ஃபிரண்ட்லைன் சிறப்பிதழின் பக்கங்களைப் புரட்டப் புரட்ட, வரலாறு நம் கண் முன்னே உருண்டோடுகிறது. கண்களில் கண்ணீர் வழிகிறது. என்ன மாதிரியான ஒரு காலத்தை நாம் கடந்து வந்திருக்கிறோம்.
ச தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (குறும்செய்தியில் அனுப்பியது)
'இதம்தரு மனையின் நீங்கி இடர்மிகு சிறைப்பட்டாலும்' என்று துவங்கும் தனது அருமையான கவிதையை மகாகவி இப்படி முடிக்கிறான்: ’சுதந்திர தேவி நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே’. விடுதலையின் உண்மையான பொருள் சுதந்திரம் என்பதை நினைவூட்டிக் கொள்ள வேண்டிய காலத்தில் வாழ்கிறோம் நாம். பரந்துபட்ட மக்களுக்கு உண்மையைச் சொல்லவேண்டிய பத்திரிகை உலகிற்கு ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று பெயரிட்டிருக்கின்றனர். பத்திரிகையின் சுதந்திரத் தன்மையே கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கிற சூழல் இது. இதில் சமகால நடப்புகள் குறித்த பொதுவிவாத மேடை எங்கே இருக்கிறது என்பதைத் தேட வேண்டியிருக்கிறது. உலகமயம் என்ற மாயவலை பின்னப்பட்டிருக்கிற சவால் நிறைந்த வெளியில், எச்சரிக்கை மணியடிக்க வேண்டிய வேலையைச் செய்பவர்கள் மிகச் சிலராகவே இருப்பது தற்செயலானதல்ல, அதுவும் உலகமயத்தின் சவால்களில் ஒன்று. கசப்பான நிஜங்களைச் சுட்டிக் காட்டியவாறும், அதிர்ச்சியான நிகழ்வுகளின்மீது பிரதிபலித்துக் கொண்டும், அதே வேளையில் நம்பிக்கையாக இங்குமங்கும் ஒளிரும் சுடர்ப்படங்களைப் பதியவைத்தவண்ணமும் இயங்கிக் கொண்டிருக்கிற வித்தியாசமான ஓர் இதழ் சமகாலத்தில் வெளிவந்து கொண்டிருக்கிறது என்பதே வாசகர்களைச் சிறப்பிக்கிற விஷயமாகும்.
1984ல் வரத் துவங்கிய ஃபிரண்ட்லைன் பத்திரிகை கால் நூற்றாண்டைக் கடந்திருப்பதைப் பதிவு செய்து ஒரு சிறப்பிதழ் வந்திருப்பது உற்சாகம் கரைபுரளத்தக்க விஷயமாகும். 'பத்திரிகை தளத்தில் 25 ஆண்டுக்காலச் செம்மைப்பணி' என்று அதன் முகப்பில் பொலியும் வாசகங்கள் உண்மையிலேயே அர்த்தம் நிறைந்தவை. நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்ட 1975ன் இருண்டகாலத்திற்குப்பின்னான இந்திய அரசியல்-சமூக-பொருளாதார-பண்பாட்டுக் காட்சிகள் பல்வேறு முக்கிய நிகழ்வுகளால் அலைக்கழிக்கப்பட்டவை. 1977 பொதுத் தேர்தல் முடிவுகள் அதுவரை நாடு சந்தித்திராத அதிர்ச்சி முடிவுகளையும், புதிய கதாபாத்திரங்களையும் மக்கள்முன் வழங்கின. 1980ல் இந்திராகாந்தி ஆட்சியை மீட்டெடுத்தாலும், வேகமான வெவ்வேறு நடப்புகள் அதற்குப்பின் நடக்கக் காத்திருந்தன. இந்தப்பின்புலத்தில், ஹிந்து பத்திரிகைக் குழுமத்திலிருந்து வெளிவரத் தொடங்கிய ஃபிரண்ட்லைன், ஆங்கில வாசக உள்ளங்களில் அதன் நூதன வடிவம், கருத்தாக்கம், தீர்மானமான நிலைபாடுகளால் புதுவித விவாதத்தையும், கிளர்ச்சியையும் உருவாக்கியதை மறக்க முடியாது.
சிறப்பிதழின் நுழைவாசலில், தலைமை ஆசிரியர் என் ராம் நிறுவுவதுபோல், ஃபிரண்ட்லைன் மதச்சார்பற்ற, வெகுமக்கள் சார்ந்த, முற்போக்கு தளத்தில் இயங்குவது வெளிப்படையான உண்மை என்பதால், இந்த நேர்க்கோட்டிற்கு எதிரான திசையிலிருந்து இதற்கு ஒவ்வாத குரல்கள் ஒலித்துக் கொண்டிருந்தாலும், சமகால நடப்புகள் குறித்த சீரிய பார்வை பெற விரும்புவோர் தவிர்க்க முடியாத இதழாக நிலைபெற்றிருக்கிறது ஃபிரண்ட்லைன்.
