தீபாவளி வந்துவிட்டது!

 

என் முகத்தையே பார்த்துக்கொண்டு இருக்கிறான் மகன்
அவனுக்கு ஒரு துப்பாக்கி வேண்டும்
‘இது நம் பண்டிகையா...’
‘வெடியெல்லாம் தேவையா...’
மறுப்புகளைச் சொல்ல முடியாமல்
வெளியெல்லாம் ஒளிச்சிதறல்கள்
விடாத வெடிச்சத்தம்
பக்கத்து வீட்டிற்கு கொடுக்க சில பலகாரங்கள்
எல்லோரையும் போல இருக்க துணிமணிகள்
தப்பிக்க முடியாது தீபாவளியிடமிருந்து
கடைவீதிக்குப் புறப்பட்டேன்
பையன் முகமெல்லாம் சந்தோஷம்
“ஹை! தீபாவளி வந்துவிட்டது!”

*

கருத்துகள்

34 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. //பக்கத்து வீட்டிற்கு கொடுக்க சில பலகாரங்கள்
    எல்லோரையும் போல இருக்க துணிமணிகள் //


    எஸ்!

    தீபாவளி வந்து விட்டது :)

    இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் உங்கள் குடும்பத்தார்க்கும் இணைய உறவுகளுக்கும் :)))

    பதிலளிநீக்கு
  2. சில நேரங்களில் நம் கொள்கைகளை விட உறவினர்களின் நம்பிக்கைகள், மகிழ்ச்சிகள் போன்றவைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. “ஹை! தீபாவளி வந்துவிட்டது!”
    திருநாள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. “ஹை! தீபாவளி வந்துவிட்டது!”
    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக, பெரியவர்கள் சில விஷயங்களில் விட்டுக்கொடுக்க வேண்டும். அதில் இதுவும் ஒன்று. மகிழ்வு நாட்கள் குறைந்து வரும் இச்சமூகத்தில் பண்டிகைகளை கொண்டாடுவோம்(விடுவோம்).

    தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. யார் பண்டிகையாக இருந்தால் என்ன ... தீபாவளி முன்பு போல ஸ்வாரஸ்யமாக இல்லை ...

    பதிலளிநீக்கு
  7. அண்ணா....

    காசு இருந்தா தீபாவளி
    இல்லாட்டி வெறும் வலி...

    பதிலளிநீக்கு
  8. அழகு வர்ணனை ...... இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....!!

    பதிலளிநீக்கு
  9. கொண்டாட கிடைக்கும் தருணங்கள் குறைவே...கிடைப்பதை கொண்டாடுவது நல்லது...வாழ்த்துக்கள் மாதவ்ராஜ்...

    பதிலளிநீக்கு
  10. அருமையான தீபாவளியாக இருக்கட்டும் மாதவன்.வீட்டில் எல்லோருக்கும் என் வாழ்த்தை தாருங்கள்.

    பதிலளிநீக்கு
  11. ஆயில்யன்!

    மிக்க நன்றி. தீபாவளி வாழ்த்துக்கள், தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும்.

    பதிலளிநீக்கு
  12. குப்பன் யாஹூ!
    உண்மைதான்.
    தீபாவளி வாழ்த்துக்கள். தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும்.

    பதிலளிநீக்கு
  13. ஜெஸ்வந்தி!
    ஆமாம். வந்துவிட்டது.
    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. தீப்பெட்டி!
    நன்றி.
    தங்களுக்கும் இனிய தீபவளி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  15. சந்தனமுல்லை!
    தீபாவளி வாழ்த்துக்கள்.
    பப்புவுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  16. மங்களூர் சிவா!
    மிக்க நன்றி.
    தீபாவளி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  17. பின்னோக்கி!
    குழந்தைகளுக்குத்தான் தீப்பாவளி.
    அவர்களின் சந்தோஷம்தான் நமக்கு தீபாவளி.
    தீபாவளி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  18. கதிர்!
    ஆமாம்.
    தீபாவளி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  19. லவ்டேல்மேடி!
    நன்றி.
    தீபாவளி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  20. அது சரி!
    எவ்வளவு நேர்த்தியாகச் சொல்கிறீர்கள்!
    தீபாவளி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  21. பா.ராஜாராம்!
    தங்கள் வாழ்த்துக்கள் என் வீடு நிறைய இருந்து கொண்டே இருக்கிறது. தங்கள் அன்புக்கு மிக்க நன்றி.
    தீபாவளி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  22. இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள் தோழர்..

