நித்யானந்தாவின் பரபரப்புகளுக்குள் உடனடியாக ஒன்றை தெரிவிக்கத் தோன்றியது. ‘நித்யானந்தா போன்றவர்கள் எப்படி இந்த உயரத்திற்குச் செல்ல முடிகிறது என்ற கேள்வியை எழுப்புங்கள்’என்று நேற்றைய பதிவில் எழுதி இருந்தேன். ஆட்டம் சரியான திசையில் செல்ல வேண்டுமே என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடுதான்.
யாரும் துருவ நட்சத்திரமாக முளைத்தவரில்லை. நித்யானந்தாவின் சாதாரண வாழ்க்கைக் குறிப்பை எல்லோரும் இன்னேரம் அறிந்திருப்பீர்கள். அவனை இந்த உயரத்திற்கு கொண்டு வந்ததில் சமூகத்திற்கே பெரும்பங்கு இருக்கிறது. தங்களுக்கான நம்பிக்கையாக, அமைதியைத தருகிற இடமாக அவனை ஏற்றுக்கொண்டவர்கள் இந்த மக்கள்தானே. அதை திட்டமிட்டு உருவாக்கியதில் சில ஊடகங்களுக்கும், கார்ப்பரேட்களுக்கும் நோக்கமிருந்திருக்கிறது தமிழ்ச்செல்வன் சொல்வது போல. நாம் நம்மை சுய விமர்சனமாக பார்த்துக்கொள்ள வேண்டிய விஷயங்களும் ஏராளமாய் இருக்கின்றன தீபா சொல்வது போல. அனுபவங்களே நம்மை வழிநடத்தும்; ஆரூடங்கள் அல்ல. ஒரு சம்பவத்தை நபர்களுக்குள் குறுக்கிப் பார்ப்பது கற்றுக்கொள்ள வேண்டிய அனுபவங்களைத் தராது. எனவேதான் ‘நித்யானந்தாவோடு இருக்கும் நடிகை யார் என ஆராய்ச்சி செய்யாதீர்கள்’என்று முடித்திருந்தேன்.
ஆட்டத்தை ஆரம்பித்தவர்கள் இப்போது செய்கிற அழிச்சாட்டியங்கள் தாங்க முடியவில்லை. உலகம் முழுவ்தும் உள்ள தமிழர்களுக்காகவே அவதரித்த சன் டி.வியும், செய்திகளை உடனுக்குடன் தருகிற தினகரனும் அசிங்கமாய், அருவருப்பாய் ஆபாசமாய் காட்சி தருகிறார்கள். முதல்நாள் முகத்தை மறைத்து குறுகுறுப்பை ஏற்படுத்தியவர்கள் அடுத்தநாள் முகத்தைக் காட்டினார்கள். திரும்பத் திரும்பக் காட்டினார்கள். காட்டிக்கொண்டே இருந்தார்கள். இன்று தினகரனில் நித்யானந்தா மற்றும் ரஞ்சிதாவைப் பற்றி மட்டும் இரண்டு முழுப்பக்கச் செய்திகள். அவர்கள் இருவரும் இணைந்திருப்பது போல பல படங்கள். தமிழகம் முழுவதும் பக்தர்கள் கொந்தளிப்பு என சில படங்கள். நித்யானந்தாவின் முழுநீளப்படங்கள் எங்கு கிடைக்கும் என முகவரிகள் வேறு. த்தூ.... வெட்கம் கெட்டவர்களே! உங்கள் நோக்கம்தான் என்ன?
ஒரு விஷயத்தை அம்பலப்படுத்துவது என்றால் இப்படியா? எங்கோ ஒரு தனி அறையில் நடந்ததை நம் வீட்டு வரவேற்பறையில் வந்து கொட்டினார்கள். முகம்சுளித்து, இப்படியான குப்பைகள் சமூகத்தில் இருக்கிறதே என நாம் வருத்தப்படலாம். அதனை சுத்தம் செய்ய முனையலாம். சமூகத்தில் ஒரு உரையாடல் நடப்பதற்கு அதுவே போதுமானது. திரும்பத் திரும்ப வீட்டிற்குள் வந்து குப்பைகளை கொட்டிக்கொண்டே இருந்தால்..? வீடே குப்பையாகிப் போகாதா? நம் சிந்தனைகளையும் அழுக்காக்கும் நோக்கம்தானே அது? இதைத்தானே அவர்கள் தங்கள் பிறவியின் நோக்கமாய் செய்துகொண்டு இருக்கிறார்கள். ‘நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு’ என்னும் மகாகவியின் ஆத்திர வரிகளே நினைவுக்கு வருகின்றன.
இவர்களின் ஆட்டத்தில் வேறு சூது இருக்கிறது. திரைமறைவு சூட்சுமங்கள் இருக்கின்றன. கூடவே மக்களை இதுபோன்ற அந்தரங்கங்களுக்குள் எட்டிப் பார்க்க வைத்து, கேவலப்படுத்தி, ‘கடை விரித்தேன் கொள்வாருண்டு’ என்று சொல்லவும் செய்வார்கள். சகலத்தையும் வியாபார மயமாக்கி, பெரும் கலாச்சாரச் சீரழிவுகளுக்கு காரணமாகி வரும் இவர்களிடம் சமூக அக்கறையை ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது. இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும் போதெல்லாம் நாடெங்கிலுமுள்ள உண்மையான சாமியார்கள் வருத்தப்படுகின்றனர் என ஒரு செய்தி வேறு. யாரைக் காப்பாற்ற இந்த வாசிப்பு?
