பிடித்தவர், பிடிக்காதவர் ஏழு - தொடர் விளையாட்டு

 

என் மகன் அடிக்கடி என்னிடம் கேட்கும் கேள்வி உனக்கு இவர் பிடிக்குமா, அவர் பிடிக்குமா என்பது. எப்படி இந்த கேள்விகள் அவனுக்குள் முளைத்தன என்று தெரியவில்லை. யோசித்துப் பார்க்கும்போது எல்லோருக்கும் பிடித்தமானவர்களும், பிடித்தமில்லாதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதற்கென்று காரணங்கள் உடனடியாகத் தெரியலாம். தெரியாமலும் இருக்கலாம். ஆனால் பிடிக்கும். பிடிக்காது. குழந்தைத்தனமான இந்தக் கேள்வி பதில்கள், ஒருவரது அபிப்பிராயங்கள் அல்ல, ஒருவர் பற்றிய அபிப்பிராயங்கள். அப்படிப் புரிந்துகொள்ளுங்கள். சட்டென்று என் மனசுக்குத் தோன்றியவைகளை தொகுத்திருக்கிறேன். பிடிக்காதவர்களைச் சொல்வதற்கு இங்கு ஒரு தைரியம் வேண்டியிருக்கிறது. முக்கியமாக அதற்குத்தான் இந்தத் தொடர். எதாவது ஒரு இடத்தில் அவர்களைப் பிடிக்காமல் போகிறது. ஜெயமோகன் எப்போது அருந்திராயை ’குருவிமண்டை’ என்று சொன்னாரோ அப்போதிலிருந்து அவர் பிடிக்காமல் போய்விட்டார் எனக்கு. அதற்காக அவரது ரப்பரும், காடும் எனக்குப் பிடிக்காமல் போகாது. பதில்களை/ பதில் சொல்கிறவர்களை இப்ப்டி புரிந்துகொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.


பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள் இருந்தாகவேண்டும்
என்பது இந்தத் தொடரின் விதி! (விதி :1)

1.அரசியல் தலைவர்
பிடித்தவர் நல்லகண்ணு, பிடிக்காதவர் ஜெயலலிதா

2.எழுத்தாளர்
பிடித்தவர் தி.ஜானகிராமன்,  பிடிக்காதவர் ஜெயமோகன்

3.கவிஞர்
பிடித்தவர் பாரதியார், பிடிக்காதவர் வைரமுத்து

4.இயக்குனர்
பிடித்தவர் மகேந்திரன், பிடிக்காதவர் ஷங்கர்

5.நடிகர்
பிடித்தவர் பிரகாஷ்ராஜ், பிடிக்காதவர் விஜய்

6.நடிகை
பிடித்தவர் ஷோபா, பிடிக்காதவர் மீனா

7.இசையமைப்பாளர்
பிடித்தவர் இளையராஜா, பிடிக்காதவர் ஏ.ஆர்,ரஹ்மான்

இந்த வீபரீத விளையாட்டின் முடிவில் யாராவது இருவரை அழைக்க வேண்டும். நான் இப்போது அழைப்பது ......

1.ஆதிமூலக்கிருஷ்ணன்
2.சந்தனமுல்லை

பிற்சேர்க்கை:

1. பலரும் இந்த தொடர் விளையாட்டில் மற்றவர்கள் சொல்வதை அறிய ஆவலாய் இருப்பதால், அழைக்கப்படுவர்களின் எண்ணிக்கை குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம். எனவே  மேலும் மூன்று பேரை இப்போது அழைக்கிறேன் (விதி:2)

3. செல்வேந்திரன்
4. வால்பையன்
5. தீபா

2. நிகழ்காலத்தில் (பின்னூட்டத்தில்)  சொல்வது போல் பிடித்தவர், பிடிக்காதவர் என்ற தலைப்புடன் தற்போது என்பதை அடைப்புக்குறிக்குள் சேர்த்துக்கொள்ள விரும்புபவர்கள் சேர்த்துக்கொள்ளலாம். (அவரவர் இஷ்டம். விதியாகாது.)

