நண்பர்களுக்கு வணக்கம்.
வலைப்பக்கங்களில் எழுதுபவர்களுக்கும், வாசிப்பவர்களுக்குமான உரையாடல், அவரவர் வலைப்பக்கங்களில் மட்டுமே நிகழந்து கொண்டு இருக்கின்றன. குறிப்பிட்ட ஒரு பதிவரின், ஒரு பதிவைப்பற்றியதாக அந்தப் பின்னூட்டங்கள் இருக்கின்றன. பலசமயங்களில் அவை ஒப்புக்கோ அல்லது மேம்போக்காகவே இருப்பதையும் காண முடிகிறது. உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் எழுதப்படும் பல முக்கியப் பதிவுகள் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன. அவர்களது வலைப்பக்கங்கள் அடையாளமற்றுப் போகின்றன.
பதிவுகளைப் பற்றி, வலைப்பக்கங்களைப் பற்றி உரையாடும், ஓரளவுக்கு உயிரோட்டமுள்ள ஒரு பொதுவெளி வேண்டும் என யோசித்துக் கிடந்ததில் என் சிற்றறிவுக்கு எட்டியது இது. இங்கு யாரும் யாருக்கும் ஓட்டுகள் போட வேண்டியதில்லை. அவரவர்கள் படித்தது, அதில் பிடித்தது, புரிந்தது, புரியாதது என யாவற்றையும் பகிர்ந்து கொள்ளலாம். விவாதிக்கலாம். அப்படி ஒரு ஏற்பாட்டோடும், நோக்கத்தோடும்தான் இந்த வலைப்பக்கம் http://tamilblogreadings.blogspot.com இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ‘வாடாத பக்கங்களின்’ ஒவ்வொரு நாளின் பதிவிலும்-
வலைப்பக்கங்களில் முந்தின சில நாட்களில் படித்தது, அவைகள் குறித்த கருத்துக்களைத் தெரிவித்து அன்றைய உரையாடலை ஒருவர் ஆரம்பித்து வைக்க வேண்டும். பதிவுகளில் வந்த நல்ல, ஆரோக்கியமான பின்னூட்டங்கள் பற்றியும்கூட அவர்கள் தெரிவிக்கலாம். மற்றவர்கள், அது குறித்து தங்கள் கருத்துக்களைச் சொல்லலாம். அல்லது தாங்கள் வாசித்ததையும், அதில் பிடித்தமானவைகளையும் பின்னூட்டங்களில் தெரிவிக்கலாம். தாங்கள் எழுதிய பதிவுகளையும் குறிப்பிடலாம்.
இங்கு பதிவும், பின்னூட்டங்களும் சம மரியாதையும், அடையாளமும் கொண்டவை என்னும் புரிதல் வேண்டும்.
மொத்தத்தில்- நல்ல, முக்கியமான பதிவுகள் அடையாளம் காணப்படும். அவை வாடாத பக்கங்களாக நிலைக்கவும் செய்யும். ஒரு கருத்துக்கூடமாகவும் இருக்கும். ஒரு reference போலவும் இந்த வலைப்பூ உருப்பெறும்.
இந்த முயற்சியை மேலும் செழுமைப்படுத்தும், வளர்த்தெடுக்கும் சிந்தனைகளை எதிர்பார்க்கிறேன்.
இந்த வலைப்பூவுக்கு இன்னொரு Author ஆக வடகரைவேலன் அவர்கள் இருக்கச் சம்மதித்து உள்ளார். அவருக்கு நன்றி.
யாரும், தங்கள் விருப்பங்களைப் பதிவாக தெரிவிக்க முன்வராவிட்டால் நானே அக்காரியத்தைத் தொடர்ந்து செய்யக்கூடிய அபாயமும் உண்டு. அது ஆரோக்கியமாகவும் இருக்காது. அதைத் தவிர்ப்பது உங்கள் கையில்!
இந்த வலைப்பூவை வாடாமல் இருக்கச் செய்வதும் உங்கள் கையில்.
ஆரம்பிப்போம்…… வாடாத பக்கங்கள் !
