காற்றில் எழுதிய கண்ணீர்ப் பாடல்கள்

 

“எம் பொண்டாட்டி நல்லவளய்யா
எம் பொண்டாட்டி நல்லவளய்யா
சோறு கேட்டா சோத்தால அடிப்பா
கொழம்பு கேட்டா கொண்டைய அறுப்பா
எம் பொண்டாட்டி நல்லவளய்யா
எம் பொண்டாட்டி நல்லவளய்யா”

சின்ன வயசில் இந்தப் பாடலை எங்கள் பள்ளியின் காவல்கார தாத்தா பாடுவார். சுற்றி உட்கார்ந்து கேட்டு கேட்டு மக்கள் சிரிப்பார்கள்.

பெண்கள் பக்கமிருந்து இது போல ஆயிரம் பாடல்களை பின்னாட்களில் அறிய முடிந்தது. ஆனால் சிரிக்க முடியவில்லை.

டாக்டர் முத்துசிதம்பரம் அவர்கள் தொகுத்த பாடல்களில் இருந்து சில கண்ணீர் முத்துக்களை சினேகா என்பவர் தொகுத்து இருந்தார். அதிலிருந்து சிலவற்றை இங்கே பதிவிட்டு இருக்கிறேன். சபிக்கப்பட்ட காலம் உங்கள் நரம்புகளுக்குள் ஊடுருவி அழுவதை கேட்க முடியும். நாட்டுப்புறப் பெண்களின் இந்தக் குரல்களை வழிவழியாய் காற்று சுமந்து கொண்டு இருக்கிறது. குடும்ப வன்முறையின் கோரக் காட்சிகள் இவை.

*

“மாமன் மகளிருக்க
மாலையிடும் சாமியிருக்க
பேசும் கிளி நானிருக்க
பேயனுக்கு வாழ்க்கைப்பட்டு
பெருங்கஷ்டத்துக்கு ஆளாச்சே”

* 

“நாடெல்லாம் சுத்திவந்து
நல்லபிள்ளையில்லை என்று
கொணங்கெட்ட மாப்பிள்ளைக்குக்
கொண்டி கொடுத்தார் - எங்களண்ண
கொண்டி கொடுத்தார்”

*

“சோளச்சோறு தின்னமாட்டேன்
சொன்னபடி கேக்கமாட்டேன்
நரைச்ச கிழவன்கிட்ட நானிருந்து
வாழமாட்டேன்”

*

“கள்ளுலே பூச்சி கெடந்தா
கலக்கிக்கலக்கிக் குடிக்கிறாண்டி
சோத்திலே கல்கெடந்தா சொந்தப்
பொண்டாட்டிய அடிக்கிறாண்டி”

*

“கான மிளகு வச்சுக்
கறிக்கு மசால் கூட்டிவச்சுக்
கொழம்பு ஒறைக்குதுண்ணு
என்னைக் கதவடைச்சுக் கொல்லுதாரே
அறியாத ஊரிலேயேத்
தெரியாத வாக்கப்பட்டேன்
அடியாதிங்க புடியாதிங்க - நான்
விடியாம ஓடிப்போறேன்”

*

“அரிசி படியளந்து என்னை
அழைச்சி வந்த
மாமியத்த ஒன்ன ஒரு
அரணபுடுங்குமோ
நீபெத்த புள்ளகிட்ட நான்
அச்சமத்து வாழுவனோ”

*

கருத்துகள்

9 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. படிச்சா அழுகை தாங்க வருது

    பதிலளிநீக்கு
  2. கண்ணீர் பாடல்கள் உண்மையாகவே கலங்க வைக்கின்றன.

    “கள்ளுலே பூச்சி கெடந்தா
    கலக்கிக்கலக்கிக் குடிக்கிறாண்டி
    சோத்திலே கல்கெடந்தா சொந்தப்
    பொண்டாட்டிய அடிக்கிறாண்டி”

    ரோட்டோர புரோட்டா கடையிலோ,டீக்கடையிலோ ஹைஜீனிக் பாக்காதவங்க, வீட்டில் மனைவியிடம் மட்டும் எகிறுவதேன்? இந்த லட்சணத்தில்,
    `பேய்க்கு வாழ்க்க பட்டா புளியமரம் ஏறித்தா ஆகனும்’னு பெண்களுக்கு அறிவுரை வேறு.

    பதிலளிநீக்கு
  3. கூகுள் குரோம் வழியாக உங்கள் வலைப்பூவைத் திறந்தபோது, கீழ்க்கண்ட எச்சரிக்கை செய்தி வந்தது;

    Warning: Visiting this site may harm your computer!
    The website at mathavaraj.blogspot.com contains elements from the site quiterandom.com, which appears to host malware – software that can hurt your computer or otherwise operate without your consent. Just visiting a site that contains malware can infect your computer.
    For detailed information about the problems with these elements, visit the Google Safe Browsing diagnostic page for quiterandom.com.
    Learn more about how to protect yourself from harmful software online.
    I understand that visiting this site may harm my computer.

    கவனிக்கவும்

    பதிலளிநீக்கு
  4. ஹரன்!

    மிக்க நன்றி.
    சரி செய்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
  5. ராம்!

    பகிர்வுக்கு நன்றி.


    அம்பிகா!
    வர வர உன் பின்னூட்டங்கள் அடர்த்தியாகவும், பதிவுக்கு மேலும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கின்றன. வலைப்பக்கம் ஆரம்பித்து தனிப்பதிவுகள் எழுதலாமே.

    பதிலளிநீக்கு
  6. அன்பு மாதவராஜ்,

    நல்லாயிருக்கு தெரிவுகள். முதல் பாட்டு ரொம்ப நல்லாயிருக்கு.

    பிற பாடல்களும் நல்லாயிருக்கு, ஆனா ஒரு ஆண்பிள்ளையின் அன்பு இவற்றின் உச்சானி!

    அன்புடன்
    ராகவன்

    பதிலளிநீக்கு
  7. //சபிக்கப்பட்ட காலம் உங்கள் நரம்புகளுக்குள் ஊடுருவி அழுவதை கேட்க முடியும். நாட்டுப்புறப் பெண்களின் இந்தக் குரல்களை வழிவழியாய் காற்று சுமந்து கொண்டு இருக்கிறது.//

    ஆம்,மாதவன்.

    பதிலளிநீக்கு
  8. பெண்களுக்கு அதான் கல்வி முக்கியம் என்பது .அவர்கள் தன் உழைப்பால்
    வாழ தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும் ,பெண் அடிமை இன்னும்
    பெண்களிடத்திலே ஒழிய வில்லை,அப்புறம் ஆண் எங்கே பயபடுவன்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!