தேச, சர்வதேச அரசியல் விவாதங்களே ஐந்தில் ஒரு பங்கு இடத்தைப் பிடித்திருக்கிறது என்றாலும், ஃபிரண்ட்லைன் இதழை வருடத் துவங்குகிற ஒவ்வொரு தருணமும் அதன் வகைப்படுத்தப்பட்ட வெவ்வேறு ரசனைக்குரிய அம்சங்களை நினைவூட்டும். கலை, இலக்கியம், நாடக அரங்கம், திரை உலகம் போன்றவற்றிலும் மரபார்ந்த விஷயங்கள், புதிய பரிசோதனைகள் இரண்டின் சுவைகளையும் பருகத் தந்து கொண்டேயிருப்பது இதன் அரிய நேர்த்தி. ஆங்கில மொழியின் வித்தியாசமான இலக்கண விவகாரங்களை வாசிக்கவென்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. பொருளாதாரம், அறிவியல் முன்னேற்றம், சமூக முரண்பாடுகள் என இந்தக்காலத்தில் நம்மை பாதித்துக் கொண்டிருக்கும் பொருள் மீது ஃபிரண்ட்லைன் படைப்பாக்கங்கள் செய்துவரும் தாக்கம் அளப்பரியது.
இந்தப் பின்னணியில் வந்திருக்கும் சிறப்பிதழ் பொருளாதாரம், மத அடிப்படைவாதம், சமூக நீதி, உலக விவகாரம், கல்வி-பொது சுகாதாரம்-சுற்றுச்சூழல்-வரலாறு-அறிவியல்-கலை, இலக்கிய, இசை உலகம் என்ற தலைப்புகள் ஒவ்வொன்றின்கீழும் தேர்ந்த சிறப்புக் கட்டுரை ஒன்றும் தொடர்ந்து பழம்பதிவுகளின் நினைவுகூரலும் வித்தியாசமாக அமைக்கப்பட்டு வந்திருக்கிறது. வழக்கம்போலவே கவனத்தை ஈர்க்கின்றன புகைப்படங்கள். அவற்றில் எழில் கொஞ்சுபவையும் உண்டு, துயரங்களைப் பெருக்குபவையும், அதிர்ச்சி உறைய வைப்பவையும் உண்டு. தீண்டாமைக் கொடுமை, மனிதர் மலத்தை மனிதரே அள்ளும் அவலம் உள்ளிட்ட விஷயங்களையும், உலகமய பொருளாதாரத்தின் மனிதவிரோத விளைவுகளையும், மத வெறியின் பேயாட்டத்தையும் அம்பலப்படுத்தியதில் ஃபிரண்ட்லைன் தனிப்பெருமை மிக்க பங்களிப்பைச் செய்திருப்பது சிறப்பிதழில் தனி கவனம் பெறுகிறது. இலத்தீன் அமெரிக்காவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான எழுச்சி வெளிப்பாடுகள் உள்ளிட்ட பதிவுகள் ஃபிரண்ட்லைன் இதழுக்கு வெளியே அரிதானவை.
ஒரு கால் நூற்றண்டுக்காலம் நடந்த நடையை ஒரு சின்ன விழிப்பார்வையால் தன்னைத்தானே சொக்கி நின்று பார்த்துக் கொள்கிற பார்வையாக ஃபிரண்ட்லைன் சிறப்பிதழ் வந்திருப்பது நீண்டகால வாசகர்களுக்கு ஒரு சொந்தவூர் திரும்புதல் மாதிரி என்றால், புதியவர்களுக்கு ஒரு புதையலின் அடையாளச் சீட்டு அது. எதைத்தவிர்ப்பது, எதை விட்டுவிடாதிருப்பது என்று ஆசிரியர்குழு திணறியிருப்பது ஒரு பத்திரிகையினது கடந்தகாலச் சுவடுகளின் பெருமை. ஃபிரண்ட்லைன் தொட்ட எல்லைகள், கடந்த வெளிகள் எல்லாம் பலம்-பலவீன சுய விமர்சன அட்டவணைகளால் இறுதியில் தரப்பட்டுள்ளது. அவற்றின்மீது டாக்டர் வெங்கடேஷ் ஆத்ரேயா தொகுத்துத்தரும் ஒரு நறுக்குப்பதிவில் புள்ளிவிவரங்கள் மூலமாக அது அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது.