3. ராகவன் சொல்வது போல் பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். (விதி:3)

4.பா.ராஜாராம் இதே தலைப்பில் வேறு கேள்விகள் எடுக்கலாமா என்று கேட்டிருந்தார். இதே கேள்விகளோடு மேலும் மூன்று கேள்விகள் அவரவர் விருப்பப்படி சேர்த்துக்கொள்ளலாம். அதிகபட்ச கேள்விகள் பத்தைத் தாண்ட வேண்டாம். (அவரவர் இஷ்டம். விதியாகாது.)

கருத்துகள்

47 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. தொடர அழைப்பவர்களிலும் பிடித்தவர் ஒருவர், பிடிக்காதவர் ஒருவர் பார்த்து அழைக்க வேண்டுமா? நண்பரே..,

  பதிலளிநீக்கு
 2. Mama, Why you don't like A.R.Rahman? This is too much? say some reason for your dislike?

  பதிலளிநீக்கு
 3. Mama this is Mano.... You said that you dont like Jeya Mohan... with some reasons.... Can you tell me some reasons for which you hate Rahman...

  பதிலளிநீக்கு
 4. சுரேஷ்!
  ஐயய்யோ! நான் வரல்ல இந்த விளையாட்டுக்கு. ரெண்டு பேரும் பிடிக்கும். அதனாலத்தான்.......
  :-))))))

  பதிலளிநீக்கு
 5. கவீஷ், மனோ!
  காரணம் இருக்கு. கடைசிலச் சொல்வேன்.

  பதிலளிநீக்கு
 6. பிடிக்காதவர்கள் ஜெயலலிதா, ஷங்கர், விஜய்.சரி. ஆனால்,
  ஏ.ஆர். ரஹ்மான், ....

  பிடிக்காத டைரக்டர்-ஷங்கர்...
  சந்தோஷம்.

  பதிலளிநீக்கு
 7. \\தொடர அழைப்பவர்களிலும் பிடித்தவர் ஒருவர், பிடிக்காதவர் ஒருவர் பார்த்து அழைக்க வேண்டுமா? நண்பரே..//
  சபாஷ். சரியான கேள்வி.

  பதிலளிநீக்கு
 8. கலக்கல் பதிவு!

  நீங்கள் அழைத்திருப்பவர்களின் தைரியத்தைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன்!
  :)

  பதிலளிநீக்கு
 9. நிறைய விவாதத்துக்கு உட்படுவிர்கள் போல இருக்கே உங்க பதிவு .

  பதிலளிநீக்கு
 10. தொடர்பதிவு, விருது வழங்கல் எண்டாலே கண்ணைக் கட்டுற நேரத்தில உங்கட தொடர்பதிவு அட்டகாசமா ஆரம்பிச்சிருக்கு.

  வந்தமா எழுதினமா எண்டு யாரும் எழுதீட்டு போய்விட முடியாது... ஆவலா இருக்கு..

  பதிலளிநீக்கு
 11. இதனால உங்களுக்கு ஏழரை எதாவது வர போகுது .. :))

  பதிலளிநீக்கு
 12. அப்படி போடுங்க மாதவன்...இப்படி தொடர் விளையாட்டுக்களில்,ஒரு உன்னதமான விஷயம் ஒளிந்து கிடக்கு மாதவன்.பால்யங்களை தொலைத்த நமக்கு,இப்படியான "முதிர்க்கன்னி" விளையாட்டில்,ஒரு சிறுபிள்ளை வாய்ப்பு வாய்க்கிறது.போக,பரஸ்பரம் பரிமாறிக்கொள்ள இது பேருதவியாகவும் இருக்கிறது.எனக்கு இதில் மிகுந்த சந்தோசமே...இந்த விளையாட்டில் ஒரு சந்தேகம்,குறிப்பிட்ட இந்த ஏழு தலைப்பில்தான் பதில் கூறனுமா? வெவ்வேறு ஏழு கேள்விகள் எடுக்கலாமா?...
  ஜெயமோகன்,A.R.ரஹ்மான் விஷயத்தில் வாங்கி கட்டிக்கொள்ள போகிறீர்கள் என நினைக்கிறேன்.ஆகட்டுமே...அதுக்குதானே இந்த விளையாட்டே! இல்லையா?...
  சொந்த விருப்பு வெறுப்பை சொல்ல என்ன பயம் வேண்டிகிடக்கு!