போலீஸ் விரட்டியடித்ததில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மூன்று மாணவர்கள் பலியானார்களே அதைப்பற்றித் திரும்பத் திரும்ப இந்த யோக்கியசிகாமணிகள் பேசட்டுமே, பார்ப்போம். டீசல், பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து போரட்டங்கள் நடக்கின்றனவே, அதைப் பற்றி விளக்கமாக காண்பிக்கட்டுமே, விரிவாக பேசட்டுமே, பார்ப்போம். இவர்கள் பார்வையில் படாமல் ஓராயிரம் உண்மைகள் வெளியே இருக்கின்றன. எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் ஒன்றும் குருடர்கள் அல்ல.
பி.கு:
சந்தனமுல்லை, டாக்டர் ருத்ரன், சுரேஷ் கண்ணன் ஆகியோரது பதிவுகளும் இவ்விஷயத்தில் முக்கியமானவையென்று கருதுகிறேன்.
//எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்//
பதிலளிநீக்குI sincerely hope you are right!
mm.. Nithyananda is just a looser because he used "spiritual" power to seek body pleasure.. SunTV is no different than Nithyanda..they use 'media' power to seek money and other coveted interests.
பதிலளிநீக்குThanks to Sun TV....even non-resident tamils also call their relatives in TN to know the 'field' news..
We would have never imagined that SunTV group will stoop into such a lower level of tabloids like nakeeran.. Of course they have their own low standards in terms of reporting political events..but never did they enter somebody's bedrooms.
ஊடகங்களை கையில் வைத்துக்கொண்டு மாறன் குடும்பமும் கருணாநிதி குடும்பமும் செய்யும் அட்டூழியத்திற்கு அளவே இல்லை.
பதிலளிநீக்குஎதை மூடி மறைக்க இந்த படத்தை தொடர்ந்து போட்டுக்காட்டுகிறார்கள் என்று தெரியவில்லை.
தனக்காக உழைத்த தொண்டன், தன்னிடம் பணியாற்றிய ஊழியன், தனக்கு வாக்கள்ளித்த மக்கள், தன்னை வாழவைத்த இனம் என அனைவரும் நாள்தோரும் துயருற்று இருப்பதை கண்டுகொள்ளாத இவர்களுக்கு, மக்களின் துயரத்தை காசாக்கிய இவர்களுக்கு நித்தியானந்தா-இரஞ்சிதா பற்றி செய்தி வெளியிட என்ன யோக்கியதை இருக்கிறது என்று தெரியவில்லை.
நித்தியானந்தத்தை சன் மாட்டிவிட்டதற்குப் பதிலாக போட்டி தொலைக்காட்சிகள் கலைஞர் வீட்டிற்குள் ஊடுருவி லீலைகளை அம்பலப் படுத்துவார்களா?
பதிலளிநீக்குசந்நியாசம் என்ற பெயரில் ஒரு மனிதன் வியாரம் செய்தான். அவ்வளவு தான். சந்நியாசத்திற்கு அவமரியாதை செய்ததாகக் கருதி மக்கள் இதை பெரிதுபடுத்தினால் அரசியல்வாரிகள் செய்வதை மட்டும் ஏன் பெரிதுபடுத்தாமல் இருக்கிறார்கள்.
பதிலளிநீக்குஇந்திய சட்டப்பட்டி ஒருவனுக்கு ஒருமனைவி மட்டும் தான் இருக்கவேண்டும். ஆனால் இந்த சட்டங்களைக் காப்பாற்றி மதித்து நடக்கவேண்டியவர்கள் அதை கடைபிடிக்கவில்லையென்றால் அதையும் இதுபோல வீடியோகாட்சியில் காட்டவேண்டும்.
In South India, more the merrier
2 May 2006
Times of India News
http://timesofindia.indiatimes.com/arti ... page-1.cms
HYDERABAD/CHENNAI/BANGALORE: That engineer K Suryanarayana had two wives became public only after his murder in Afghanistan, but the revelation isn't surprising in Andhra Pradesh, indeed in most of south India.
In Tamil Nadu, bigamy is pretty much institutionalised and even has a name - Chinna veedu, which translates as 'small house' or second home. It is an age-old tradition surviving to this day despite its illegality.
When DMK was in power in the state, security agencies had a tough time providing security to two houses for many ministers, as each of them had two wives.
Whether it was the late M G Ramachandran, or M Karunanidhi, they have all had it, and flaunted it. Karunanidhi has married at least three women, the first of whom is dead.
The DMK chief (present CM) now divides his time in the houses of both wives - spending mornings at the Gopalapuram residence with Dayaluammal while moving to the house of his other wife, Rajathiammal, at CIT Nagar in Chennai in the afternoons.
Another towering Tamil actor, Gemini Ganesan, married five times while his first wife was alive. The Chinna veedu concept is fairly common in Krishnagiri and Salem districts of TN, where males believe in more the merrier.
At least one top Union minister from Tamil Nadu is known to have two wives and so does a senior DMK official, who married his daughter's classmate.
In Andhra, bigamy doesn't have the traditional sanction it enjoys in TN, but the practice is fairly widespread among the powerful and even a status symbol.
ஒன்று மட்டும் நன்றாகத் தெரிகிறது. இந்திய மக்கள் கடைந்தெடுத்த முட்டாள்கள். சுயசிந்தனையை இழந்துவிட்டார்கள். அவ்வளவுதான்.
நீங்க நல்லா எழுதுறீங்க....
