சொல்லித் தெரிவதில்லை - 2

தெருவில் விளையாடிக்கொண்டு இருந்த சிறுவன் தூரத்தில் மாமா யமஹாவில் போவதைப் பார்த்துவிட்டான். ‘காலையில் டவுணுக்குப் போய்ட்டு ராத்திரிதானே வருவாங்க... இன்னைக்கு என்ன மத்தியானமே வந்துட்டாங்க’ யோசனையத் தாண்டி சந்தோஷமே வந்தது. இன்றைக்கு விடக்கூடாது எனத் தீர்மானம் செய்து மாமாவின் வீடு நோக்கிப் புறப்பட்டான்.

வழியில் மங்கையர்க்கரசி “யப்பு....  புளியும், வெங்காயமும் அக்காவுக்கு வாங்கித் தாறியா” என கடைக்கு அனுப்பி வைத்தாள். தட்டமுடியாமல் சென்றவன், பிறகு மாமா வீடு போய்ச் சேரும் போது முற்றத்தில் பாட்டி மட்டும் உட்கார்ந்து கீரை ஆய்ந்துகொண்டு இருந்தார்கள். அறைக்கதவு சாத்தியிருந்தது.

இவன் வேகமாய்ப் போய் ‘மாமா’ என்று கதவைத் தள்ளினான். உள்ளே பூட்டப்பட்டு இருந்தது. திரும்பவும் “மாமா” என்று குரல் எழுப்பினான்.

பாட்டி விறுவிறுவென அருகில் வந்து “ஏலே... மாமா இல்ல...” என்று ரகசியமாய் சொல்வதைப் போல் சொன்னார்கள்.

“நா... மாமா வந்ததைப் பாத்தேனே...” என்றான்.

“பைத்தியக்காரா.... மாமா வரல்லடா..” என்றார்கள் சிறு பதற்றத்துடன்.

”இதோ.... வாசல்ல பைக் நிக்குதே. ஏம்பாட்டி... இந்த வயசுலயும் பொய் சொல்றீங்க. மாமா... மாமா” கதவைத் தட்ட ஆரம்பித்தான்.

சட்டென்று அவனைக் கதவருகில் இருந்து இழுத்து கொஞ்சம் தள்ளிக் கொண்டு போனாள். “ஏ... பைத்தியக்காரா சொன்னா கேக்க மாட்டியா. மாமா வந்துட்டு, பைக்க வச்சுட்டு அவசரமா தோட்டத்துப் பக்கம் போயிருக்கான். வந்துருவான்”

“சரி... அத்தய எங்க. உள்ள பேன் ஓடுற சத்தம் கேக்குதே?”

“அவ.... அவ.... தலைவலிக்குன்னு உள்ள தூங்குறா”

“அதுக்கு பூட்டிக்கிட்டா தூங்குறாவ”

“பாருங்கய்யா இந்தப் பைத்தியக்காரன! போலீஸ்காரன் மாரில்லா கேள்வியாக் கேக்குறான்.”

“நானா பைத்தியம். நீங்கதா பைத்தியம். சரி. நா இங்கய இருக்கேன். இன்னிக்கு மாமாவப் பாத்துட்டுத்தான் போவணும்”

“நல்ல நேரம் பாத்துத்தான் வந்துருக்கே. சரி, ஒங்க மாமங்கிட்ட அப்பிடி என்னதான் ஆகணும் ”

“கல்யாணத்தோடயே கிரிக்கெட் பேட் வாங்கித் தர்றேன்னு சொன்னாவ. வாங்கியேத் தரல்ல. இன்னிக்கு மாமாவ உட மாட்டேன். கூடயே டவுணுக்குப் போய் பேட் வாங்கிட்டுத்தான் மறுவேல..”

“பேட் என்னடா பேட். ஒனக்கு ஒரு பொண்டாட்டியே அவன் தரப்போறான்...” என்று பாட்டி வாய்விட்டு சிரித்தார்கள்.

“போங்க பாட்டி! அசிங்கமாப் பேசாதீங்க.” என்றாலும் வெட்கமாய் போய்விட்டது. குழைந்தான்.

“ரொம்ப வெக்கப்படாத. வா கடைக்குப் போவம். ஒனக்கு பபுல்காம் வாங்கித் தர்றேன். அதுக்குள்ள மாமா வந்துருவான்” என அவனை அழைத்துக்கொண்டுச் சென்றார்கள் பாட்டி.

 

ன்றைக்கே சிறுவனுக்கு பேட் கிடைத்ததும், பின்னாட்களில் “கொடுத்து வச்சவ. இப்படி மாமியாக்காரிக்கு மரியாத கொடுக்குற மருமகா எங்க கெடைப்பா!” என்று பாட்டி மீது வயிற்றெரிச்சல் பட்டுக்கொண்டு சில கிழவிகள் ஊருக்குள்  அலைந்ததும் தனிக்கதைகள் அல்ல.