  பதிலளிநீக்கு
 13. இளைய ராஜா,ரஹ்மான்.நானும் அப்படியே.நல்லதொரு ஆரம்பம்.நாமளும் இறங்கிட வேண்டியது தான்.யாராச்சும் கூப்பிடுங்கப்பா.

  பதிலளிநீக்கு
 14. பாவம் விஜய்!!! இவர் தான் அனைவருக்கும் "top on d hit list"

  பதிலளிநீக்கு
 15. ரோமியோ பாய் சொல்கிறார் எனக்கு ஏழரை வந்து சேரும் என்கிறார்.
  எனக்கு சிரிப்புத்தான் வருகிறது நண்பரே!

  தீபா, மதுவதனன், வேல்ஜி, பா.ராஜாராம் ஆகியோர் இந்த விளையாட்டின் அர்த்தத்தை சரியாக புரிந்துகொண்டு இருக்கிறார்கள். மிக்க நன்றி. பிடிக்காதவர்கள் ஏன் சிதம்பர ரகசியமாக இருக்க வேண்டும்.

  கவிஷ், மனோ, அம்பிகா! மூவருமே ஏ.ஆர்.ரஹ்மான ஏன் பிடிக்கவில்லை எனக் கேட்டு இருக்கிறார்கள். அவர் இசையென்னும் கலையை தொழில்நுட்பமாக மாற்றினார் என பலவிதக் கருத்துக்கள் அவர் மீது உண்டு. இருப்பினும் அவரது பல பாடல்கள் என்னை இப்போதும் உருக வைக்கின்றன. கன்னத்தில் முத்தமிட்டாலில் வரும் ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ பாடல் அப்படியே அலைபோல வந்து நனைத்துப் போகிறது. ஆனால் ஏ.ஆர்.ரஹ்மான் விளம்பரங்களில் வந்ததும், நடித்ததும்தான் முதலில் அவரிடம் பிடிக்காத விஷயமாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 16. என்பது சதம் ரெண்டுபேருக்கும் ஒத்துப்போகுதுங்க.

  பிரபாகர்.

  பதிலளிநீக்கு
 17. :))

  பிடித்தவர் பிடிக்காதவர் என்ற தலைப்புடன் தற்போது என்ற வார்த்தையை சேர்த்துக்கொள்ளலாம் என்பது என் கருத்து..

  அவர்களிடம் மாற்றம் வரும்போது நம்மிடமும் மாற்றம் வரும்:)