பதிலளிநீக்குகல்கத்தாவில் பிறந்த வளர்ந்த நான், கம்யுனிச்டுக்களை பற்றி நன்கு அறிவேன்.
சங்கம், செயலாளர் என்ற பதவியில் ஒட்டிக்கொண்டு, அப்படியே தலைவர், முடிந்தால் எம்.எல்.ஏ., எம்.பி., மந்திரி என காசுக்கு ஆசைப்படும் ஆட்களையும் தெரியும். மறைந்த அஜீத் பாஞ்சா மாதிரி ( குடும்ப நண்பர் ) பதிவிக்காக எதை வேண்டுமானாலும் செய்பவர்களையும் தெரியும்.
சங்கம் என்று உழைத்து விட்டு, தனி மனித ஒழுக்கம் இல்லாமல் தற்கொலை செய்துக்கொண்ட ஆட்களையும் தெரியும்.
சங்கம் அமைத்துக்கொண்டு வேலை செய்பவர்களையும் ( கொடுக்கப்பட்ட எட்டு மணி நேரம் ) வேலை செய்ய வைக்காமல் ) அவர்கள் நலனுக்காக மற்றவர்கள் துன்புறுத்தும் ஆட்களையும் தெரியும்.
மதுரையில் எம்.பி ஆகா இருந்த மறைந்த ஒரு கம்யுனிஸ்டு என்னை தேடி ஒரு முறை வந்திருந்தார். சிபாரிசு செய்ய. கான்றேக்டுக்காக. என்ன கொடுமை அய்யா? என் கொள்கைக்காக நான் முடியாது என்றவுடன், தூக்கியடிக்கபட்டேன். ஆளுங்கட்சி உபயம்!
அவர்களை பற்றி நீங்கள் எழுத விழைகிறேன்.
குடும்பத்துடன் அமர்ந்து டி.வி. பார்த்த நண்பர் ஒருவர், அந்த செய்தியும் அதற்காக காட்டப்பட்ட வீடியோ காட்சிகளும் தன்னையும், தன் குடும்பத்தினரையும் வெகுவாக சங்கடப்படுத்தியதாக சொன்னார்... குடும்பத்துடன் அமர்ந்து இதை பார்க்கும் எவருக்கும் இந்த சங்கடம் வரத்தான் செய்யும். இன்னும் கொஞ்சநாளில் திரைஅவிழ்ந்த நிலையில்கூட முழுதாய் அந்தரங்க காட்சிகள் எதையாவது காட்டுவார்கள்... அதையும் நாம் கடந்துதான் ஆகவேண்டும்....
பதிலளிநீக்குத்தூ.... வெட்கம் கெட்டவர்கள்...
நித்யானந்தரும்,ரஞ்சிதாவும் உண்மையை ஒத்துக்கொண்டு
பதிலளிநீக்குநீதிமன்றத்தில் சன்டிவி மீது எங்கள் அந்தரங்கத்தை படம் பிடித்துவிட்டார்கள் என்று அவதூறு வழக்கு போடலாம். ஆனால் நடைமுறையில் இதெல்லாம் நடக்காது என்ற தைரியத்தில்தான் சன் டி.வி ஒளிபரப்புகிறார்கள்
நல்லாக் கேட்டிங்க!அடித்து நொறுக்க வேண்டியது ஆசிரமங்களை மட்டுமல்ல; ப்ரோக்கர்களை விடக் கேவலமாகத் தொழில் நடத்தும் ஊடகங்களையும் தான். அதில் சன்டிவிக்கும் தினகரனுக்கும் முதல் இடம்.
பதிலளிநீக்குநித்யானந்தரும்,ரஞ்சிதாவும் உண்மையை ஒத்துக்கொண்டு
பதிலளிநீக்குநீதிமன்றத்தில் சரணடையலாம். சன்டிவி மீது எங்கள் அந்தரங்கத்தை படம் பிடித்துவிட்டார்கள் என்று அவதூறு வழக்கு போடலாம். ஆனால் நடைமுறையில் இதெல்லாம் நடக்காது என்ற தைரியத்தில்தான் சன் டி.வி ஒளிபரப்புகிறார்கள்
சன் டிவி..., அருவெறுப்பின் உச்சம். சாமியாருக்கும், இவர்களுக்கும் ஒன்றும் பெரிய வேறுபாடில்லை.
பதிலளிநீக்குஅந்த மூன்று மாணவர்கள் மரணம்,
இந்த அசிங்கத்தில் அமுங்கி விட்டது.
\\நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு’ என்னும் மகாகவியின் ஆத்திர வரிகளே நினைவுக்கு வருகின்றன.\\
நிஜம்.
paramahamsa nithyanandha is a god. this is aanmeega sothanai.
பதிலளிநீக்குசன் தொலைக்காட்சியும் தினகரனும் செய்வது விபச்சாரத்தை விட மோசமான செயல்.
பதிலளிநீக்குவீடுகளில் குழந்தைகளும் இவற்றை பார்க்கிறார்கள் என்பது இந்த ஈனப்பிறவிகளுக்கு தெரியாதா?
கரெக்ட் சார்..
பதிலளிநீக்குnice post.
பதிலளிநீக்குBut it is due to our human body haarmones set up, we got immediate excitement when we hear or see s-exual related news.
There were news running in Tv about price rise, Hockey fine, Annamalai univeristy, maoists news, stalin Bday, book release but to me the exciitng news is Nithi news.
Its human nature and harmone related problem.
Medias have capitalised that. Nakkeeran still goes worse, only paid subscribers the video vol2 is available etc.