கருத்துகள்

22 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. கூட்டு குடித்தனத்தில் ஏற்படும் அன்பு சிக்கல்கள் இவை.
    அபார்ட்மென்ட் கலாச்சாரத்தில் இந்த அன்பு தருணங்களை இழந்து விடுகிறோம்.

    அருமையாக பகிர்ந்து உள்ளீர்கள்.

    கடைசி வரிகள் தான் எனக்கு புரியவில்லை.
    மாமியாக்கரிகளுக்கு மரியாதை உதவி செய்யும் மருமகள். என்ன புரியவில்லை.

    பதிலளிநீக்கு
  2. குப்பன் யாஹூ!
    உண்மையிலேயே புரியலையா! அதான் சூட்சுமம். :-))))))

    பதிலளிநீக்கு
  3. பாட்டி மருமகளாயிருந்த காலத்திலும் இதே மாதிரி........! சரியா தோழர்?

    பதிலளிநீக்கு
  4. அட ! அழகா சொல்லியிருக்கீங்க மாதவராஜ் !!!

    பதிலளிநீக்கு
  5. 'maraivaai sonna kathaigal'in thodarchchiyaa? vaazga vaLamudan!Keep it (close)up!
    Comrade mathavraj, what about your pandiyan krama vangi thodar Poraattam? Has it come to an end? what about those comrades who have been served with Memo, suspension order etc?
    iqbal

    பதிலளிநீக்கு
  6. "சொல்லித் தெரிவதில்லை" நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. நேரில் பார்த்தது போல் இருக்கிறது உங்கள் பதிவு...

    பதிலளிநீக்கு
  8. //கொடுத்து வச்சவ. இப்படி மாமியாக்காரிக்கு மரியாத கொடுக்குற மருமகா எங்க கெடைப்பா//

    எனக்கு புரியுதுபா

    பதிலளிநீக்கு
  9. poorchap Kuppan.yahoo!Sonnalum Theriavillaiye.Pl.send him for ____ education...kashyapan.

    பதிலளிநீக்கு
  10. but is it correct, should elders hide about sex to young kids or elders should explain and teach them about sex(intercourse happening event)

    பதிலளிநீக்கு
  11. இங்கிதம் தெரிந்த மாமியாரை, மருமகள் மதிப்பது இயல்பு தானே. :)

    பதிலளிநீக்கு
  12. பாட்டி அங்கன உட்காரமா வேற எங்கனயாவது போயிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  13. வெடிச்ச காட்டில்
    பருத்தி அள்ளுன மாதிரி.
    அள்ள அள்ளக்குறையாதது
    இந்த கதைகள்.
    அள்ளிப்போடு.

    பதிலளிநீக்கு
  14. ஹஹஹ நீங்க சொன்ன இரண்டு பாகங்களில் உள்ள அனுபவங்கள் கிட்டத்தட்ட எல்லாருக்கும் உண்டு. சொல்லித்தெரிவதில்லை ... இப்போது சின்ன மாறுபாடு இதைதெரிந்து கொள்ளும் வசதிகளும் அதிகரித்து விட்டது, தெரிந்து கொள்ளும் வயது குறைந்துவிட்டது.

    பதிலளிநீக்கு
  15. மொழியின் வளம் எத்தனை இனிமை..

    பதிலளிநீக்கு
  16. அன்பு மாதவராஜ்,

    ரொம்ப அருமையா இருக்கு... சொல்லிய விதம், நடை, உத்தி என்று பல.

    எல்லோருக்கும் இது போன்ற அனுபவங்கள் உண்டு மாதவராஜ்! இந்த மாதிரி ஒரு கதை, எத்தனை பேரை தூண்டப் போகிறதோ தத்தமது அனுபவங்களை பகிர.

    அன்புடன்
    ராக்வன்

    பதிலளிநீக்கு
  17. அழகாய் கொண்டு போறீங்க மாது.இலையில் மறையும் காய் இங்கு மிகுந்த அழகு.

    எங்கவூட்ல ஒரு பாட்டி இருந்துச்சு.

    "டேவுலே இப்ப தட்டாத,வெளியில் போயிருறேன் அப்புறம் தட்டு.வெளியில வந்து அப்புறம் என்னை ஆஞ்சு புடுவா.ஆனால் அவசியம் தட்டு.பகல்ல என்ன வேண்டி கிடக்கு?"என்று போய்விடுவாள்.

    :-))

    சாத்தூரில் பாட்டிகளும் அழகு போல!

    :-)

    பதிலளிநீக்கு
  18. அண்ணன் பிரிச்சு கட்டுறீங்க போங்க!!!!

    பதிலளிநீக்கு
  19. வந்து, வாசித்து, ரசித்த அனைவருக்கும் நன்றி.

    பின்னூட்டமிட்டு ஊக்கமளித்தவர்களுக்கு மிக்க நன்றி.

    தொடருவோம்....

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!