  பதிலளிநீக்கு
 18. அன்பு மாதவராஜ்,

  பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் பட்டியலில் ஒரு பிடிவாதமும், ஒரு வீம்பும் இருக்கிறது மாதிரி தெரிகிறது. ஏதோ ஒரு காரணத்திற்காக ஒருவரை பிடிக்காமல் போனதாக சொல்வது எப்படி என்று தெரியவில்லை. ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களில் உருகுவதும், அவர் விளம்பரபடங்களில் நடிப்பதால் பிடிக்கவில்லை என்பதும், ஜெயமோஹன் அருந்ததிராயை குருவி மண்டை என்பதால் பிடிக்கவில்லை என்பதும் உங்கள் தெரிவுகளில் ஒரு inconsistency இருப்பதாகப்படுகிறது. ஒரு அரசியல்வாதி பற்றி, நடிகரைப்பற்றி, இயக்குனர் பற்றி (எனக்கு பிடிக்காத டைரக்டர் பாலசந்தர்) சொல்லும்போது இருக்கிற ஒரு தேர்வு நிலை, இசையைப் பற்றி சொல்லும் போது எழுத்தாளர்கள் பற்றி சொல்லும் போதும் ஏன் இல்லை என்று தெரியவில்லை. எனக்கு இளையராஜாவை பிடிக்கும், ஏ.ஆர்.ரஹ்மானை விட, ஆனால் பிடிக்காதவர் பட்டியலில் ஏ.ஆர்.ஆர். இல்லை. இன்னொரு விதிமுறையும் சேர்த்திருக்கலாம், பிடிக்காதவர் பட்டியலில் இருப்பவர்கள் பிரபலமானவர்களாய் இருக்கவேண்டும் என்று!

  நீங்கள் எதை நினைத்து எழுதினீர்களோ அது நன்றாகவே நடக்க வுள்ளது. வாழ்த்துக்கள்!

  மற்றும் உங்களுக்கு என் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

  அன்புடன்
  ராகவன்

  பதிலளிநீக்கு
 19. //பிடித்தவர் பிடிக்காதவர் என்ற தலைப்புடன் தற்போது என்ற வார்த்தையை சேர்த்துக்கொள்ளலாம் என்பது என் கருத்து..//

  நிகழ்காலத்தில் அவர்கள் சொன்னதை ஒப்புக்கொள்கிறேன்.

  ராகவன்!
  மனித மனத்தை நுட்பமாக ஆராயும் பார்வை உங்களுக்கு இருக்கிறது. ஒருச் சின்ன மாறுபாடு மட்டும். பிடிவாதமும், வீம்பும் இல்லை. ஏன் இதைச் சொல்லக் கூடாது என்கிற த்மிர்த்தனம் என்பது சரியாய் இருக்கலாம். இதனாலே என்னைப் பலருக்கு பிடிக்காமல் போகலாம். ஒருத்தருக்கு பிடிக்காதவர்கள் என்பது மோசமான விஷயமா. பிடிக்கவில்லை என்பதால் ஒருத்தருக்கு ஒருத்தர் எதிரியா? விரோதியா? பிடிக்கவில்லை என்பதை நாம் வழமையான அர்த்தங்களிலிருந்தே பார்க்கிறோம் எனத் தோன்றுகிறது.பிடித்தவர்களிடம் உணர்கிற நெருக்கத்தையும், நேசமும் பிடிக்காதவர்களிடம் இல்லாமல் போகிறது என்பதுதானே உள்ளார்ந்த அர்த்தமாக இருக்க முடியும். வெறுப்பது எனப்து வேறு.பிடிக்காமல் போவது வேறு. வெறுக்கப்படுகிறவர்கள் மீண்டும் எளிதில் பிடித்தமானவர்களாக முடியாது. பிடிக்காமல் போகிறவர்கள் நிகழ்காலத்தில் சொல்வது மாதிரி பிடித்தமானவர்களாக மாற வாய்ப்பு உண்டுதான். இந்த லிஸ்ட்டில் வெறுப்பவர்களும் இருப்பதால்தான் நீங்கள் சொன்ன inconsistency தெரிகிறது என நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 20. எனக்கும் பிடித்திருக்கிறது இந்த விளையாட்டு... சுரேஷ் கேட்டது போலவே பதிவுலகில் பிடித்தாவர் ஒருவரையும், பிடிக்காதவர் ஒருவரையும் தெரிந்தெடுத்து அழைக்கலாம். ஆனால் எனக்குப் பிடிக்காதவர் என் அழைப்பை ஏற்பாரா தெரியவில்லை. ஏற்பார் என்றால் மாதவராஜ் தொடங்கிய இந்த விளையாட்டு இன்னொரு திசையில் இன்னும் அழகாகவும் சுவாரஷ்யமாகவும் மாறலாம்.. ஆபத்தாகவும் போகலாம். ஆனால் இதில் ஒரு நேர்மையான சந்தோஷம் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக நினைக்கிறேன்... வாழ்த்துக்கள் தோழர்.