சன் குழுமம் நடத்திக் கொண்டிருப்பது ஊடக பயங்கரவாதம். இது இன்று கைமீறிப் போய்க் கொண்டிருப்பதற்கு காரணம், சோரம் போன இதர ஊடகங்களும் பொறுப்புதான். நேரம் இருப்பின் இந்தப் பதிவையும் பாருங்கள் தோழரே.
பதிலளிநீக்குhttp://www.savukku.net/2010/03/blog-post_03.html
Excellent thought.
பதிலளிநீக்குஈழத்தில் எவ்வளவோ நடந்தது ... அதில் ஒரு 5% கூட காண்பிக்கவில்லை.
பதிலளிநீக்குநித்யானந்தாவை குறிப்பிடும்போதெல்லாம் 'அவன், இவன்' என்று ஒரே ஏகவசனமாய் பொழிந்திருக்கிறீர்களே ஏனாம்?
பதிலளிநீக்குஉங்களுடையதிலேயே, தொடர்புடைய பதிவுகளில் 'ஜனநாயகத்தில் சங்கராச்சாரியார்' என்பதையும் படித்தேன். ஆச்சாரியார், அவர் இவர் என்று அறச்சீற்றத்திலும் கண்ணியம் காத்திருக்கிறீர்கள். ஏன் இந்த வேறுபாடு?
Nice Post
பதிலளிநீக்குநம் தமிழர்கள் உறவுகள் அழிக்கப்படும் போது இந்த TV ல யும் அவுங்க செய்திதாள்களிலும் அந்த செய்தியே இல்லை
இப்ப இதை மட்டும் போட்டு TRP Rating அதிகம் ஆக்குறாங்க
கேவலமா இருக்காத இதை எப்படி ஒரு குடும்பத்துல உக்காந்து பாப்பாங்கனு ( அவுங்க குடும்பம் போல நினச்சுடாங்க போல.....)
மக்கள் பார்ப்பார்கள் , சேனல் மாற்றி விடுவார்கள் ... டீலா நோ டீலா என்பது தவரிவிடுமே ?
பதிலளிநீக்குஅய்யா மாதவரைய்யா இப்ப என்ன சொல்ல வரீங்க சன் tv அவங்கள பத்தி போடகூடாது அதானே.அவங்க போடலன வேற எவனுக்கு தைரியம் இருக்கு.எனக்கு ஒன்னு மட்டும் புரியல. இன்னுமும் நம்பும் மக்கள் இப்படி அம்பல படுத்துவதன் மூலமே திருந்துவார்கள் என்று தான் சன் டிவி ஒளிபரப்பியது.
பதிலளிநீக்குஇதில என்ன அசிங்கம் இருக்கு . எனக்கென்னமோ .............................................இருக்கு. நாடு முழுவதும் சாமியார்களின் பற்றிய மூட நம்பிக்கைய விளக்கவே இந்த videovai ஒளிபரப்பி உள்ளதாக நினைத்து கொள்ளுங்களேன். நம்ம அக்கம் பக்கத்துக்கு வீட்ல நடக்கறத பார்த்து நம்ம புள்ளங்க கேட்டு போறதை விடவா அந்த வீடியோ மோசம்? தயவுசெய்து கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கடவுளை மட்டும் வழிபடுங்கள் கடவுளின் தூதுவன் என்று சொல்லி அலையும் இந்த நாய்களை தேடி போகாமலிருக்க இந்த வீடியோ அவசியம் .
அதாவது கடவுள் பேரை சொல்லி பல லட்சம், மக்களை முட்டாளாகியதை தவறு இல்லை , அதை சன் டிவி ஒளிபரப்பியது மட்டும் தான் இவர்களுக்கு. தமிழ் சினிமாவில் உள்ள அசிங்கமான videovai விடவா ?
இவ்ளோ பேசும் மாதவரைய அவர்களே அந்த ஈன சாமியாரை கண்டித்து என்ன செய்தீர்கள் . உங்களுக்கு தனி பட்ட முறையில் சன் குழுமத்தின் மீது குடைச்சல். உண்மையாக நீங்கள் மனிதறேன்றல் நேரடியாக தயாநிதிமாறனை சந்தித்து நீ வீடியோ போட்டது தவறு என்று சொல்லுமைய. அல்லது சன் டிவி மீது வழக்கு தொடருங்கள். எல்லோரும் நமக்கு எதுக்கு வம்பு என்று ஒதுங்கி விடுவீர்கள்.
நன்றி சன் டிவி .
சண்டாளச்சாமி அவர்களுக்கு மட்டும் இச்சமயத்தில் பதில் சொல்ல வேண்டியது அவசியம் என நினைக்கிறேன். ‘ஜனநாயகத்தில் சங்கராச்சாரியார்’ என்னும் அந்தக் கட்டுரை ஆறு வருடங்களுக்கு முன்பு Bank Workers unity என்னும் பத்திரிகைக்காக எழுதப்பட்டது. அதை இங்கே பதிவிட்டு இருந்தேன்.அப்போது இந்த தெளிவு இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்.
பதிலளிநீக்கு//போலீஸ் விரட்டியடித்ததில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மூன்று மாணவர்கள் பலியானார்களே அதைப்பற்றித் திரும்பத் திரும்ப இந்த யோக்கியசிகாமணிகள் பேசட்டுமே, பார்ப்போம். டீசல், பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து போரட்டங்கள் நடக்கின்றனவே, அதைப் பற்றி விளக்கமாக காண்பிக்கட்டுமே, விரிவாக பேசட்டுமே, பார்ப்போம். //
பதிலளிநீக்குஇத்தெல்லாம் ஜனங்க மறக்கனும்தானே இதப்போட்டாங்க.