(இதுகுறித்து மேலும் தெளிவான வரையறைகளுடன் வடகரைவேலன் அவர்கள் எழுதிய பதிவு இங்கே.. )
நன்முயற்சிக்கு வாழ்த்துக்கள். பொதுவெளிப்பரப்பில் விமர்சன நோக்கு என்பதன் நீர்த்துப்போன வடிவமாக பின்னூட்ட பாராட்டுதல்கள் மாறிப்போனது வருத்தம் தரும் செயல்.
பதிலளிநீக்குவிவாதங்களில் பங்கு பெற முயற்சிக்கின்றேன்.
நன்றிகள்.
நல்ல முயற்சி... விவாதங்களில் பங்கேற்க நானும் வருகிறேன்..
பதிலளிநீக்குவாடாத பக்கங்கள் வாடாமல் இருக்க எனது பங்களிப்பைத் தருகிறேன்...
ஆரோக்யமான விஷயம்தான். வரவேற்கப்படவேண்டியது. வாழ்த்துகள் தோழர்.
பதிலளிநீக்கு- பொன்.வாசுதேவன்
நல்ல முயற்சி.
பதிலளிநீக்குதொடருங்கள்.
வாழ்த்துகள்.
புதிய முயற்சி.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
மேலும் பல நல்ல விவாதங்களுக்கும் நல்ல கருத்துடைய பதிவுகளுக்கும் ஊக்கமாக அமையும்.
நல்ல முயற்சி! வாழ்த்துகள்!
பதிலளிநீக்குபின்னூட்டங்கள் ஊக்கப்படுத்தவும் செய்கின்றன! சமயங்களில் புண்படுத்தவும் செய்கின்றன. எல்லாவித விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவமும், வெளிப்படுத்தும் பக்குவமும் இருந்தால் இந்த வலைப்பூ/உரையாடலின் நோக்கம் முழுமை பெறும்! (இது எனது தனிப்பட்ட கருத்து! ;-))
நல்ல முயற்சி அண்ணா.
பதிலளிநீக்குஆரோக்யமான விவாதங்களும் விமர்சனங்களும் வெளிப்படும் என நம்புகிறேன்.
நல்ல முயற்சி.....
பதிலளிநீக்குநானும் வருகிறேன் !
நல்ல முயற்சி மாதவராஜ். சிறப்பாக எழுதப்படும் பல நல்ல இடுகைகள் பரவலான கவனத்திற்கு வராமலேயே போய்விடுகின்றன. இதை ஒவ்வொரு பதிவரும் கூட செய்யலாம்.
பதிலளிநீக்குஆரோக்கியமான முயற்சி. நன்றி சார்.
பதிலளிநீக்குசென்ஷி நன்முயற்சிக்கு வாழ்த்துக்கள். பொதுவெளிப்பரப்பில் விமர்சன நோக்கு என்பதன் நீர்த்துப்போன வடிவமாக பின்னூட்ட பாராட்டுதல்கள் மாறிப்போனது வருத்தம் தரும் செயல். ////
பதிலளிநீக்குமாப்ள நீ எப்படிடா இப்படி எல்லாம் எழுத ஆரம்பிச்ச ? அய்யனார் கூட கூடத கூடாதன்னு சொல்லி தலபாடா அடிச்சிக்கிட்டனே கேட்டியா ?
அருமையான முயற்சி மாதவ் அண்ணா. வாடாத பக்கங்களுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவித்தியாசமான முயற்சி...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்!
நல்ல முயற்சி... நன்றி தோழர்.
பதிலளிநீக்குஉள்ளேன் ஐயா!
பதிலளிநீக்குசென்ஷி!
பதிலளிநீக்குசங்கவி!
அகநாழிகை!
ஆடுமாடு!
முத்துலெட்சுமி!
சந்தனமுல்லை!
அம்பிகா!
சாய்!
சுரேஷ் கண்ணன்!
வானம்பாடி!
செந்தழல் ரவி!
செ.சரவணக்குமார்!
சுந்தரா!
ரோஸ்விக்!
பாபு!
அனைவருக்கும் நன்றிகள். இனி வாடாத பக்கங்கள் நம் அனைவருக்குமான பக்கங்கள்.