  பதிலளிநீக்கு
 21. //.எழுத்தாளர்
  பிடித்தவர் தி.ஜானகிராமன், பிடிக்காதவர் ஜெயமோகன்

  3.கவிஞர்
  பிடித்தவர் பாரதியார், பிடிக்காதவர் வைரமுத்து

  4.இயக்குனர்
  பிடித்தவர் மகேந்திரன், பிடிக்காதவர் ஷங்கர்

  5.நடிகர்
  பிடித்தவர் பிரகாஷ்ராஜ், பிடிக்காதவர் விஜய்

  //
  இந்த கருத்தே என் கருத்து

  பதிலளிநீக்கு
 22. எத்தனை பேர் உண்மையை சொல்ல துணிவார்கள் என்று தெரியவில்லை.

  இதுவரை கண்டவற்றில் வித்தியாசமான விவகாரமான தொடர். பல பூனைகளை வெளியே கொண்டுவரலாம்.

  சுரேஷ் சொன்னது போல.. பிடித்தவர் ஒருவரையும் பிடிக்காதவர் ஒருவரையும் அழைக்கச் சொல்லியிருக்கலாம். :)

  பதிலளிநீக்கு
 23. //நிகழ்காலத்தில்... said... 18 :))

  பிடித்தவர் பிடிக்காதவர் என்ற தலைப்புடன் தற்போது என்ற வார்த்தையை சேர்த்துக்கொள்ளலாம் என்பது என் கருத்து..

  அவர்களிடம் மாற்றம் வரும்போது நம்மிடமும் மாற்றம் வரும்:)
  //

  வழிமொழிகிறேன்!

  பதிலளிநீக்கு
 24. தோழர்.,
  விடுபட்டவை:
  பதிவர்களில் பிடித்தவர்,பிடிக்காதவர் என்று இல்லையா?(அப்போதுதான் உண்மையான ஏழரை பிடிக்கும்)

  பதிலளிநீக்கு
 25. இனிய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழா...
  அபடியே குடும்பத்தினருக்கு எனது அன்பும்.

  பதிலளிநீக்கு
 26. எனது கேள்விக்கு நானே பதில் போட்டுவிடுகிறேன்.
  பதிவர்களில் பிடித்தவர்: தோழர் மாதவராஜ்...நிமிர்ந்த நடைக்கும்,நேர்கொண்ட பார்வைக்கும்.

  பிடிக்காதவர்: பதிவர் மாதவராஜ்...பதிவுகளை படிக்க நேரமே கொடுக்காமல் தொடர்ந்து பதிவு போடுவதால்..
  கணமான விஷயங்களை படித்து உள்வாங்கி அதற்க்கு சரியான எதிர்வினை ஆற்ற போதுமான கால அவகாசம் வேண்டும் பதிவரே..

  பதிலளிநீக்கு
 27. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாதவன்!

  பதிலளிநீக்கு
 28. பிடிப்பதற்கும்..பிடிக்காததற்கும்..காரணம் சொல்ல வேண்டாமே..அது தேவையில்லாமல் விமர்சனங்களை வரவழைக்கும்.

  ஒரு சின்ன சந்தேகம். வைரமுத்து உங்களுக்கு பிடித்த மாதிரி ஒரு கவிதை எழுதினாலும்..அதை பிடிக்காது என்றே சொல்லுவீர்களா ? அப்படியானால் உங்களின் விமர்சனங்கள் ஒருதலை பட்சமாக இருக்க வாய்ப்பிருக்கிறதே ??