அப்பறம் ஏன் நீஙக் சொல்றத காட்டப்போறாங்க?
//போலீஸ் விரட்டியடித்ததில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மூன்று மாணவர்கள் பலியானார்களே அதைப்பற்றித் திரும்பத் திரும்ப இந்த யோக்கியசிகாமணிகள் பேசட்டுமே, பார்ப்போம். டீசல், பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து போரட்டங்கள் நடக்கின்றனவே, அதைப் பற்றி விளக்கமாக காண்பிக்கட்டுமே, விரிவாக பேசட்டுமே, பார்ப்போம். இவர்கள் பார்வையில் படாமல் ஓராயிரம் உண்மைகள் வெளியே இருக்கின்றன. எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் ஒன்றும் குருடர்கள் அல்ல. //
பதிலளிநீக்குஅடைப்பானில் இருக்கிற மாதிரி இருந்தா நல்லாயிருக்குமேன்னு நினைக்க மட்டுமே தோன்றுகிறது.ம்க்களாகிய நம்மிடமும் ஏதோ குறை இருக்கிறது,அல்லது வாழும் அவசர வாழ்க்கையின் மன அழுத்தங்கள் திரைப்படம்,மெகா சார்ந்த விசயங்களை மட்டுமே நாடுகிறது அல்லது அதை மட்டும் தேடு என்பது மாதிரியான மன நிலையை ஊடகங்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.இவைகளையெல்லாம் தாண்டி கொஞ்சம் வித்தியாசப் பட்டு இருந்த மக்கள் தொலைக்காட்சி மக்கள் சார்ந்த விசயங்களை ஓரளவுக்கு அணுக முயற்சித்தாலும் ருசிபட சொல்லத் தெரியாத காரணத்தால் மக்களை சென்றடையவில்லை.எனவே தற்போதைக்கு மக்களை முட்டாளாக்கும் கலைஞர் சன் தொலை ஊடகங்கள் தவிர்த்த தண்டனை கிடையாது.
நேற்றைய சன் டி.வி விசயம் இணையத்தில் வால்பையன் முதல் பதிவாகப் பார்க்கும் போது அடுத்தவன் அந்தரங்கத்தில் நுழைந்து காசு பார்க்கிறதோ என்ற எண்ணமும் தோன்றியது.மெல்ல யோசித்துப் பார்க்கும் போது முந்தைய பாரதீய ஜனதா காலத்து ஆட்சியில் மந்திரி கையூட்டு வாங்குவதையும்,ராணுவம் முதற் கொண்டு பேரங்கள் எப்படி உருவாகின்றன என்பதையும் சம்பந்தப்பட்டவர்கள் அறியாமல் candid camera படம் பிடித்து முகத்தைக் கிழித்தார்கள்.எனவே சமூகத்தின் உயர்மட்ட முகத்திரைகளை கிழிப்பதில்(சுய நோக்கு இருந்தும் கூட) ஜெ,கலைஞர் சன் போன்ற முதலைகள் மட்டுமே பொதுப்பார்வைக்கு கொண்டு வருவதை வரவேற்போம்.நன்றி.
மாறன் சகோதர்கள் ஒரு இன பிறவிகள்
பதிலளிநீக்குஎன்று மீண்டும் தங்களை அடையாளம் காட்டியுள்ளனர்.
அரசியலுக்கு வருவதற்கு முன் தயநிதிமாறன் இரவு விடுதி
நடத்தி அதில் இவர்கள் நடத்திய கூத்து ஊர் அறியும்.
ராமநாதன்
Shame on you sun tv and all newspapers.
பதிலளிநீக்குYou are bigger criminals.
Guys Please Read what Famous director Shekhar Kapoor has to say.
http://www.shekharkapur.com/blog/archives/2010/03/sex_and_the_gur.htm
//சகலத்தையும் வியாபார மயமாக்கி, பெரும் கலாச்சாரச் சீரழிவுகளுக்கு காரணமாகி வரும் இவர்களிடம் சமூக அக்கறையை ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.//
பதிலளிநீக்குசரியான விமர்சனம்
// முழுநீளப்படங்கள் எங்கு கிடைக்கும் என முகவரிகள் வேறு.த்தூ.... வெட்கம் கெட்டவர்களளே! உங்கள் நோக்கம்தான் என்ன? ///
பதிலளிநீக்குகலாநிதிமாறன் நித்யாவை விட கீழ்த்தரமானவர், இது முன்பே அறிவுள்ளவர்க்கு (பகுத்தறிவு!?) தெரிந்திருக்க வேண்டும். ஜெர்மனியில் ஒரு அரசியல்வாதி, டிவியை வைத்து ஆட்சியை பிடித்தார், அதே வழியில், கலாநிதி இப்பொழுது! கருணாநிதி தனது 8 கோடி அடிமைகளை இளவரசருக்கு உயில் எழுதினாலும், கலாநிதி அல்லது தயாநிதி அந்த அடிமைகளை கைப்பற்றி முடிசூட்டி கொள்வது நிச்சயம் நடக்கும்! நினைவில் கொள்ளுங்கள்!
