புக் பாயிண்டில் தீ, வம்சி புத்தகங்கள் வெளியீடு இடமாற்றம்!

அதிர்ச்சியும் கலக்கமுமான குரலில் சற்றுமுன் எழுத்தாளர் பவா.செல்லத்துரை போன் செய்தார்.

நாளை (சனிக்கிழமை - 30.1.2010) மாலையும், நாளை மறுநாள் (ஞாயிறு - 31.1.2010) காலையும், வம்சி புத்தக வெளியீடுகள் நடக்க இருந்ததை ஏற்கனவே-

நான் ,   பைத்தியக்காரன் ,    உமா ஷக்தி ,    செல்வேந்திரன் 

ஆகியோர் தங்கள் பதிவுகளில் தெரியப்படுத்தி இருந்தோம்.

இந்த நிகழ்ச்சிகள் நடக்க இருந்த புக்பாயிண்ட்டில் இன்று தீப்பிடித்து விட்டதாம்.  அங்கிருந்த பல லட்சம் பெறுமான புத்தகங்கள் அழிந்துவிட்டதாம்.  மேற்கொண்டு தகவல்கள் பவாவுக்கும் தெரியவில்லை. கேட்பதற்கு சங்கடமாகவும், வேதனையாகவும் இருக்கிறது.

எனவே, புத்தக வெளியீடுகள் கீழ்க்கண்ட இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

 

சனிக்கிழமை (30.1.2010) மாலை புத்தக வெளியீடு நடக்கும் இடம்:

தீபிகா செண்டர்
22, டெய்லர்ஸ் சாலை
கீழ்ப்பாக்கம் கார்டன்
(ஈகா தியேட்டர் பக்கத்துச் சந்து)
சென்னை

 

ஞாயிறு (31.1.2010) காலை புத்தக வெளியீடு நடக்கும் இடம்:

இக்‌ஷா மையம்
பாந்தியன் சாலை
(மியூசியம் அருகில்)
எக்மோர்

இதனை வாசிக்கும் நண்பர்கள்,  தங்களுக்குத் தெரிந்த இலக்கிய ஆர்வலர்களுக்கும் இந்த இடமாற்ற விபரத்தைத் தெரியப்படுத்தி உதவுங்கள்.

கருத்துகள்

8 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. மிகவும் வருத்தமடையச் செய்த நிகழ்வு. புத்தக வெளியீடு புது இடத்தில் இனிதே நடைபெறட்டும்.

    பதிலளிநீக்கு
  2. மிகுந்த வருத்தமாக இருக்கிறது!

    தடங்கலில்லாமல் விழா இனிதே நடைபெறட்டும்!

    பதிலளிநீக்கு
  3. அதிர்ச்சியாக இருக்கிறது மாதவ் அண்ணா. புத்தகங்கள் தீயில் கருகுவதென்பது ஜீரணிக்க இயலாத துயரம். புதிய இடத்தில் விழா சிறப்புடன் நடைபெறட்டும்.

    பதிலளிநீக்கு
  4. //Blogger செ.சரவணக்குமார் said...

    அதிர்ச்சியாக இருக்கிறது மாதவ் அண்ணா. புத்தகங்கள் தீயில் கருகுவதென்பது ஜீரணிக்க இயலாத துயரம். புதிய இடத்தில் விழா சிறப்புடன் நடைபெறட்டும்.//

    ஆமாம் மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு தோழா ?

    பதிலளிநீக்கு
  5. \\மிகவும் வருத்தமடையச் செய்த நிகழ்வு. புத்தக வெளியீடு புது இடத்தில் இனிதே நடைபெறட்டும்.\\

    ...:((

    பதிலளிநீக்கு
  6. பேரா.க.க்ேசன்30 ஜனவரி, 2010 அன்று 10:15 PM

    மிகவும் வரு்த்ுகிறேன

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!