த நம்பிக்கை வேணும் என் நண்பா.

    பதிலளிநீக்கு
  52. ஜோதிஜி!
    நன்றி.


    சிந்தன்!
    ஆம் நண்பரே. வீர வணக்கம் செய்வோம்.

    சே.குமார்!
    வருகைக்கும், க்ருத்துப் பகிர்வுக்கும் நன்றி.

    ஹூசைனம்மா!
    வெளிச்சத்திற்கு வந்து விட்டது. தமிழகமெங்கும் இயக்கம் நடத்துவது என சி.பி.எம் கட்சி முடிவெடுத்து களத்தில் இறங்கியுள்ளது. நம்மைப் போன்ரவர்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.


    முத்துக்குமார்!
    வாருங்கள் என் தோழனே!
    நம்மிடம் உள்ள சாபக்கேட்டை மிகச்சரியாய் சொல்லி இருக்கிறீர்கள். இதனைச் சரி செய்ய வேண்டியது நாம்தான். ஒருத்தருக்கு ஒன்று என்றால், அனைவரும் என்று வீதியில் இறங்குகிறோமோ அன்று எல்லாம் தெளிவாகும்.

    பதிலளிநீக்கு
  53. சுவாமி!
    சரி நண்பரே.


    வருண்!
    முழுக்கோபமும் வார்த்தைகளில் வெளிப்பட்டு விட்டது போல உக்கிரமாக இருக்கிறது. கொஞ்சம் சேமித்து வையுங்கள் நண்பரே. தேவைப்படும்.


    சின்ன அம்மிணி!
    ஆமாங்க. நன்றி.


    தாராபுரத்தான்!
    நன்றி.


    அனானி!
    இதுபோன்ற மனோபாவங்களிலிருந்து நாம் நம்மை விடுவித்துக்கொள்ள முன்வர வேண்டும். வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

    பாபு!
    நன்றி.


    பாலரவிசங்கர்!
    நன்றி நண்பா.

    பதிலளிநீக்கு
  54. இக்பால்!
    எப்படி இருக்கீங்க.

    உங்களிடம் இருக்கும் இந்த நெருப்பு பரவ வேண்டும். உண்மைகள் நெருப்புத்தான். அணையாது என் தோழனே.

    நட்புடன் ரமேஷ்!
    வேலுச்சாமியோடு ந்நீங்கள் இருந்த கணங்கள் பெருமைக்குரியவை. அவனது நினைவுகளை ஏற்றி வைத்து களம் காண்போம்.

    வால்பையன்!
    ஆமாம். படித்தவுடன் சட்டென்று சிரிப்பு வந்துவிட்டது. நன்றி நண்பரே.


    அனானி!
    மக்களுக்கு விரோதமாகச் செயல்படுகிறவர்களுக்கு இங்கே சகல பாதுகாப்பு, பாதுகாப்பு வளையங்கள். மக்களுக்கு சேவை செய்கிறவர்களுக்கு மக்கள்தான் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  55. தமிழ்செல்வனின் கட்டுரையை படிக்க நான் தயாராக இல்லை. உங்கள் கட்டுரையே நாக்கைப் பிடுங்கிக்கொள்கிறாப் போல இருக்கிறது. அவருடையதைப் படித்தால் நிஜமாகவே செய்துகொள்ளத்தான் வேண்டும். சை.!

    பதிலளிநீக்கு
  56. அன்பு தோழர் வேலுசாமி கொலைக்கு காரனமானவர்களில் முதல் குற்றவாளி காவல் துறை தான். பிறகு தன் கந்து வட்டி காம கிறுக்கர்கள்.
    அவர் பிப்ரவரி 25 அன்று தனனுக்கு கொலை மிரட்டல் விடுகின்றனர் கந்து வட்டி கும்பல். அன்றே அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார். அதை வாங்க மறுத்தது காவல் துறை. வேலுவை தேடி கொண்டு கொலை வெறியோடு திரிகின்றனர். கடந்த 10.03.2010 புதன்(தோழர் உங்களுடைய பதிவில் 11.03.2010 என்று தவறாக இருக்கிறது) மாலை வேலு தோழர் வீட்டுக்கு வந்து, வேலுவின் தம்பிடம் 'உங்க அண்ணன் எங்கட ' என்று கேட்டு மிரட்டி இருக்கிறார்கள் அந்த கும்பல். அவர் இல்லை என்று சொன்னவுடன் சென்று விட்டார்கள். அன்று இரவு 9 மணிக்கு காவல் நிலையம் செல்கிறார் வேலுசாமி தோழர். காவல் துறையினர் புகார் 'அப்படி எழுதி கொடு' இப்படி எழுதி கொடு' என்று அலைகளிக்கின்றனர். இரவு 10.30 மணிக்கு ஒரு வழியாக புகார் மனுவை வாங்கி கொண்டனர். பள்ளி பாளையம் ராஜா வீதி வழியாக வீடு திரும்புகிறார். அவ்வீதி மக்கள் அதிகம் நடமாடும் பகுதி. சரியாக 10.45 மணிக்கு அந்த சிவகுமார்(கந்துவட்டி) கும்பல், 8 நபர்களால் வீர விதை வேலுவை வெட்டி சாய்க்கிறார்கள். முன்னதாவே தெரிந்திருக்கும் காவல் துறையினர் 11.15 மணிக்குள் ஈரோடு மருத்துவமனைக்கு எடுத்து சென்று விட்டனர். காவல் துறையினர் கரன்சிக்காக கந்து வட்டி கும்பலிடம் காட்டி கொடுத்தனர். முதல் குற்றவாளி காவல் துறைதான்.
    இத்தேசத்தின் மீது உமில்க்கபடும் அதிகார அட்டுளீயங்களை அடியோடு வேரறுப்போம் ஒன்றாக சேர்ந்து..
    (அவரோடு பேசிய, பழகிய,போராட்டங்களில் பங்கேற்ற நினைவுகள் என்றும்....)

    பதிலளிநீக்கு
  57. வேலை பளுவால் இன்று தான் இந்த பதிவை பார்க்கிறேன். முதலில் அதுவே வெட்கமாய் இருக்கிறது.

    எதையும் தட்டி கேட்பவனை வெட்டி கொல்லும் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காட்டு மிராண்டிகளை விட கேவலம்.

    வெட்கப்படுகிறேன்.


    ஊடகங்களை விட கேவலமான தொழில் இங்கு இல்லை,அப்படி இருக்கிறது அவர்களின் நிலையும் செய்திகளும்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!