  பதிலளிநீக்கு
 29. நல்லாயிருக்கு வீபரீத விளையாட்டு...
  விளையாடுங்கள் வேடிக்கை பார்ப்போம்

  பதிலளிநீக்கு
 30. பாஸ் ..சமீபத்தில் நீங்க எழுதிய ஒரு பதிவில், ஒருவர் கருத்திற்கு முரண்படலாம், ஆனால் தனிமனிதனாக ஒருவரை பிடிக்காத விஷயத்தை பதிவில் எழுத கூடாது அப்படின்ற பாணியில் எழுதி இருந்தீர்கள்.

  இப்ப நீங்க இவர்கள் சம்பந்தமான என்ன விஷயம் பிடிக்கலை அப்படின்னு எழுதலை. தொடர் ஒன்றை ஆரம்பித்தும் விட்டீர்கள், பொருத்து இருந்து பாருங்கள், எழுத்து சண்டை, வாய் சண்டை, கை சண்டைனு ...

  //பிடிக்காதவர்களைச் சொல்வதற்கு இங்கு ஒரு தைரியம் வேண்டியிருக்கிறது. முக்கியமாக அதற்குத்தான் இந்தத் தொடர்//

  பதிவர்களில் பிடித்தவர்: பிடிக்காதவர் (பார்த்தீங்களா ஆரம்பிச்சிருச்சு), உண்மையில் இதை சொல்லுவதற்கு தான் அதிகம் தைரியம் தேவை. சில சமயம் 'பாதுகாப்பும்' கூட தேவை. நீங்கள் எழுதி இருப்பதற்கு எந்த வித தைரியம் தேவை இல்லை என்பது என் கருத்து.

  பதிலளிநீக்கு
 31. சாமி அவர்களுக்கு, உங்களது அக்கறையும் ஈடுபாடும் சந்தோஷமே. நான் அந்தப் பதிவில் தனிமனித தாக்குதல்கள் வேண்டாம் எனச் சொல்லிவிட்டு இப்படி எழுதியிருக்கிறேன்.//எல்லோருக்கும் ஒத்த கருத்துக்கள் இருக்க முடியாது. அவரவர்கள் வாழ்ந்த வாழ்க்கை, இருக்கும் சூழல், கற்றுத் தெளிந்த அல்லது தெளியாத அறிவு, அனுபவம் சார்ந்த புரிதல், இயக்கம் சார்ந்த அணுகுமுறை, தொனி என எல்லாம் சேர்ந்து ஒருவரது கருத்துக்களை உருவாக்குகின்றன. எனவே ஒருவரது கருத்துக்களோடு முரண்பாடுகளும், வேற்றுமைகளும் இன்னொருவருக்கு இருக்கத்தான் செய்யும். அது இயல்பு. எனவே இப்படியான மாற்றுக் கருத்துக்களுக்கு உரிய மரியாதையை கொடுத்துத்தான் ஆக வேண்டும். அடுத்தது, அதனை எதிர்கொள்வதில் அதிகபட்ச நாகரீகத்தை யாரொருவரும் கடைப்பிடித்தே ஆக வேண்டும். பக்குவமும், நிதானமுமே பிரதானமானது//
  இந்தப் புரிதல் இருந்தால் போதும். வீண் சண்டைகள் வராது.

  பதிலளிநீக்கு
 32. //எனவே ஒருவரது கருத்துக்களோடு முரண்பாடுகளும், வேற்றுமைகளும் இன்னொருவருக்கு இருக்கத்தான் செய்யும். அது இயல்பு. எனவே இப்படியான மாற்றுக் கருத்துக்களுக்கு உரிய மரியாதையை கொடுத்துத்தான் ஆக வேண்டும்//

  சரியா புரியலை மாதவராஜ், இப்ப தனி மனித தாக்குதல் பண்ணலாமா வேண்டாமா ? உங்களுடைய பதிவு அந்த பாணியில் தான் இருக்குன்றது ஒத்து கொள்வீர்களா ? அந்த பாணியில் இருந்தா
  //அதனை எதிர்கொள்வதில் அதிகபட்ச நாகரீகத்தை யாரொருவரும் கடைப்பிடித்தே ஆக வேண்டும்//
  அப்படின்னு சொல்றீங்களா ?