மிகப்பெரிய ஆபத்து தமிழகத்தை சூழ்ந்திருக்கிறது,
@@@@@ கருணாநிதி குடும்பத்தை தவிர்த்த ஒருவர் எந்த வருடம் பதவியேற்க முடியும் என்பதை இந்த மாதவ்ராஜ் நினைத்து பார்த்து, எழுத வேண்டும்! (வேண்டுகோள்தான்!) @@@@
மாதவ்,
பதிலளிநீக்கு”எனக்கு ஆங்கிலத்தில் பிடிக்காத ஒரே வார்த்தை அக்கவுண்டபிலிட்டி” என்பதுதான் மாறன் குடும்பத்தின் நிலைப்பாடு; எப்பொழுதும்.
திரையிடுமுன் திறைமறைவுப் பேரங்கள் நடந்ததாக பத்திரிக்கை உலக நண்பர்கள் சொல்கிறார்கள்.
படியாத பேரத்தின் வெறுப்புதான் இது.
மத்தபடி சமுதாய அக்கறை என்பதெல்லாம் கெட்ட வார்த்தைகள்; ஊடகத்திற்கு இன்று.
//போலீஸ் விரட்டியடித்ததில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மூன்று மாணவர்கள் பலியானார்களே அதைப்பற்றித் திரும்பத் திரும்ப இந்த யோக்கியசிகாமணிகள் பேசட்டுமே, பார்ப்போம். டீசல், பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து போரட்டங்கள் நடக்கின்றனவே, அதைப் பற்றி விளக்கமாக காண்பிக்கட்டுமே, விரிவாக பேசட்டுமே, பார்ப்போம். இவர்கள் பார்வையில் படாமல் ஓராயிரம் உண்மைகள் வெளியே இருக்கின்றன. எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் ஒன்றும் குருடர்கள் அல்ல.//
பதிலளிநீக்குஅவர்களை மட்டும் குறை சொல்வானேன். வலைப்பதிவர்களும் இதை தானே செய்கிறார்கள்.
ஒரு மாதத்திற்கு முன் தென் தமிழ்நாட்டில் ஒரு என்.ஜி.ஓ 40+ குழந்தைகளை அடைத்து வைத்து, உணவு கொடுக்காமல், பாலியல் கொடுமையும் செய்ததாக சிலர் கைது செய்யப்பட்டனர். இன்னும் ஒரு வாரம் அதே நிலைமை நீடித்துருந்தால் அந்த குழந்தைகளில் பெரும்பாலானவை இறந்திருக்கும். ஆனால், அதை பற்றின செய்தி எங்கும் கானவில்லை. தமிழ் ஊடகங்களிலோ அது ஒரு பெட்டி செய்தி ரேஞ்சுக்கு தான் வெளிப்படுத்தினார்கள்.
அந்த குழந்தைகள் உயிர் எந்த விதத்தில் குறைந்து போனது? இல்லை, அந்த செய்தியை விட இந்த செய்தி தான் முக்கியமா? அதை பற்றி வலைப்பதிவர்களும் கண்டுகொள்ளவில்லை. ஆனால், இந்த சாமியாரை பற்றி மட்டும் குறைந்தது 30 - 35 பதிவர்கள் பதிவிட்டிருப்பார்கள். இதில் சன் டிவியை 'மட்டும்' குறை சொல்லி என்ன பயன்?
//நித்யானந்தரும்,ரஞ்சிதாவும் உண்மையை ஒத்துக்கொண்டு நீதிமன்றத்தில் சன்டிவி மீது எங்கள் அந்தரங்கத்தை படம் பிடித்துவிட்டார்கள் என்று அவதூறு வழக்கு போடலாம்.//
கரெக்ட். நடந்தா எப்படி இருக்கும் சன் டிவிக்கு? திருடனுக்கு தேள் கொட்டினது போல் இருக்கும்.
என்ன சார். அப்புறம் யார் தான் பூனைக்கு மணி கட்டுவது? யாராவது ஒருவர் முன்வர வேண்டுமே. சன் டிவியில் வர வில்லையென்றால் உங்களுக்கு எப்படி தெரிந்திருக்கும்? ஜெயேந்திரனை உள்ளே தள்ளியப்போது, ஜெயலலிதாவை பாராட்டியதை போல இதையும் பாராட்டித்தான் ஆகவேண்டும். வேண்டுமென்றால் 'இளகிய மனம் கொண்டவர்கள் பார்க்கவேண்டாம்' என்று அறிவிப்பதுப்போல் ' வயது வந்தவர்களுக்கு மட்டும்' என்று எச்சரித்து ஒளிபரப்பி இருக்கலாம். அதற்காக எல்லாமே தவறு என்று கூறுவது சரி இல்லை . நீங்கள் கண்டித்தவுடன் எத்தனை 'நித்தியா அடிவருடிகள் ' ஜால்ரா அடிக்க வந்துவிட்டார்கள் பாருங்கள்.
பதிலளிநீக்கு//ஒன்று மட்டும் நன்றாகத் தெரிகிறது. இந்திய மக்கள் கடைந்தெடுத்த முட்டாள்கள். சுயசிந்தனையை இழந்துவிட்டார்கள். அவ்வளவுதான்//
பதிலளிநீக்குயாரோ ஒருவர் தன்னைப் பற்றி சுய விமரிசனம் செய்துள்ளார். நித்தியானந்தனைப் பற்றி சொல்லு என்றால் கருணாநிதி, MGR, என்று சம்பந்தமில்லாமல் .... நித்தியானந்தன் ரொம்ப நல்லவன் என்றும் கூறத் தொடங்கிவிடுவார்கள்.