    பதிலளிநீக்கு
  23. :-)) நிகிலுக்குச் சிறப்பு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  24. கும்க்கி!
    தீபாவளி வாழ்த்துக்கள், தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும்.

    பதிலளிநீக்கு
  25. தீபா!
    நிகிலுக்கு சொல்லி விட்டேன்.
    தீபாவளி வாழ்த்துக்கள் உனக்கு, ஜோவுக்கு, நேஹாவுக்கு.

    பதிலளிநீக்கு
  26. குழந்தைகளின் சந்தோஷத்திற்காகத் தான் அதிகம் பேர் தீபாவளியே கொண்டாடுகிறார்கள்.

    அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு
  27. தீபாவளி என்றால் மகிழ்ச்சி!சந்தோஷம் ஒன்றே குறிக்கோள்!யாரும் எதையும் இப்போது நினைப்பதில்லை!தங்களுக்கு எனது தீபாவளி நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  28. ஹரிஹரன்!

    நன்றி.
    தீபாவளி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  29. மிக்க நன்றி இளங்கோ!
    தங்களுக்கு எந்தன் தீபாவளி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  30. துன்பத்தை சகிக்க முடியாத வருணன்
    கண்ணீரை வடித்ததால்
    வெள்ளமாகியது கூடாரங்கள்!
    வழிந்தோட, வாய்க்கால் வெட்டிவிட்ட நான்! களைப்பில்
    தேனீர் தருவாளா? என மனைவியைப்பார்க்க!
    விறகெடுத்து வைத்த திசைபார்த்தாள் - மௌனமாக!
    அதுவும் மழைநீரில் குளித்து
    மண்ணுடுப்பு உடுத்தியிருக்க
    தலைகவிண்டேன் மௌனமாக!

    உடுத்த உடுப்பில்லை
    குளிக்க தண்ணியில்லை
    குடிதண்ணீருக்காய் வரிசையில்
    இருக்கிற அரிசியையும் பருப்பையும் சமைக்க
    விறகு எடுக்க போவதென்றாலும்
    கொன்றுவிடுவார்களோ என்றபயம்
    என் நிலைமையை புரிந்து மகன்
    தண்ணீரைக்குடித்துவிட்டு
    சேற்றுக்கு மேலே 'ரென்ரை' போட்டு சுருண்டு படுத்தான்
    என்ன செய்வதென்று தெரியாத
    மனைவியின் முகத்தில் கண்ணீர் துளிகள்
    என்ன செய்யலாமென்று வெளியில் வந்தேன்
    என்போல குடும்பத்தலைவர்களும்
    கூடாரத்துக்கு வெளியில் சிந்தனைகளுடன்
    செய்வதறியாது...!

    வழக்கமான தீபாவளி(லி)கள்
    நீண்டகாலமாய்!
    ஒன்று மட்டும் வித்தியாசம்
    குண்டுச்சத்தங்களில்லை
    மனங்களில் பயம்
    அடைபட்ட மிருகங்களைப்போல
    முட்கம்பி சிறைகளிற்குள்
    இந்த வருடமும் விடிவில்லை
    தீப ஒளி நாளிலும் ஒளியைத்தேடி!!!
    http://eelampakkam.blogspot.com/

    பதிலளிநீக்கு
  31. மனிதன்!
    அண்டோ!
    வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!