ஃபிரண்ட்லைன், இன்றைய உலக முதலாளித்துவ நெருக்கடி காலத்தில், மாற்று உலகத்தின் வாசலுக்கான வெளிச்சத்தின் திசையைத் தேடுபவர்களுக்கு நிச்சயம் ஒரு கைவிளக்கு. சிறப்பிதழ் அதன் முகவரி.
- எஸ்.வி. வேணுகோபாலன்
/சிறப்பிதழின் நுழைவாசலில், தலைமை ஆசிரியர் என் ராம் நிறுவுவதுபோல், ஃபிரண்ட்லைன் மதச்சார்பற்ற, வெகுமக்கள் சார்ந்த, முற்போக்கு தளத்தில் இயங்குவது வெளிப்படையான உண்மை என்பதால், இந்த நேர்க்கோட்டிற்கு எதிரான திசையிலிருந்து இதற்கு ஒவ்வாத குரல்கள் ஒலித்துக் கொண்டிருந்தாலும், சமகால நடப்புகள் குறித்த சீரிய பார்வை பெற விரும்புவோர் தவிர்க்க முடியாத இதழாக நிலைபெற்றிருக்கிறது ஃபிரண்ட்லைன்./
பதிலளிநீக்குஅட அட!!
/நம்பிக்கையாக இங்குமங்கும் ஒளிரும் சுடர்ப்படங்களைப் பதியவைத்தவண்ணமும் இயங்கிக் கொண்டிருக்கிற வித்தியாசமான ஓர் இதழ் சமகாலத்தில் வெளிவந்து கொண்டிருக்கிறது என்பதே வாசகர்களைச் சிறப்பிக்கிற விஷயமாகும்./
பதிலளிநீக்குஉண்மைதான்.
பகிர்வுக்கு நன்றி!
இதே பத்திரிகையின் இன்னொரு முகம் கோரமானது.அது எது என்று உங்களுக்கே தெரியும்.அறம்,நியாயம் இத்தியாதிகள் எல்லாம் இனப்படுகொலையின் போது எங்கே போயின.அப்போது இந்த இதழ் என்ன எழுதியது,யார் பக்கம் இருந்தது.தோழர்களே நீங்கள் மெச்சும் ஏடுகள் புனிதப் பசுக்கள் அல்ல, நடுநிலையானவையும் அல்ல.
பதிலளிநீக்குஆஹா...! அருமையான கட்டுரை. ஆயிரக்கணக்கில் ஃபிரண்ட்லைனை விற்கிற பணியில் இருக்கிறேன். என்னை பிரமிப்பில் ஆழ்த்துகிற கட்டுரை. கட்டுரையாளருக்கும், தங்களுக்கும் என் நன்றிகள்...!
பதிலளிநீக்குநான் எழுத நினைத்ததை சந்தன முல்லை தெளிவாக எழுதி விட்டார்.
பதிலளிநீக்குமுள்வேலியில் தமிழர்கள் நலமாக மகிழ்ச்சியாக உள்ளனர் என்று நடுநிலையாக எழுதியவர, ராஜபக்சேயின் இளவல் என் ராம் எழுதும் பிரன்ட் லைன் சிறப்பாக இருக்கிறதா
மேலும் எழுதி உங்கள் வலைப் பதிவை அழுக்காக்க விரும்ப வில்லை.
oh sorry., That comment was from anonymous, i misread as of sanathan mullai, sorry for the mistake
பதிலளிநீக்குI have been reading it for last three days. It is more than a pure consolidation of what happened in last 25 years. It covers all the dynamics of past 25 years and excellent articles that came that time. For younger generation like me aged around 25, this edition is precious
பதிலளிநீக்குநல்ல பதிவு தோழா!
பதிலளிநீக்குநல்ல கட்டுரை. ஃப்ரன்ட்லைன் மூலமாகத் தான் ஆனி ஜைதி என்ற துடிப்பான எழுத்தாளரின் எழுத்துக்களை அறிமுகம் செய்து கொண்டேன். இப்போது அவர் mid-day க்குச் சென்று விட்டார் என்று நினைக்கிறெனெ
பதிலளிநீக்கு//ஃபிரண்ட்லைன் மதச்சார்பற்ற, வெகுமக்கள் சார்ந்த, முற்போக்கு தளத்தில் இயங்குவது வெளிப்படையான உண்மை என்பதால்// எதை முற்போக்கு எனக் கூறவருகிறீர்கள்? தமிழன் என்னும் ஒரே காரணத்திற்காக அவர்களைக் கொன்ற இராசபக்சேவுடன் விருந்து உண்டு அவர் சார்புச் செய்திகளை மட்டும் வெளியிடுவதையா? மரபு மாற்றுப்பயிர்களை உரிய ஆய்வின்றி இந்தியாவில் பயிரிடவோ விற்கவோ கூடாது என்னும் நம்மாழ்வார் போன்றோரின் கருத்துகளை எதிர்த்து இந்து குழுமம் கட்டுரைகள் வடித்துத் தள்ளுவதையா? இல்லை தெலங்கானாவின் முதலும் தெரியாமல் முடிவும் தெரியாமல் ஒன்றுபட்ட ஆந்திரப்பிரதேசம் எனப் பேசுவதையா?