தம் மேல் ஒரு குற்றச்சாற்று வந்த உடன் உயிரையே துறந்த உ.இரா.வ எங்கே? இவன் போன்ற ஒழுக்கக்கேடுகள் எங்கே? இவனைத் தலைப்புச் செய்தியாக்குவதன் மூலம் பங்குச்சந்தையில் சரிந்துகிடக்கும் தன்னுடைய நிலையை சன் குழுமம் உயர்த்த விரும்புகிறது... இருட்டுக்குள் நடக்கும் செய்திகளை அறியத்துடிக்கும் விடலை மனங்களையும் வயதான வக்கிர மனங்களையும் பணமாக்கிப் பெட்டியை நிரப்பத் துடிக்கிறார் கலாநிதிமாறன்!
பதிலளிநீக்குஒருபக்கம் இதைச் செய்தியாக்கிப் பணம் சேர்க்கும் சன் குழுமம், மறுபுறம் தொடர்நாடகங்கள் வாயிலாக மந்திரங்களையும் மாயங்களையும் காட்டி மக்களை முட்டாளாக்குகிறது! முட்டாளான பின்பு மக்கள் மீண்டும் இவனைப் போல ஒரு சாமியாரிடம் போவார்கள்! அவன் ஒரு நடிகையிடம் போவான்... அது செய்தியாகும்....
பதிலளிநீக்குவாழ்க்கை என்பது ஒருவட்டம் என்பது இப்போதாவது புரிகிறதா...?
***ஒரு விஷயத்தை அம்பலப்படுத்துவது என்றால் இப்படியா? எங்கோ ஒரு தனி அறையில் நடந்ததை நம் வீட்டு வரவேற்பறையில் வந்து கொட்டினார்கள். முகம்சுளித்து, இப்படியான குப்பைகள் சமூகத்தில் இருக்கிறதே என நாம் வருத்தப்படலாம். அதனை சுத்தம் செய்ய முனையலாம். சமூகத்தில் ஒரு உரையாடல் நடப்பதற்கு அதுவே போதுமானது. திரும்பத் திரும்ப வீட்டிற்குள் வந்து குப்பைகளை கொட்டிக்கொண்டே இருந்தால்..? வீடே குப்பையாகிப் போகாதா? நம் சிந்தனைகளையும் அழுக்காக்கும் நோக்கம்தானே அது?***
பதிலளிநீக்குஇப்போ நீங்க என்ன சொல்ல வர்ரீங்க?
நம்ம சிந்தனையெல்லாம் நல்லா இருந்தது, சன் டி வி போட்டு கெடுத்துட்டாங்கனா?
***உங்களில் எவனொருவன் என்னைப் பார்த்தமட்டில்
கண்களாலேயே கற்பழிக்காமல்
என் அளவுகளை யோசிக்காமல் இருக்கிறானோ
அந்த யோக்கியவான் எடுக்கட்டும்
எனக்கான முதல் கல்லை!***
உங்க சகோதரி சொல்றாங்க! கல்லெடுக்க யாரும் இல்லையாமே?
அதாவது பெண்களை உரித்துப்பார்க்காத ஆண்களே இல்லைனு!
இது சன் டி வி வீடியோக்கு அப்புறம்தானோ?
அதற்கு முன்னால எல்லாரும் ரொம்ப யோக்கியமாத்தான் இருந்தீங்களா?
Why do you want to switch on the TV and watch crap all the time?!? I came to know this from news papers only.
பதிலளிநீக்குஎங்கட ஈழத்தில நடந்த படுகொலைகளை மூடி மறைச்ச பெருமை பெரும்பாலான தமிழக ஊடகங்களிற்கும் உண்டு. பிரித்தானியாவின் சனல்-4 நிறுவனம் வெளியிட்ட உலகின் பல நிபுணர்களால் உண்மைக் காட்சிகள் என உறுதிப்படுத்தப்பட்ட ஐ.நா.வால் போர்க் குற்ற விசாரணைக்கு முக்கிய ஆவணம் எனக் கருதப்படுகின்ற அந்ந காணொளியை எத்தனை தமிழக ஊடகங்கள் வெளியிட்டன..?
பதிலளிநீக்குநீங்கள் எல்லாம் உண்மையை வெளிக்கொணர பாடுபடுகிறீர்களா? அல்லது யாரையோ எதற்கோ மிரட்ட, அழிக்க பாடுபடுகின்றீர்களா?
சரியாக சொன்னீர்கள்..
பதிலளிநீக்குசன் டிவியினர் ஒளிபரப்பிய போது இங்க எத்தனை பேர் நித்தியானந்தரை கவனித்தார்கள்?
பெரும்பாலானோர் ஆராய்ச்சியெல்லாம் வாய்ல ஜொள்ளு விட்டுகிட்டு யார் அந்த நடிகை என்றும் அவன் எப்படி பன்றான் என்றும் தானே..
எனக்கு தெரிந்து பல பெண்கள் அதை பார்க்காமல் விட்டுட்டோமே என்று கவலை பட்டார்கள்.
அப்புறம் ஏன் சன் டிவியினர் அந்த மாதிரி கீழ்த்தரமா மீண்டும் மீண்டும் ஒளிபரப்ப மாட்டார்கள்?..
முதலில் நாம் ஒழுங்காக இல்லை அது தான் உண்மை..
நாம ஒழுங்கா இருந்தா அந்த நித்தி மாதிரி மாதிரி போலி ஆசாமிகளும் இருக்க மாட்டாங்க,இந்த மாதிரி கீழ்த்தரமான விசயங்களை ஒளிபரப்புகின்ற ஊடகங்களும் இருக்க தேவையிருக்காது..