  கடைசியா ஒரு கேள்வி, ஏன்னா கண்டிப்பா தொடர் பதிவில், இந்த கேள்வி சேர்க்கப்படும் என்று நினைக்கிறன்.
  பதிவர்களில் பிடித்தவர்: பிடிக்காதவர் ....இந்த கேள்வி பற்றி ஒன்னும் சொல்லவே இல்லையே நீங்கள்.

  பதிலளிநீக்கு
 33. சாமி!
  பொதுவான நோக்கமற்ற அல்லது சமூகப்பார்வையற்ற மதிப்பீடுகளாலும், குறுகிய எண்ணங்களாலும் இந்த பிடித்த/பிடிக்காதவர்களைச் சொல்ல ஆரம்பித்தால் அது தனிப்பட்ட விரோதங்களையே உருவாக்கும். அப்படி என் பதிவு இருந்தால் நிச்சயம் வருத்தம் தெரிவிப்பேன்.

  பதிலளிநீக்கு
 34. நல்லா இருக்கு மாதவராஜ். நல்ல மஜாவான தொடர் :)- விளக்கங்கள் கொடுக்காம எழுதணும். (பின்னூட்டத்திலும்). அப்பதான் இன்னுமே நல்லா இருக்கும். பூனை தெரிஞ்சது ! முயல் தெரிஞ்சதுன்னு மக்கள் கலக்குவாங்க.

  எனக்கு பிடிக்காத பதிவர் sammy:)-

  பதிலளிநீக்கு
 35. பிடித்த ஒளிப்பதிவாளர், பிடித்த பத்திரிகை ஆசிரியர் என் பட்டியலை நீட்டலாமே.

  பதிலளிநீக்கு
 36. இரண்டு நாட்களாக இணையத்தொடர்பற்று இருந்ததால் இப்போதுதான் கவனிக்கிறேன். ஒரு முக்கிய தொடர்பதிவுக்கு உங்களால் அழைக்கப்பட்டதில் மகிழ்ச்சி. இன்று அல்லது நாளை பதிவிடுகிறேன்.

  பதிலளிநீக்கு
 37. எத்தனை நாளா இந்த ஆசை உங்களுக்கு!?

  இப்படி சிக்கவச்சு புட்டிங்களே

  பதிலளிநீக்கு
 38. போட்டாச்சு.. பத்து போட்டாச்சு..

  http://www.aathi-thamira.com/2009/11/blog-post.html

  பதிலளிநீக்கு
 39. அய்யா பிடித்தவரை எழுதுவது நியாயம்.
  பிடிக்காதவரை எழுதுவது அநியாயம்

  பதிலளிநீக்கு
 40. Dear Madhav, The LIST should be about only the ALIVE person or ?

  பதிலளிநீக்கு
 41. //பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள் இருந்தாகவேண்டும்
  என்பது இந்தத் தொடரின் விதி! (விதி :1)//

  தமிழராக இருக்கவேண்டும் என்று சொல்லிருக்கலாம் -:(

  பதிலளிநீக்கு
 42. சார். பிடிக்காதவர்களையும் சகித்துக்கொள்வதில்தான் நம் வாழ்க்கை ஒளிந்துகொண்டிருக்க்றது. சுவாரஸயமான பதிவு.

  பதிலளிநீக்கு
 43. <<<
  இசையமைப்பாளர்
  பிடித்தவர் இளையராஜா, பிடிக்காதவர் ஏ.ஆர்,ரஹ்மான்
  >>>

  why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why why

  why you people dont like AR Rahman? Tell us single reason? Yes, single reason????? You have to find now... Am I right? I believe, that you are going to tell some silly reason...

  பதிலளிநீக்கு
 44. இந்த தொடர்பதிவு கொடுமை எப்போ ஓழியுமோ?

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!