பதிலளிநீக்குஉங்களின் நீண்ட நாள் வாசகனாக இருந்தாலும் இது தான் எனது முதல் பின்னூட்டம்.
பதிலளிநீக்குஉங்களின் வலைப்பூவின் நேர்மையை இந்த பதிவு சிதைத்து விட்டது என்றே சொல்வேன்.
கார்த்திகேயன்
itsmeena.wordpress.com
நானெல்லாம் ஃபிரண்ட்லைனின் தொடர்ந்த வாசகன் என்று சொல முடியாது. சாய்நாத், விஸ்வநாத போன்றோரின் பல கட்டுரைகள், சாதாரண அடித்தட்டு மக்களின் பக்கம் நின்று எழுதப்பட்டவை. அவைகளை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன். கட்டுரையாளர் திரு.வேணுகோபால் அவர்கள் தொடர்ந்து ஃபிரண்ட்லைன் பத்திரிகை வாசித்து வருபவர்.ஒவ்வொரு முறை ஃபிரண்ட்லைன் வரும்போதும், “அதப் படிச்சீங்களா..., இதப் படிச்சிங்களா..” என்று கேட்பார். வாசிப்பின் வழியாக ஏற்பட்ட புரிதலில் பதிவு செய்திருக்கிறார்.
பதிலளிநீக்குஇந்தப் பதிவுக்கு பாராட்டுகள் இருந்தபோதும், ஃபிரண்ட்லைன் பத்திரிகை மீதான கோபமும், விமர்சனமும் இன்னொரு பக்கம் இருப்பதையும் புரிந்துகொள்கிறேன்.
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் திரு.ராம் அவர்களின் நிலைபாடு எனக்கும் உடன்பாடானதல்ல. அதிர்ச்சியும், அதிருப்தியும் இருக்கின்றன. ஆனல் அதை மட்டும் வைத்துகொண்டு ஃபிரண்ட்லைன் பத்திரிகை குறித்த முழுமையான ஒரு அபிப்பிராயத்திற்கு வருவது ஏற்புடையதாக தெரியவில்லை.
ஃபிரண்ட்லைன் இதழ் குறித்த பதிவினை வாசித்தவர்கள், பாராட்டியவர்கள், விமர்சித்திருப்பவர்கள் எல்லோர்க்கும் நன்றி. இந்த எழுத்து, வலைப்பூவின் ("தீராத பக்கங்களின்") நேர்மையைச் சிதைத்துவிட்டது என்று வந்திருக்கும் பின்னூட்டத்தோடு தாழ்மையோடு முரண்படுகிறேன். அவரவர் கருத்துக்களை மதிக்கவே செய்கிறேன். வழக்கம்போலவே, பதிவை இட்ட மாதவிற்கு நன்றி.
பதிலளிநீக்குஎஸ் வி வேணுகோபாலன்
For those who criticise the magazine for its "pro=Rajapaksa" stand I want to remind the fact that it was the same magazine which consistently and openly took a stand sympathetic to the ethnic tamils' struggle in the pre-Sri Lanka Accord phase. It even featured Prabhakaran on the cover and carried many interviews with him and other militant leaders. Like many in India and abroad, it changed its stand after the 1987 accord. Pl go back to the old issues of Frontline to understand this. You cannot judge a magazine purely on the basis of one issue and only because it has a viewpoint different from others. Do not forget history and see frontline's record in covering extensively and sympathetically the Tamils' struggle. Even after the end of Prabakaran, it said that the issues that gave rise to the LTTE still remain.
பதிலளிநீக்கு25 th year FRONT LINE -is a great issue to be preserved and reference to the future---vimalavidya
பதிலளிநீக்குIf you understand that Frontline is the unofficial magazine of CPM patry ,things will fall in place.
பதிலளிநீக்குarticle arumai
பதிலளிநீக்குvisit my site
vaalpaiyyan.blogspot.com
//You cannot judge a magazine purely on the basis of one issue and only because it has a viewpoint different from others.//It is absolutely correct...The life has many more degrees and faces...Over all contribution to the Indian journalism must be taken together..A great role has been played by the "FRONT LINE".
பதிலளிநீக்கு