நம்ம டேஸ்ட்டும் அதே மாதிரி இருந்தா எனன பன்னமுடியும்??
அதை விட்டுட்டு அவனையும் இவனையும் திட்டுறதெல்லாம் ஒரு பயனும் இல்லை..
தன்னோட ஊழியர்கள்(மதுரை எரிப்பு) மரணத்துக்கு காரணமானவங்களையே ஒன்னும் கண்டுக்கல.. இதுல இந்த விசயத்தை போய் நல்ல நோக்கத்தோட ஒளிபரப்பியிருப்பாங்க அப்படீன்னு பாராட்டுறதெல்லாம் தமாஷ்??
எல்லாம் ஒரே மாதிரியான ஆளுங்க தான்.. செயல் தான் வேற வேற..
ஊடக நியதி, ஊடகங்களுக்கான சமூகக் கடமை... இதெல்லாம் நமது தின, வார, மாத... இன்னபிற பத்திரிக்கைகளால் மறக்கப்பட்டு நீண்ண்ண்ட காலமாச்சு. சன் டிவி ஒன்னும் விதிவிலக்கல்ல. நித்யானந்தா விவகாரம் சன் டிவியில் தமிழன்னைக்கு தினமும் சார்த்தப்படும் தமிழ்மாலையில் கோர்க்கப்பட்ட லேட்டஸ்ட் பூ... அவ்வளவுதான். ஒரு காலத்தில் மிட் நைட் மசாலா போட்டு நள்ளிரவிலும் தமிழ்த்தொண்டாற்றிய தயாநிதி கலாநிதி உதயநிதி...இத்யாதி குடும்பத்தின் லேட்டஸ்ட் மிட் டே மசாலாதான் நித்யானந்தா ரஞ்சிதா நீலப்படம். எனது கேள்வி இதுதான்:
பதிலளிநீக்கு1 ) இந்த முழுநீல மசாலாவை ஒட்டுமொத்த தமிழ் மக்களும் பார்த்துகே களித்தது போல கருணாநிதி, கலாநிதி, உதயநிதி, அந்தநிதி, இந்தநிதி, மாறன், ஸ்டாலின், அழகிரி, கனிமொழி குடும்பத்தாரும் தங்கள் மகன், மகள், பேரக்குழந்தைகளோடு பார்த்தார்களா?
2 ) புவனேஸ்வரி விவகாரத்தில் வெகுண்டு எழுந்து தினமலர் ஆசிரியர் மேல் நடவடிக்கை எடுக்க கருணாநிதியை குறைந்த கால அவகாசத்தில் சந்தித்த தமிழ் திரை உலகின் அறிவாளிகள், கவரிமான்கள், தங்கள் சக சகோதரியான ரஞ்சிதாவின் மானத்தை காப்பாற்றும் பொருட்டு சன் டிவியின் மீதும் ...நிதிகள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு உடனடியாக கருணாநிதியை சந்திப்பார்களா?
3 ) பெண்ணுரிமை பேசுவதில் இப்போது களத்தில் முன்னாள் நிற்கும் பெண்ணுரிமை போராளி கனிமொழி, இந்த விசயத்தில் சும்மா இருக்க மாட்டார் என நம்புவோம். அவர் ரஞ்சிதா என்ற பெண் விசயத்தில் என்ன கருத்தை கூறப்போகின்றார்? சன் டிவி வாசலில் பெண்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்துவார் என நம்புகின்றேன். தவிர சமீப காலங்களில் கனிமொழியை உயர்த்திப்பிடிக்கும் தமிழ்ப்படைப்பாளிகள் இந்த விசயத்தில் கனிமொழியோடு துணை நிற்பார்கள் என்றும் நம்பலாமா?
சார்லி
அவர்களை மட்டும் குறை சொல்வானேன். வலைப்பதிவர்களும் இதை தானே செய்கிறார்கள்.
பதிலளிநீக்குஒரு மாதத்திற்கு முன் தென் தமிழ்நாட்டில் ஒரு என்.ஜி.ஓ 40+ குழந்தைகளை அடைத்து வைத்து, உணவு கொடுக்காமல், பாலியல் கொடுமையும் செய்ததாக சிலர் கைது செய்யப்பட்டனர். இன்னும் ஒரு வாரம் அதே நிலைமை நீடித்துருந்தால் அந்த குழந்தைகளில் பெரும்பாலானவை இறந்திருக்கும். ஆனால், அதை பற்றின செய்தி எங்கும் கானவில்லை. தமிழ் ஊடகங்களிலோ அது ஒரு பெட்டி செய்தி ரேஞ்சுக்கு தான் வெளிப்படுத்தினார்கள்.
அந்த குழந்தைகள் உயிர் எந்த விதத்தில் குறைந்து போனது? இல்லை, அந்த செய்தியை விட இந்த செய்தி தான் முக்கியமா? அதை பற்றி வலைப்பதிவர்களும் கண்டுகொள்ளவில்லை. ஆனால், இந்த சாமியாரை பற்றி மட்டும் குறைந்தது 30 - 35 பதிவர்கள் பதிவிட்டிருப்பார்கள். இதில் சன் டிவியை 'மட்டும்' குறை சொல்லி என்ன பயன்?
ஊடகஙளின் பொறுப்பற்ற செயல். ஏற்கனவே தலைமுறைகளை சீரழித்து விட்டது தணிக்கை இல்லாத ஊடகங்களின் செயல்பாடு.
பதிலளிநீக்கு